Saturday, Jun 25th

Last update08:30:20 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் இயற்கை வைத்தியம்

நோய் எதிர்பு சக்தி நிறைந்த ஸ்ரோபெர்ரி

E-mail Print PDF

தினமும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது எனக் கூறுவது உண்டு.

ஏனெனில், ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் (சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது.

மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில், ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.

இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது. இவ்வாறு சிஎப்எல் விஞ்ஞானியும், இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார்.

நோய் எதிர்பு சக்தி நிறைந்த ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துகோ கொள்ளுங்கள்

இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ

E-mail Print PDF

குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்.

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.

குங்குமப்பூ தரும் அழகு
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.


இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ
இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர குங்குமப்பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.

இதன் நாரினை ஆண்களின் சிறுநீர்க்குழாயில் வைத்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். இதனால் விந்துக் குறைவு நிவர்த்தியடையும். தடைப்பட்ட சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்யும். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். மலச்சிக்கலை உண்டாக்கும் கட்டி, வீக்கங்களைக் கரைக்கும்.

அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!

E-mail Print PDF

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

கொழ கொழ காய்
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வாய்நாற்றம் அகலும்
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.


சருமத்தை செழுமையாக்கும் சீரகக் குடிநீர்!

E-mail Print PDF

வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு தகிக்கிறது வெப்பம். கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத்தை பாதுகாக்க சீரகத்தை காய்ச்சி குடிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். இதனால் சருமம் மங்காமல் செழுமையடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சருமப் பளபளப்பு

கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தை பாதுகாக்க பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீர் அதிகம் பருகவேண்டும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படுவதோடுஉடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் சருமம் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது சரும நலனை பாதுகாக்கும். தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

கரும்புள்ளிகள் மறைய
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும். எண்ணை பசை சருமத்தினரை முகப் பருக்கள் பாடாய் படுத்தும். எனவே எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

அடிக்கடி முகம் கழுவுங்க
ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கபடுவதோடு சருமத்தில் படியும் அழுக்குகள் அகற்றபடும். குறிப்பாக இரவு படுக்க போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

காரமா சாப்பிட வேண்டாம்
வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

பெண்களை வாட்டும் வெயில்
கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு பகுதிகள், இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகுபகுதி போன்ற இடங்களில் பெண்களுக்கு அதிகம் வியர்த்து, வேர்க்குரு தோன்றும். இதற்கு சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். பாத வெடிப்பு அதிகமாக ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிபடியாக மறையும்.

அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுபடுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

வறண்ட சருமத்தினருக்கு
வறண்ட சருமத்தினர் கோடை காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அடிக்கடி உடம்பை அடிக்கடி கழுவவேண்டும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

வாழைத்தண்டு உணவு
கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

சிறுநீரகக் கோளாறுகளை தடுக்கும் திராட்சைப் பழம்

E-mail Print PDF

ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள். மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.

சில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலுடன் செயல்படும்

தினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிநவீன சிகிச்சைகள் - மைக்க்றோ சிப்ஸ் மூலம் அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, என்பார்கள். ஒரு புறம் அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளால் மனித ஆயுட்காலம் நீடித்துக்கொண்டிருந்தாலும் மறுபுறம் புதுப்புது நோய்கள் மனித இனத்தை தாக்கிக்கொண்டு தான் இருக்கின்றன.
இதற்கு காரணங்கள்

1) சுற்றுப்புற சூழல் மாற்றங்கள்,
2) உணவு பழக்க வழக்கங்கள் போன்றவைமிக முக்கியமானதாகும்.

சாதாரணமாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுகிறோம். அப்போது கொடுக்கப்படும் ஊசி, மருந்துகள், மாத்திரைகள் நமது உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் சென்றடைகிறதா? என்றால் ‘ஓரளவு மட்டுமே’ என்பது தான் பதிலாக கிடைக்கிறது. வீரியம் மிக்க மருந்துகள் சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. சிலருக்கு ஊசி, மாத்திரைகள் என்றால் முகம் சுளிப்பதுண்டு. சிலருக்கு சில ஊசி, மருந்துகள் ‘அலர்ஜி’ யாகவும் இருக்கும்.

இருதய நோய், புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள்., என்று பலவிதமான ஆபத்தான நோய்களுக்கும் நவீன மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஊசி போடாமல் மாத்திரை சாப்பிடாமல் சிகிச்சை பெறும் அதி நவீன சிகிச்சை முறைகளும், மருத்துவ விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விவரங்களை இந்த வாரம் காண்போம்.

கம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்
கம்ப்யூட்டர் என்று சொல்லக்கூடிய மாயக்கருவி இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ தொழில்நுட்பத்திலும், நவீன மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதிலும் கம்ப்யூட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. தீவிரமான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பிறகு உருவானது தான்- ‘மருந்துகள் சாப்பிடாமல், ஊசி போடாமல் கம்ப்யூட்டர் சிப் மூலம் பெறும் அதிநவீன சிகிச்சைகள்’.

மருந்துக் கடையில் உள்ள ஏராளமான மருந்துகளை பார்க்கும் போது அடேங்கப்பா இத்தனை மருந்துகள் இருக்கிறதா? என்று நாம் வியப்படையலாம். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் ஓ! இத்தனை வியாதிகள் மனிதனுக்கு இருக்கிறதா? என்பது புரியும்.

பிறந்த உடன் நோய்களை தடுக்க “தடுப்பூசி”. நோய் வந்தால் அதற்கு சிகிச்சைகள் என்று ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணத்தை சந்திக்கும் வரை மருந்து மாத்திரைகளை நம்பியே காலம் தள்ள வேண்டியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களின் அந்தஸ்த்துக்கு இணையாக ஆஸ்பத்திரிகள் ‘அழகு’டன் காட்சி அளிக்கின்றன.

எந்த ஒரு நோய்க்கும் ஏகப்பட்ட மருத்துவ பரிசோதனைகள், “ஸ்பெஷலிஸ்ட்” டாக்டர்களின் ஆலோசனைகள்…..என்று மருத்துவத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக, அதிக செலவு பிடிப்பதாக மாறிவிட்டது.

சுற்றுப்புற சூழல் பாதிப்பு, தவறான உணவு பழக்க வழக்கம், அதிவேகமான வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பில் கடும் போட்டி, போன்றவை காரணமாக மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் கடுமையாகிக் கொண்டே போகிறது. என்ன தான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் நோய்க்கிருமிகள் முன்னைவிட அதிக பலம் பெற்று வந்து மீண்டும் மீண்டும் தாக்குகின்றன.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மனிதனின் நோயைத் தீர்க்கும் மருந்துக் கலவைகளைத் தயாரிக்க மிகுந்த சிரமப்படுகின்றன. தற்போது சிகிச்சைக்காக உடலுக்குள் செலுத்தப்படும் மருந்துகள் ஓரளவே திறன் வாய்ந்ததாகவும், சில சமயங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக நீரிழிவு நோயைச் சொல்லலாம். பெரும்பாலும் இந்த நோய் நடுத்தர வயதினரை தாக்க ஆரம்பித்து முதிய வயது வரை தொடருகிறது. இந்த நோய் வந்தவர்கள் தொடர்ந்து சாப்பிடும் மருந்து மாத்திரைகள் மூலம் ரத்தக் குழாய் சேதம் அடையும் ஆபத்தும் உள்ளது. இந்த பதிப்பு தொடரும்போது நோயாளிகள் பார்வை இழப்பு, புண் ஏற்பட்ட கால் பகுதியை வெட்டி எடுப்பது போன்ற மோசமான பாதிப்புக்களுக்கும் ஆளாகிறார்கள்.

பொதுவாக, நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மனித ஜீனோம்களில் இருந்து மிக நுட்பம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புரதம் (புரோட்டீன்) கண்டறிதல் மூலம் அமைகிறது. இந்த புரதங்களை நோயாளி உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள அமிலங்களால் இவை கரைந்து விடுகின்றன. (அல்லது ஊசியின் மூலம்) செலுத்தப்படும் பொழுது புரதங்கள் ரத்தத்தில் கலக்கின்றன. ரதத்தத்தில் கலக்கும் மருந்துகள் ஈரல் மூலம் வடிகட்டபடுவதால் அவற்றின் திறன்கள் குறைகின்றன.

இந்த பிரச்சினைகளை போக்குவதற்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், ஜீன் ஆய்வாளர்கள் மின் பொறியாளர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து ‘புதிய மருந்து செலுத்துகை முறை’ (Drug Delivery System) ஒன்றை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதன்படி மின்னணு மற்றும் பகுதி கடத்திகள்  மூலம் புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை உருவாக்கினார்கள்.

தற்போது இந்தசிகிச்சை முறைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். இந்த புதிய முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு உடலின் எந்தப் பாகத்திற்கு செல்ல வேண்டும்’ போன்ற நுண்ணறிவு தேவைப் படுகிறது. மேலும் இந்த நுட்பமான பணியை மேற்கொள்வதற்கு பகுதி கடத்திகள் (செமி கண்டக்டர்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இரண்டு புதிய முறைகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.. அவை
1) ‘நுண் சில்’களை (Micr chips) உடலில் பொருத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை
2) நேனோ மீட்டர் அளவு கொண்ட பகுதி கடத்திகளால் (Nanometer-Scale beads of Semi-Conductors) ஆன ஊசிகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறை.

இனி இந்த மருத்துவ சிகிச்சை முறைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை காண்போம்.

நீடித்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை மாதம் அல்லது வருடம் முழுவதும் உட்கொள்ளும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள். உதாரணமாக முதிர்ந்த நிலை நீரிழிவு நோய், இருதய நோய் போன்றவை பெரும்பாலும் வயதானவர்களேயே தாக்குகிறது. இதுபோன்ற நீடித்த நோய்களுக்கு இந்த ‘கெட்டிக்கார’ மருந்து செலுத்துகை மூலம் சிகிச்சை அளிக்க முயன்று வருகிறார்கள்.

நுண்சில்களை அடிப்படையாகக் கொண்டு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த மருத்துவ முறைக்கு ‘உயிரியல் நுண் மின்னணு எந்திர முறையை என்று பெயரிட்டுள்ளனர். இதை சுருக்கமாக ‘பயோ மெம்ஸ் (டீழை ஆநஅள) எனவும் அழைக்கின்றனர்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மருந்தை நிர்வகிப்பது மட்டுமின்றி இதன் ‘உணரி’கள்  மூலம் நோயாளிகளுக்கு அடுத்த ‘டோஸ்’ எப்போது கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது.

பயோ மெம்ஸ் முறைகள் தற்போது ஆராய்ச்சிக் கட்டத்திலேயே உள்ளன. சில நிறுவனங்கள் இம்முறைகளைக் கொண்டு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பெட்போர்டில் உள்ள மைக்ரோ சிப்ஸ் நிறுவனம் 15 மில்லி மீட்டர் அளவே உள்ள சிலிக்கான் நுண்சில்களை  தயாரித்து வருகின்றன. இவைகள் நுண் தொகுச் சுற்று (ஐவெநபசயவநன ஊசைஉரவை) தயாரிக்க பயன்படும் தொழில் நுட்ப முறைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த நுண்சில்களில் மருந்து அடைக்கப்பட்ட 100 நுண்ணிய சேமிப்பு அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையும் பிளாட்டினம் மற்றும் டைட்டானியத்தால் ஆன மெல்லிய அடுக்குகளால் மூடப்பட்டு இருக்கும். அத்துடன் இவை அனைத்தும் ஒரு மின்சுற்று வலையமைப்பில்  இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு அறையின் மூடிக்கும் தனித்தனி முகவரிகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்குரிய முகவரியில் 4 வோல்ட் மின் சக்தி கொடுத்தால் அதன் அடுக்கு திறந்து அதனுள் இருக்கும் மருந்து வெளியேறும். இதில் விசேஷம் என்னவென்றால் இவை அனைத்தையும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம்.

டைட்டானியம் அறைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பயோ மெம்ஸ் சாதனம் ஒரு பாக்கெட் கடிகாரம் அளவே இருக்கும். இது ஒரு மின்கலம் ஒரு கம்பியில்லா தொலைவு இயக்க சில்  மற்றும் ஒரு நுண்முறை வழியாக்கி (micro processor) இவைகளை கொண்டிருக்கும்.
இந்த நுண் சில்லின் செயல்பாட்டை அறிவதற்காக இவற்றை விலங்குகளுக்கு பொருத்தி சோதனைகள் நடந்து வருகிறது. விலங்குகளில் முதுகு பகுதியில் இந்த சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த சாதனம் பொருத்தப்பட்ட விலங்குக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால் இதன் அருகே சென்று ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பட்டனை தட்டினால் போதும் மருந்து செலுத்தப்பட்டு விடும்.

மற்றொரு நிறுவனமான சிப் ஆர் எக்ஸ் (Chip Rx Inc) பயோ மெம்ஸ் முறையை அடிப்படையாக கொண்டு மருந்து செலுத்துகை முறையை தயாரித்து வருகிறது. தீக்குச்சி அளவே உள்ள இச்சாதனம் உடலில் பொருத்தப்பட்டு மின்சாரம் மூலம் இயக் கப்படுகிறது.
அதி நவீனமான இந்த பயோ மெம்ஸ் முறையை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அதாவது (1) மனிதனின் உடலுக்குள் செலுத்தப்படும் இந்த சாதனம் மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் துல்லியமாக மருந்தைச் செலுத்தும் அளவு உருவாக்கப்பட வேண்டும்.

(2) சிகிச்சை காலம் முடிந்ததும் அல்லது இந்த சாதனத்தில் உள்ள மருந்து காலியானதும் அதை எடுத்து விட்டு தேவைப்பட்டால் புதிய சாதனம் பொருத்தப்பட வேண்டும்.

(3) இந்த முறையில் மற்றொரு சிக்கலும் உள்ளது. அதாவது உடலுக்குள் எந்த ஒரு பொருள் புகுந்தாலும் (பொருத்தப்பட்டாலும்) அதை உடலின் தடுப்பாற்றல் சக்தி (Immune System) எதிர்க்கும். தடுப்பாற்றல் செல்கள் (வெள்ளை ரத்த அணுக்கள்) அந்த சாதனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவை சரியாக இயங்க முடியாமல் செய்கின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கவும் தற்போது தீவிரமாக ஆய்வுகள் நடந்து வருகிறது.

அடுத்த பிரச்சினை என்பது மருந்து நிரப்பப்பட்ட பயோ_மெம்ஸ் சாதனம் பொருத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மருந்துக்கள் தீர்ந்துவிடும். மீண்டும் மருந்தை நிரப்புவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பது அவசிய மாகிறது. இப்பிரச்சினையை தீர்க்கும் விதமாக சில விஞ்ஞானிகள் மற்றொரு முறையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இம்முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமலேயே வெளிப்புறத்தில் இருந்து ஊசியின் மூலமாக நேரடியாக பயோ_மெம்ஸ் சாதனத்திற்கு செலுத்தலாம்.

இந்த முறைகள் இருதய நோயாளிகளிக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு அடுத்த அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இருதய நோயாளிகள் உறைக்கட்டுதலை விலக்கும் (clot) மருந்துகள் நிரம்பிய இச்சாதனத்தை உட்பொருத்திவிட்டால் நோயாளிகள் ‘ஹார்ட் அட்டாக்’ வருவதற்கான முதல் அறிகுறிகளை உணர ஆரம்பித்தவுடன் இதை இயக்கி ஆபத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால் இருதய நோயாளிகளுக்கான இச்சாதனத்தை இயக்க நோயாளிகளை ஈடுபடுத்தாமல் நுண்முறை வழியாக்கி  மூலம் தானியங்கு முறையில் இயக்குவதே சிறப்பாகும்.

உலகம் முழுவதும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருதயக் கோளாறுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி பேர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் பெரும்பாலானோர் 65 வயதில் இருந்து அதற்கு மேற்பட்டோர் ஆவார்கள். இவற்றில் இறந்தவர்களின் பெரும்பாலானோர் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயத்தில் இருதய நோயாளிகளுக்காக முதற்கட்ட ஆய்வு தொடங்கியிருக்கிறது. இந்த ஆய்வு உள்நாட்டப்படக் கூடிய அழுத்த உணரிகளைப்  பொருத்தி இருதயம் செயலிழப்பதை தடுக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த அழுத்தமானிகள் கம்பியில்லா, மின்கலமில்லா  முறையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்படி அழுத்த உணரி  சாதனத்தை நோயாளியின் இடது இருதய கீழறையில் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுகிறது.

இந்த உணரிகள் மூலம் பெறப்படும் சமிக்ஞைகள் மூலம் மருந்து செலுத்து முறைமை இயக்கப்பட்டு மருந்து இருதயத்தை சென்றடைந்து ஆபத்திலிருந்து காக்கிறது. தற்பொழுது பல ஆய்வாளர்கள் நிறைவுச் சுற்று தொழில் நுட்பம் (Close loop technology)ல் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எப்படியும் இன்னும் 10 வருடங்களுக்குள்ளாக இம்முறை நடைமுறைக்கு வந்துவிடும் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவ உலகினர்.

முற்றிலும் வேறுபட்ட தன்மை கொண்ட குவாண்டம் டாட் முறையைக் கொண்டும் புதிய சிகிச்சை முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குவாண்டம் டாட் என்பது படிகங்களே. இது 2 மற்றும் 4 அரைக் கடத்தி காட்மியம் செலினாய்டுகள் ஆகும். உயிரி மருத்துவ துறைக்கு இந்த குவாண்டம் டாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிர் மருத்துவ பொறியியல் துறையின் விரிவுரையாளரான சுயூமிங் நை என்பவர் தான் குவாண்டம் டாட் மருந்து செலுத்துகை முறைமையை முதலில் பயன்படுத்தினார்.
மார்பக மற்றும் புராஸ்டேட் புற்று நோய்களுக்கான மருந்துகளை ‘குவாண்டம் டாட’டிற்குள் வைத்து நேரடியாக புற்று நோய் கட்டிகளின் செல்களுக்கே மருந்துகளை அனுப்பினார். இதனால் உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அறவே தவிர்க்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் மருந்துகளின் சிகிச்சை திறன் அதிகப்படுத்தப்படுவதோடு பக்க விளைவுகளும் தவிர்க்கப் பட்டு விடும்.

சுயூ மிங் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் புற்று நோய் செல்களை அறுவை சிகிச்சை மூலம் எலியின் உடலுக்குள் வைத்தனர். பின்னர் அதற்கான சிகிச்சை அளிக்க குவாண்டம் டாட் மருந்து செலுத்துகை முறையை பயன்படுத்தினார்கள். இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக செயல்பட்டது. மருந்துகள் சரியாக செயல்பட்டு புற்று நோய் செல்களை மட்டும் தாக்கி அழித்தது. இருப்பினும் எலிக்கு பயன்படுத்தியது போல மனிதர்களுக்கு இந்த முறையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் போது அதிக பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

அதே நேரத்தில் இந்த மருத்துவ ஆராய்ச்சி முறைகளில் வருங்காலத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாகும். இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் இருதய நோய் மற்றும் புற்று நோய்களுக்கு எளிய மருத்துவ சிகிச்சைகள் வந்து விடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.நன்றி: எம்.ஜே.எம்.இக்பால்


Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 132

Warning: Illegal string offset 'active' in /home/panippul/public_html/templates/ja_teline_iii/html/pagination.php on line 138

Page 5 of 10

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்