Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால்?

E-mail Print PDF

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால்? ஆட்சியை கைப்பற்ற சசிகலா தீட்டிய சதி. விரட்டியடித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா நட்புக்குச் செய்த துரோகம் என வர்ணிப்பு

ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா தரப்பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஜெயலலிதா, ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் அ.தி.மு.கவை விட்டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜெயலலிதாவின் ஆருயிர் தோழியும் உற்ற நண்பியுமான சசிகலா தற்போது விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெயலிதா விடயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்தேறி விட்டதை பார்த்து அதிர்ந்து போய்த்தான் சசிகலா கும்பலை விரட்டி விட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

பெங்களூர் கோர்ட்டில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை மையமாக வைத்து சசிகலா தரப்பு ஒரு அபாரமான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக நிச்சயம் தீர்ப்பு வரும். எனவே அவர் பதவி விலக நேரிடலாம். அப்படி நடந்தால், ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான் இந்த சதித் திட்டத்தின் மையப் புள்ளி என்கிறார்கள் “கார்டனுக்கு” நெருக்கமானவர்கள்.

ஜெயலலிதா 3வது முறையாக முதல்வர் பதவிக்கு வந்த நாள் முதலே இந்த சதித் திட்டத்தை படிப்படியாக அமுல்படுத்த ஆரம்பித்து விட்டது சசிகலா தரப்பு என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.

முதலில் ஜெயலலிதாவுக்கு அரசு நிர்வாகத் தகவல்கள், முக்கிய தகவல்கள் எதுவும் போகாமல் தடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்த “குரூப்” உளவுத்துறைத் தகவல்களை ஜெயலலிதாவிடம் போகாமல் திட்டமிட்டு தடுத்துள்ளது. இதற்கு வசதியாகவே நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட கூடுதல் டிஜிபி ராஜேந்திரனை உளவுத்துறை பொறுப்பிலிருந்து திட்டமிட்டு அகற்றி யுள்ளனர். அவருக்குப் பதில், ஐஜியான பொன். மாணிக்கவேலை கொண்டு வந்துள்ளனர்.

பொன். மாணிக்கவேல் உளவுத்துறை தகவல் எதையும் நேரடியாக ஜெயலலிதாவுக்குக் கொண்டு போகவே இல்லை என்கிறார்கள்.

மாறாக சசிகலாவிடமே நேரடியாக உளவுத் தகவல்களை கொடுத்து வந்துள்ளார். இதில் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவை யாரும் சந்திக்காத வகையில் திட்டமிட்டு ஜெயலலிதாவையே குழப்பி வைத்துள்ளனர். இதனால் மாலைக்கு மேல் ஜெயலலிதாவை உளவுத்துறையினர் மட்டுமல்லாமல் யாருமே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதெல்லாம் ஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்குப் புரியவில்லை என்கிறார்கள். பொன். மாணிக்கவேலின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் வந்தபோதுதான் நடந்தது, நடக்கிறது நடந்து கொண்டிருப்பது என்ன என்பது லேசாக அவருக்குப் புரிந்திருக்கிறது. இதனால்தான் பொன். மாணிக்கவேலை அவர் தூக்கினார். இதையடுத்து சசி தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அவர் சற்று சீரியஸாகவே கண்காணிக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் தன்னைச் சுற்றி எவ்வளவு பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என்பது அவருக்கு புரிந்து அதிர்ந்திருக்கிறார். அதாவது கடந்த 6 மாதமாக தான். பெயரளவுக்கே முதல்வராக இருந்திருப்பதையும், உண்மையில் நிர்வாகத்தில் முழு அளவில் சசிகலாவே தலையிட்டு வந்திருப்பதும் அவருக்குப் புரிந்திருக்கிறது.

போயஸ் தோட்டத்தை மையமாக வைத்து நடந்துள்ள இந்த ரகசிய செயல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்: தங்கபாலு!

E-mail Print PDF

ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இந்தியத் நாட்டின் பிரதமருமான தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை, அதன்வழி நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் தடுக்கப்பட்ட நீதி இப்பொழுது செயல் வடிவம் பெறும் போது அதனை தடுப்பதற்கு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது தகவல்கள் மற்றும் மனிதாபிமானம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று பல்வேறு கோணங்களில் சில தலைவர்கள், சில கட்சிகள் மற்றும் சிலர் சில்லறை சில்லறையாய் ஆங்காங்கே அறிக்கை விடுவதும், அதற்காக போராடுவதாக அறிவிப்பதும் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வி ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு கட்சியும், ஏன் அதன் தலைவர்களும், தொண்டர்களும் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது.

இந்தியத் நாட்டின் இணையற்ற தலைவர் ராஜீவ் காந்தி ஒரு தனி மனிதர் அல்ல. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர். இந்திய நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான பிரதமராக விளங்கியவர். அவரது படுகொலை என்பது அதுவும் தமிழ்நாட்டில் எந்த தமிழ் இனத்திற்காக தன் இன்னுயிரை பணயம் வைத்து பாடுபட்ட தலைவரை பலி கொடுத்ததும், தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே படுகொலை செய்தது இன்னும் ஒவ்வொரு தமிழன், இந்திய குடிமக்கள் அனைவரது நெஞ்சங்களிலும் தீப்பிழம்பாக உள்ளது.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும்.ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்தம் அப்பா, அம்மா, உறவினர்கள், மனைவி மற்றும் உறவினர்கள் என்று அவர்களுக்காக வாதாடுவது தனிப்பட்ட முறையில் இயல்பான ஒன்று. அதே நிலையில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், தோழர்களும் தங்கள் கட்சியின் தலைவர் படுகொலைக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதற்கான தண்டனையை வழங்கப்பட்டபோது அதை வரவேற்பதும், அதை நிறைவேற்ற வேண்டுவதும் இயல்பான ஒன்று. அதில் தார்மீகமும், தர்மமும் கூட உண்டு.

இன்றைக்கு தங்கள் கட்சியின் தலைவர் அல்லது தங்கள் குடும்பத்தின் தலைவர் எவராவது ராஜீவ் காந்தியைப் போல படுகொலை செய்யப்பட்டிருந்தால், அதற்குப்பின் படுகொலையாளர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றிருந்தால், அப்படி தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டுமென்று அந்தக் கட்சித் தலைவர் மற்றும் அந்த கட்சியைச் சார்ந்த தொண்டர்கள், அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்பட வேண்டுமென்று கூறுவார்களா? அல்லது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று மன்றாடுவார்களா? அல்லது ஆர்ப்பாட்டம் தான் நடத்துவார்களா?.

தனக்கு வந்தால் ஒரு நீதி! மற்றவருக்கு வந்தால் வேறு நீதி என்று வரலாற்றுப் பிழைகளை தினந்தினம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அன்புள்ள கட்சித் தலைவர்களே!, அதன் தொண்டர்களே! அதன் தோழர்களே! பகுத்தறிவு மற்றும் தமிழுணர்வு, மனிதானிமானம் பற்றி மணிக்கணக்கில் வாதாடுகிற நண்பர்களே உங்கள் நெஞ்சில் ஈரம் இருந்தால் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்?.

இதே நிலை உங்கள் கட்சிக்கு அல்லது குடும்பத்திற்கு வந்ந்தால் உங்கள் குடும்பத்தினர் என்ன நிலையில் இருந்ப்பார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? அகிலம் போற்றும் சோனியா காந்தி 120 கோடி மக்கள் வாழும் மகத்தான இந்திய தேசத்தில் பிரதமர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக பணியாற்றுவேன் என்று மகுடம் சூட்டிக் கொண்ட அந்த மகத்தான தலைவி, அவரது அருமைக் கணவர் ராஜீவ் காந்தியை இழந்து வாடிக் கொண்டிருக்கிறாரே? அவருக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்?

அதேபோல அருமை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தன் தந்தையை இழந்து 20 ஆண்டுகளாக துடித்துக் கொண்டிருக்கிறாரே அந்த தம்பியின் துடிப்பிற்கு உங்களால் மருந்து போட முடியுமா?அருமை சகோதரி பிரியங்கா தன் தந்தையை இழந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவியாய் தவிக்கிறாரே, அந்த தங்கையின் உணர்வுக்கு யார் பதில் சொல்ல முடியும்?

காங்கிரஸ் கட்சியும், கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் அனைவரும் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் சுதந்திர வேள்வி தொடங்கி இன்று வரை பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க 'தனக்கென வாழா, பிறர்க்கென வாழும் தகைமைசால் குடும்பமாய்" இந்தியத் நாட்டின் பெருமைக்காக இந்திரா காந்தி, அதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி என தொடர்கதையாய் தியாகங்களை வழங்கி வரும் இந்த தலைமைக்கும், இந்த இயக்கத்திற்கும் இணையான தலைமை எங்கே? இந்த தலைவர்களுக்கும், அவர்தம் சீரிய பணிகளுக்கும் இணையானவர்கள் யார் இந்தியாவில்?.

இந்தியாவில் தொடர்ந்து வரும் ஜனநாயகமும், சுதந்திரமும் நிலைக்க வேண்டுமானால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்.ஒரு சிலருக்காக சட்டம் வளைக்கப்படுமேயானால், அல்லது சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுமேயானால், இந்தியாவில் மீண்டும் 65 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தான் செல்ல வேண்டும்.

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத சில தனி நபர்கள், சில கட்சிகள் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதும், எழுதுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்துவதும், அதற்காக அப்பாவி தமிழினத்தை அழைப்பதும், அவர்களை தவறாக நடத்துவதும், குறிப்பாக ஏதுமறியத இனம் புரியாத இளம் சிறார்களை, மாணவர்களை போராட அழைப்பதும், தவறான முன்னுதாரணங்களை உருவாக்கி தமிழினத்தை அழித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. அரசுகள் இருக்காது. ஆட்சிகள் இருக்காது. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். அல்லது தனியாக தங்களுக்கென தனி ஆட்சி உருவாக்கிக் கொண்டு தாறுமாறாக எதை வேண்டுமானாலும் செய்யலாம். கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம். கேட்பதற்கு யார் இருப்பார்கள்?.

மீண்டும் ஜனநாயக பாதையிலிருந்து இந்தியா என்ற மாபெரும் தேசம் திசைமாறிப் போக வேண்டுமா? என்பதை கனிவுள்ள கணவான்கள் கனிவோடு எமது கருத்துக்களை பரிசீலிப்பார்களாக. அதன் பிறகாவது சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் தொடர்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களாக.

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவில் வாழும் அத்துணை குடிமக்களுக்கும், ஒப்பற்ற எல்லோருக்கும் இணையான அந்தஸ்தை, சமூக நீதியை, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி வரும் பேரியக்கம். அந்த பேரியக்கத்தின் சார்பில் உண்மையான தமிழின மக்களை, தமிழினத்தின் பண்பாட்டை, நாகரீகத்தை கட்டிக்காத்து, கடமைகளை மறந்துவிடாமல் தொடர்ந்து ஜனநாயக நெறிகளை காப்பதற்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். இது ஒன்று தான் ஒவ்வொரு தமிழின மக்களையும், இந்திய மக்களையும் பாதுகாத்து பண்போடு நடந்து வர வழியாகும், வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார் தங்கபாலு.

பின்னர் சத்திய மூர்த்தி பவனில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கிறது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்களை சில அரசியல் கட்சிகள், சில சுயநலவாதிகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இது ஆபத்தானது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு சட்டம் வழங்கிய தீர்ப்பின்படி தூக்கில் போட வேண்டும். இதை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமை. கொலையாளிகள் 3 பேரும் எல்லா மேல்முறையீடுகளையும் கடந்து வந்து விட்டார்கள். எனவே தண்டனையை நிறைவேற்றத் தான் வேண்டும் என்றார். பின்னர் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

கேள்வி: இது பழிக்கு பழி ஆகாதா?
பதில்: காங்கிரஸ் யாரையும் பழிவாங்கும் கட்சி அல்ல. நாங்கள்தான் எங்களை அழித்து கொண்டுள்ளோம். இந்திரா, ராஜீவை இழந்துள்ளோம். இன்னும் இழக்க என்ன உள்ளது?

கேள்வி: இந்திரா கொலையாளிகள் கூட மன்னிக்கப்பட்டார்கள். ராஜீவ் கொலையில் சிக்கியவர்கள் அப்பாவு தமிழர்கள் என்பதால் மன்னிக்க கூடாதா?
பதில்: நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பார்த்து பேசவில்லை. எல்லாம் ஒரே தேசம்தான். தனிநபர்களுக்கு காங்கிரஸ் எதிரி அல்ல.

கேள்வி: ஒரு கொலைக்கு கொலைதான் தீர்வா?
பதில்: அது தீர்வல்ல. ஆனால் சட்டத்துக்கு வேலை கிடையாதா? அது தன் கடமையை செய்ய வேண்டும் அல்லவா?

கேள்வி: தி.மு.க. தலைவர் கருணாநிகி கூட மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாரே.
பதில்: அது அவரது கருத்து. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை கூறியுள்ளோம்.

கேள்வி: ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இலங்கை தமிழர்களை கொடூரமாக கொலை செய்த அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் காங்கிரஸ் வரவேற்பு கொடுக்கிறதே?
பதில்: இலங்கை வன்முறையை காங்கிரசும் கண்டித்துள்ளது. எங்கு படுகொலை நடந்தாலும் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்றார்.

நன்றி:பரிஸ்தமிழ்

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்

E-mail Print PDF


உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கியவர் (இந்திய) நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தான். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் அவரது ஓவியம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன்முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படுத்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் மகன் வில்லியம் காங்கிரீவ் திப்புவின் ராக்கெட் பகுதிகளை இங்கிலாந்து கொண்டு சென்று  நவீனப்படுத்தினார். அதுவே பின்னர் காங்கிரீவ் ராக்கெட்டு கள் என்று பெயரிடப்பட்டது.

 

Read more...

தமிழ்நாடு புவியியல் அமைப்பும் தேர்தல் தொகுதிகளும் - பொது அறிவுக் கண்ணோட்டம்

E-mail Print PDF

No automatic alt text available.

தமிழ்நாடு

தமிழகம் என அழைக்கப் பெறும் தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். மதராஸ் மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

Read more...

ஸ்ரீ சங்கரரின் அருள் மொழிகள்

E-mail Print PDF

* தாயே! மந்திரமோ, தந்திரமோ, தோத்திரமோ நான் அறியேன்.  ஆவானகமோ, தியானமோ செய்ய அறியேன். உன்னுடைய புகழைப் பாடவும் அறியேன். உனது பூசை முத்திரைகளை அறியேன், எனக்கோ அழக்கூடத் தெரியாது.ஆனால் உன்னை வந்தடைந்தால் அது துன்பத்தைப் போக்கும் என்பது மட்டும் தெரியும்.

Read more...

வள்ளலார் வாழ்ந்த இடத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை

E-mail Print PDF

ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை கூறியுள்ளது. இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பா. கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

வடலூர் வள்ளலார் ராமலிங்கப் பெருமான், சென்னை ஏழு கிணறு வீராசாமிப் பிள்ளைத் தெருவில் புதிய கதவு எண் 31 என்ற வீட்டில் தன்னுடைய 2 வயது முதல் 32 ஆண்டுகள் வாழ்ந்து கடுந்தவம் புரிந்து முக்தி என்ற முன்னறு மெய்ஞான சாதனை நிலையை அடைந்தார். இந்த இல்லத்தில் திருவருட்பாவின் பெரும்பாலான பாடல்களை அவர் எழுதினார். பின்னர் கருங்குழியில் 9 ஆண்டுகளும், வடலூரில் 3 ஆண்டுகளும், மேட்டுக்குப்பத்தில் 3 ஆண்டுகளும் தங்கியிருந்தார்.

சென்னை வீட்டிலிருந்த திண்ணையில் ராமலிங்கர் படுத்துறங்குது வழக்கம். அந்த இடத்துக்கு சிவபெருமான் பல நாள்கள் வந்ததாகவும், கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் பசியோடு உறங்கிய ஒரு நாள் இரவில், வடிவுடையம்மனே அங்கு வந்து அவரை எழுப்பி உணவளித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இல்லம் தற்போது தனியாரிடம் இருப்பதால் திண்ணை அகற்றப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதை நான் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட "அருட்பெருஞ்சோதி ஞானச் சித்தர்' என்ற நூலில் முதல் முதலாகக் குறிப்பிட்டேன்.

கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது என் நண்பர் இராம. அனகானந்தன் மூலம் இது பற்றிய மனு ஒன்றை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதன் மீது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார்.

அதில் ராமலிங்க வள்ளலார் இல்லத்தை நாட்டுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் கமலக்கண்ணன்.

Page 2 of 2

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்