Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை வாங்க சிரிக்கலாம்

டாக்ரர்

E-mail Print PDF

டாக்டர் :        "உங்க கணவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி ஒரு வருடமாக இருக்கிறதென்று தெரிந்தும் ஏன் சொல்லல?"

மனைவி:      அதுவா, நீங்க அட்வைஸ் பண்ணின மாதிரி அவர் வாக்கிங் போறதே இல்ல. அட்லீஸ்ட் இப்படியாவது  நடக்கட்டும்  என பேசாம இருந்துட்டேன்

டாக்டர்:        அப்படியா, இப்ப ஏன் சொன்னீங்க?

மனைவி:     அதுவா, இவர் தூக்கத்திலை நடக்கிறபோ ஏதாவது ஆயிடிச்சென்ணா எனக்கு தாற காசை நிப்பாட்டிப் போடுவாங்க இல்லியா? அதுதான்.

கிறுக்கு காதலி

E-mail Print PDF

காதலன்: "நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது ."

காதலி:     ம்ம் . "என்னங்க சொல்லுங்க ." உங்கட வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க

காதலன்: " ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.

பாதுகாப்பு கோரும் மாணவன்

E-mail Print PDF

மாணவன்:            "இன்ஸ்பெக்டர் சார், எனக்குப் பாதுகாப்பு வேணும் ."

இன்ஸ்பெக்ட்டர் :   ஏன் ...........என்னாச்சு  உனக்கு?

மாணவன்:           "இந்த வருஷம் கண்டிப்பா நான் பெயில் ஆயிடுவேன் . அப்படி ஆயிட்டா என் அப்பா அம்மா என்னை அடிச்சே கொன்னுடுவாங்க சார் ."

மன்னரும் மந்திரியும்

E-mail Print PDF

மன்னர் :          "அமைச்சரே ! நான் போருக்குச் செல்வதைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் ?"

அமைச்சர்:        "இது ஈடு செய்யக் கூடிய இழப்பு தான் என்று பேசிக் கொள்கிறார்கள்"

நான் யார் தெரியுமா

E-mail Print PDF

நான் யார் தெரியுமா?" என்றான் மாணவன்.

"நீ யாரா இருந்தா எனக்கென்ன?" என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.

"நான் யார்னு தெரியாது உங்களுக்கு?" என்றான் மாணவன் மீண்டும்.

"தெரியாது!!!" என்று கத்தினார் ஆசிரியர். "அப்ப நல்லதாப் போச்சு!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்

ஒரு மார்க்குக்கு 1 ரூபா

E-mail Print PDF

ஒரு காலேஜ் ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பரீட்சை வைத்தார். பரீட்சை முடிந்து எல்லா விடைத்தாள்களும் கைக்கு வந்ததும் திருத்த ஆரம்பித்தார்.

அதில் ஒரு மாணவன் விடைத்தாளுக்கு மேல் "ஒரு மார்க்குக்கு தலா 1 ரூபாய் கிடைக்கும்" என்று எழுதி, ஒரு 100 ரூபாய் நோட்டைத் தாளுடன் குத்தி வைத்திருந்தான்.

ஆசிரியர் அந்த பேப்பரைத் திருத்திவிட்டு, பாக்கி 70 ரூபாயை அந்தப் பையனிடம் திரும்பத் தந்தார்.

 

Page 2 of 4

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்