Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா

இளையோருக்கான - "தமிழ்" சொல்வது எழுதல் போட்டியும், தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டியும் - 16.03.2014

E-mail Print PDF

காலம்: 16-03-2014,   காலை 9.00. முதல் .......பகல் 1.00 மணிவரை.

இடம்: Meeting Room, Scarborough Civic Centre ,

150 Borough Drive

இடம்பெறும் போட்டிகள்:

1. ”தமிழ்” சொல்வதெழுதல்

2. தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டி

1.  சொல்வதெழுதல் போட்டி பற்றிய முழு விபரமும் அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

2.  தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டி பற்றிய விபரம் அறிந்து கொள்ள இங்கே அழுதுக

போட்டி நடைபெறும் இடத்தினை பெற்றுக் கொள்வதில் இட நெருக்கடி நிலவுவதால்; எமக்கு வசதியான நேரத்தில் வசதியான இடத்தை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அத்துடன்;  எமக்கு கிடைத்த இடத்தில் (காலை நேரத்தில்) மேலே குறிக்கப் பெற்ற நேரத்திற்குள் போட்டியை நடாத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதுடன்; இவ் நெருக்கடியான சூழ்நிலையில் பெற்றோர்கள் அனைவரும் சிரமம் பாராது தம் பிள்ளைகளை போட்டிகளில் பங்கு பற்றச் செய்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: மனுவேந்தன் அவர்கள்


கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம்

தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2014 - பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா

E-mail Print PDF

போட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்

தமிழ் சொல்வதெழுதல் போட்டிக்கான சொற்கள் பிரிவுகள் அடிப்படையில் பதியப் பெற்றுள்ளன. உங்கள் பிள்ளைகளுக்கான பிரிவை தெரிவு செய்து அவர்களை ஆயத்தம் செய்து கொள்வதற்காக முன்கூட்டியே தரப்பெற்றுள்ளன.

போட்டி இடம்பெறும் இடம், நேரம் என்பன உரிய நேரத்தில் அறியத் தரப்பெறும்

உங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்கள் அடங்கிய பத்திரத்தை நீங்களே அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும், இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்

போட்டி பற்றிய முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ள திரு. மனுவேந்தன் அவர்களை (416-569-5121) அழையுங்கள்

பிரிவு: பாலர் வகுப்பு

1.      அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
2.      பூ
3.      தீ
4.      நீ
5.      கூ
6.      வா
7.      விழு
8.      அது
9.      பிடி
10.    கை
11.    போ
12.    வலி
13.    நோ
14.    சிவ
15.    துடை
16.    ஓடு
17.    கை
18.    தொடு
19.    கண்
20.    காது


பிரிவு: வகுப்பு - 1
1.      இரு
2.      படு
3.      நட
4.      போடு
5.      அழு
6.      விடு
7.      நாடு
8.      விழு
9.      ஓடு
10.    கொடு
11.    வாதி
12.    சோதி
13.    ஆடு
14.    நாடு
15.    அணு
16.    பொது
17.    தோடு
18.    முடி
19.    குதி
20.    விதி
21.    முகில்
22.    முத்து
23.    கழுவு
24.    கத்து
25.    முட்டு
26.    போற்று
27.    பொத்து
28.    வாட்டு
29.    காட்டு
30.    கொத்து


பிரிவு: வகுப்பு - 02
1.      அறிவு
2.      வீரன்
3.      அழகு
4.      அமைதி
5.      வானம்
6.      தொழில் 
7.      மழழை
8.      என்ன
9.      அவர்
10.    நன்றி
11.    வாழ்க
12.    தளம்
13.    கேள்வி
14.    ஆவல்
15.    புகழ்
16.    பாடல்
17.    ஆடல்
18.    அவள்
19.    இவள்
20.    இந்த
21.    அந்த
22.    பெருமை
23.    பயம்
24.    வேணும்
25.    போதும்
26.    மேளம்
27.    கனடா
28.    எழுது
29.    சுடும்
30.    தூரம்


பிரிவு: வகுப்பு - 03
1.      குட்டு
2.      தள்ளு
3.      கல்லு
4.      சக்தி
5.      தொட்டி
6.      கஞ்சி
7.      பக்தி
8.      காவடி
9.      மொட்டு
10.    நுள்ளு
11.    வாழும்
12.    இல்லை
13.    பிள்ளை
14.    பொங்கு
15.    தொங்கு
16.    வள்ளி
17.    பழுது
18.    பங்கு
19.    நாழிகை
20.    பொதிகை
21.    காட்சி
22.    தேவைகள்
23.    கூட்டு
24.    தொட்டு
25.    தெரிவாய்
26.    பேத்தி
27.    அறிதல்
28.    கொட்டு
29.    பிறவி
30.    விழுவாய்


பிரிவு: வகுப்பு - 04
1.      மின்னல்
2.      மிருகம்
3.      மனிதன்
4.      விரதம்
5.      நடிகன்
6.      பக்கம்
7.      இருவர்
8.      ஒருவர்
9.      புதினம்
10.    வட்டம்
11.    எப்படி
12.    வெள்ளம்
13.    தடிமன்
14.    கணக்கு
15.    கழகம்
16.    அபாயம்
17.    துக்கம்
18.    இருமல்
19.    அடுத்து
20.    கருத்து
21.    காரணம்
22.    வருடம்
23.    எறும்பு
24.    இழப்பு
25.    புதியது
26.    நிமிடம்
27.    பிறப்பு
28.    சிங்கம்
29.    இரும்பு
30.    வர்ணம்


பிரிவு: வகுப்பு - 05
1.      அழைப்பு
2.      பிழையான
3.      வாழ்த்து
4.      களைத்த
5.      பாடுவேன்
6.      பொரியல்
7.      கழகம்
8.      குழப்பம்
9.      இலங்கை
10.    குழந்தை
11.    அலம்பல்
12.    கதைகள்
13.    கேட்பாய்
14.    கிழவன்
15.    இணையம்
16.    எழும்பு 
17.    கூட்டல்
18.    கடைகள்
19.    வேண்டாம்
20.    கிடையாது
21.    தொடர்பு
22.    பழையது
23.    களைப்பு
24.    திருநீறு
25.    குளித்தல்
26.    தேவாரம்
27.    கொழுப்பு
28.    மாலைகள்
29.    எலும்பு
30.    உழைப்பு


பிரிவு: வகுப்பு - 06
1.      அவசரம்
2.      மலிவானது
3.      ஒழுக்கம்
4.      சந்தனம்
5.      தோட்டம்
6.      தூரத்தில்
7.      கண்ணாடி
8.      நீங்கள்
9.      கூறினார்
10.    கத்தியது
11.    கழித்தல்
12.    சுடுகிறது
13.    மழைமுகில்
14.    நல்லவன்
15.    வெளிக்கிடு
16.    இருங்கள்
17.    முடியாது
18.    இனிக்கும்
19.    அழுகிறான்
20.    இரக்கம்
21.    புளிக்கும்
22.    கசக்கும்
23.    இரகசியம்
24.    மன்னிப்பு
25.    அழுதேன்
26.    காய்ச்சல்
27.    வைத்தியர்
28.    மெலிந்தேன்
29.    கழிவுகள்
30.    அனுப்புதல்
31.    உடைந்தது
32.    பாடுங்கள்
33.    கிடையாது
34.    முழித்தல்
35.    மரக்கறி
36.    பேசுங்கள்
37.    நம்பினேன்
38.    மன்னிப்பு
39.    வாழ்க்கை
40.    ஓடுவோம்


பிரிவு: வகுப்பு - 07
1.      கடுமையான
2.      உடைத்தாள்
3.      பாதங்கள்
4.      மறுபடியும்
5.      ஒழுங்கானது
6.      அருளுவாள்
7.      ஒலிபரப்பு
8.      போற்றினர்
9.      தொலைக்காட்சி
10.    வானொலிப்பெட்டி
11.    அறிவிப்பாளர்
12.    போக்குவரவு
13.    சிங்காரி
14.    இல்லாதவன்
15.    வாழ்த்தினான்
16.    இறைசெயல்
17.    இயக்கம் 
18.    துறந்தவன்
19.    மகாராணி
20.    நல்லவேளை
21.    கல்மனம்
22.    பூந்தளிர்
23.    கருமேகம்
24.    கூறினார்கள்
25.    நானிலம்
26.    பொருளாளர்
27.    இடைவேளை
28.    மறந்தாள்
29.    பெற்றுகொள்
30.    யாரிடம்
31.    நடுதல்
32.    மறந்துவிட்டேன்
33.    வாடியது
34.    பூமணம்
35.    பொய்முகம்
36.    வருந்தினேன்
37.    நடக்கவில்லை
38.    தடைப்பட்டது
39.    விடைபெறு
40.    கற்பகவல்லி


பிரிவு: வகுப்பு - 08
1.      விஞ்ஞானம்
2.      நடக்கிறேன்
3.      பொறுங்கள்
4.      அழித்தனர்
5.      திரைப்படம்
6.      சாப்பிடுவோம்
7.      பறக்கின்றன
8.      சொல்லுங்கள்
9.      கனடாக்காரன்
10.    சைவசமயம்  
11.    பெண்பிள்ளை
12.    பேச்சுவார்த்தை
13.    கழுவினேன்
14.    கொழுத்துவிட்டாய்
15.    பேச்சுப்போட்டி
16.    பொல்லாதவன்
17.    குங்குமம்
18.    கிழித்தெறி
19.    குரைத்தல்
20.    மெலிந்தவன்
21.    சுடுதண்ணீர்  
22.    குளிர்காலம் 
23.    கோடைகாலம்
24.    உயர்ந்தவர்கள்
25.    பணக்காரன்
26.    போகிறேன்
27.    பழக்கவழக்கம்
28.    குறைகுற்றம்
29.    உறங்கினான்
30.    வளர்ந்தேன்
31.    முழுகினேன்
32.    ஆண்பிள்ளை
33.    சிரிக்கிறேன்
34.    அழுகிறான்
35.    பிறந்தநாள்
36.    தும்புத்தடி
37.    திருக்குறள்
38.    விளையாடுவோம்
39.    விளங்கவில்லை
40.    களைத்தோம்


குறிப்பு:போட்டிகள் தற்போது கற்கும் வகுப்பின் அ
டிப்படையில் பாடசாலைகளின் march break காலத்தில்  இடம்பெறும்.போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து பெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள்.

தகவல்: மனுவேந்தன் அவர்கள்

பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் தாய் மொழி தமிழை ஊட்டுவதற்காக ஊர் கழகங்கள், ஒன்றியங்கள் முன்னெடுத்துள்ள தமிழ் சொல்வதெழுதல், பேச்சுப் போட்டி போன்ற ஊக்குவிப்பு நிகழ்வுகளை போற்றுவதில் பெருமிதமடைகின்றோம்.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் தாய் மொழி தமிழையும் கற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பினை பெற்றுக் கொள்வதோடு எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

நன்றி நவிலலும் புத்தாண்டு வாழ்த்துக்களும் - பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா

E-mail Print PDF

கடந்த 25-12 2013 அன்று நடைபெற்ற கழகத்தின் குளிர்கால ஒன்று கூடல் நிகழ்வின் போது சிறப்பு விருந்தினராக வருகை தந்து கழகத்திற்கு பெருமை சேர்த்த ”கலாநிதி” நடேசன் ரவீந்திரன் அவர்களுக்கு கழகம் முதற்கண் நன்றிகளையும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதில் பூரிப்படைகின்றது.

சிறப்பான கலை நிகழ்ச்சிகளை வழங்கி மேடையினை சிறப்பித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் அனைவருக்கும் பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்து ஊக்குவித்த ”வீடு விற்பனை முகவர்” கிறிஸ் சிவபாதம் அவர்களுக்கும்;

ஆங்கிலப் போட்டியில் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவருக்கும் பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்து ஊக்குவித்த ”வீடு விற்பனை முகவர்” சிவா சிவநேசன் அவர்களுக்கும்;

விழாவிற்கு வருகை தந்தோரின் நுளைவுச் சீட்டுகள் லொத்தர் மூலம் அதிர்ஷ்டம் பார்த்து பரிசில்கள் வழங்கிய ”பாதுகாப்புக் கமரா விற்பனர்” சிவபாலசிங்கம் கெங்காதரன் அவர்களுக்கும்;

நிகழ்வினைச் சிறப்பித்த அனைத்து கலைஞர்களுக்கும், சமயலறையில் நின்று கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும், உணவு பரிமாறுவதற்கு முன்நின்று செயல்பெற்ற இளையோருக்கும்;

பண்ஒளி  ஆண்டுமலருக்காக விளம்பரம் தந்து பங்களித்த விளம்பரதாரர்களுக்கும், விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் கழகம் பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது.

மேலும் புதிய ஆண்டில் புதுமைகள் படைக்க உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கும் வேளையில் கழக அங்கத்தினர், புலம் வாழ், புலம் பெயர் வாழ் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கழகம் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.


வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புகின்றன. இது வரை இவ் நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் எம்மூர் உறவுகளையும், கலை, பண்பாடு, கலாச்சாரம், சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளலாம்.

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா

தகவல்: மனுவேந்தன்


கனடா - பண் கலை பண்பாட்டுக கழகம் தனது 26 வருட பூர்த்தியை 25.12.2013  நத்தார் தின குளிர்கால ஒன்று கூடலாகவும், கனடா நாட்டிற்கு வருகை தந்திருந்த எம்மூர் அறிஞன் ”கலாநிதி”  நடேசன் ரவீந்திரன் அவர்களை வரவேற்று, கௌரவித்து விருந்து வழங்கும் நிகழ்வாகவும் நிகழ்வுற்றது. இவ் விழாவில் கனடா வாழ் ஊர் மக்கள் அனைவரும் அணிதிரண்டு  வருகை தந்து சிறப்பித்தார்கள்.

இவ் விழா உயிர் நீர்த்த உறவுகளுக்கும், கழக நிர்காகிகளுக்கும் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப் பெற்றதுடன் தமிழ்தாய் வாழ்த்தும், கனடா நாட்டின் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடப்பெற்றதுடன். கனடா- பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் கழக கீதம் பாடப்பெற்று விழா ஆரம்பிக்கப் பெற்றது..

இவ் விழாவின் பிரதம விருந்தினராக எமது உறவுகளில் ஒருவரும், பல்கலைக் கழக விரிவுரையாளரும், பல்கலைக் கழகங்களில் வழங்கப்பெறும் அதிஉயர் பட்டமான “கலாநிதி” பட்டத்தினை  பெற்றுக் கொண்ட கலாநிதி நடேசன் ரவீந்திரன் அவர்கள் அழைக்கப் பெற்று கேடயம் வழங்கி கௌரவிக்கப் பெற்றார்.

இவ் விழாவின் போது எம் மூர் மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன். கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் ”வீடு விற்பனை முகவர் கிறிஸ் சிவபாதம் அவர்கள் பரிசில்கள் வழங்கி உற்சாகப் படுத்தினார். அத்துடன், Spelling Bee ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துக் கூட்டும் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து சிறார்களுக்கும் ”வீடு விற்பனை முகவர் சிவகுமார்  சிவநேசன்” அவர்கள் பரிசில்கள் வழங்கி ஊக்கப் படுதினார்.

இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரினதும் நுளைவுச் சீட்டுகள் அதிர்ஷ்டம் பார்க்கப் பெற்று தெரிவானோர்க்கு ”வீட்டு பாதுகாப்பு கமரா” அமைப்பதில் விற்பனரான கெங்கா பாலசிங்கம் அவர்கள் பரிசில்கள் வழங்கி சிறப்பித்தார்.

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டங்களை வளர்த்தெடுக்க முன்நின்று பணம், பொருள் உதவிகள் புரிந்த எமது ஊர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள், கழக அங்கத்தினர், ஊர் பிரமுகவர்கள் அனைவருக்கும் பண் கலை பண்பாட்டுக் கழகம் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப் பெற்றதுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.


நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக


குளிர்கால ஒன்று கூடல் - பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா 25.12.2013 - வெள்ளி விழா நிகழ்வுகள் இணைப்பு

E-mail Print PDF

 

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் முன்பு அறியத் தந்ததுபோல் டிசெம்பர் 25.12.2013 நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை அறியத் தருவதுடன் கனடா வாழ் பணிப்புலம் மக்கள் அனைவரையும் பங்கு பற்றிச் சிறப்பிக்குமாறு அன்புக் கரம் கூப்பி அழைக்கின்றோம்.

அன்றைய விழாவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கும் பிள்ளைகளின் பெயர், மேலும் தகவல்கள்களை 416-569-5121 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கலை விழா இடம்பெறும் இடம்:

Mertopolitan Centre (3840 finch ave,east /west of kennedy.scarborough) வெள்ளி விழா நடைபெற்ற விழா மண்டபம்

 

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனட

கடந்த 25.12.2012 அன்று நிகழ்வுற்ற கழகத்தின் வெள்ளிவிழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

Spelling-bee போட்டி முடிவுகளும், அள. பகீரதனின் “எப்படியெனிலும்” நூல் வெளியீட்டு விழாவும் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2013 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டி 30.11.2013 அன்று ”ஸ்காபறோ சிவிக் சென்ரரில்” கழக உறுப்பினர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.  அப்போட்டிகளில் பங்கு பற்றிய சிறார்களையும், போட்டி நிகழ்வினையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.

கடந்த சனிக்கிழமை கழகத்தினால் நடாத்தப்பட்ட எமது சிறார்களுக்கான ஆங்கில எழுத்துக்கூட்டல்  போட்டியில் பங்குபற்றிய சிறார்கள் அனைவருக்கும் கழகம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. போட்டியில் பங்கு பற்றிய சிறார்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப் பெறும் என்பதனை அறியத்தருவதுடன், அவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரம் கீழே தரப்பெற்றுள்ளன.

அதிகீழ்ப்பிரிவு (2008- 2009 இல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: கிஷோன் தயாளரூபன்
இரண்டாம் இடம்: பிரீதிகா வினோதரூபன்
மூன்றாம் இடம்: சாகித்தியன் நந்தகுமார் & கனிஷ்திகா சுபேந்திரன்

கீழ்ப்பிரிவு (2006 – 2007 ல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: அபிஷன் ரதீஸ்குமார்
இரண்டாம் இடம்: மதுஷன் செல்வரட்ணம்
மூன்றாம் இடம்: ஆருஷன் கேதீஸ்வரான்

மத்தியபிரிவு (2004-2005 ல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: திவ்யன் விமலரூபன்
இரண்டாம் இடம்: கிஷான் வினோதரூபன்
மூன்றாம் இடம்: அங் நடேசன்

மேற்பிரிவு(2002-2003இல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: சங்கீத் ஞானேஸ்வரன்
இரண்டாம் இடம்: சுகஸ்திகா சுபேந்திரன்
மூன்றாம் இடம்: பவித்திரன் உதயகுமார்

அதிமேற்பிரிவு(2000-2001இல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: சலோபன் விமலரூபன்
இரண்டாம் இடம்: அபிதா நடேசன்
மூன்றாம் இடம்: ஹரிஷன் சிவகுமார்

நிகழ்வினை பார்வையிட இங்கே அழுத்துக

வாணிவிழா 2013 - நன்றி, நன்றி, நன்றி - பண்கலை பண் பாட்டுக் கழகம் - கனடா (புதிய படங்கள் 170 இணைப்பு)

E-mail Print PDF


கடந்த 13-10-2013 அன்று கனடா-பண்கலை பண்பாட்டுக் கழகம்; பெரியசிவன் ஆலய விழா மண்டபத்தில் நடாத்திய வாணிவிழா - 2013 நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைவதற்கு; கழக ஸ்தபகர் மதிப்புக்குரிய அமரர். திரு. விசு விமலன் அவர்களின் நினைவாக வழமைபோல் ”விழா மண்டபத்தினை” பெற்றுத்தந்து விழாவினை சிறப்பித்த அமரர் விமலனின் தந்தை தொண்டர் திரு. வி. கந்தசாமி அவர்களுக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் பண் கலை பண் பாட்டுக் கழகம்-கனடா முதற்கண் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் விழா சிறப்படைய தாமாகவே முன்வந்து உதவிகள் பல செய்த பங்காளிகளான;

•          கந்தசாமி, வைகுந்தன்
•          சிவபாதம், கிருஷ்ணகுமார்
•          தியாகராஜா, யோகேஸ்வரன்
•          சுப்பிரமணியம், சிவகுமார்
•          சுப்பிரமணியம், சுபேந்திரன்
•          முருகேசு, இராகவன்(audio)
•          கந்தையா, ஆனந்தமுருகன்(vedio) 
•          துரைசிங்கம், கமலேஸ்வரன்
•          சுப்பிரமணியம், நந்தகுமார்
•          சின்னத்துரை, பாலறங்கன்
•          குமாரசாமி, ரவிமோகன்
•          சிவபாலசிங்கம், கெங்காதரன்
•          சிவானந்தன், ராணி
•          சிவபாதம், நடேசன்
•          தம்பிமுத்து, புலேந்திரன்
•          கார்த்திகேசு, செல்வன்
•          செல்லத்துரை, மனுவேந்தன்
•          பேரின்பநாதன் விஜயநாதன்
ஆகியோருக்கும்; தோன்றாத் துணையாக நின்று விழாவினைச் சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் கழகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன், தரமான கலை நிகழ்வுகளை மேடையேற்றி விழாவினை சிறப்புறச் செய்த எமது ஊர் பிள்ளைகள், பெற்றோர்கள், கலைத்துறை வித்தகர்கள் அனைவருக்கும் கழகம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. நன்றி !, நன்றி!!, நன்றி!!!

வாணி விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக


வாணி விழா - மேலும் பல நிகழ்வுகள் இங்கே அழுத்துக

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா


Page 6 of 15

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்