Friday, Mar 24th

Last update06:22:49 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள்,

சாந்தை சித்திவிநாயகர் மஹோற்சவ விழா - 2017 முன்னறிவித்தல்.- விளக்கங்களுடன்:

E-mail Print PDF

Image may contain: text

ஆடி மாதத்தில் பௌர்ணமி தினம் தீர்த்த உற்சவம் நிகழக்கூடியதாக மஹோற்சவ விழாவுக்கான கொடியேற்ற தினம் கணிக்கப் பெறுகின்றது. சுருக்கமாக சொல்வதானால் ஒவ்வொரு வருடமும் கதிர்காமக் கந்தனின் தீர்த்த தினத்தில் இவ் ஆலயத்திலும் தீர்த்த உற்சவம் நிகழ உள்ளது. இவ் ஆலயத்தில் 12 தினங்கள் மஹோற்சவ விழா நிகழ்வதால்; அதன் பிரகாரம் இவ் வருடம்:

கொடியேற்றம்: 27.07.2017
தேர்த்திருவிழா: 06.08.2017

தீர்த்தம்: 07.08.2017

சுளிபுரம்-வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம் - 06.02.2017 - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

No automatic alt text available.

சுழிபுரம் வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானபைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் - 06.02.2017

மிகவும் பழமையும், புதுமையும் நிறைந்த காடேறிபைரவர் என அழைக்கப் பெற்ற காடேறிஞான பைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் 06.02.2016 அன்று
காலை 8:30 மணிமுதல் 10:30 மணிவரை அமைந்துள்ள சுபமுகூர்த்த வேளையில் நிகழ்வுற இறையருள் பாலித்துள்ளது என்பதனை அறியத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் விழாவின்போது அனைவரும் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து சிவனின் ஒரு தோற்றமாக விளங்கும் ஞானபைரவரின் கும்பாபிஷேக விழாவினை தரிசித்து இஸ்டசித்திகளை பெற்று இன்புற்றிருக்க வேண்டுகின்றோம்.

ஆலய நிர்வாக சபை

06.02.2017 இன்று நிகழ்வுற்ற குப்பாபிஷே நிகழ்வினை தரிசிக்க இங்கே அழுத்துக

கும்பங்கள் எடுத்துச் செல்லும் காட்சி

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும் விளக்கமாக அறிந்து கொள்ள

 

Read more...

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய நிர்வாகமும் திருப்பணியும்

E-mail Print PDF

Image may contain: indoor

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய உற்சவ மூர்த்தி எழுந்தருளி இருக்கும் மகாமண்டபத்தின் தோற்றமும் அதன் புனிதமும்:
எங்கள் குலதெய்வம் வீதிவலம் வந்து அருள்பாலிக்கும் உற்சவமூர்த்தி எழுந்தருளி இருக்கும் இடத்தின் தோற்றத்தினையும், அம்பிகை வைக்கப் பெற்றுள்ள பீடத்தின் தோற்றமும், ஆரம்பத்தில் மூலமூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பெற்றிந்து அருள்பாலித்த ஐம்பொன்னாலான(தாமர) விக்கிரகம் வைக்கப் பெற்றுள்ள மேசையின் தோற்றமும், திவ்விய ஒளி பரப்பும் குத்துவிளக்கின் பேரழகும் (2006ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் பின் தண்ணியே படவில்லை), பிரசாதம் வைக்கப் பெற்றுள்ள மேசையின் அழகும், பாத்திரத்தின் அழகும்; தற்போதைய ஆலய குருமாரினதும், பூஜையின் தரத்தினையும், திருப்பணி செய்பவரின் தரத்தினையும், நோக்கத்தினையும் எடுத்தியபுவனவாக அமைந்துள்ளது. சிந்தித்து செயல்பெறுங்கள்.

புளியங்கூடல் மகாமாரி அம்மன் ஆலயம் - IBC தமிழ் தமது ”வணக்கம் தாய்நாடு” நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்த வீடியோ இணைப்பு

E-mail Print PDF

Image may contain: one or more people and crowd

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தோற்றத்திற்கு காரணமான புனித கத்தியானது ஆலய ஸ்தாபகரால் மூலமூர்த்தியுடன் கருவறையில் பிரதிஷ்டை செய்யப் பெற்று பூஜைகள் செய்யப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இவ் ஆலயத்தில் தமது நேர்த்தியாக பலியிடுவதற்கு புளியங்கூடலில் இருந்து கொண்டுவரப் பெற்ற ஆட்டுக் கடா தாமதமாக வந்தமையால், குழப்பம் ஏற்பட்டது.

அதன்போது ஆலய கருவறையில் இருந்த புனித கத்தியை புளியங்கூடலில் இருந்து வந்தோரால் எடுத்துச் செல்லப் பெற்று; செருத்தனைப்பதி என்னும் இடத்தில் ஆலயம் அமைத்து அக் கத்தியை பிரதிஷ்டை செய்து. தாம் நேர்த்திக்காக கொண்டுவந்த ஆட்டுக்கடாவை அங்கு பலியிட்டனர். மஹாமரி அம்மன் ஆலயம் ஸ்தாபிக்கப் பெற்று சுமார் 350 வருடங்களாகியும் இவ் புனித கத்தி ஆலய கருவறையில் வைத்து பூஜை செய்வதை தெளிவாக காணலாம்

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்கள் இவ் ஆலய கொடியேற்ற நிகழ்வின்போது வெளியிட்ட சீடி யில் இவ் ஆலயத்தில் மிருகபலியிடுவதற்கு பாவித்த ஆசூசமான கத்தியை எடுத்துச் சென்ற புளியங்கூடல் இராஜ மகாமாரி அம்மன் ஆலய ஸ்தாபகர் அதனை கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளதாக குறிக்கப்பெற்றுள்ளமை வேதனை தருவதாக உள்ளது.

உண்மையில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய கருவறையில் இருந்த புனித கத்தியானது அம்பிகையின் பேரருள் நிறைந்த (காமாட்சி) விளக்கினைப் போன்றது. அவ் விளக்கானது பணிப்புலம் அம்பாள் ஆலயத்தில் அம்பிகையின் பேரருள் நிறைந்த ஒளியினைை ஏற்றியபின் புளியங்கூடலில் இருக்கும் தம் அடியார்களுக்கு பேரருள் பாலிப்பதற்காக இறைவியின் அருளினால் அங்கு எடுத்துச் செல்லப்பெற்றுள்ளது என்பதே உண்மை. ஒரு தீப விளக்கினைக் கொண்டு கோடிக் கணக்கான தீபங்களை ஏற்றலாம் என்பது இங்கு நிரூபணமாகின்றது.

புளியங்கூடல் -  செருத்தனைப்பதி இராஜ மஹாமாரி அம்பாள் ஆலய வரலாறும் நிகழ்வுகளும் - வீடியோவில்

 

 

 

 

 


சாத்தாவோலை - சம்புநாதீஸ்வர் ஆலய மஹோற்சவிழா விஞ்ஞாபனம் - 2017 - சம்புநாதீஸ்வரர் ஆய்வறிக்கை இணைப்பு

E-mail Print PDF

Image may contain: outdoor

சாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய  மஹோற்சவ விழா 16.02.2017 வியாழக்கிழமை அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் பெருவிழாக்கள் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

24.02.2017வெள்ளிக்கிழமை (சிவராத்திரி தினம்) தேர்த் திருவிழாவும்; மறுநாள் 25.02.2017 அன்று தீர்த்தத் திருவிழாவும் (சம்பில்துறை தீர்த்தக் கரையில்) நடைபெற்று மஹோற்சவ விழா நிறைவு பெறும்.

இவ் விழாக்காலங்களில்  அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக விரதம் அனுஷ்டித்து சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் திருவருள்பெற்று உய்வீர்களாக

சுபம்

ஆக்கம்:  "தொண்டர்" கு. வி. கந்தசாமி அவர்கள்  (கனடா) (முன்னைநாள் பிரதம முகாமையாளர்
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)எழுதிய சம்புநாதீஸ்வர ஆய்வறிக்கை

வாசிக்க இங்கே அழுத்துக

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 40

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்