Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

சாந்தை பண்டத்தரிப்பு அமரர் திரு ஆறுமுகம் தம்பித்துரை அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவலைகள் 12.02.2018

E-mail Print PDF

Image may contain: 1 person, text

பிறப்பு 1920                           இறப்பு   25.01.1998

அன்பெனும் சொல்லுக்குப் பொருளாய் அமைந்ந்திருந்தீர்

ஆனந்தம் பெருக எம்மை பேணி வளர்த்திட்டீர்

இல்லாமை என்பதை இல்லாது  போக்கடிதத்திர்

ஈன்ற எம்மன்னையை   பாசமுடன் நேசித்திர்

உண்மைதான் உயர்வெனும் நீதியை உறுத்தி நின்றீர்

ஊக்கமே வாழ்க்கையின் ஆக்கமென புகன்றிர்

எண்ணையும் எழுத்தையும் எழிலுடன் கற்பித்தீர்

ஏற்றமுடன் எம்மையிப் புவியில் வாழ்வித்தீர்

ஒற்றுமை ஒன்றுதான் நற்றுணை எனவுரைத்தீர்

ஓரம் போகாதேயென அறிவுரை சொல்லி வைத்தீர்

ஒளவியம் ஆக்கத்திற் க ழிவென மொழிந்திட்டீர்

அஃதே வாழ்க்கையின் நியதியெனக் காண்பித்தீர்

எந்தையே !


இருபது  ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்

இருப்பது எம் நெஞ்சில் உன்முகம் ஐயா

உருவமற்ற உன்னொளி தன்னில் நாம்

திரு நிறைந்தே வாழ்ந்திட  வைத்தீர்

 

வையத்துள்  வாழ்வாங்கு வாழ்ந்த எம்மையா

தெய்வத்தின் திருவடி சேர்ந்ததும் வீதியே

பிறப்பொன்று இருக்குமேல் இறப்பும் உண்டென

மறக்கமுடியாது இறையடி சேர்ந்தீர்


சாந்தையில் பிறந்து சாந்தையில் வாழ்ந்து

சாந்தை விநாயகன் திருவடி சேர்ந்த

மாண்புடன் எம்மிடம்  வாழ்ந்திட்ட ஐயா

மீண்டும் எம்மிடம் பிறந்திட வேண்டுகின்றோம்


நினைவில் நனைந்திடும்

அன்புக் குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - திரு. பூலோகம் தனபாலசிங்கம்

E-mail Print PDF

Image may contain: 1 person, text

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த உயர்திரு. பூலோகம் தனபாலசிங்கம் அவர்கள் இன்று 31.01.2018 புதன்கிழமை இறைவனடி சேர்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் “பிறாளாய் அண்ணர்”அவர்கள் - தகனம்: 23.01.2018

E-mail Print PDF

Image may contain: one or more people and text

பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட “பிறாளாய் அண்ணர்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற இராமசாமி பாலசிங்கம் அவர்கள் 21.01.2018 அன்று பணிப்புலத்தில் சிவபுதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய இராமசாமி - கைராசி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும்;

சோலையம்மா அவர்களின் அன்புக் கணவரும்;

உருக்குமணி, அமரர் கலாசோதி, சறோ, வைகுந்தம், சிதம்பரம், தவச்செல்வம், றதா, கமாம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்;

அமரர் ஆறுமுகதாஸ் (தம்பியாண்டி), திருமதி. பொன்னம்மா குமாரசாமி, பஞ்சலிங்கம், அமரர். பாக்கியநாதன் (வசிட்டன்), மற்றும் மயில்வாகனம் (இத்தாலி), ஆகியோரின் அன்புச் சகோதனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.01.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்


மரண அறிவித்தல் - திரு. நல்லையா சின்னத்துரை அவர்கள்

E-mail Print PDF

Image may contain: 1 person, closeup

செருக்கப்புலம், பணிப்புலத்தை பிறப்பிடமாக கொண்டவரும், ஜேர்மனியில் வசித்து வந்தவருமான திரு. சின்னத்துரை அவர்கள் இன்ன்று ஜேர்மனியில் சிவபதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய நல்லையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனாவார்.

இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

மேலதிக விபரங்கள் அறிய தொடர்புகொள்ளவேண்டிய இலக்கம் : 0049541 1816508

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 47

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்