Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

தொழிலாளர் வர்க்கம் உயர்வு பெற்ற நன்நாள் - மே தினம் எனும் தொழிலாளர் தினம் - மே 1

E-mail Print PDF


பார் முழுதும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போட்ட நன்னாள்,..

காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த உன்னத நாளே மே 1 தொழிலாளர் தினம்….

Read more...

வன்னி வாழ் மக்களின் துயர் துடைக்கும் பணியில் - சுவீடன் வாழ் தமிழ் மக்கள்

E-mail Print PDF

போரினால், தமது உறவுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தாமும் உடல் ஊனங்களை பெற்று தமது குடும்பத்தினை வழிநடத்த முடியாது அவதியுறும் வன்னி வாழ் மக்களின் துயர் துடைப்பதற்கு சுவீடனில் வாழும் சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலுடன் சுவீடன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வன்னி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு முன் வந்துள்ளனர்.

அதன் முதல் கட்டமாக ஊனமுற்ற வன்னி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் சுயதொழில் முயற்சிக்காக அவர்களுக்கு கோழி வளர்ப்பதற்கான உதவிகளையும், தையல் வேலை செய்வதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அம்பாள் குளத்தைச் சேர்ந்த இரு பெண்பிள்ளைகளின் தந்தையாரான தர்மலிங்கம் தியாகலிங்கம் (கண் பார்வை இழந்தவர்) குடும்பமும், அம்பாள் குளத்தைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயாராகிய சிவகுருநாதன் புவனேஸ்வரி (வாய் பேச முடியாதவர்) தெரிவு செய்யப் பெற்று உதவிகள் வழஙகப் பெற்றுள்ளன.

இப் பணிக்கு தாங்களும் உதவி செய்ய விரும்பினால் சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்களை அழையுங்கள்

மாற்றுவலுவுள்ள மாணவனுக்கு நிதிஉதவி - ”பக்தி இசை வேந்தன்” T. S. ஜெயராஜ் - நோர்வே

E-mail Print PDF


கிளிநொச்சியில் தனது தாய், தந்தையையும், வலது கையையும் இழந்த மாற்று வலுவுள்ள கோடீஸ்வரன் சுரேஸ் என்னும் மாணவனுக்கு, காலையடி தெற்கில் வசிக்கும் றூபன் அவர்களின் சிபார்சுடன் நோர்வே நாட்டில் வசிக்கும் சாந்தையூர் பெற்றெடுத்த உத்தமன் ”பக்தி இசை வேந்தன்” T.S. ஜெயராஜ் அவர்கள் மாணவனின் பெயரில் ரூபா (55,000) ஐம்பத்தையாயிரத்தை மக்கள் வங்கியில் வைப்பில் இட்டு சாந்தையில் வசிக்கும் தனது தாயார் பத்மாவதி மூலம் வங்கிக் கணக்கு பத்திரங்களை மாணவரிடம் வழங்கியுள்ளார்.

படங்கள்: பிரகலாதன் தங்கராசா அவர்கள்

மனித குலத்தில் மாணிக்கங்களாக திகழ்பவர்களில் மட்டுமே அன்பு, கருணை, மனிதநேயம் ஆகிய ஒளிக் கீற்றுகள் பிரகாசிக்கின்றன.

T.S. ஜெயராஜ் அவர்களின் சேவையை பாராட்டுகின்றோம், போற்றுகின்றோம், நன்றி கூறுகின்றோம்

பணிப்புலம்.கொம்

50 வது பிறந்தநாள் விழா - நடேசன் சிவபாதம் அவர்கள் - 10.11.2012 - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

படங்கள்: புலேன் அவர்கள்

கனடா - ஸ்காபறொ நகரில் வசிக்கும் "சிவபாதம் நடேசன்" அவர்கள் தனது பிறந்தநாள் விழாவை 10.11.2012 அன்று  அன்பு மனைவி, அப்பா, மகன்மார், மகள்மார் மற்றும் ஊர் பெரியோர்கள், உற்றார், உறவினர்,  நண்பர்களுடன் ஸ்காபறோ நகரில் எக்லிங்டன் + மார்க்கம் சந்திற்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள விழா மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்

நடேசன் அவர்களை அன்பு அப்பா, மனைவி,  பிள்ளைகள் மற்றும்
ஊர் பெரியோர்கள், உற்றார், உறவினர் நண்பர்கள், கனடா-பண் கலை பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் அனைவரும்  பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால்  பெறுதற்கரிய பேறு 16ம் நிறைவாக பெற்று, பேரோடும் புகழோடும் சமூகத் தொண்டனாக பல்லாண்டுகாலம்  பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

விழாவின் ஒரு பகுதியை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

மிகுதிப் படங்கள் கிடைத்ததும் பதிவிலிடப் பெறும்

நடேசன் அவர்கள் உலகம் போற்றும் உதாரண பெருமகனாக வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றோம்.
பணிப்புலம்.கொம்


புனித றமழான் நோன்பும் அதன் சிறப்பும் - ஈத் முபாரக்.

E-mail Print PDF

"அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!! லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்."

நாம் பூர்த்தி செய்யும் இந்தப் புனித ரமழான் மாதம், புனித அல்குர்ஆன் இறக்கி அருளப்பெற்ற மாதமாகும். அந்தக் குர்ஆனை இறக்கி மனித சமூகத்துக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே அவனது திருநாமத்தை தக்பீராக முழங்கிய வண்ணம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

அகில உலகமும் உவகையில் திளைத்து இன்ப வெள்ளத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொன்னாளான ஈதுல்பித்ர் எனப்படும் ஈகைத் திருநாள் இன்று எம்மோடு உறவு கொண்டுள்ளது. உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு மாத காலமாக, பகற் காலங்களில் பசித்திருந்தும் இரவு வேளைகளில் விழித்திருந்தும் இறை வழிபாட்டில், இறை வணக்கத்தில் ஈடுபட்டு றமழான் மாத முடிவில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் பொன்னான வேளையிது ‘ஈத் முபாரக்’.

உள்ளத்தைச் சுத்திகரித்து உடைமைகளைத் தூய்மைப்படுத்திய புனித றமழான் நிறைவோடு கொண்டாடப்படும் இந்த நன் நாள் எமக்குப் புகட்டும் படிப்பினைகளோ எராளம் ஏராளம்.

இந்த புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதன் நோக்கமே நோன்பு என்ற ஆத்மீகக் கட்டுப்பாட்டுடன் நப்ஸ¤க்களை அடக்கி கட்டுப்படுத்தி கணக்கற்ற தியாகங்களை மேற்கொண்டு ஒரு மாதம் இறை பக்தியில் இன்பமாக ஒன்றி வாழ்ந்திருந்த நாம் அத்தகைய கட்டுப்பாடுகள் நிறைந்த காலத்தை முடித்து நமக்கு அல்லாஹ்த ஆலாவினால் வழங்கப்பட்ட நந் நாளாகவே இன்றைய தினம் கருதப்படுவதாகும். வல்லநாயனாகிய அல்லாஹ் தலாவுடைய கட்டளைகளையும் அருமை நாயகம் (ஸல்) அவர்களது சுன்னவையும் கட்டாயக் கடமைகளையும் பேணி செய்யாதவர்கள் எங்ஙனம் பெருநாளைக் கொண்டாட முடியும்?

எனவே நோன்பிற்கான வெகுமதியாகக் கிடைக்கப்பெற்ற இப்பெருநாளைக் கொண்டாடும் தகுதி பெற்றோர் புனித றமழான் மாதத்தை சங்கைப்படுத்தி நோன்பு நோற்றோர் மாத்திரமேயாவர் என்பதை இஸ்லாமியச் சகோதரர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இப்புனித பெருநாள் தினம் ஆரம்பமாகி விட்டால் அல்லாஹ்த ஆலாவின் அமரர்களாகிய மலக்கு மார்கள் வீதிகள் தோறும் நின்று முஸ்லிம்களே சங்கையான அல்லாஹ்வின் அளவில் விரையுங்கள்! உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்க அவன் காத்துக் கொண்டி ருக்கிறான். இரவில் நின்று வணங்கும் படி ஏவப்பட்டு அதனை நிறைவேற்றினீர்கள், உங்களுடைய நாயனுக்கு அடிபணிந்தீர்கள்.

எனவே உங்களது வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அழைப்பார்கள் என அறிவிக் கப்படுகின்றது. மேலும் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியவர்களை நோக்கி இதோ உங்கள் நாயன் உங்கள் பாவங்களை மன்னித்து விட்டான். நேர்விழி பெற்றவர்களாக உங்கள் இல்லங்களுக்குத் திரும்புங்கள் இன்றைய தினம் வெகுமதியளிக்கப்படும் நாளாகும். அல்லாஹ்த ஆலாவிடத்தில் இன்றைய தினம் வெகுமதி அளிக்கப்படும் நாளாகவே கருதப்படுகின்றது. (ஆதாரம் - தபாரனி) என்று அறிவிப்பார் எனவும் கூறப்படுகின்றது.

புனித ஈத்பெருநாள் அன்று அதிகமாகத் தக்பீர் சொல்லிக் கொள்வது சிறப்பானது. ‘உங்கள் பெருநாட்களை தக்பீரைக் கொண்டு அழகுபடுத்திக் கொள்ளுங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். புனித பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிவதும் நபிவழியாகும்.

இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பெருநாள் தினத்தில் அழகிய புத்தாடை அணியும் படியும் வாசனை பூசிக்கொள்ளும் படியும் றஸ¤லுல்லாஹி (ஸல்) அவர்கள் எம்மைத் தூண்டினார்கள். ‘ஈதுல்பித்ர்’ பெருநாள் தொழுகைக்காக செல்வதற்குமுன் பேரீத்தம் பழம் ஒன்றைச் சாப்பிட்டு விட்டுச் செல்வதும் சுன்னத்தாகும்.

அதுமட்டுமன்றி, தொழுகைக்கு இயலுமானவரை கால்நடையாகச் செல்வதும் தொழுகை முடிவடைந்தவுடன் உறவினர்களைத் சந்தித்து ‘ஈத்முபாரக்’ வாழ்த்துக் கூறி ஸலாம் சொல்லிக்கொள்வதும் உறவினர்களின் மக்பராக்களுக்குச் சென்று அவர்களை ஸியாரத் செய்வதும் சுன்னத்தான விடயங்களாகும்.

இவற்றை விடுத்து ஒரு மாதகாலம் நோன்பிருந்து இறைக்கட்டளைக்கு அடிபணிந்து செயற்பட்ட நாம் இஸ்லாம் கூறும் விழுமிய பண்புகளுக்கு புறம்பாக களி யாட்டங்களிலும் வீண் விரயங்களிலும் ஈடுபட்டு எமது இபாதத்தில் நாம் பெற்ற பயன்களை நற்பேறுகளைப் பாழாக்கிக் கொள்பவர்களாக ஆகிவிடக் கூடாது. பெருநாள் இன்பமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே.

எனிலும் விலக்கப்பட்டவைகள் ஆகுமாக்கப்படும் நாளோ அல்லது ஹராமாக் கப்பட்டவைகள் ஹலாலாக்கப்படும் நாளோ அல்ல என்பதை ஒவ்வொரு இஸ்லாமியனும் இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.

பெருநாள் தொழுகையை பள்ளி வாயலிலோ, மைதானத்திலோ தொழுவது சிறப்பானது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மைதானத்தில் தொழும் வழக்க முடையவர்களாக இருந்தார்கள். பெருநாள் தொழுகையானது முதலில் தொழப்பட்டு பின்னர் குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தப்படுவது நபி வழியாகும். இதனை ‘நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்கர் (றழி) அவர்கள், உமர் (றழி)அவர்கள் இரு பெருநாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் – புஹாரி)

தொழுகை முடிவடைந்ததும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முஸாபஹாச் செய்வதும் ‘ஈத் முபாரக்’ என்று கூறியவாறு ‘தகப்பலல்லாஹு மின்னிவமின்க’ உங்களுடையனவும் என்னுடையவுமான நற்செயல்களை அல்லாஹ் ஒப்புக்கொள்வானாக என்று கூறிப் பள்ளிவாயிலை விட்டோ மைதானத்தை விட்டோ வெளியேறி வீடு செல்ல வேண்டும். இவ்விட யத்தில் கூட எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரியைக் கடைப்பிடித்தார்கள். ஜாபிர் (றழி) அவர்கள் கூறியதாவது பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக்கொள்வார்கள் இவையனைத்தும் துயரத்தில் சிக்கித்தவித்து வாழ்ந்து கொண் டிருப்பவர்களுக்கு வாரி வழங் குவதற்காகவே.

நோன்புப் பெருநாளன்று எம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய பல சுன்னத்தான விடயங்கள் காணப்படுகின்றன. றமழான் மாதத்தை முழுமையாக அடையும் பாக்கியத்தைத் தந்து நோன்பு நோற்று வணங்க வழிபாடுகளில் ஈடுபடச் சக்தி அளித்தமைக்காக அல்லாஹ்வைப் புகழ்வதும் பெருநாள் பிறை தென்பட்டத்திலிருந்து பெருநாள் தொழுகை வரைத் தக்பீர் சொல்வதும், பெருநாள் தொழுகைக்கு முன் பேரீத்தம் பழம் சாப்பிடுவதும், குளித்து வாசனை பூசிசிறந்த ஆடைகளை அணிவதும் (பெண்கள் பிற ஆடவரை .wlழிu வண்ணம் வாசனை பூசுவதும் ஆடை அணிகலன்கள் பூணுவதும் தவிர்க்கப்படல் வேண்டும்)

பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கத்தில் ஆண், பெண், சிறுவர்கள் அனைவரும் கலந்து கொள்வதும், பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறு பாதைகளைப் பயன்படுத்துவதும், அதிகமாக சதகாக்களை கொடுப்பதும் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் சுன்னத்துக்களாக விளங்குகின்றன.

பெருநாள் தினத்தில் நிறைவேற்ற வேண்டிய மற்றொரு சுன்னத்தாக கடமை ‘பித்ரா’ கொடுப்பதாகும். ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது முதல் பெருநாள் காலை தொழுகை நேரத்துக்கு முன்பதாக இக்கடமையை நிறைவேற்ற வேண்டும். பிந்திக்கொடுப்பது ‘மக்றூஹ்’ ஆகும். பித்ரா என்பது நமது நாட்டின் பிரதான உணவுத் தானியமாக விளங்கும் அரிசியில் வழங்கப்படுவது பொருத்தம்.

ஒருவருக்கு இரண்டு கொத்து அல்லது இரண்டரைக் கிலோ அரிசி வழங்கப்பட வேண்டும். குடும்பத் தலைவர் தனக்கும் தனது பொறுப்பிலுள்ளவர்களுக்கும் இதனைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். நாம் வாழும் ஊருக்குள்ளேயே பித்ராவைக் கொடுப்பதே சிறப்பானது. இதனை வழங்குபவர் தினம் இரண்டு வேளையும் தனக்கும் தனது பொறுப்பில் உள்ளவர்களுக்கும் போதிய வசதியுடையோராவர். பித்ராவைப் பெறுபவர் மிகமிக ஏழையாக இருக்க வேண்டும்.

எனவே றமழானில் நோன்பு நோற்று அரிய பல நன்மைகளைப் பெற்ற நாம் நபி வழியில் ஈகைத் திருநாளைக் கொண்டாடி இறை திருப்தியையும் அருளையும் ஈருலகப் பேறுகளையும் நன்மைகளையும் பெறுவோமாக. ஈத் முபாரக்.

சேவை நலன் பாராட்டு விழா - செல்வி. வைத்திலிங்கம் மனோராணி அவர்கள் - அழைப்பிதழ் - 20.07.2012

E-mail Print PDF

எம்மூரில் பிறந்து,, எமது பாடசாலையில் கல்வி பயின்று அப்பாடசாலையிலேயே 27 வருடங்களுக்கு மேலாக ஆசிரியையாக சேவையாற்றி மணி விழாக்கண்டு ஓய்வு பெற்றுச் செல்லும் செல்வி  வைத்திலிங்கம் மனோராணி அவர்களின் சேவையை பாராட்டி, கௌரவிக்கும் முகமாக சேவை நலன் பாராட்டு விழா ஒழுங்கு செய்யப் பெற்றுள்ளது என்பதனை அறியத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

எமது பாடசாலையில் நீண்ட ஒரு காலம் "சரஸ்வதியாக" வீற்றிருந்து எம் இளம் சந்ததினர்க்கு கல்விச் செல்வம் வழங்கிய செல்வி. வைத்திலிங்கம் மனோராணி அவர்களை பாராட்டி  சிறப்பிக்க தங்கள் அனைவரையும் வருகை தருமாறு இரு கரம் கூப்பி அழைக்கின்றோம்.

இடம்: வித்துவான் மு. விருத்தாசலம் ஞாபகார்த்த மண்டபம், ஆறுமுகவித்தியாலயம்

காலம்: 20,07,2012 காலை 11 மணி

அகரத்தை தந்த அறிவின் தாயே
சிகரத்தில் ஏற்றி போற்றுகின்றோம்
மணிவிழாக் காணும் மனோராணி ஆசிரியையின்
பணிதனை போற்றி பாடுகின்றோம்

துள்ளித் திரிந்த பள்ளி தனிலே
அள்ளித் தந்தீர்கள் கல்விதனை
ஆச்சிரீச்சரென ஆசையுடன் நாமழைக்க
ஆறுமுக வித்தியாலயத்தில் அரும்பணி செய்தீர்

பாசத்தை ஊட்டினீர் பண்பினை பரப்பினீர்
நேசத்துடன் எமக்கு நேர்தியாய் கற்ப்பித்தீர்
கண்டிப்புடன் கனிவு வழிகாட்டல் கல்வி
கண்டோம் உங்கள் சேவை தனில்

எங்களது பாடசாலை ஏற்றமுற வைத்ததாயே
உங்களது சேவை போற்றி நிற்போம்
பழைய மாணவியாய் பணிதொடர வேண்டி
நாளையும் நாமிங்கு நாடி நிற்போம்

கண்ணகை அம்மன் கருணை பொழிந்து
காத்தருள்வாள் உங்களை நலமாக
பறாளாய் வினாயகன் அருள்மழை பொழிய
பல்லாண்டு வாழ்வீர்கள் சுகமாக

பழையமாணவர் சங்கம்
பாடசாலை அபிவிருத்தி சங்கம்
யா சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

தகவல்: அ. கந்தசாமி


Page 4 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்