Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

"கணினியியல் பொறியியலாளர்" பட்டம் பெற்ற சுதாகரன் கோபாலகிருஷ்ணன் - பாராட்டுகள், வாழ்த்துகள்

E-mail Print PDF

பாராட்டி வாழ்த்துக்கின்றோம்

"கணினியியல் பொறியியலாளராக" (11.11.2011) எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற  சுதாகரன் கோபாலகிருஷ்ணன் அவர்களை காலையடி மறுமலர்ச்சி மன்றம் பாராட்டி, வாழ்த்தி, கௌரவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது

காலையடி மறுமலர்ச்சி மன்றம்

தகவல்: நிவர்சன்

"கணினி பொறியிலாளர்" சுதாகரன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மேலும் பல பட்டங்கள் பெற்று உலகம் போற்றும் மாமேதையாக வாழ்க, வளர்க  என வாழ்த்துகின்றோம். திறமையை பாராட்டுகின்றோம், முயற்சியை போற்றுகின்றோம்.

பணிப்புலம்.கொம்

அன்னையர் தின வாழ்த்துள் -14.05.2017 ( அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல் - இணைப்பு)

E-mail Print PDF

Image may contain: flower, text and nature

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவர்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவர் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை

கண் கண்ட அன்புத் தெய்வத்திற்கு எமது வாழ்த்துக்கள்

பணிப்புலம்.கொம்

அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) அன்னையரை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக மேல்நாட்டவர்கள் கொண்டாடினாலும், பெரும்பாலான தமிழர்கள் தம் வாழ்வில் எல்லா நாளும் அன்னையர் தினமாகவே எண்ணி தினமும் அவர்களை பராமரித்து மகிழ்விக்கின்றார்கள். தமிழ் இந்துக்களோ, அவர்கள் இறந்த பின்பும் அவர்களை நினைவு கூர்ந்து விரதம் அனுஷ்டித்து அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செகின்றார்கள்.

பொதுவாக மேலைத் தேசத்தவர்கள் தாமும் பிள்ளைகளும் மாட மாளிகையில் வாழ்ந்து கொண்டு தமது பெற்றோரை முதியோர் இல்லங்களில் பொது பராமரிப்பில் விட்டு விட்டு எப்போதாவது ஒருநாளைக்கு அல்லது அன்னையர், தந்தையர் தினங்களில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கின்றார்கள்.

கீழைத்தேசதில் வாழும் தமிழர்களும் மற்றைய சமூகத்தினரும் தன்னை  பெற்று வளர்த்து, அறிவூட்டி இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய அன்னையையும், தந்தையயும் வயதான காலத்திலும் தம்முடனேயே வைத்திருந்து அவர்களுக்கு தினம் தினம் பணிவிடைகள் செய்து பராமரித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும்போது "அன்னையர் தினம்" என ஒருநாள் தேவையே இல்லை எனலாம்.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் எம் சமூகத்தினர் பலர் மற்றைய சமூகத்தினரை பின்பற்றி அவர்களும் தம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட்டுவிடு தாம் மாடமாளிகையில் சுகவாழ்வு வாழ்கின்றார்கள். அவர்கள் முதியோராகிய பின் அவர்களின் பிள்ளைகளும் தமது பெற்றோர் அவர்களின்த பெற்றோருக்கு செய்தனவற்றையே செய்வார்கள் என்பதனை மறந்து விடுகின்றார்கள்.

மேற்குலகம் கொண்டாடும்  அன்னையர் தினத்தை கீழைதேச மக்களில்  சிலர் பின்பற்றி அதனை தங்கள் உறவுகள் ஒன்றுகூடி அன்னைக்கு விழா எடுத்து அவர்களின் சேவைக்கு நன்றி கூறி பாதம் பணிந்து அவர்களின் ஆசீர்வாதம் பெறும் சிறப்பான நாளாக கொண்டாடுகிறார்கள். 

பத்து மாதம் சுமந்திருந்து பெற்று, பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்து,  நாளெல்லாம் பட்டினியாய் தான் இருந்தாலும், ஒரு கணமேனும் நம் பசி பொறுக்காது உணவூட்டி;  உடம்பெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே எம்மை வித்தகனாய் கல்வி பெற வைத்து, மேதினியில் மேன்மையாய் நாம் வாழச் செய்த அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடைகள் செய்து மகிழ்விக்க ஒருநாள் போதுமா?

கல்வி அறிவின்றி இளம் வயதில் தாம் பல வலிகளை அனுபவித்த அனுபவத்தினால் தமது பிள்ளைகளை உலகம் போற்றும் வித்தகர்களாகவும், உத்தமர்களாகவும் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக; தாம் மகிழ்வோடு குடும்பத்துடன் வாழக்கூடிய சூழ் நிலையிலும் தம் மகிழ்வை தம் குடும்ப ஈடேற்றத்திற்காக அர்ப்பணித்து  தம் குடும்பத்தை பிரிந்தும்  ஆடி, ஓடி சம்பாதிக்கும் அனைவரும் வலி இல்லாத நின்மதியான கடைசிகட்ட வாழ்கையையே எதிர்பார்க்கிறார்கள்.

தனது உணவில் ஒரு பகுதியை கருவிலிருக்குபோது 10 மாதங்களாக ஊட்டி வளர்த்து, குழந்தையாக பிரசவித்த பின்னர் தனது உதிரத்தையே பாலாக மாற்றி பருகத்தந்து வளர்த்தெடுப்பவளும். தன் அன்பு நிறைந்த இனிய மொழிகளால் உலகம் போற்றும் உத்தமர்களாக உருவாக்குபவளும் அன்னையே. உந்தியிலும், மடியினிலும், தோழிலினிலும் சுமந்து உணவூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தெடுத்த அந்த அன்புத் தெய்வத்தை ஆதரித்து அன்பு செலுத்த ஒருநாள் போதுமா?

அதனால்போலும் கீழைத்தேய பாரம்பரியங்களுக்கு அமைய இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளின் மக்கள் தங்கள் அன்னையரை மிக உயர் நிலையில் வைத்து அன்புடன் கெளரவமாக, வாழ்நாள் பூராவும் பணிவிடை செய்து, நன்றிக்கடனை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“தாயிற் சிறந்த கோவிலுமில்லை" என்ற வரிகள் தாய்மையின் “புனிதத்துவம்”, தாய்மையின் “பெருமை”, தாய்மையின் “தியாகம்” தாய்மையின் “கருணை உள்ளம்” போன்றவற்றை எடுத்துக் கூறத்தக்க வரிகளாகும்.
இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை என்பதனால் கோவிலாக ஒப்பிடுகிறார்கள் எனலாம். “அம்மா..” என்ற இன்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்கள் ஆயிரமாயிரம். ஒருவர் தனது இன்பத்தின் போதும், துன்பத்தின்போதும் கூவி அழைக்கும் அன்புத் தெய்வமும் அம்மாவே.
.
ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் “அன்னை” என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கின்றது.

தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே ”மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை” மேற்குலக நாடுகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடுகின்றார்கள்.

நாகரீகம் படைத்த மேற்குலக நாடுகளில் அன்னையர் தினம் அந்த குறிப்பிட்ட தினத்தில் மாத்திரமே மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. வருடத்தில் 365 நாட்களும் மேற்கத்திய நாடுகளின் முதுமை நிலை அடைந்துள்ள அன்னையர் வயோதிப மடத்தில் அல்லது ஒரு பராமரிப்பு நிலையத்தில் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பராமரிப்பு செலவினத்தை மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களே பொறுப்பேற்கின்றன.
ஓரிரு அன்னையரின் பிள்ளைகளே தங்கள் செலவில் தங்களுடைய தாய்மாரை வசதியான கூடிய கட்டணம் அறவிடும் பராமரிப்பு நிலையங்களில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் கூட தங்களின் சகல வசதிகளையும் உடைய மாடமாளிகைகளில் தங்கள் அன்னையரை வைத்து பராமரிப்பதில்லை.

சில அன்னையரின் பிள்ளைகளே கிறிஸ்மஸ் தினம், புத்தாண்டு தினம், அன்னையரின் பிறந்த தினம் ஆகிய மூன்று நாட்களில் அன்னையரை சென்று சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து விட்டு திரும்புவார்கள்.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்னையரை அன்னையர் தினத்தில் மாத்திரமே போய் பார்த்து பூச்செண்டுகளையும், அன்பளிப்புகளையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்பார்கள். இது அன்னையர் மீது கொண்டுள்ள அன்பினால் அவர்கள் செய்வதில்லை. சம்பிரதாயத்தை கெளரவிக்கும் முகமாகவே இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.

உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. அன்னையர் தினம் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து,  இத்தாலி, துருக்கி, ஆஸ்ட்ரேலியா, மெக்சிகோ, கனடா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

வேறு சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடப்பட்டு வருகிறது. "அன்னையர் தினம் " Mother's Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன.

பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வணங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளுக்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் தேதி மூன்று நாள் விழா நடத்தினர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன..

இவ்வாறான நிலையில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவியரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது.

"ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் தன் இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டு சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் Jarvis மறைந்தார்.

இவரின் மகள் அனா ஜார்விஸ் Anna Jarvis முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதைத் தொடர்ந்து அனா ஜார்விஸ் Anna Jarvis 1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து, நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இவரின் வேண்டுகோளையும், நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. 46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

அன்னையர் தினத்திலாவது நாம் எமது அன்னையை மட்டுமல்ல எல்லா அன்னையர்களையும் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகள் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது.

எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம்.

ஏனெனில். அன்னையின் பெறுமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அனா ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.

அன்னையும் பிதாவும் பின்னடிக் இடைஞ்சலா???

இங்கே அழுத்துங்கள்


1328.11.05.2017

"மே தினம்" எனும் தொழிலாளர் தினம்

E-mail Print PDF

Image may contain: one or more people, crowd, tree and outdoor

மே தினம் என்பது; பார் எங்கும் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனுபவித்த வலிக்கு பல சிகிச்சைகள் மூலம் நலன் பல பெற்ற நன்நாள் என்றும், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாள் என்றும் கூறலாம். இத்திருநாள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி மாபெரும் பேரணிகளுடன் இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் கொண்டாடப் பெற்று வருகின்றன.

Read more...

"பக்தி இசை வேந்தன் " T. S. ஜெயராஜனின் புதிய படைப்புகள் - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

நோர்வே நாட்டில் வசித்துவரும் எம்மூர் கலைஞன் "பக்தி இசை வேந்தன்" T. S. ஜெயராஜன் அவர்கள் பொன்னாலை வரதராஜப் பெருமாள், செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்கள் மேல் பாடப்பெற்ற பக்திப் பாடல்கள்  வெளியாகியுள்ளன.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும், செல்வச்சந்நிதி ஆலயத்திலும் இவ் இசைத்தட்டுகள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. விற்பனையில் பெறப்படும் பணம் முழுவதும் அவ்வவ் ஆலயங்களின் திருப்பணிக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதனயும் அறியத்தருகின்றோம்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

சென்னையில் நடைபெற்ற பத்மசிறி சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவில் கௌரவிக்கப்பெற்ற "சாந்தயூர் பக்தி இசை வேந்தன்" வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

சர்வதேச மகளீர் தின கொண்டாட்டம் - காரணங்களும், சாதனைகளும் - 08.03.2017

E-mail Print PDF

Image may contain: text


ஒவ்வொரு வருடமும் மார்ச் 8–ம் நாள் உலகம் முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது. இத் தினம் ஆரம்பத்தில் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து கொண்டாடினாலும்; பிற்காலத்தில் அவ்வப்போது பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை, அவமானங்களை முன்வைத்து உலக நாடுகளில் பல்வேறுபட்ட தொனிப்பொருளில்  கொண்டாடி வருகின்றார்கள்.

1857 ஆம் ஆண்டு நியோர்க் ஆடைத் தொழிற்சாலையில் பெண்கள் 16 மணித்தியாலங்களும் ஆண்கள் 10 மணித்தியாலங்களும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற் கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 1911 ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில் மகளீர் தினம் கொண்டாடப்பெற்றது.

பழங்காலத்தில் கிரேக்க போரை முடிவுக்கு கொண்டுவர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுகந்திரம்,சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெண்கள் தினம் கொண்டாடுவது கடைபிடிக்கப்பட்டது.

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-ல் கொண்டாடப்பட்டது. அதன் பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுகிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது.  1910 ம் ஆண்டில் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடி பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1911 மார்ச்19 ல் முதல் சர்வதேச பெண்கள் தினம் இலட்சக்கணக்கான பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்கு சென்ற இடத்தில் கருகி இறந்தனர்.இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.

இந்த சர்வதேச மகளீர் தினத்தை உலக நாடுகளில் ஒரே தினத்தில் கொண்டாடவேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு தொடக்கம் ஒரே தினத்தில் இத்தினம் அணுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் திட்டங்கள், லட்சியங்கள்  உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது.

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில் உள்ளதோடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கம், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சியே அவைகள். நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்களென முண்டாசு கவிஞன் பாரதி முழங்கினான். அதனை இன்று உலக நாடுகளே ஏற்றுக் கொண்டு விட்டது.

இம்முறை கொண்டாடப்படும் சர்வதேச மகளீர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கல்வி பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழிநுட்பத்தில் சமத்துவ வாய்ப்பு, பெண்களுக்கு கண்ணியமான வேலைக்கான வழி எனும் தொணிப்பொருளில் கொண்டாடுகின்றது.

இத்தினத்தில் உலக நாடுகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்கப்பட்டு வருகின்றதை நாமனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் இத்தினத்தை பாரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் பெண்களின் உரிமைகள் பேரளவில் மட்டுமே பேணப்படுவதாக அறிய முடிகின்றது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடுகள் பல நாடுகளில் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி பல்வேறுபட்ட பெண்கள் உரிமை மீறல் செயற்பாடுகள் நாளாந்தம் அதிகரித்தவன்னமேயுள்ளதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம்.

பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவது இ அவர்கள் கடத்தப்படுவது, அச்சுறுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது என பலவகையான துன்புறுத்தல்களுக்க உள்ளாக்கப்படுவது குறைந்தபாடில்லை. இலங்கையைப் பொருத்தமட்டில் கடந்த சில காலங்களாக பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளமையை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கு வறுமை, யுத்தம், ஆணாதிக்கம், பெண்கள் தனிமைப்படுத்தப்படல், அழகு போன்ற சில காரணங்களும் வழிசமைக்கின்றன.

பெண்களின் பிரச்சினைகளுக்க முதலில் வறுமை ஒரு காரணமாகும். இக்காரணமாக இந்த வறுமை அவர்களின் துஸ்பிரயோகத்திற்கு வழிவகுத்து அதன் இறுதிவடிவம்   வாழ்வின்   மரணத்திற்கு  இட்டுச்செல்கின்றது.

வறுமைக்கு அடுத்ததாக யுத்தமும் ஒரு காரணமாகும் ஒவ்வொரு நாட்டிலும் யுத்தம் இடம்பெறுகின்றபோது யுத்தக் காரணம் எதவாக இருந்தாலும் அதில் பங்கு கொள்பவர்கள் யுத்தத்தைக் காரணமாக வைத்து பெண்களை துன்புறுத்தவும், அவர்களுக்கு அடிபணியவைப்பதும், பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தல் விதவைகளாக்குதல், அநாதைகளாக்குதல், மனச்சஞ்சலத்திற்குள்ளாக்குதல், ஈற்றில் அவர்களை கொலை செய்தல் என்பன சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றமை நாளாந்தம் தொலைக்காட்சி, வானொலி இபத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களினூடாக நாம் காண்கின்றோம்.

இதேபோல் சமுதாயத்தில் ஆண் ஆதிக்கம் அதிகரிப்பதால் பெண்கள் அவர்களுக்கு அடிபணியும் நிலைமை ஏற்படுகின்றது இதன்காரணமாக அவர்களை அவர்கள் தொழில்புரியும் இடங்கள், கல்வி கற்கும் நிலையங்கள் போன்ற இடங்களில் அவர்கள் இலகுவாக துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான இடங்களில் ஏற்படும் பாதிப்புகளில் அதிகமானவை வெளிவருவதில்லை காரணம் அச்ச நிலைமையும் காரணமாக அமைகின்றது.

அடுத்து பெண்கள் தனிமைப்படுத்தப்படல் அவர்களுக்கு உரிய பாதுகாவளர்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்பவர்கள் சில நேரங்களில் இனங்காணப்பட்டாலும் அவர்கள் உரிய முறையில் தண்டணைகளை அனுபவிப்பதில்லை. குறிப்பாக சிலவேளைகளில் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் கண்டும் காணாதுபோல் இருத்தல், ஆட்சி அதிகாரங்களில் உள்ள அரசியல் செல்வாக்குடையவர்கள் அதிலிருந்து பாதுகாக்கப்படல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள், பணம் படைத்தவர்களின் செல்வாக்கு  காரணமாக அதிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்தும் அந்தச் செயல்களில் ஈடுபடுவதற்கு வழிகோலுகின்றதுடன் பெண்களின் சிரழிவுக்க அவை மேலும் வழுவூட்டும் செயலாக அமைகின்றது.

கடந்த பல தஸாப்தங்களை நாம் எடுத்துக் கொண்டால் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வழி நடாத்தப்பட்டு வந்த சந்தர்ப்பங்களை நாம் வரலாறுகள் மூலம் கற்றுக்கொண்டுள்ளோம். இதற்கு ஒரு சில சமயங்களும் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது. அவர்களுக்கு உரிய பங்களிப்பை வழங்காது எல்லாவற்றிற்கும் கட்டுபாடுகளும், முட்டுக்கட்டைகளும் கொடுக்கப்பட்டதால் அவர்கள் தமது ஆற்றல்களை சமுதாயத்தின் முன் கொண்டுவர முடியாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் இன்றய சமுதாயத்தில் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் பங்களிப்ப இல்லாத துறை இல்லையெனலாம்.

அந்தளவுக்கு முன்னைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சமுக கட்டமைப்ப உருவாகியுள்ளது. கடந்த தஸாப்தங்களில் பெண்கள் தாழ்த்தப்பட்ட, பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, வேலை பார்க்கமுடியாத நிலை, கருத்துக் கூற முடியாத  நிலை உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே பல துன்பியல் நிலமைகளுக்குட்பட்டவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பெண்களைப் பொருத்தமட்டில் இன்றைய நூற்றாண்டுகள் ஏதோ ஒருவகையில் ஜனநாயக உரிமைகளைப்பெற்று ஆண்களுக்கு ஈடாக சமசந்தர்ப்பம் பெற்றவர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக தொழில் புரியக்கூடடிய உரிமைகள், பல அமைப்புகளுக்க தலைமை தாங்கும் சக்தி, பல நிறவயங்களை வழி நடத்தக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளமை, அரசியல்வாதிகளாக உள்ளமை, அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றவர்களாக காணப்படுகின்றமை, விஞ்ஞானிகளாக காணப்படல் போன்ற  பல துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது  மட்டுமல்லாது  பெண்கள் இன்று விண்வெளிக்குச் செல்லும் அளவிற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது மட்டுமல்லாது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனினும் இவ்வாறு இந்நூற்றாண்டில் சமுதாயத்தில் முன்நின்றாலும் பெண்கள் அன்று தொட்டு இன்றுவரை அவர்களுக்க எதிரான வன்முறைகளுக்கு இலக்கானவர்களாகவே காணப்பட்டுவருகின்றமை மனக்கசப்பிற்கு உட்பட்டதொரு விடயமாகும். குறிப்பாக பெண்வர்க்கம் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற அராஜகம், வக்கிரத்தன்மை, என்பன மறைமுகமாகவும், நேரடியாகவும் பெண்கள் மீது அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இன்றைய கால கட்டத்தில் அதிகளவான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்று வந்தாலும் அவற்றில் கணிசமானவை ஊடகங்கள் வாயிலாக வெளிவருவதில்லை அதற்கு சில காரணம்களுமுண்டு குறிப்பாக  அரசியல் செல்வாக்கும், ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் காரணமாக அமைகின்றன.

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும்  துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கு மேற்கத்தைய நாகரீகங்களும், கலாச்சார சீரழிவுகளும்  முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஏனெனில் அவர்களுது கலாச்சாரத்தில் ஆணும் பெண்ணும் பொது இடங்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை காணப்படுகின்றது. அதனை  அவதானிக்கும் ஒருவர் அந்தச் செயலில் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றது. இதனால் அது சமூகத்தில் பாரிய தாக்கத்தை உண்டு பண்னுகின்றது எனலாம்.

எமது நாட்டைப் பொருத்தமட்டில் மேற்கத்தை நாகரீக, கலாச்சார சீரழிவுகள் அதிகளவில் தாக்கத்தை உண்டுபண்யுள்ளதுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாமை போன்ற காரணங்கள் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறான காரணங்கள் நேரடி மற்றும் மறைமுகத் தாக்ககங்கள் எமது நாட்டிலும் பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு பாரிய தாக்கத்தை உண்டுபன்னியுள்ளது. உண்மையில் இதனைக்கட்டுப்படுத்தும் விடயத்தில்  உலக நாடுகளில் ஒரு பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன. மதத்தலைவர்கள் கூட துஸ்பிரயோக விடயங்களில் பாரிய முயற்சிகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டபோதிலும் அவை மூலம் ஆக்கபூர்வமான முன்னேற்றங்களைக் கண்டுகொள்ள முடியவில்லை எனலாம்.

எனவே பெண்கள் துஸ்பிரயோகம் என்று கூக்குரல் இடுவதும் நிகழ்வுகள் கொண்டாடுவதும், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மேற்கொள்வதனாலும் கட்டுப்படுத்த முடியாது.  மாறாக சிறுபராயத்திலிருந்து சமுதாயச் சீரழிவு தொடர்பான கல்வியை புகட்டுவதும் மத ரீதியாக பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பான விளிப்புணர்வுகளை மேற் கொள்வதுடன் குற்றச்செயல்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுடன் குற்றச் செயல்களில்ஈடுபடுபவர்கள் இனங்கானப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து தண்டனைகள் வழங்கப்படுவதனை ஒவ்வொரு அரசாங்கமும் உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் ஓரளவாவது அவற்றை கட்டுப்படுத்த முடியுமே தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை கண்டு கொள்ளமுடியாது.2088.16.03.2017

காதலர் தினம் - Valentine's Day வாழ்த்துக்கள் - 14.02.2017

E-mail Print PDF

Image may contain: flower and text

காதலர் தினம் என்பது வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் ஒரு புனிதநாளாகவும், வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும்  ஒரு திருநாளாகவும்,  திருமணமானோர் தமக்கு நல்வாழ்வளித்த காதலுக்கு பரிசு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு மகோன்னதமான நாளாகவும் கொண்டாடப் பெறுகின்றது.

Read more...

Page 6 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்