Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

ஜேசுநாதர் அவதாரமும் வரலாற்றுக் குறிப்பும் வீடியோ இணைப்பு

E-mail Print PDF

Image may contain: 1 person, sitting

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய்

அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய்

பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த

பாலன் யேசு பிறந்த இவ் இனிய நன்நாளை

நத்தார் பண்டிகையாக கொண்டாடும்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்

எங்கள் மகிழ்ச்சி பொங்கிய  நத்தார் வாழ்த்துக்கள்

panippulam.com

Read more...

பரத நாட்டிய -“சலங்கை பூஜை” – செல்விகள். றொசானா & அபிஷா ராதாகிருஸ்ணன்

E-mail Print PDF

ரொறொன்ரோ - கலைக் கோயில் பரதநாட்டிய  நுண்கலைக்  கல்லூரி ஆசிரியை “நாட்டிய நர்தகி”, "நாட்டிய சிரோன்மணி" ஸ்ரீமதி. வனிதா  குகேந்திரன் அவர்களின் மாணவிகளான செல்விகள். றொசானா - ராதாகிருஸ்ணன், அபிஷா - ராதாகிருஸ்ணன் ஆகியோரின் பரதநாட்டிய “சலங்கை பூஜை”

கடந்த 15.10.2011 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகி கோலாகலமாக நிகழ்வுற்றது

இவ் விழாவின் பிரதம விருந்தினராக பேரறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும்,

சிறப்பு விருந்தினராக பிரபல சட்ட வல்லுனரும், கலையில் சாகித்திய மண்டல பரிசு பெற்றவருமான சோ. தேவராசா அவர்களும்

பங்குபற்றிச் சிறப்பித்தனர்

மிகுதிப் படங்களை பார்வையிட இங்கே அழுத்துங்கள்


யாழ்.பல்கலைக்கழகத்தின் 27 வது பொதுப் பட்டமளிப்பு விழா (வீடியோ இணைப்பு )

E-mail Print PDF

இப் பட்டமளிப்பு விழாவில் எம்மூர் கல்விமான்கள் பலரும் பட்டம் பெற்றுள்ளார்கள் அவர்களின் விபரங்கள் கிடைத்ததும் பதிவிலிடப்பெறும். விபரங்கள் தெரிந்தோர் அவர்களின் பெயர், பெற்றுக்கொண்ட கௌரவப் பட்டம் என்பனவற்றை எமக்கு அறியத்தந்து அவர்களின் பெயர்களை பதிவிட்டு அவர்களைக் கௌரவிக்க உதவி செய்யலாம்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 27 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.
இவ் விழாவில் உள்வாரி, வெளிவாரி, பட்டப்படிப்பில் பட்டம் பெற்ற 1262பேர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர்  எஸ்.சிவசூரியா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில்  பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் கௌரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும்,  பேராசிரியர் இராஜேஸ்வரி மகேஸ்வரன் விஞ்ஞானக் கலாநிதிப் பட்டத்தினையும்,   வைத்தியர் சேனாதிராஜா ஆனந்தராஜா கௌரவ வைத்தியக் கலாநிதிப் பட்டத்தினையும்,   சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறு. திருமுருகன் கௌரவ கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

1074 பேர் பட்டப்பின் படிப்புக்கான பட்டங்களையும், 71பேர் பட்டப்பின் டிப்ளோமாவையும், 722பேர் உள்வாரிப் பட்டத்தையும், 5 பேர் டிப்ளோமாவையும்  , 356பேர் வெளிவாரிப் பட்டத்தையும்  பெற்றுள்ளனர்.

1. நிகழ்வை காணொளியில் பார்வையிட

2. தனித் தனி படங்களாக பார்வையிட

"வெள்ளி விழா" கொண்டாடும் டென்மார்க் "டெனிஷ் தமிழ் தோழமை ஒன்றியம்" - 11.06.2011

E-mail Print PDF

Denmarkல் - எம் ஊர் மக்கள் அதிகமாக வாழும் Skjern மாநகரில் தமிழ் மக்களின் கலை கலாச்சரத்தை வளர்க்கும் நோக்கோடு உருவாக்கப்பெற்ற "டெனிஷ் தமிழ் தோழமை ஒன்றியம்" தனது "வெள்ளி விழாவை" (25வது ஆண்டு) 11.06.2011 அன்று மிகவும் எழுச்சியாக கொண்டாடியது. அவ் விழாவின் போது எடுக்கப் பெற்ற சில நிழல் படங்கள் பதிவாகியுள்ளன.

Read more...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

E-mail Print PDF

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவர்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவர் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை

கண் கண்ட அன்புத் தெய்வத்திற்கு எமது வாழ்த்துக்கள்

பணிப்புலம்.கொம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - 13.04.2012

E-mail Print PDF

மலரும் "நந்தன" புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் பெருகவும்
இன்பமும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும்  பூத்துக் குலுங்க வாழ்த்துகின்றோம்

பணிப்புலம்.கொம்
பணிபுலம் மக்களின் இணையத்தளம்

 

தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புவோர்
இவ் இணையத்தளம் மூலமாக உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளலாம் என்பதனையும்
அறியத்தருகின்றோம்

Page 7 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்