Tuesday, Mar 20th

Last update12:10:08 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை கவிதை

நான் பிறந்த நாடு

E-mail Print PDF

ஆக்கம் வள்ளியம்மை சுப்பிரமணியம் (தொல்புரம்)

நான்பிறந்த நாடுஎன்று நானிங்கு எழுதுவது.....
நான்பிறந்து வளர்ந்த மாகாணத் தொகுதியைத்தான். ....
ஊர்பற்றி எழுதும்படி உரிமையுடன் கேட்டீர் என்னை
ஏர்  உழுத பறாளாய் மண்ணின் எழில்மிகுந்த அழகுதன்னை....
பேர் பெற்ற ஆலயங்கள் பெருமையுறு வரலாறு....
யார் மறக்க முடியுமய்யா யாழ்ப்பாணச் சிறப்பதனை....?

மங்காத இராமாயண நாயகன் ஸ்ரீராமனின்
தங்கத் திருப்பாதம் பட்டதாம் திருவடி நிலையில்
சங்கமித்ரை பெயர்கொண்ட அசோகமன்னன் புத்திரியும்
சம்பில்துறை வந்திறங்கி சமயம் வளர்த்தகதை.....
சின்னத் தம்பிப் புலவர்கூட சிந்துகவி பாடிவைத்த
எந்நாளும் அழியாத பறாளாய் விநாயகர் பள்ளு.....

கூர்ம வடிவத்திலே கோவில்கொண்ட பொன்னாலையில்
தேர்த்திரு விழாவில் உறியடி உற்சவமும்..........
தயிர்முட்டி சிதறித் தலைமேலே கொட்டியதும்....
பயிர் விளைந்த வயல்வெளியின் பசுமைக் காட்சிகளும்....
வானம் பார்த்த பூமியென்று பேரெடுத்து இருந்தாலும்...
கூன்விழுந்த பின்னாலும் உழைத்துண்னும் உற்சாகம்....

வீட்டுக்கொரு கிணறு... வீதிதோறும் வேலி+மதில்...
பாட்டாகத் திருவாசகம் மார்கழித் திருவெம்பாவில்....
மின்விசிறி  தேவையில்லை வேப்பமரக் காற்றுவரும்.
பன்னாட்டு உணவு வேண்டாம் பனைமரமே பசிதீர்க்கும்.
யாழ்பாடிப் பரிசுபெற்ற யாழ்ப்பாண வரலாறு....

பாழ்போகா உணவுமுறை  பனம்பழத்தில் கிடைக்கின்ற
ஒடியல்கூழ், பனங்கட்டி, ஒடித்துண்ணும் புழுக்கொடியல்,
மடித்தெடுத்துப் பேணிவைக்கும் பனாட்டுத் தட்டுகளும்
பதநீருள் பயறு போட்டுப் பக்குவமாய்க் காய்ச்சுகின்ற
இதமான கருப்பங்கஞ்சி.... இப்போதும் வாயினிக்கும்....
குலையாக வெட்டிக் கோவில் பந்தலிலே கட்டுகிற
விலைக்கும் கிடைக்காது விருப்பமான நுங்குகளாம்.

இலுப்பைப் பூக்காயவைத்து அல்லிதட்டி வறுத்தபின்னே
அலுக்காது உரலிலிட்டு உலைகையால் இடித்தெடுத்து...
சூட்டோடு பரிமாறிப் பலரோடு உண்டகதை....
பாட்டாகச் சொன்னால் புரியாது புதியவர்க்கு....
பிறந்ததும் வளர்ந்ததும் அறநெறிகள் கற்றதும்....
துறந்தது பிறந்த மண்ணைத் துக்கமே மகிழ்ச்சியில்லை!

ஆக்கம் வள்ளியம்மை சுப்பிரமணியம் (தொல்புரம்)

பதிவுகள்

E-mail Print PDF

ஹப்பி நியூ இயர்

E-mail Print PDF

 

உயிர் குடிக்கும் ஆண்டே இனிவேண்டாம்
கடந்த நாட்கள் அவலமாக சென்றது
பிறந்திருக்கும் ஆண்டே
உன்னிடம் கேட்பது
சாந்தியையும் சமாதானத்தையும்
எம் தமிழர்களுக்கு
கொடும் தாயே
கற்பனையில் உள்ளது
நிஜமாகும் ஆண்டாக மலருவாயாக
சிந்திக்கும் திறனுக்கு
வழிவிடும் புத்தாண்டே
HAPPY NEW YEAR

கண்ணீர்.!

E-mail Print PDF

பிறரிடம் பகிரமுடியாத
வேதனைகளை கூட
ஆற்றிட விழிகளில்
ஊற்றெடுக்கும் அருவி

தன்னம்பிக்கை

E-mail Print PDF

வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!

Read more...

2010 புத்தாண்டே விடைகொடு

E-mail Print PDF

விலங்குகள் பூட்டிய விலங்குகளாய் நிலத்தில்
வில்லங்கம் பலசுமந்து வில்லர்கள் முன்னெம்

Read more...

Page 3 of 4

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்