Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை கவிதை

காக்கைகள்

E-mail Print PDF

காக்கைகள்ஒற்றுமைக்கு
உதாரணம் சொல்வோர்
உணர்ந்திருக்க நியாயமில்லை
உணவுக்கு அடித்துக் கொள்ளும்
காக்கைகள் குறித்து.

கண்ணயரும் வேளையிலே
கைவரிசையை காட்டும்
காக்கைகள் உழைக்காது
சுற்றி வரும் ஊர்ப்புறத்தே
உளைப்பவனை குறிவைத்து

காக்கைகளுக்காய்
கசிந்துருகும்
குழந்தைகள் அறியுமா
வடை விற்கும்
பாட்டியின் சோகம்?

காக்கைகளைக் கூட
மன்னிக்கலாம்
காக்கா பிடித்து
காரியம் செய்பவனை
என்ன சொல்வது ?

எது எப்படியாயினும்
இருக்கத்தான் செய்கின்றன
இன்றும் சில காக்கைகள்

திருமண வீடு
கருமாதி வீடு
பேதமறியாது
எச்சில் இலைக்கு
ஏங்கித் தவித்தபடி!

ஆக்கம்: விநோதினி பத்மநாதன் - டென்மார்க்

நட்பின் நாட்கள்

E-mail Print PDF

நண்பன் ஒரு கண்ணாடி
நாம் முகம் பார்க்க...
நாம் கோபப்பட்டால் உடைக்க.!

நண்பன் ஒரு போதிமரம்

நாம் ஊஞ்சல் ஆட...
நாம் கிடந்து தூங்க!

நண்பன் ஒரு புத்தகம்

நாம் படிக்க...
நாம் கிழிக்க...!

அப்பாவுக்கு ஒரு கடிதம்

E-mail Print PDF

அப்பாவுக்கு ஒரு கடிதம்:

ஐந்து பிள்ளை பெற்றிருந்தும் ஆண் பிள்ளை இல்லை என்ற
ஆறாத் துயரோடு ஆடியிலே தேரோடும் அம்மனுக்கு நேர்த்திவைச்சு
காலமெல்லாம் நோன்பிருந்து கடவுள் தந்த பிள்ளை என்று
கஸ்டமே தெரியாமல் செல்லமாக வளர்த்து - என்னை
"சோம்பேறி" என்ற பட்டம் பெற வைத்தவரே!

பள்ளிப் படிப்பு ஏனோ பாகற்காய் போல் கசத்திருக்க    
நொண்டிச்சாட்டு பல கூறி பள்ளிக்கு ஆப்பு வைத்து
அம்மாவின் அரவணைப்பில் செல்லமாக இருந்த - என்னை
சுள்ளித் தடியெடுத்து சுழர நாலு போட்டு அன்று
பள்ளிக்கு அனுப்பி வைத்து பாடம் சொல்லித் தந்திருந்தால்
"பட்டம்"
பெற்று நானும் பலபேர் போற்ற வாழ்ந்திருப்பேன்

கனடா போய்விட்டால் சுகவாழ்வு வாழ்வாய் என்று
வட்டிக்கு காசு வாங்கி வழி அனுப்பி வைத்தவரே
கடிதம் எழுதத் தெரியாமல் கலங்குகின்றான் - உன்பிள்ளை
கல்லாப் பிழை தெரிந்து கலங்குகின்றான் தன்னை எண்ணி

பள்ளிக்கு சென்று அன்று நாலு சொல்லுப் படித்தவர்கள்
சுழரும் கதிரையிலே சுழையாக சம்பாதிக்க - உன் செல்லம்
இராப் பகலாய் கழுவுகிறான் எச்சில் கோப்பை கனடாவில்
திண்ணைக்கு மண் எடுத்து திமிர் பிடித்த என் உடம்பு
இப்போ ஏப்பைக் காம்பாகி எலும்பெல்லாம் தெரியுதப்பா

செல்லப் பிள்ளையாக்கி என்னை ஊர் சிரிக்க வைத்தவரே
உன் ஆசை நிறைவேற்ற என்னை பொம்மையாக வளர்த்தவரே
கண்ணிருந்தும் குருடன்போல் வாழ்கின்றான் - உன் செல்லம்
மாற்று மருந்தாக ஒரு படித்த பெண்ணாய் பாருமப்பா

அன்னையரே தந்தையரே என் அருமைப் பெற்றோரே
"ஆரம்பக் கல்வி" அதன் அருமைதனை எடுத்துரைக்க
எண்ணத்தில் வந்துதித்த கதையொன்றைக் கூறிவிட்டேன்
ஏழ்மையில் வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வழிகாட்டும்
அந்த ஆரம்பக் கல்வியாவது
புகட்டிவிடு தவறாது

நன்றி

பணிப்புலத்தான்

1896.03.02.2014

Page 4 of 4

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்