Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் இயற்கை வைத்தியம்

தொப்பையை குறைக்க சத்திர சிகிச்சை

E-mail Print PDF

நவீன உலகில் எல்லாமே இயந்திர மயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சொகுசு வாழ்க்கையை தொடர்வதால் உடல் பருமனாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

உடற் பயிற்சியற்ற பெருத்த உடம்பு பல நோய்களை சுலபமாக கொண்டு வருவதுடன் உடல் அழகையும் கெடுத்து விடுகின்றது. உடல் பருமன் என்பது சாதாரணமான அழகு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. உடல் நலன் சார்ந்த பிரச்சினையும் கூட.

இதனால் நீரழிவு, மிகை ரத்த அழுத்தம், மூட்டுவலிகள், தூக்கமின்மை, ஆஸ்துமா, இதயம் செயலிழத்தல், மனஇறுக்கம், மலட்டுத்தன்மை, தோல்புண்கள், ரத்த உறைவுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஆகியவை வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
முருக்கு பருத்து தூணுக்கு உதாவத கதையாக ஒரு சிறு வேலையைச் செய்யும் போதே மூச்சிழுத்து கழைப்பெடுக்கின்றது.

தொப்பையால் தங்கள் அழகு கெட்டுவிட்டதே என்று ஆண்களை விட பல பெண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொஞ்சம் தளர்ந்து விடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்தவழி. அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருப்பவர்கள் வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மார்பிட் ஓபிசிடி எனப்படும் தீவிரமான உடல்பருமன் மிகவும் ஆபத்தான ஒரு உடல்நலப் பிரச்சினையாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது

அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் மக்களுக்கு மேல் இந்த நாட்பட்ட நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதைச் சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை முறை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது பாதுகாப்பானதாகவும் நீண்டகாலம் சாதகமான விளைவை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது.

தீவிரமான உடல் பருமன் உள்ள நோயாளிகளுக்கு எடை குறைக்கும் அறுவை சிகிச்சை பலன் தரக்கூடியதாக கருதப்படுகிறது.
லேப்ராஸ்கோப்பிக் முறையிலான பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை பற்றி பார்ப்போம்.

இந்த முறையில் எடை குறைப்பானது 2 அடுக்கு முறையில் சாத்தியமாக்கப்படுகிறது. முதலாவது கட்டுப்பாடு. 2 முதல் 3 லிட்டர் கொள்ளளவு உள்ள அறுவை சிகிச்சை மூலம் ஒரு லிட்டராக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நோயாளி ஒரு குறிப்பிட்ட அளவு உணவை மட்டுமே சாப்பிட முடிகிறது. அவ்வாறு சாப்பிட்டதும் சாப்பிட்ட திருப்தியும் ஏற்படுகிறது.

பை போன்று இருக்கும் வயிற்றை அறுவை சிகிச்சை மூலம் குழாய் மாதிரி மாற்றுகிறார்கள். இந்த முறையின் போது இரைப்பையின் ஒரு சிறிய பகுதியானது க்ரெலின் என்ற பசி தூண்டும் ஹார்மோனை சுரக்கும் பகுதி நீக்கப்படுகிறது.
இதனால் நோயாளி உணவுக் கட்டுப்பாடு எதையும் மேற்கொள்ளாமலேயே உணவை அளவாக உண்பதற்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்படுகிறது.

2-வது முறைக்கு மால் அப்சார்ப்ஷன் என்று பெயர். சிறுகுடல் உணவில் உள்ள சத்துப் பொருட்களை உறிஞ்சாமல் இருக்க பை-பாஸ் செய்யப்படும். சிறுகுடலின் மிகச்சிறிய பகுதியால் போதிய அளவு ஊட்டச்சத்தை திறனுடன் உறிஞ்சிட இயலாது.

இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நோயாளி குறைவாகச் சாப்பிடுவார். நிறைவாக உணர்வார். எதை சாப்பிடுகிறாரோ அது குறைவாக உடலால் உட்கிரகிக்கப்படும். கலோரி உட்கொள்ளும் அளவைவிட செலவிடப்படும் கலோரியின் அளவு அதிகரிப்பதால் நோயாளி எடை குறைந்து விடுவார்.

லேப்ராஸ்கோப்பி முறையில் வயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய சாவி அளவில் துவாரமிடப்பட்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரமும் குறைவு, வலியில்லை, செலவுகள் இல்லை. விரைந்து நலம் பெறவும் இயலும். அறுவை சிகிச்சையின் போது பக்க விளைவுகளோ, சிக்கல்களோ தோன்றுவது கிடையாது. கொழுப்பு அடுக்குகளை வெட்டிக் கொண்டிருக்கும் வேலையும் கிடையாது.

இந்த அறுவை சிகிச்சையால் அடுத்த 3 மாதத்தில் 3 முதல் 10 கிலோ எடை வரை குறைகிறது. ஒரு ஆண்டிற்குள் நோயாளிகளுக்கு 15 கிலோ எடை குறையும். அடுத்த சில ஆண்டுகளில் அதிக எடை குறைந்து எடையானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
அல்லது, இவை தவிர உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலை, மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும், காலையில் நடப்பது நல்ல பலன் தரும். அதேபோல், இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

உடல் எடையக் குறைக்க சில கை வைத்தியம்:
* தினமும் மாச்சத்து, புரதம், கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைத் குறைத்து காய்கறி வகைகள் அல்லது பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

* பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

*பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.

* அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு, 4 தேக்கறண்டி அளவுள்ள ஓமமும் சேர்த்து சூடாக்கி இரவு நேரம் மூடிவைத்தபின் காலையில் அதனை மிக்சரில் யூசாக அடித்து தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

*முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

* இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று வற்றியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும். இப்படி தொப்பையாக, குண்டா இருக்கின்றோமே என்று சும்ம இருந்து கவலைப்படுவதை தவிர்த்து அதை குறைக்க சரியான அப்பியாசங்களை செய்வதே புத்திசாலித்தனமானது. பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் மாஸ்டர் என தகுந்த நபர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வாழ்க்கையை மகிழ்வாக்குங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

ஊளைச் சதையை குறைக்க எழிய பரிகாரம்

E-mail Print PDF


இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

ஊளைச்சதையை குறைக்க உடலில் உள்ள திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்து குறைய வேண்டும். ஊளைச் சதையைப்போக்க பல வழிகள் உண்டு, அந்த வழிகளீல் நல்ல வழி சாப்பாட்டின் அளவைக் குறைப்பதும், கீரைவகை உணவுகளை கூட்டியும் இறைச்சி வகைகளை குறைத்து உண்பதோடு உடற்பயிற்சி செய்தலுமாகும்.

உடற் பயிற்சி செய்ய இயலாதவர்களுக்கு இவை தவிர எளிய பரிகாரங்கள் மூலம் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

சாதாரண மனிதனை "சூப்பர்மேனாக்கும்" - "அட்ரினல் சுரப்பி"

E-mail Print PDF

ஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து.  நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள்.  திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.

உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்லது `சுப்ரா ரீனல்’ (`சுப்ரா’ என்றால் `மேலே’) சுரப்பிகள் எனப்படுகின்றன. நெருக்கடியின்போது இவை சில ஹார்மோன்களை வெளியிடுகின்றன.

பயத்தில் தலைதெறிக்க ஓடுவது, குத்துச்சண்டை வீரரின் `நாக்-அவுட்’ குத்தில் கூடுதல் வேகம், நெருக்கடியான நிலையில் டென்னிஸ் வீரர் `எக்ஸ்ட்ரா’ சக்தியோடு பந்தை அடிப்பது எல்லாமே அட்ரினல் சுரப்பிகளின் கைங்கரியம்தான்.

உங்களுக்குத் தெரியுமா?
* அனைத்து `அட்ரினோகார்ட்டிகல்’ ஹார்மோன்களும் கொலஸ்ட்ராலால் ஆனவை.
* இரண்டு அட்ரினல் சுரப்பிகளும் சேர்ந்தே 10 கிராம் எடைக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
* உடற்பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாகக் குறைவது, ரத்தக் கசிவு, உணர்வுரீதியான நெருக்கடி போன்றவை அட்ரினல் செயல்பாட்டைத் தூண்டும்.
* அட்ரினல் சுரப்பிகள் அவற்றின் எடையை விட ஆறு மடங்கு ரத்த வினியோகத்தைப் பெறுகின்றன.
* வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனில், அட்ரினல் சுரப்பிகளின் நீக்கம் அல்லது சேதம், மரணத்தை ஏற்படுத்தும்.
* நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய், அட்ரினல் சுரப்பிகளுக்கும் பரவுகிறது.
* ரத்த மாதிரி எடுக்க முயலும்போது அந்த நர்ஸுக்கு `கார்ட்டிசோல்’ ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.

அட்ரினல் செயல்பாட்டின்போது…
அட்ரினல் சுரப்பியால் `அட்ரினலின்’, `நார்அட்ரினலின்’ ஆகிய ஹார்மோன்கள் வெளியிடப்படும்போது, கீழ்க்கண்ட உடலியல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன…
* இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.
* உடலியல் வேதிமாற்ற வேகம் கூடுகிறது.
* கண் பாவை விரிவடைகிறது.
* மூச்சு வாங்குகிறது.
* ரத்த நாளங்கள் சுருங்கி அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
* தசைகளுக்கான ரத்த வினியோகம் அதிகரிக்கிறது.
* உறையும் நேரம் குறைகிறது.

சாதாரண மனிதனை `சூப்பர்மேனாக்கும்’ விஷயங்கள்…
அட்ரினலின் சுரப்பின்போது, துரிதமடையும் உடலியல் வேதிமாற்றம், இதயத் துடிப்பு, அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுப்பது ஆகியவை சட்டென்று சக்தியைப் பொங்கச் செய்கின்றன. கண் பார்வை விரிவதால் பார்வைத் திறன் கூடுகிறது. ரத்தம் சீக்கிரமாக உறைவது, அதிக ரத்தக் கசிவைத் தடுக்கிறது. அத்தியாவசியமற்ற செயல்பாடுகளான குடல்பகுதிச் சுரப்புகள் மெதுவாகின்றன. இவ்வாறாக, நெருக்கடியில் உள்ள ஒரு நபர் அதைச் சமாளிக்கத் தயாராகிறார்.

அட்ரினல் சுரப்பியின் சுரப்புகள்

சுமார் 25 விதமான ஹார்மோன்களை அட்ரினல் சுரப்பி சுரக்கிறது. அவற்றில் முக்கியமான சில…

கார்ட்டெக்ஸின் சுரப்புகள்
கார்ட்டிசோல்- ஹைட்ரோகார்ட்டிசோன் என்றும் அழைக்கப்படும் இது, பிட்யூட்டரி சுரப்பியின் அடினோகார்ட்டிகோடிராபிக் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. கொழுப்பு வேதிமாற்றத்தைத் தூண்டுகிறது. குளுக்கோஸ் அளவையும், தண்ணீரைத் தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
ஆல்டோஸ்டீரான்- மினரலோகார்ட்டிகாய்டு எனப்படுகிறது. பிளாஸ்மா அடர்த்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
டீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டீரான்- இது, வயதாவதைத் தடுப்பதாகவும், பாலியல் செயல்பாட்டை மேம் படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

மெடுல்லாவின் சுரப்புகள்
அட்ரினலின் அல்லது எபிநெப்ரின்- நெருக்கடி நிலையில் சுரக்கிறது. சண்டையிட அல்லது தப்பியோட உடம்பைத் தயார்படுத்துகிறது.
நார்அட்ரினலின் அல்லது நார்எபிநெப்ரின்- ரத்த நாளங்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

அட்ரினல் சுரப்பிகளின் `பொறுப்புகள்’
* உடலியல் வேதிமாற்றத்தைப் பராமரிப்பது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது.
* வீக்கத்தைத் தடுப்பது.
* மின்தூண்டல் கடத்தல் திரவச் சமநிலையைப் பராமரிப்பது.
* கர்ப்பத்தைப் பராமரிப்பது.
* பூப்படைதல், பாலியல் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது.

அட்ரினல் சுரப்பி பாதிக்கப்படும்போது…
அடிசன்ஸ் வியாதி- இது `ஹைப்போஅட்ரினோகார்ட்டிசிஸம்’ எனப்படுகிறது. `கார்ட்டிசோல்’ குறைவாக உற்பத்தியாகும் நிலை. வழக்கமாக, நோய்த் தொற்றுகளாலும், தன்னியக்க நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. ஒரு லட்சம் பேரில் 4 பேரை இது பாதிக்கிறது.

குஷிங்ஸ் சிண்ட்ரோம்-கார்ட்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது. அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி மற்றும் சில வேதிப்பொருட்களால் ஏற்படலாம்.

அட்ரினல் ஹைபர்பிளேசியா- குறைவான கார்ட்டிசோல் உற்பத்தி. மரபியல் காரணங்களால் ஏற்படலாம் எனக் கருதப்படு கிறது.

பிட்யூட்டரி கட்டி- எண்டோக்ரைன் சுரப்பிகளின் செயல்பாட்டை பிட்யூட்டரி சுரப்பி கட்டுப்படுத்துகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் எந்தச் சேதமும் அதன் அனைத்து ஹார்மோன்களையும் பாதிக்கும்.

விரிலைசேஷன்- ஆண்ட்ரோஜீன்களின் அதிக உற்பத்தியால் முரட்டுத்தனமான தன்மை ஏற்படும் நிலை.

அட்ரினல் கட்டி- இது, `பியோகுரோமோசைட்டோமா’ எனப் படும் புற்றுநோய். இந்நோய், அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலினை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது.
நன்றி: செந்தியல்வயல்.காம்

அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும்

E-mail Print PDF


நம் கழுத்துப் பகுதியில் நார்த் தசைகளுக்கு அடியில் தைராய்டு சுரப்பி உள்ளது. அதுதான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன்தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது. தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ளன.  உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது. அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு மட்டுமே. அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

அயோடின் சத்துக்கும் தைராய்டு சுரப்பிக்கும் என்ன தொடர்பு?

இச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. குழந்தை குள்ளமாக இருப்பதோடு அறிவுத் திறனும் குறைந்துவிடுகிறது. மேலும் மாறு கண், காது கேளாமை, மந்தமான போக்கு ஆகியவை காணப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் "க்ரெடின் குழந்தைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

அயோடின் சத்துக் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை வரும் என்பது பரவலாகச் சொல்லப்படும் விஷயம். ஆனால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இன்னும் பலர் உணரவில்லை. அயோடின் சத்துக் குறைவால் புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இருக்காது. பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நமது உடலுக்கு மைக்ரோ அளவிலேயே அயோடின் தேவைப்படுகிறது. தினமும் ஒரு தீக்குச்சி தலையளவு அயோடின் கிடைத்தால் போதுமானது. ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கிவிடுவதால் நன்மை கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.

வீட்டில் வளர்க்கும் அனைத்து கால்நடைகளுக்கும் அயோடின் உப்பு கலந்த தீவனம் தருவதால் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரிப்பதோடு நோய்ப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

அயொடின் என்றால் என்ன?
அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு "I". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது  என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம். இதன் அணு எண் 16 .அதன் அணு எடை:126.9045 g.mol -1இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது.  இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர். இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!

அயொடின் மோசமான நச்சு குணம் உடையதுதான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது.  உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது. இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன் படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே,  இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில்பரவலாகப் பயன்படுகிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்:

ஆண்களுக்கு ............. 150.. பெணகளுக்கு................. 120 மைக்ரோ கிராம்
தாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்
பாலூட்டும் பெண்ட்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்
குழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்
சின்ன குழந்தைகளுக்கு  50-60   மைக்ரோ கிராம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150..மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.
100கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள அயொடின் 25 மைக்ரோ கிராம்
100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது

Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]
Age..........................Male.................Female...........Pregnancy........Lactation
Birth to 6 months......110 mcg*..........110 mcg*
7–12 months.............130 mcg*..........130 mcg*
1–3 years..................90 mcg..............90 mcg
4–8 years..................90 mcg..............90 mcg
9–13 years...............120 mcg.............120 mcg
14–18 years.............150 mcg.............150 mcg.............220 mcg............290 mcg
19+ years.................150 mcg.............150 mcg............220 mcg.............290 mcg

Table 2: Selected Food Sources of Iodine
Food.............................Appr.mcg per serving............Percent DV*
Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984 ...............11% to 1,989%
Cod, baked, 3 ounces..................99  .............................66%
Yogurt, plain, low-fat, 1 cup............75  ............................50%
Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...................47%
Milk, reduced fat, 1 cup..................56 .............................37%
Fish sticks, 3 ounces......................54 ..............................36%
Bread, white, enriched, 2 slices.........45 ...........................30%
Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42............28%
Shrimp, 3 ounces.........................35 ................................23%
Ice cream, chocolate, 1/2 cup .........30 .............................20%
Macaroni, enriched, boiled, 1 cup......27............................18%
Egg, 1 large ..............................24  ..................................16%
Tuna, canned in oil, drained, 3 ounces...17  .......................11%
Corn, cream style, canned, 1/2 cup....14 ............................9%
Prunes, dried, 5 prunes...................13 ...............................9%
Cheese, cheddar, 1 ounce................12 ..............................8%
Raisin bran cereal, 1 cup..................11 ..............................7%
Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ............................5%
Apple juice, 1 cup..........................7  .................................5%
Green peas, frozen, boiled, 1/2 cup....3  ..............................2%
Banana, 1 medium........................3 .....................................2%

அயொடின் பாதிப்பால்...!

உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக் கழலை (goiter)என்ற நோய் வரும்,  குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக்கூடியதுதான். ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். அதே போல உலகம் முழுவதும்  50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது..

உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்!

வளர்ச்சிதான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா? அயோடின்தான் உயிருக்கு உயிரான முக்கிய கனிமம். ஆனால் பூமியில் கிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும், அதிக கனமானதும் இதுதான்.


ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்கவைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.

அயொடினின் குணங்கள்.!

அயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic)த்னிமம். இது கருஞ்சாம்பல்/கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்புமிகு அலோகத் தனிமம். இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது. இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகிறது. இது இயல்பாகவே காற்று,  நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு, ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகி கடலில் பரவிக்கிடக்கிறது.

பெண்கள் கட்டாயமாக உண்ண வேண்டிய உணவுகள்

E-mail Print PDF

ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.

இயற்கை உணவுகள்:

ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:
ஒமீகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.

“சென்ஈஸ்ட்ரோஜன்களை’ தவிர்க்க வேண்டும்:

ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

சர்வ நோய் நிவாரணி - விளாம்பழம்

E-mail Print PDF

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

எலும்புகளை பலப்படுத்தும்: விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது.

ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால் அவர்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபெரோஸிஸ் என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

இதயத்திற்கு இதமளிக்கும்: இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.

இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.

பித்தம் போக்கும்: பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது.

காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

முகம் இளமையாக மாறும்: வெயிலில் அதிகம் அலைவதால் முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும்.

இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீ ஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் 'மாஸ்க்' போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.

விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.

மரப் பட்டையைப் பொடித்து தண்­ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

பட்டுப்போன்ற கூந்தல்: வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு. இதை காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் - 100 கிராம், சீயக்காய், வெந்தயம் - தலா கால் கிலோ இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும்.

செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.

தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.

வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம் மர இலையை தண்­ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

Page 4 of 10

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்