Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் இயற்கை வைத்தியம்

பழஞ்சோறும் சின்ன வெண்காயமும் நோய் தீர்க்கும் அருமருந்து

E-mail Print PDF

ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோத்து நீர் இரண்டையும் போக்கும்

எம் முன்னோர்களும், தற்காலத்தில் தாயகத்தில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும் சேர்த்துப் பிரட்டி சாப்பிடும் போது ஒரு தனி ருசியை உணர்ந்து கொள்ளலாம். கறி இல்லாத விடத்து அதனுடன் வெங்காயம், பச்சமிளகாய், ஊறுகாய், தயிர் என்பனவற்றை சேர்த்து திரணையாகவோ அல்லது நீர் ஆகாரமாகவோ அருந்தி உற்சாகமாகவும், தைரியசாலிகளாகவும், பலகாலம் சுகதேகிகளாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய. பழஞ்சோறும் தொட்டுக் கொள்ள வெண்காயமும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது புளுங்கல் அரிசி என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் சொல்லி விபரிக்க முடியாதவை.

பழந்தண்ணீராக கரைத்துக் குடிப்பதற்கு பதிலாக பழங்கறிகளுடன் குழைத்தி கவளமாக சாப்பிடுவதும் வித்தியாசமான ருசியைத் தரும்.

"மூலிகைக் குடிநீர்" சித்தர்கள் கூறிய - கைவைத்தியம்

E-mail Print PDF

நோயற்ற வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுக்கும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.  வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் சுடவைத்து ஆறிய நீரை அருந்தும்படி வைத்தியர்கள் சிப்பார்சு செய்கின்றனர்.

உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள பல வைகையான மூலிகைக் “குடிநீர்” களை  சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமன்றி நோய்களும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

இவ்வகை குடிநீரை அருந்திய எம் முன்னோர்கள் பலசாலிகளாகவும், ஆரோக்கியமாகவும் பலகாலம் வாழ்ந்தார்கள் என்பது அனுபவ உண்மை. குடிநீரை குடித்து வந்தால் வைத்தியசாலைக்கு செல்லத் தேவையில்லை என்பது நம்முன்னோர்கள் எமக்கு சொல்லிச் சென்ற வேதமாகும். அவற்றுள் சில கீழே பதிவாகியுள்ளன.

ஆவாரம்பூ (ஆவரசம்பூ) குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் (பாவட்டை) குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.


அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !

E-mail Print PDF

தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக  மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை
1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும்,  மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

மாதவிடாய் நிற்றல் (மெனோபாஸ்) - ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பருவ உடல் மாற்றம்

E-mail Print PDF

மெனோபாஸ் எம்பது மாதவிடாய் நிறுத்தம் என பொருள்படும், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்; வயதுக்கு வரும்போதும் (பூப்பெய்துதல்),  திருமணத்தின் போதும், பிரசவதின் போதும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள்  ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு பருவ உடல் மாற்றம் மெனோபாஸ் பருவ காலத்திலும் நிகழ்கின்றது. மெனோபாஸ் ஏற்படும் போது அவர்கள் பல உடல், மன வாதைகளுக்கு உள்படுகின்றார்கள்.

வயதிற்கு வரும் ஒரு பெண்ணில் (பூப்பெய்தும் போது) இனப்பெருக்க உறுப்புகள் விருத்தியடைவதோடு, அதற்கான ஹோமோன் சுரப்புகளும் உற்பத்தியாகின்றன, ஆனால் மெனோபாஸ் நிகழும் போது இனபெருக்க உறுப்புகள் செயல்லிழக்கப்படுவதோடு அதனோடு தொடர்புடைய ஹோமோன் சுரப்புகளும் நிறுத்தப் பெறுகின்றன. ஒரு பெண் வயதிற்கு வரும்போது மாதவிடாய் ஆரம்பிக்கின்றது. மெனோபாஸின்போது மாதாவிடாய் நிறுத்தம் பெறுகின்றது. பூப்பெய்திய காலம் முதல் மெனோபாஸ் ஆகும் வரையும் உள்ள காலமே பெண்களின் பொற்காலம் என்றும் கூறலாம்.

எனவே மெனோபாஸ் என்பது பூப்பெய்தல் போன்ற ஆனால், எதிர்மாறான ஒரு பருவ மாற்றம்மட்டும்தான். இதை எதிர் கொள்ள பயபட வேண்டியதில்லை. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் ஏற்படக் கூடியது.  இந்தச் சமயங்களில் எதிலெதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

பெண்களின் மெனோபாஸ் நாட்கள்
நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

மெனோபாஸ் என்றால் என்ன?
நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் (சூலகத்தின்) செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?
மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்தி குன்றிவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?
சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?
ஓவரியில்  (சூலகத்தின்) ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ,  இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?
1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்):
ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):
இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்):
அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

4. வெஜைனா (பெண் உறுப்பு) உலர்ந்து போதல்:
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் (பெண் உறுப்பு)  உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?
பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

மெனோபாஸ் –  மாதவிடாய் மறையும் காலம்
பெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது. இதனையே மெனோபாஸ் (விமீஸீஷீஜீணீusமீ) எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம். இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள். இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம் ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வு வரலாம்.

சுமார் 30 சதவிகித பெண்களுக்கு பல தொல்லைகளை தரலாம். மருத்துவம் மிகவும் முன்னேறிய இந்த காலத்தில் பெண்கள் விமீஸீஷீ-றிணீusமீ பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

மெனோபாஸ் தரும் தொல்லைகள்
• திடீரென சூடாக உணர்வது

• திடீரென இரவில் வியர்ப்பது

• யோனி உலர்ந்து காணப்படுவது

• தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)

• சருமம் உலர்ந்து காணப்படுவது

• பின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது

• இரத்த நாளங்கள் குறுகி விடுவது.

இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும் அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை ஈடு செய்கின்றது.

உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும். மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.

பெண்மணிகளின் இயல்பு பாலுணர்வு சம்மந்தப்பட்ட ஹார்மோன்கள்  உடல் இயக்கத்துக்கும், குழந்தைகள் பெறுவதற்கும் தேவை. ளிஸ்ணீக்ஷீவீமீs (சினைப்பை) இந்த இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது.

விமீஸீஷீ-றிணீusமீ ஏற்படும் சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்த 55 வயதுக்குள் ஏற்படுகிறது. இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிட்டால் காரணங்கள். கதிரியக்கம் (ஸிணீபீவீணீtவீஷீஸீ), புற்றுநோய் மருந்துகளின் பக்கவிளைவுகளால், புகைபிடித்தல், சினைப்பைக்கு (ளிஸ்ணீக்ஷீவீமீs) ரத்தஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்துவிடுவது போன்றவை.

ஒவரிகளும், கருப்பப்பையும் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டிருந்தாலும் மாதவிடாய் நின்றுவிடும். இதற்கு ஷிuக்ஷீரீவீநீணீறீ விமீஸீஷீஜீணீusமீ என்பார்கள்.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்கபோகும் அறிகுறிகள்
பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்யாசப்படும்.

பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் விமீஸீஷீஜீணீusமீ ஐப் பற்றிய அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பலதொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள்
மெனோ-பாஸ் (விணிழிளி-றிகிஹிஷிணி) நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.
• இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

• இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

• வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.

உடல்ரீதியான மாற்றங்கள்
1. பிஷீt திறீணீsலீமீs எனப்படும் வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இந்த பிஷீt திறீணீsலீமீs சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இந்த பிஷீt திறீணீsலீமீs தொடரலாம். இதற்கு நிவாரணம் – பிஷீt திறீணீsலீமீs தாக்கும்போது ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இரவில் வியர்த்தல்

இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும்.
நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும். தளர்வான பருத்தி ஆடைகளை உபயோகியுங்கள்.

3. யோனி உலர்தல்
யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ (ணிறீணீstவீநீ) தன்மையையும் இழந்துவிடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்றுநோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த விமீஸீஷீஜீணீusமீ சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்துவிடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

4. இதர உடல் பாதிப்புகள்
தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடைகூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’ (கீக்ஷீவீஸீளீறீமீs) உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் (ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs) என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

மனோரீதியான பாதிப்புகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள்.

• மறதி, அடிக்கடி மனநிலை (விஷீஷீபீ) மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ) இல்லாமல் போவது, இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

• உங்கள் ‘டென்ஷனால்’ சிறிய பிரச்சனைகள் பூதாகாரமாக பெரிதாக தெரியும். ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீனும் உண்டாகலாம்.

இதர சிக்கல்கள்

1. இதய சம்மந்த நோய்கள்
நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நின்றிடும்போது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

2. ஆஸ்டியோ போரோசிஸ்
இந்த எலும்பு மண்டல நோய் அதிகவயதினால் ஏற்படுவதைவிட விமீஸீஷீ-றிணீusமீ ஆல் அதிகம் ஏற்படுகிறது. இதற்கும் ணிstக்ஷீஷீரீமீஸீ தான் காரணம். இந்த ஹார்மோன் ‘கால்சியம்’ உடலில் படிவதற்கு உதவுகிறது. ணிstக்ஷீஷீரீமீஸீ குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs நோய்க்கு உள்ளாகுகிறார்கள்.

3. நரம்பு சம்மந்த மறதிநோய் (கிலிஞீபிணிவிணிஸி’ஷி ஞிவீsமீணீsமீ)
இது நரம்புத்தளர்ச்சி நோய். இது தொடர்பான ஞாபகசக்தி குறைந்து முழு மறதியை உண்டாக்கிவிடும். இதனால் மனச்சோர்வும் (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) வரும்.

அலோபதிக் மருந்துகள்
மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது ஏற்படும் தொல்லைகளில் முக்கிய காரணம் ணிstக்ஷீஷீரீமீஸீ மற்றும் றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ ஹார்மோன்களின் குறைபாடு. எனவே, இந்த ஹார்மோன்களை வாய் வழியாக ஊசிபோட்டோ, உடலுக்கு செலுத்தப்படுவது முதன்மையான சிகிச்சை. இது பிஷீக்ஷீனீஷீஸீமீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt ஜிலீக்ஷீமீக்ஷீணீஜீஹ் (பிஸிஜி) எனப்படுகிறது.

இதன் பயன்கள்
• பிஷீt திறீணீsலீமீs, இரவு வியர்த்தல் முதலிய தொல்லைகளை தடுக்கிறது.

• சருமம், தலைமுடி பாதிப்புகளை சரிசெய்கிறது.

• இதய, இரத்தக்குழாய் நோய்களிலிருந்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

• யோனியின் சுவர்களை மென்மையாக்கி, ஈரப்பசை குறையாமல் பாதுகாக்கிறது. பிஸிஜி யின் சில பக்க விளைவுகள்.

• இந்த ஹார்மோன் சிகிச்சையால், விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம். ரத்தப்போக்கு நிற்க வேண்டும்போது மறுபடியும் உதிரப்போக்கு தொடர்வது வேதனையை உண்டாக்கும்.

• மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்.

• கல்லீரல், மண்ணீரல் (லிவீஸ்மீக்ஷீ, நிணீறீறீ தீறீணீபீபீமீக்ஷீ) நோய்கள் உண்டாகலாம்.

• அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் குடும்பத்தில் புற்றுநோய்கள் நேர்ந்திருந்தால், இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டாம்.

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் பாதுகாப்பான பயனளிக்கும் சிகிச்சை முறைகளால் விமீஸீஷீஜீணீusமீ தொல்லைகளை போக்கவல்லது உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஏற்படும் மாறுதல்களை பாதிப்புகளை ஆயுர்வேத மருந்துகளால் முற்றிலும் சரி செய்ய முடியும்.

ஆயுர்வேதம் ஒரு தொன்மையான, விஞ்ஞான ரீதியான மருத்துவ முறை, இயற்கையின் வரப்பிரசாதங்களான மூலிகைகளையும், இயற்கையான தாதுப்பொருட்களையும் உபயோகிப்பதால் பக்க விளைவுகள் இல்லை.

வியாதியிலிருந்து குணப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். இவைகள் சரிசமமாக உடலில் இயங்கினால் ஆரோக்கியமும், இவை மாறுபட்டால் நோய்கள் உண்டாகும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

ஆயுர்வேதத்தின் படி, விமீஸீஷீஜீணீusமீ ஏற்படுவது. வாத, பித்த தோஷங்களின் மாறுபட்டால் தான் ஏற்படுகிறது.

நிரந்தரமாக நிற்கும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலிகைகள் ‘றிலீஹ்tஷீமீstக்ஷீஷீரீமீஸீ’ என்ற பொருள் உள்ள சிறந்த மூலிகைகள்.

இவை ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன்கள் போன்றவையே. ஆனால் ணிstக்ஷீஷீரீமீஸீ சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லாதவை.

இதனால் பெண்கள் இந்த காலகட்டத்தில் எந்த வித தொல்லைகளும் இன்றி ஆயுர்வேத மருந்துகளால் பயனடையலாம்.

மருத்துவம்
பாதிப்பு அதிகமாக உடைய பெண்கள் அதிமதுரம் வேரை சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை (காலை, இரவு) ஒரு ஸ்பூன் அளவு சூடான பாலில் கலந்து பருகி வரலாம். அதிமதுரம் ( லிமினிஹிளிஸிமிசிணி – நிலிசீசிசீஸிவிமிஞீகி நிலிகிஙிஸிகி) வேரில் பெண் இன ஹார்மோன் ‘இஸ்ட்ரோஜென்’ போன்ற பொருள்கள் காணப்படுவதால் அது இறுதியாக மாதவிடாய் நிற்கும் சமயம் ஏற்படக் கூடிய திடீர் ஹார்மோன் குறைபாடை சீர் செய்கின்றது.

நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை
• சரிசம விகித உணவை உட்கொள்ளவும், பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் போன்ற உணவுகள் ளிstமீக்ஷீஷீ – ஜீஷீக்ஷீஷீsவீs வராமல் பாதுகாக்கும்.

• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்ற உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும் குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.

• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.

• விமீஸீஷீஜீணீusமீ தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

மெனோபாஸ்
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுபோவதைத்தான் மெனோபாஸ் என்கிறோம். பூப்பெய்தல், பிரசவம் போல ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. ஹார்மோன் மாற்றங்களால் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதில் மெனோபாஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே.

மெனோபாஸின் அறிகுறிகள்:

ஒவ்வொரு மாதமும் சரியாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாறுதல்கள்தான் மெனோபாஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்பதன் முதல் அறிகுறி. மாதவிடாயின்போது அதீத உதிரப்போக்கு, மாதவிடாய் திடீரென்று நின்று போதல், அப்நார்மல் பிளீடிங், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பிளீடிங், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேல் பிளீடிங் இவை மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள்.

உடல் முழுவதும் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒருவித சூடு ஒரு நிமிடம் ஃபிளாஷ் மாதிரி பரவிவிட்டுப் போகும். இதற்கு hot f* ushes என்று பெயர். பெரும்பாலான பெண்களுக்குத் திடீரென ஏற்படும் hot f* ushes பப்ளிக்கில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள இழைகள் மெலிதாகவும், உலரவும் தொடங்கிவிடும்.
ஹார்மோன் மாற்றங்களால் மெனோபாஸில் இருக்கும் பெண்கள், ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மூட் ஒரு நாளிலேயே பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கோபப்படுவது, எரிச்சல்படுவது, சோர்வு, மன உளைச்சல், டிப்ரஷன் போன்றவை மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. உடல் அளவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செக்ஸில் ஆர்வம் குறையும். உடலில் எனர்ஜி குறைவதால் பொதுவாக எதிலேயும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு வலிமிக்க உடலுறவாக அமையும்.

எலும்புகள் மெலியத் தொடங்கிவிடும், இதனால் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் எளிதில் ஆன்டியோ பொரோஸிஸ் நோயினால் தாக்கப்படுவார்கள். எலும்புகள் வீக்காகத் தொடங்கும். இந்த அறிகுறிகள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்.

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள் இருதய நோய் பரம்பரை உள்ளவர்களுக்குத் தெரியத் தொடங்கும். சரி. இந்த மாற்றங்களுக்குக் காரணம்? ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் செய்யும் முக்கிய வேலைகளைப் பார்க்கலாம். பெண்களின் உடலில் அவர்களுடைய மார்பகங்கள், பெல்விக் எலும்பு வளர்ச்சி, பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை செயல்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். கால்ஷியத்தை உறியச் செய்து எலும்புகளை பலப்படுத்துவதும் இந்த ஹார்மோன்தான். மேலும் நல்ல கொலஸ்ட்ராலான HD* _ஐ. அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலான * D* _ஐ.. குறைத்து பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் மெனோபாஸ் வரை பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்

வாய்ப்பு மிகக் குறைவு.
மெனோபாஸின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக டிப்ரஷன், எலும்பு மெலிதல், இருதயநோய் ஆகியவை பெண்களை எளிதில் தாக்கக் கூடிய நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மெனோபாஸ் அறிகுறிகள் அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அறியப்படுகிறது. ஹார்மோன் ரீப்பிளேஸ்மெண்ட் தெரபி (HRT) என்ற சிகிச்சையின் மூலமே ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை ஈடுகட்ட முடியும். ஆனால், இந்த சிகிச்சைக்கு பக்கவிளைவுகள் உண்டு. இதைப்பற்றி சிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் லேடீஸ் கவனித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…
*  ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.

*  45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.

*  மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*  ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்னைகள்.

*  குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.

*  உணவினை எரிக்கும் சக்தியான Basa*  Metabo* ic Rate  சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

*  ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*  பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.

*  உடல் மற்றும் முகச் சருமம் உலர்ந்துவிடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம்.

*  எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

*  மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!

மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.

நன்றி

6866.12.04.2015

பற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்

E-mail Print PDF

"பல்லுப் போனால் சொல் மாத்திரமல்ல அழகும், நல்ல சாப்பாடும், சந்தோஷசமும் போய்விடும்"

“எதையும் வரும் முன் காப்பதே திறமை” என்பதற்கு இணங்க சிறு வயதில் குழந்தைகளின் பற்களுக்குச் செய்யும் ஒவ்வொரு சிறு சிகிச்சையும் அவர்களின் வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் பெரும் பிரச்சனைகள் அல்லது விளைவுகளில் இருந்து தடுத்து, அவர்களை நல்ல வலிமையான ஆரோக்கியமான பற்களைக் கொண்டவர்களாக மட்டுமல்லாமல், நல்ல உடல் நலத்தையும், நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட மனிதர்களாக உருவாக்க முடியும் என்பதை ஒவ்வொரு குழந்கைளின் பெற்றோர்களும் அறிந்திருக்க வேண்டியதொன்றாகும்.

நமது முகத்தைக் கண்ணாடி பிரதிபலிப்பது போல் உடலில் தோன்றும் பல நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை வாய் மற்றும் பற்களில் ஏற்படும் இராசயன மாறுதல்களைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். எனவே நமது உடலின் ஆரோக்யத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நமது வாய் மற்றும் பற்கள் விளங்குகின்றன.

மருத்துவ உலகில் "Mouth is the Mirror of our Body" என்னும் வாசகம் மிகவும் பிரபலமானது. பல் போனால் சொல் போச்சு என்னும் தமிழ் பழமொழியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''

…குழந்தைகள் பல் மருத்துவம் ஆங்கிலத்தில் Paedodontics என்று அழைக்ப்படுகிறது.

பல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையையும் நாம் சிறு வயதிலேயே அறிந்து கொண்டு அதற்கு சிகிச்சை செய்தால் அதைப் பெரியதொரு பிரச்சனையாக
ஆகவிடாமல் அப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

இளம் குழந்தைகளின் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பல் மருத்துவரை அவ்வப்போது அணுகுவது நல்ல பயனைக் கொடுக்கும்.

உதாரணமாக.
* நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முடியும்.

* உணவு, சாக்லேட், ஜஸ்கிரீம், கேக் போன்றவற்றை சாப்பிட்ட பின்பு பற்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற முடியும்.

* பற்களை காலையில் மட்டும் அல்லாமல் இரவில் உறங்குவதற்கு முன்னும் பல்·· துலக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூற முடியும்.

* சிறு வயது குழந்தைகளுக்கு உரிய பழக்க வழக்கங்களான விரல் சூப்புதல் (Thumb Sucking), பென்சில் சுவைத்தல், (Pencil Biding ) மற்றும் Tongue thrusting· போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

* குழந்தைகளின் பால் பற்கள் (milk teeth) சரியான முறையில் இருக்கிறதா என்பதைக் கவனிக்க முடியும்.

* 12 வயது சிறியவர்களின் நிரந்தர பற்கள்· (Permanent teeth)· சரியான வயதில் சரியான இடத்தில் சரியான முறையில் வளருகிறதா என்பதைக் கவனித்து அதற்கு ஏற்றாற் போல் ஆரம்பத்திலேயே சிகிசசை செய்ய முடியும்.

* குழந்தைகளின் தாடை சரியான முறையில் வளருகிறதா···· என்பதையும் கவனிக்க முடியும்.

நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்
உடல் ஆரோக்கியத்திற்கும், வசீகரமாகத் தோன்றுவதற்கும், ருசியாக சாப்பிடுவதற்கும், நன்றாகப் பேசுவதற்கும் பற்கள் இன்றியமையாதவை. பற்களின்ஆரோக்யம் உடலின் ஆரோக்யம்.

பற்களின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள்
1)  பல் சொத்தையும், சிகிச்சை முறையும்:
பற்களில் சொத்தை ஏற்பட்டவுடன் அதை கவனித்து பற்களை அடைத்துக் கொள்ள வேண்டும். பற்களை அடைப்பதற்கு சிமெண்ட, வெள்ளி, தங்கம் மற்றும் பல்வேறு உலோகக் கலவைகளும், காம்போசிட் ரெசின் என்னும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பொருட்களும் இருக்கின்றன. பல்லின் தன்மைக்கேற்ப தகுந்த பொருளைக் கொண்டு பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

2)  உடைந்த பற்களும், பற்கூழ் சிகிச்சை முறையும்:
பற்கள் உடைந்தாலோ, பற்களின் மீது அடிப்பட்டாலோ, சில சமயங்களில் அப்பற்கள் நிறம் மாறிக் கொண்டே வரும். பார்ப்பதற்கு விகாரமாகவும், பற்களின் வேர்களைச் சுற்றிக் கிருமிகளும் பரவும். இதனால் உடலின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படலாம்.

2.அ )பற்கூழ சிகிச்சை (ROOT CANAL TREATMENT)
இதற்கு பற்களின் உட்பக்கமாக வெளியே தெரியாமல் ஒரு துவாரம் போட்டு பழுதுபட்ட பற்கூழை (Pulp) எடுத்துவிட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுவோம். அதன் பின் பற்களின் மேல் பரப்பில் உள்ள எனாமல் பகுதியை தேய்த்து எடுத்துவிட்டு மற்ற பற்களின் நிறத்திலேயே பீங்கான மற்றும் பிளாஸ்டிக்கினால் ஒரு உறை செய்து நிரந்தரமாக இருக்கும்படி பொருத்தி விடலாம்.

2.ஆ  ) பற்கள் சிறிதளவே உடைந்திருந்தால் அதில் காம்போசிட் என்ற பொருளை வைத்து நீலநிற ஒளியைப் (Ultra Violet) பாய்ச்சி முழு பல்லாக கொண்டு வரமுடியும். இந்த நவீன சிகிச்சைக்கு Light Cure Treatment என்று பெயர்.

2.இ ) பற்கள் பெரும் பகுதி உடைந்திருந்தாலோ, பல்லை எடுக்கும் நிலை ஏற்பட்டாலோ, பல் எடுத்த இடத்திலேயே எலும்பில் ஒரு துளையிட்டு அந்த எலும்புக்குள் Titanium என்ற உலோகக் கலவையினால் ஆன ஒரு அங்குல (1 or 11/2 inch) நீளமுள்ள ஸ்க்ரூவைப் பொருத்தி விடுவார்கள். பின்னர் அதன் மேல் பீங்கானில் பல்லைப் போல ஒரு உறை செய்து நிரந்தரமாகப் பொருத்தி விடலாம். இதற்கு Implant பற்கள் (Teeth) என்று பெயர்.

3) பல் ஈறு நோய் மற்றும் சிகிச்சை முறை:
பற்களுக்கு இடையில் படியும் காரைகளினால் பற்களின் ஈறுகள் கெட்டு இரத்தம், சீழ் கசியும், வாய் துர்நாற்றம் ஏற்பட காரைகளும் ஒரு காரணம். மேலும், வெற்றிலை பாக்கு போடுவதாலும், புகை பிடிப்பதாலும் பொடி போடுவதாலும், பற்களில் கறை படியும். இதற்கு பற்களை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது Ultrasonic Scaler எனப்படும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியைப் பாதிக்காமல் பற்களில் படிந்துள்ள காரை மற்றும் கறைகளை நீக்கிவிடலாம்.

4) தாடை எலும்பு முறிவும், சிகிச்சையும்:
வாகனங்கள் மூலமாக விபத்து ஏற்படும் போது தாடை எலும்புகள் உடைந்து விடுவதும் உண்டு. உடைந்த தாடை எலும்பில் பற்கள் இருக்கும் போது மேல் பற்களையும், கீழ் பற்களையும் சரியான நிலையில் வைத்து கம்பிகள் மூலம் கட்டி உடைந்த எலும்புகளை சரியான நிலையில் பொருத்திவிடலாம்.

இப்போதுள்ள நவீன சிகிச்சை முறையில் உடைந்த தாடை எலும்புகளில் எவர்சில்வர் தகடுகளைப் பொருத்தி அவைகளை நிரந்தரமாக வைத்து விடுவார்கள். இந்த நவீன சிகிச்சை செய்வதால் உடனேயே வாயை திறந்து பேசவும், சாப்பிடவும் வசதியாக இருக்கும்.

5) வாய் புற்று நோய் மற்றும் சிகிச்சை முறை
வாய் புற்று நோய்க்கு 3 காரணங்கள் உள்ளன. அவையாவன.
SharpTeeth - (கூர்மையான பற்கள்),
Sepsis - (வாயில் சீழ் வடிதல்),
Spiced Food - (கார வகை உணவுகள்),
Syphilis - (பல்வினை நோய்),
Smoking - (புகை பிடித்தல்)

மேற்கூறிய காரணங்களால் வாய்புற்றுநோய் வருவதால் ஒழுங்கான பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வெற்றிலை பாக்கு, புகையிலை தவிர்த்து, துலக்குவதற்கு மிருதுவான பொருட்களை உபயோகிப்பதாலும், அதிக காரவகை உணவுகளை தவிர்ப்பதாலும் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

ஏதாவது ஒரு காரணத்தால் வாயில் புண் ஏற்பட்டால் அந்தப் புண் பத்து நாட்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி அது புற்று நோயின் அறிகுறியா? என்று சோதித்து தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ, கதிர்வீச்சு மூலமாகவோ, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமாகவோ ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம்.

6) ஒழுங்கற்ற பற்களும், பல்சீரமைப்பு சிகிச்சையும்:
குழந்தைப் பருவத்தில் கை சூப்பும் பழக்கத்தினாலும், நாக்கைத் துருத்திக் கொள்வதாலும், கீழுதட்டைக் கடிப்பதாலும், உறங்கும் போது வாயினால் மூச்சுவிடுவதாலும், பற்கள் தூக்கலாகவும், ஏறுமாறாகவும் அமைந்து விடுகின்றன. பற்களின் அமைப்பு ஒழுங்காக, வரிசையாக இல்லாமல் சீர்கெட்டு இருந்தால் முகத்தின் வசீகரம் குறையும்.

இதற்கு ஆர்த்தோடான்டிக் அப்ளையன்ஸ் எனப்படும் கிளிப் போட்டு சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் நிறைய வகைகள் உண்டு.

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும். பற்களையும், ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதய குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல்கலை கழகம் நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. இதில் வெளியான தகவல்கள்: மனிதனின் வாய் பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிருகளும் இருக்கின்றன. இவற்றில் தீமை தரும் நுண்ணுயிர்கள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது. இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Pழசிhலசழஅழயௌ பiபெiஎயடள)என்ற நுண்ணுயிரி ஆகும்.

பற்கள் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

* பற்களுக்கிடையில் அழுக்கு, கறை சேராமலிருக்க தினமும் பற்களுக்கிடையில் நூலை நுழைத்து முன்னும் பின்னும் இழுத்து இழுத்து கிளீன்  பண்ணவேண்டும்.

* ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் நிறைய தண்ணீர் கொண்டு வாயை நன்றாக பலமுறை கொப்பளியுங்கள்.

* சாப்பிட்ட பின் வாயை வெளியே மட்டும் தண்ணீரால் துடைத்துவிட்டு வந்துவிடாதீர்கள். பலபேர் இதைத்தான் செய்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. கேட்டால் வாய் கழுவும் தண்ணீர் உப்பாக இருக்கிறது என்பார்கள். அல்லது சாப்பிட்ட டேஸ்ட் போய்விடுமாம். இந்த இரண்டு பதிலுமே தவறானது.

* நான்கு அல்லது ஐந்து மாதத்துக்கொரு முறை பிரஷ்ஷை மாற்றிவிடுங்கள்.

ஒவ்வொரு பல்லுக்கும் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் ரத்தக்குழாயும், நரம்பும் இருக்கின்றன. ரத்தக்குழாயும், நரம்பும் கடுமையாக பாதிக்கப்பட்டால் தாங்க முடியாத பல்வலி, வீக்கம், பல் கூச்சம், ரத்தம் மற்றும் சீழ் வடிதல் முதலிய நிறைய பிரச்சினைகள் இந்த பாதிக்கப்பட்ட பல்லுக்கு ஏற்படும்.

முன்பெல்லாம் தாங்க முடியாத வலியுடன் மிகமிக கெட்டுப்போன ஒரு பல்லுடன் ஒருவர் டாக்டரிடம் வந்தால் அந்தப் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ரூட் கெனால் தெரப்பி  என்று சொல்லக்கூடிய சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட அந்தப் பல்லை பிடுங்காமல் சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம்.

விபத்தினால் பல் பாதிக்கப்பட்டாலோ, பல் உடைந்து போனாலோ பல்லில் ஓட்டை விழுந்திருந்தாலோ பல்லின் அடிப்பாகத்தில் சீழ் கட்டியிருந்தாலோ மேற்சொன்ன சிகிச்சை கைகொடுக்கும்.

இந்த சிகிச்சை முறையில் பல்லுக்கு அடியிலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பையோ, சீழையோ பல்லுக்கு நடுவில் மெல்லிய ஊசியை நுழைத்து உள்ளே போய் சுத்தம் செய்து எடுத்துவிட்டு பல்லுக்குள் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து விடுவார்கள். ஆனால் இது ஒரே ஒரு தடவையில் முடிகிற காரியமல்ல. சுமார் மூன்று அல்லது நான்கு முறை பல் டாக்டரிடம் சென்றுதான் ஆக வேண்டும்.

இது வரை குறிப்பிட்டுள்ளவை சில நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகளாகும். நமது பற்களைப் பாதுகாத்துக் கொள்வதும், வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது முக்கியக் கடமையாகும். வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்யம் கெடலாம். ஆதலால் ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.

நன்றி

பாட்டியின் - வீட்டு வைத்தியம் - தெரிந்து கொள்வோம் - பழங்கள்

E-mail Print PDF

வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.

வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.

Read more...

Page 7 of 10

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்