Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் இயற்கை வைத்தியம்

மூலிகைகளும் மருத்துவ குணங்களும் - 2

E-mail Print PDF

இஞ்சி-சுக்கு

இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்
இது   பெரிய புராணம் ஏயர்கோன்கலிக்காம நாயனார்  பகுதியில்வரும்
ஒரு பாடல .இது கூறுவது காஞ்சி கோட்டயைப்பற்றி தான் .

இதன் பொருள்  அந்நகரின் உட்புற மதில்களில், பகைவரைத் தாக்குவதற்கு என நாட்டப் பெற்ற எந்திரங்கள் நிரல்படச் சூழ்ந்து இருக்கும். மேகங்கள் வந்து படிந்து சூழ்ந்த வண்ணம் இருப்பன மலை என உயர்ந்த அழகிய மாடங்கள்.என்பதாகும்.

இஞ்சி - மதில். ஞாயில் - மதில் உறுப்பு.
இஞ்சி என்பது மதில் எனப் புரிகிறது .நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை  மதில் போல் இருந்து காப்பதால் இதற்கும் இஞ்சி என பெயர் வந்ததா ?
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஒரு பழைய பழமொழி ! இஞ்சி காய்ந்தால்  சுக்கு ஆகும்

இது பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது.  சுக்கு, மிளகு, திப்பிலி என்பது  ..திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். அதே போல் திரிகடுகம்  எனும் நூல்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்  சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

தமிழ் பெயர்  இஞ்சி  
ஆங்கில பெயர் Ginger
அறிவியல் பெயர் Zinziber officinale


இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும் .வேரில் மஞ்சள் போலவே இருக்கும் .பொங்கலின் பொது இஞ்சி கொத்தும் மஞ்சள் கொத்தையுமே புது பொங்கல் பானையில் கட்டுவார்கள்.

Read more...

கருவுறுதலும் கருவின் வளர்ச்சியும் - Embryo and Fetus - விரிவான விளக்கங்களுடன் - வீடியோக்கள் இணைப்பு

E-mail Print PDF

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின் வளர்ச்சியுடன் இணைந்த புதிய சூழ்நிலைக்கு அப்பெண் தன்னைத் தானே ஆயத்தாமாக்கிக் கொள்வது தாய் சேய் இருவரின் உடல்நலனுக்கும் மிக இன்றியமையாததாகும்.

Read more...

பிரசவமும் குழந்தையின் வளர்ச்சியும் எவ்வாறு நிகழ்கின்றது - சிசேரியன் முறை பிரசவம் இணைப்பு - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

குழந்தை

பிரசவம் என்பது கர்ப்பமுற்ற  பெண்; தன் வயிற்றுக்குள்ளேயே பத்துமாதங்கள் பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை இப்பூவுலகில் பிரசவித்தல் எனப் பொருள்படும். சில சந்தற்பங்களில் ஒரு தாய் ஒன்றிற்கு பேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதும் உண்டு.

ஒரு தாய் தன் யோனிவழியாக குழந்தையை பிரசவித்தல் என்பது மிகவும் வேதனைகளும் சோதனைகளும் நிறைந்த நிகழ்வாகும். "அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்" என்பது பழமொழி. தற்பொழுது வைத்தியசாலைகளில் நவீன வசதிகள் இருப்பதனால் பிரசவத்தின் போது ஏற்படுகின்ற ஆபத்துக்கள் குறைந்துள்ளன.

சாதாரணமாக யோனிவழிப் பிரசவம் (normal Vaginal Delivery) என்பது கருப்பைச் சுருக்கத்துடன் (Uterine Contraction) கருப்பைக் கழுத்து திறக்கப்பட்டு (Cervical dilatation) குழந்தை வெளியே வரும் சாதாரண முறையாகும். பிரசவ குத்து வந்தவுடன் பிரசவ அறைக்குள் கற்பிணியை கூட்டிச் சென்று வைத்தியர், தாதிகளின் உதவியுடன் பிள்ளையை பிறக்க வைப்பது என்பதாகும்.

சில கர்ப்பவதிகளுக்கு பிரசவ குத்து ஆரம்பமாகியும் பிள்ளை பிறப்பதில் தாமதம் ஏற்படுகிகின்றது. சிலருக்கு பிரசவ அறிகுறிகள் தென்பட்ட போதிலும் பிரசவ குத்து குறைவாக இருக்கும். அப்போது பிரசவலி (Oxytocin) எனப்படுகின்ற ஓமோன் வகை மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிரசவ குத்தை உண்டு பண்ணி (Induced Labour) குழந்தையைப் பிறக்க செய்கிறார்கள்.

Read more...

பழங்களும் மருத்துவக் குணங்களும்

E-mail Print PDF

செர்ரி -  அற்புத நெல்லி

செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை.

"பிணிகள் பிடிக்காத செடி" என்றே இதைச் சொல்லாம். மேலும் இதன் அருகில் வந்து ஆடு, மாடுகள் மேய்வதில்லை. போர்ட்டோ ரிகே, செர்ரிபார்படோஸ் செர்ரி என்பன செர்ரிப்பழத்தின் வேறு பெயர்கள். தமிழில் "அற்புத நெல்லி" என்று வழங்கப்படுகிறது. இது புதர்வகைச் செடியாகும்.

நான்கு அடி முதல் ஐந்து அடி உயரம் வரை அடர்ந்து தழைத்து வளரும். இவைகள் கரும்பச்சை நிறத்திலும், பழங்கள் சிறிய ஆப்பிள் வடிவத்திலும் இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இந்தச் செடியை நட்டு ஏழு மாதத்திற்குள் பயன் தரக்கூடியது. பழம் தரக்கூடியது.

ஒரு செடியிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு கூடைகள் பழம் கிடைக்கும். இந்தச் செடியை விவசாயிகள் மட்டுமே வளர்க்க முடியும் என்றில்லை நாமும் நம் வீடுகளில் வளர்த்துச் சிறந்த பலனைக் காணலாம். செர்ரி செடி தாவர இயலில் "மல்பீஜஸியாஸ்" குடும்பத்தைச் சேர்ந்தது.

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

உங்கள் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். செர்ரிப் பழத்தைக் கொண்டு ரசம், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஆகியவை தயாரிக்க முடியும்.

தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும்.

இதுதான் செர்ரிப் பழ ஜூஸ். செர்ரிப் பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிவிட வேண்டும். சம அளவு சர்க்கரை சேர்த்துத் தேவையான விகிதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிட வேண்டும்.

தகுந்த பதத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இதுவே அருமையான செர்ரி ஜாம் ஆகும். ரொட்டித் துண்டுகளை இந்த ஜாமில் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு இந்த ஜாமைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். செர்ரி காய்களை நறுக்கி உப்பில் கலந்து அவைகளை வெயிலில் காய வைக்கவேண்டும்.

மூன்று நாட்கள் இவ்வாறு செய்தபின் அவைகளுடன் இஞ்சிச் சாறு, மஞ்சள் தூள் ஆகியவைகளைப் போட்டுக் குலுக்க வேண்டும்.

அதன்பின் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தாளியுங்கள். அதன்பின் அந்தக் கலவையைப் பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.


 

Read more...

மாதவிடாயின் போது, வெளியேறும் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் எடுக்க முடியும்- ஆய்வு!

E-mail Print PDF

19.03.2011

தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல் எடுத்ததைப் போல, இப்போது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது, வெளியேறும் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் எடுக்க முடியும் என, கண்டறியப்பட்டுள்ளது.

இது போன்று எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை, "லைப் செல் இன்டர்நேஷனல்' என்ற தனியார் நிறுவனம், விற்பனைக்கே வைத்துள்ளது.

வயிற்றில் குழந்தை உருவாகும் போது, அது வளர, தாயின் கர்ப்பப் பைக்கும், குழந்தையின் வயிற்றுக்கும் இணைப்பாக ஒரு கொடி உருவாகும். இது, தொப்புள் கொடி என அழைக்கப்படுகிறது.

இந்த தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்தில், எந்த பாதிப்புக்கும் ஆளாகாத, புதிய வேர் செல்கள் இருக்கும். இந்த வேர் செல்களைக் கொண்டு, புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களைத் தீர்க்கலாம் என, ஆய்ந்தறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது பக்க வாதம், முதுகெலும்பு பாதிப்பு போன்றவற்றுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல் சேகரிக்க என்று வங்கிகள் ஏற்கனவே வந்துவிட்டன.இத்தகைய வேர் செல்க, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தில் இருப்பது தெரிய வந்தது.

இந்த ரத்தத்தை எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில், இதில் உள்ள வேர் செல்கள், வேகமாக பல்கிப் பெருகும் தன்மை கொண்டவையாகவும், தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையதாகவும் இருப்பது தெரிந்தது.

எனவே, இந்த ரத்தத்தைச் சேமித்து வைத்தால், பல நோய்களுக்கு எளிதில் தீர்வு காணலாம் என கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து, மும்பையில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் இந்திரா ஹிந்துஜா என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

அவர், சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளியிடுவதற்காக, இது குறித்து கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.அதில், "கரு உருவாவதை எதிர் பார்த்து, கர்ப்பப் பையில் மாதா மாதம் உருவாகும் கர்ப்பப்பை உள் படிமங்கள், கரு உருவாகாமல் போகும் போது, தானாகவே ரத்தத்துடன் வெளியேறி விடுகின்றன.

இந்த உள் படிமங்களில், ஏராளமான வேர் செல்கள் உள்ளன. இவை, கருவில் உள்ள வேர் செல்களை ஒத்திருக்கின்றன. இவற்றைப் பதப்படுத்தி, வேர் செல்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டால், பல நோய்களுக்குத் தீர்வு காணலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான், தற்போது, லைப் செல் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், "லைப் செல் பெமே ' என்ற பெயரில், மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லை, அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை அறிமுகப்படுத்தியவரும், வேர் செல் மாற்று சிகிச்சையால், ரத்தப் புற்றுநோயிலிருந்து முற்றிலும் வெளிவந்தருமான மாடல் அழகி லிசா ரே கூறுகையில், "வேர் செல் மாற்று சிகிச்சை செய்து கொண்டதன் மூலம், நோயிலிருந்து முற்றிலும் வெளி வந்த தன் முழு உதாரணமாக நான் திகழ்கிறேன்.

பெண்கள், மேலும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ, மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் வேர் செல்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன' என்றார்.மும்பையில் வில்லே பார்லே, முலுண்ட், தாதர் ஆகிய இடங்களில் இதற்கான வங்கி கிளைகளை லைப் செல் இன்டர்நேஷனல் திறந்துள்ளது.

தீர்வு: மாத விலக்கின் இரண்டாம் நாளில், பிறப்புறுப்பில், "மென்ஸ்ட்ருவல் கப்' செலுத்தி, ரத்தம் சேகரிக்கப்படும். பின், இந்த ரத்தத்தில் கிருமிகள் நீக்கப்பட்டு, வேர் செல்கள் பிரிக்கப்படும் . பிரித்தெடுக்கப்பட்ட வேர் செல், திரவ நைட்ரஜனில், மைனஸ் 150 டிகிரி செல்ஷியசில் பாதுகாக்கப்படும். இதைக் கொண்டு மூட்டு வலி, சில வகையான இதய நோய்களுக்கு தீர்வு காணலா

Page 9 of 10

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்