Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும் சமயநெறி

பறாளை சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான - ஸ்கந்த சஷ்டி நிகழ்வுகள் - 20.10.2017

E-mail Print PDF

Image may contain: one or more people, people standing and indoor

பறாளை முருகன் தேவஸ்தான ஸ்கந்த சஷ்டி விழா நிகழ்வுகள் பார்வையிட thanam.kanaga முகநூலை பார்வையிடவும்


அட்ஷய திருதியையும் அதன் சிறப்பும் அறிந்து கொள்வோம் - 28.04.2017

E-mail Print PDF

Image may contain: 8 people, indoor

ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை திதியை அடுத்து மூன்றாவது நாளில் வரும் திதியை ”திருதியை” என்னும் பெயர் கொண்டு ஜோதிடம் அழைக்கின்றது. இத் திருநாளானது பேறு பதினாறும் வாரிவழங்கும் திருமகளுக்குரிய நன்நாளாக போற்றப்பெறுகின்றது.

அதிலும் தமிழ் சித்திரை மாத அமாவாசையை அடுத்து வளர் பிறையில் அமையும் திதியானது மகிமை மிக்க திதியாக அமைவதால் ”அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்)” என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

அட்க்ஷய திருதியை தினத்தை இந்து சமயத்தவர்களும், சமண சமயத்தவர்களும் புனித நன்நாளாக கொண்டாடுகின்றார்கள். சிறப்பு மிக்க ”அட்சய திருதியை” இவ் வருடம் தமிழுக்கு சித்திரை மாதம் 16 ஆம் தேகதி (அதாவது 28.04.2017 அன்று) அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

”சயம்” என்றால் தேய்தல் என்று பொருள். ஆனால் ”அட்சயம்” என்பது வளர்தல், பெருகுதல், ஓங்குதல் என்னும் எதிர்மறை பொருளை கொடுக்கின்றது இத் தினத்தில் நாம் செய்யும் எல்லா செயல்களும் பல்கிப் பெருகும் என்பது ஐதீகம்.

பிறருக்கு ஒருவன் குடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கின்றான் என்பது ரமணர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்களின் தேவை அறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள் பல மடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்பக் கிடைக்கும். மேலும் மேலும் தான தர்மங்கள் செய்யக் கூடிய அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தும். அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள் நம்க்கு புண்ணியத்தை சேர்க்கும். இந் நாளில் சுயநலத்துடன் செய்கின்ற காரியத்தை விட பொது நலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும்.

தங்கத்திற்கும் அட்சய திருதியைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவையாவும் அன்றைய தினம் செய்யும் செயல்கள், ஆரம்பிக்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும், குறையாது பெருகும் என்ற நம்பிக்கையில் சுயநலத்துடன் உருவாக்கப் பெற்றது.

இத் தினம் பற்றி புராணங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் பல விடயங்கள் சொல்லப்பெற்றுள்ளன.

பகவான் கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர் வறுமையில் வாடி கொண்டிருக்கையில் கிருஷ்ணரை சந்திப்பதற்காக; வெறும் கையுடன் செல்லாது, அவர் விரும்பி உண்ணும் ஒரு பிடி அவலை தன் மேலாடையில் முடிந்து கொண்டு கிருஷ்ணரிடம் சென்றார். அவரைக் கண்டதும் நன்கு உபசரித்த கிருஷ்ணபவான் குசேலர் அன்போடு கொண்டுவந்த அவலை உண்ட மகிழ்ச்சியில் “அட்சயம்” உண்டாகட்டும் என வாழ்த்தி குசேலரை வழி அனுப்பினார்.

அதே கணத்தில் குசேலரின் குடிசை மாடமாளிகையாக மாறியது. அஷ்ட ஐஸ்வரியங்களும் அவரது வீட்டில் குடி கொள்கின்றன. கிருஷ்ணர் மேலும் ஒரு வாய் அவல் சாப்பிட அவலை எடுக்கும் போது ஒரு வாய் சாப்பிட்டதுமே குசேலரின் வறுமை நீங்கி அஷ்ட ஐவரியங்களும் அவர் வீட்டில் நிறைந்து விட்டன இன்னும் ஒரு வாய் சாப்பிட்டால் மகாலட்சுமி ஆகிய நானே அவர் வீட்டிற்கு போக வேண்டி வந்திடுமே என எண்ணித்தான் தடுத்தேன் என ருக்குமணி கூறினாள்

இந்த அற்புதம் நிகழ்ந்தது அட்சய திருதியைல்தான் என்பது குறிப்பிடத் தக்கது. அதுபோல் கௌரவர் சபையில் திரௌபதையின் துயிலுரியப் பட்டபோது ஆடைகளை அள்ளி வீசி கண்ணன் அருள் பாலித்ததும் அட்சயதிதி.தினத்தில் என வியாச புராணம் கூறுகின்றது.

தசாவதாரத்தில் பரசுராமர் அவதரித்ததும், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னப் பிச்சை அளித்த நாளும், ஐஸ்வரிய லட்சுமி அவதரித்த நாளும், சங்கநிதி – பதுமநிதியை குபேரன் பெற்ற நாளும் மகாவிஷ்ணுவின் வலது மார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாளும் “அட்சயதிருதியை” நாளில்தான்.

திருதியை திதி எவ்வாறு கணக்கிடப் பெறுகின்றது?:

அண்டத்தில் லட்சகணக்கான விண்மீன் குடும்பங்கள் (நட்சத்திரங்கள்) உள்ளன. அவற்றுள் எம்மைச் சூழ்ந்துள்ள சூரிய-விண்மீன் குடும்பமும் ஒன்றாகும். நாம் வாழும் பூமி உள்ளடங்கலாக பல கிரகங்களும், அவற்றின் துணைக் கிரகங்களும் உள்ளன. அவை யாவும் சூரியனை மையமாக கொண்டு அதனைச் சுற்றி் வலம் வருகின்றன. இந்த கிரகங்களில்; பூமிக்கு சந்திரன் என்னும் ஒரு துணைக்கோளும்; மற்றைய கிரகங்களின் துணைக் கோழ்களும் அடங்கும். கிரகங்களும், துணைக் கிரகங்களும் தானாக ஒளிர்வதில்லை. சூரியன் போன்ற விண்மீன்களே ஒளிர்வன.

இந்த கிரகங்களும், விண்மீனாகிய சூரியனும் தம்மிடையே உள்ள ஈர்ப்பு (என்னும் பாச) விசையினால் இணைக்கப்பெற்று ஒரு குடும்பம் போல் அண்ட வெளியில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இவற்றுள் பூமியினுடைய துணைக் கிரகமான சந்திரனின் அசைவு பூமியில் உள்ள உயிர்கள் மீது பல தாக்கங்களை ஏற்படுத்துவதால்; சோதிட சாஸ்திரத்தில் சந்திரன் பற்றி விஷேஷமாக கூறப்பெற்றுள்ளது. சந்திரனின் சுற்றினால் ஏற்படும் (கனத்த நாட்கள் என கூறப்பெறும்) அட்டமி, அமாவாசை, பௌர்ணமி போன்ற திதி தினங்களில் பூமியில் வாழும் மக்களில் சித்தப் பிரமை, விஷக் கடி, வலிப்பு உள்ளவர்கள் சீற்றம் அடைவதை அவதானிக்க முடியும்.

பூமியின் துணைக் கிரகமான சந்திரன்; தானும் சுற்றிக் கொண்டு தாய் கிரகமான பூமியையும் சுற்றி வருவதுடன்; பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருகின்றமை நிரூபிக்கப் பெற்ற உண்மை. அதன் போது ஒரு சந்தற்பத்தில் சந்திரன்; சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலும்; பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலும் குறிப்பிட்ட கால இடையில் ஒரு நேர்கோட்டில் மாறிமாறி வருகின்றன.

இதனால் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது; சூரியனின் பக்கம் இருக்கும் பகுதி வெளிச்சமாகவும்; பூமியின் பக்கம் இருக்கும் பகுதி இருட்டாகவும் இருக்கும். அதனால் பூமியில் இருப்போருக்கு இருட்டாகவும் தெரிகின்றது. பூமியில் இருட்டாக இருக்கும் தினம் அமாவாசை என்றும், சூரியனின் ஒளியைப் பெற்று இரவில் ஒளிரும் நாள் பௌர்ணமி என்றும் அழைக்கப்பெறுகின்றது.

விளக்கமாக கூறுவதாயின்; அமாவாசை தினத்தில் (அமாந்தத்தில்) சந்திரன்; சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக ("0" டிகிரியில்) நின்ற பின் பூமியைச் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது. இவ்வாறு தினமும் சூரியனைப் பிரிந்து 12 வாகைகள் செல்கின்றன. பூமியைச் சுற்றியுள்ள 360 பாகைகளையும் தினம் 12 பாகைகள் வீதம் கடக்க ஒரு மாதம் ஆகின்றது. இவ்வாறு பிரிக்கப்பெறும் 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.

சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அமாவாசையில் இருந்து பூரணை வரையான (பூர்வ பக்க பிரதமை முதல் பூரணை வரையான (வளர்பிறை காலத்தில் வரும்) 15 திதிகளும் சுக்கில பட்சத் திதிகள் எனவும்; பௌர்ணமி முதல் (தேய் பிறை) காலத்தில் அபரபக்க பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும்.

சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார். அன்று முதல் திதியாகிய "பிரதமையும்". மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியையும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது.

சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள்.

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என புராணங்கள் கூறுகின்றன.

நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு - திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் - மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும்.

அன்னதானத்தால் - விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.

தானதர்மங்கள் செய்தால் - எம வேதனை கிடையாது.

நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் - மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.

ஆடைகள் தானம் செய்தால் - நோய்கள் நீங்கும்

பழங்கள் தானம் செய்தால் - உயர் பதவிகள் கிடைக்கும்.

மோர், பானகம் அளித்தால் - கல்வி நன்கு வளரும்.

தானியங்கள் தானம் கொடுத்தால் - அகால மரணம் ஏற்படாது.

தயிர் சாதம் தானம் அளித்தால் - பாவ விமோசனம் ஏற்படும்.

முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் - வறுமை நீங்கும்.

அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் - நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு முறையும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ / இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

”தானதர்மம் செய்து வாழ்கையில் உயர்ச்சி பெறுவோம்”

தீபாவளித் திருநாளும் அதன் மகிமையும் - நரகாசுர வதம் இணைப்பு - 18.10.2017

E-mail Print PDF

தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் (அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பெறும்)  இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

Read more...

மாசி மஹா மகமும் அதன் சிறப்பும்

E-mail Print PDF

Image may contain: one or more people and outdoor

ஆண்டு தோறும் மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் ”மாசி மகம்” எனும் புண்ணியம் நிறைந்த திருநாளாக அமைவதால்; இந்துக்கள் தம் துன்பங்கள் நீங்கவும், பிறவிப் பிணி அற்றுப் போகவும், மழலைச் செல்வம் வேண்டியும் இறைவனை துதிக்கும் பொன்நாளாக அமைந்துள்ளது. இத் திருநாள் இவ் வருடம் 10.03.2017 அன்று அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது

ஒவ்வொரு வருடமும் வரும் ”மாசி மகம்” மகத்துவம் நிறைந்த விசேஷமான நாளாக இருந்தாலும்; இத் தினத்தில் குரு பகவான் சந்திரனுடன் இணைந்து சிம்மராசியில் அமையும் தினம் ”மஹாமகம்” என்னும் அதிவிசேஷமான மகத்துவ நிறைந்த தினமாக புராணங்கள் கூறுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவானும், சூரியபகவானும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வதே மகாமகம் என கொண்டாடப்படுகிறது.

ஜோதிட ரீதியாக கூறுவதாயின்; குருபகவான் சந்திரனுடன் சிங்கராசியில் இணையும் நிகழ்வானது (குருவின் ராசிச் சக்கர சஞ்சாரம் சுமார் 12 வருட காலமாக இருப்பதனால்) பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே நிகழுகின்றது. சில தருணங்களில் 11 வருடங்களிலேயே மகாமகம் வருவதும் உண்டு. அதை இளைய ”மாமாமங்கம்” என்பார்கள்

இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். உயர்ந்தவன்- தாழ்ந்த வன், ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

புனித நீர்நிலைகளில் மக நீராடலுக்கு மிகவும் புகழ்பெற்றது கும்பகோணம் மகாமகக் குளம். இத்திருக்குளத்தில் இருபது புனித தீர்த்த  தேவதைகளின் தீர்த்த கிணறுகள் உள்ளன. அவை அனைத்திலும்  மாசிமக நட்சத்திரத்தன்று, உடலுக்கு வலிமையும்  புனிதத்தையும் தரக்கூடிய அற்புதமான காந்த சக்தி இயற்கையாகவே தோன்றுவதாக ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்நாளில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் இக்குளத்திற்கு வந்து புனித நீராடி  செல்வதாக நம்பப்படுகிறது இவ் அரிய நிகழ்வு இவ்வருடம் 10.03.2017 ல் நிகழ உள்ளதாக ஜோதிடம் கணிக்கின்றது.

மேலும்,  புண்ணிய நதிகள் அனைத்தும் அங்கு எழுந்தருள்வதாக ஐதீகம். மக நட்சத்திரத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி, குளத்தை மூன்று முறை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் கிட்டும்.  

இக்குளக்கரையில் வேதவிற்பன்னர் உதவியுடன் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிட்டும். இதனால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.

மக நட்சத்திரத்தன்று இங்கு தீர்த்தவாரி நடைபெறும். குடந்தைத் திருத்தலத்தில் அருள்புரியும் எல்லா சிவாலயங்களிலிருந்தும் சுவாமியின் உற்சவத் திருமேனிகள் ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு வருகை தந்து, சுபஓரையில் வழிபாட்டுடன் தீர்த்தவாரி காண்பார்கள். இதேபோல் அங்குள்ள பெருமாள் கோவில் களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனி களும் சக்கரப் படித்துறைக்கு வந்துசேர, தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடைபெறும்.  அந்த சுபவேளையில் பக்தர் பெருமக்கள் தீர்த்த வாரியில் கலந்துகொண்டு நீராடி புனிதம் பெறுவார்கள்.

கும்பகோணம் மகா மகக் குளக்கரைக்கு புனித நீராட வர இயலாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகில் ஓடும் புனித நதி, குளங்களில் நீராடலாம். அதற்கும் வசதி இல்லாதவர்கள் தங்கள் இல்லத்தில் வடக்கு திசை நோக்கி நின்று குளித்தாலும் புனிதம் கிட்டும் என்று கூறப்படுகிறது

கும்பகோணத்தில் எழுந்தருளி இருக்கும் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளமாக இருக்கும் மகாமக குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகத் திருவிழா நடக்கிறது. இந்நாளில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் இக்குளத்திற்கு வந்து புனித நீராடி  செல்வதாக நம்பப்படுகிறது

தேவர்கள் மட்டுமல்லாது கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னியர் ரூபமாக வந்து மகாமகக்குளத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம்.

மகாமகக் குளத்தை சுற்றிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என 16 சிவலிங்கங்கள் மற்றும் 21 கிணறுகள் அமைந்துள்ளன.

குளத்தை சுற்றியிருக்கும் 21கிணறுகளில் வாயு தீர்த்தம்,கங்கா தீர்த்தம், பிரும்ம தீர்த்தம், யமுனா தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசான தீர்த்தம், நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவிரி தீர்த்தம், யம தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், பயோஷினி தீர்த்தம், தேவ தீர்த்தம் சிவன், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், கன்யா தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருக்கின்றன.

இவற்றில் நீராடுவது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. மாசி மகக் குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குளங்களுள் இதுவும் ஒன்றாகும்.  

இந்த பிறவிப் பெருங்கடலை கடந்து, பிறவா வரம் வேண்டி இறைவனின் அருட்கடலை நாடும் நாளாகவும் போற்றப்பெறுகின்றது. இந் நன்நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். புண்ணிய ஸ்தலங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.

இந்த உலகை படைத்து காத்து ரட்சிக்கும் அம்பிகை அவதாரம் செய்ததால் மகத்துப் பெண் ஜெகத்தை ஆளும் என்ற ஜோதிட வாக்கு ஏற்பட்டது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக் கொணர்ந்த நாள் மாசி மகமாகும். தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் இந்நாள்தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மிகப் பெரிய சிறப்பாகும்.

கேது பகவான் ஞானத்தை தரக்கூடியவர். ஆகையால் இந்நாளில் கல்வி சம்பந்தமான பணி, பயிற்சிகளை தொடங்கலாம். காலையில் எழுந்தவுடன் விநாயகப் பெருமானை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு, ஞானம் விருத்தி பெறும். மந்திர உபதேசம் பெறுவது மிகவும் சிறப்பானது. தேவாரம், திருவாசகம், காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம், ராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், விஷ்ணு புராணம் போன்ற புத்தகங்களை படிப்பது மோட்ச பலன்களை அளிக்கும்.

நம் முன்னோர்கள், தாய், தந்தையரை நினைத்து அன்னதானம், ஆடை, போர்வை தானம் தரலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் ஏற்படும். பூமி யோகம் உண்டாகும். மாசி மாதத்தில் புது வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். இதனால் சகல யோகங்களும் விருத்தியாகும். வாடகை வீடு மாறவும் உகந்த நாள். மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிட்டும். திருச்செந்தூரில் மாசி மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். கடலூர் தேவானம்பட்டினம் கடற்கரையில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

மாசி மகத்தன்று சில அற்புத நிகழ்வுகள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
மயிலாடுதுறைக்கு  அருகிலுள்ள திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.

இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.

கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்.

அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள்.

அப்போது, "திருநல்லூர்  கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். அவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.

தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். அதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமைய வளை வளர்க்க வேண்டும். அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவனும் அவன் கேட்டபடி அருளினார்.

அந்த வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான்தட்சன்.

மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது. அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.

வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.


மாசி மாதமும் அதன் சிறப்பும்
1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

சுபம்3341.09.03.2017

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை 17.07.2015 - தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்

E-mail Print PDF

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்து மக்களால் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப் பெறும் ஒரு திருநாளாகும். தனித்துவமான கலாசாரங்கள் பல கொண்ட யாழ்ப்பாண இந்து மக்களினால் இத் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது. ஆடிப் பிறப்பு திருநாள் இவ் வருடம் 17.07.2015 ம் திகதி அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

ஆடி மாதம்.தெய்வீகப் பண்டிகைகள்  தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்பெறுகின்றது. அத்துடன் ஆடி மாதத்தில் பூதேவி பூமியில் அம்மனாக அவதரிதரித்தார் என்றும், பார்வதி மேற்கொண்ட தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என்றும், புராணங்கள் கூறுகின்றன. அத்துடன்; ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

ஆடி மாதத்தில் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன ஆடிப் பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும்,  எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற் கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத் தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

இந்து மக்கள் ஒரு வருடத்தை இரு அயனங்களாக வகுத்து கணக்கிடுகின்றனர். ஒருமுறை சூரியன் வடதிசை நோக்கிச் நகர ஆரம்பிக்கும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாத காலம் ”உத்தராயணம்” என்றும்; சூரியன் தென் திசை நோக்கி சஞ்சரிக்க ஆரம்பிக்கும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் ”தட்சணாயணம்” என்றும் அழைக்கின்றார்கள்.

தேவர்களுக்கு ஒரு நாள் என்பது பூமியில் வாழும் எமக்கு ஒரு வருடமாகும். விளக்கமாக கூறுவதாயின் எமது ஒருமாத காலம் தேவர்களுக்கு இரண்டு மணித்தியாலங்களாகும். (தேவர்களுக்கு 24 மணித்தியாலயங்கள் மானிடர்க்கு ஒரு வருடமாகும். என்பதனால்)

உத்தராயண காலம் தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகவும்; தட்சணாயண காலம் இராப்பொழுதாகவும் கணிக்கப் பெறுகின்றது. உத்தராயண காலம் சூடான காலமாகவும் தட்சணாயண காலம் குளிரான காலமாகவும் இருப்பதனால் உத்தராயண கால ஆரம்ப தினமான தை முதலாம் நாள் தைப்பொங்கல் பொங்கி சூரியனுக்கு விருந்து படைக்கின்றோம்.

அடுத்து வரும் தட்சணாயண காலம் தேவர்களுக்கு இராப்பொழுது ஆரம்பமாகின்றது. அது ஆடி முதலாம் நாள் அவர்களுக்கு மாலைநேரமாக அமைவதால் அவர்களுடன் நாமும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்கின்றோம். அத்துடன் விசேட வழிபாடு செய்தலும், உற்றார், உறவினர்களுக்கும், மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்க்கும் இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் இப் பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும்.

இது இவ்வாறிருக்க முதல் பாதி ஆண்டு தேவர்களுக்குரியதென்றும் அடுத்த பாதி ஆண்டு பிதிர்களுக்கு உரியதென்றும் கூறப்படும் ஒரு ஐதீகமும் இருப்பதன் காரணத்தால் இனிப்பான கூழும் கொழுக்கட்டையினையும் சமைத்து பிதிர்களுக்கு படைத்தனர் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.

ஆடிமாதத்தின் சிறப்பை அறிந்த பண்டைய தமிழ் இந்து மூத்த குடியினர் கொண்டாடியதாக வரலாறுகள் கூறுகின்றன.ஆடிப்பிறப்பினை ஒர் விஷேட தினமாக கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் தற்பொழுதும் உள்ளனர். பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டு வருவது அவர்களின் தமிழ் இந்து கலாச்சார பண்பாட்டை எடுதியம்புவனவாக அமைகின்றது.

இந்திய தமிழ் இந்துக்கள்; ஆடி மாதம் முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ”ஆடிச் சீர்” செய்து; பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ”ஆடிப் பால்” என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து மாப்பிளையை  மட்டும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பி விட்டு, பெண்ணைத்  தாய் வீட்டிலேயே ஆடி மாதம் முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

அதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதானாலும், சித்திரை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் (சித்திரையில் புத்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் குடும்பம் நாசம் என) ஒரு ஐதீகம் இருப்பதால் அவ்வாறான வழக்கத்தை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.

ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இந்த கட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் "ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி” என்பார்கள்.

திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்” என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.

திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

ஆடி மாதப் பழமொழிகள் பல. "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்.'

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

சேலம் ஏழு பேட்டை களில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ் வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவா கும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத வித மாக செருப்படித் திரு விழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார் கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள் ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமி யும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும். பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறி களால் அலங்காரம் செய்வர். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார் கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து, வரும் பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும், மற்ற தமிழகப் பகுதிகளில் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

செஞ்சிக் கோட்டையருகேயுள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள். அன்று மாலை அம்மன் புற்றுக் கோவிலிலிருந்து  புறப்பட்டு திருக்கோவிலுக்கு எழுந்தரு ளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை அம்மன் பூங்கரக வடிவில் உலா வருவாள். ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

அருகேயுள்ள பெரிய சடையம்மன் ஆலயத் திலும் சின்ன சடையம்மன் ஆலயத்திலும் பக்தர்கள் வேல் குத்தியும் எலுமிச்சைப் பழங்களை ஊசியில் குத்தியும் பிரார்த்தனை நிறைவேற்றுவர்.

ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே" என்ற பாடலும் தான்.

ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் முற்காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படிக் கொண்டாடப் பெற்றது என்பதனையும், ஆடிப்பிறப்பிற்கு முதல் நாள் சிறுவர்கள் கொள்ளும் உற்சாகத்தினையும், சந்தோசத்தையும் தம்மையும் ஒரு சிறுவனாக பாவனை செய்து பாடிய பாடல் பிரபல்யமானது.


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

எது எப்படியோ உற்று நோக்கினால் யாழ்ப்பாணத்தில் ஆடிமாதம் என்பது ஒரு மகிழ்ச்சியானதான மாதமாகவே அமைகின்றது. யாழ்ப்பாணத்தின் மக்கள் விழா எனக்கருதக்கூடிய நல்லூர் கந்தசுவாமி கோவில் பேருட்சவமும், பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய மஹோற்சவமும் ஆடி மாதத்தினை கருவாக வைத்து இடம்பெறுவதால்; யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய மக்களில் அனேகமானோர் ஒன்று கூடும் மாதமாகவும் அமைந்து விடுகின்றது. அதனால் நவீன காலத்திலும்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான ஒர் மாதமாக அமைகின்றது.

ஆடிக் கூழ் சமைப்போம் வாரீர்...

ஒரு கைப்பிடி (சிறங்கை) வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது
ஒரு பேணி - பச்சரிசி மா
பாதித் தேங்காய் திருவி பாலாக
பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5  சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

செய்கை முறை:

முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச் சொட்டுக்களையும் அவிய விடவும். தேங்காய்ச் சொட்டுக்கும், பயறுக்கும் மேலாக அளவில் தண்ணீர் நின்றால் போதுமானது. (முதலில் அடுப்பை பத்த வைக்கவும்)

இன்னொரு பாத்திரத்தில் பாதித் தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.

பயறும், தேங்காய்ச் சொட்டும் அவிந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

நம்ம ஆடிக்கூழ் தயார்...

விநாயகர் புராணம் பகுதி -21-26

E-mail Print PDF

விநாயகர் புராணம் பகுதி -21-26
தம்பி! நீ போய்விட்ட பிறகு நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனால், உன்னைக் கொன்றவர்களை பழிவாங்காமல், நான் மடிந்தால், உன் ஆத்மா சாந்தி பெறாது. இப்போதே புறப்படுகிறேன்! உன் சிரமறுத்தவனின் சிரத்தை பதிலுக்கு அறுத்து, உனக்கு படையலிட்ட பிறகே உன்னை வந்தடைவேன், என முழங்கினான்.

தம்பியைக் கொன்ற மகோற்கடரை பழிக்கு பழி வாங்க பெரும்படையுடன் புறப்பட்டான். இதையெல்லாம் மகோற்கடர் அறிந்தே இருந்தார். நராந்தகனை விட பத்தாயிரம் மடங்கு பலம் வாய்ந்த தேவாந்தகனை எப்படி அழிக்கப் போகிறோம் என காசிராஜன் கவலையில் மூழ்கியிருந்தான்.

அவனைத் தேற்றிய அவனது மனைவி, மகோற்கடர் வந்த பிறகு, நமக்கு தோல்வி என்பதே ஏற்படவில்லை. நீங்கள் அவரையே சரணடையுங்கள், என்றாள். அதன்படி, காசிராஜனும் மகோற்கடரை வணங்கி நிற்க, சித்தி, புத்தியர் அவனை ஆசிர்வதித்து, இம்முறை எங்கள் கணவருடன் நாங்களும் போருக்குச் செல்கிறோம். பெண்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை, என்றனர்.

மகோற்கடர் தனக்கு வாய்த்த வீர மனைவியர் கண்டு ஆனந்தம் கொண்டார். இருப்பினும், போர்க்களத்திற்கு வரத்தேவையில்லையே என்றார். சித்தி, புத்தியரோ அவரது பாதத்தில் விழுந்து, கணவருக்கு ஒரு துன்பம் வந்தால், மனைவி அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல! இவ்வளவு நாளும் தாங்கள் போரிட்டவர்கள் எல்லாம் வலிமையற்ற கோழைகள். இப்போது வரும் தேவாந்தகனும் அப்படிப்பட்டவனே! இருப்பினும், அவனது தந்தை ரவுத்திரகேது மாயாஜாலம் தெரிந்தவன். மாயத்தை மாயத்தாலேயே வெல்ல முடியும், என்றனர்.

மகோற்கடரும் அவர்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். சித்திதேவி தனக்கு அடங்கிய அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அஷ்டமாசித்தியரை வரவழைத்தாள்.

தேவியரே! தாங்கள் எட்டுவித சக்திகளாக இருந்து மாயங்கள் புரிந்து தேவாந்தகனை வெற்றி கொள்ள வேண்டும், என்றாள். அந்த சக்திகள் ஆயுதம் தாங்கி போர்க்களத்தில் அணிவகுத்ததுடன், தங்களுக்கு கீழ் ஏராளமான வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கினர்.

சித்த, புத்தி புடைசூழ சிங்க வாகனத்தில் மகோற்கடரும் போர்க்களத்தில் புகுந்தார். தேவாந்தகனும் தனது அசுரப்படையுடன் வந்து சேர்ந்தான். பெரும் சண்டை நடந்தது. எட்டுவகை சக்திகளின் மத்தியிலும் புகுந்து போரிட்டது அசுரப்படை. தேவாந்தகனின் உக்கிரம் வாய்ந்த அம்புகளின் வலிமை தாங்காமல், மகோற்கடரின் படை சற்று பின்வாங்கத்தான் செய்தது,

இந்நேரத்தில் புத்திதேவி தன் புத்தியைப் பயன்படுத்தினாள். தனது உடலில் இருந்து பவுத்தேவி என்ற பூதப்பெண்ணை உருவாக்கி, தேவாந்தகனின் படையினரை விழுங்கி விடுமாறு உத்தரவிட்டாள்.
பவுத்தேவி ஆக்ரோஷமாகச் சென்று, அசுரப்படையினரைப் பிடித்து குவியல் குவியலாக வாயில் போட்டு விழுங்கினாள். அவளது கையில் தேவாந்தகனும் சிக்கினான். அவனையும் பிடித்து வாயில் போட்டு விழுங்கிவிட்டாள் பவுத்தேவி.

அவ்வளவு தான்! எஞ்சியிருந்தவர்கள் தப்பியோடினர். என்ன ஆச்சரியம்! தன் மாயாஜால வல்லமையால், தேவாந்தகன் அவளது காது வழியாக வெளியில் பாய்ந்து தப்பி ஓடினான். நேராக, தன் தந்தை ரவுத்திரகேதுவை

சரணடைந்தான். பதறி ஓடி வந்த தந்தையிடம், தம்பி இறந்து போனதையும், அவனைக் கொன்ற மகோற்கடரை அழிக்கச் சென்று தோற்று திரும்பியதையும் சொல்லி புலம்பினான்.

ரவுத்திரகேது இளையமகனின் மறைவுக்காக வருந்தினார். தேவாந்தகனிடம், சரி..சரி.. நடந்ததை நினைத்து வருந்துவதில் பலனில்லை. நீ வெற்றி பெற தகுந்த உபாயத்தை நான் சொல்கிறேன். இன்றிரவு அறுகோண வடிவ குண்டம் அமைத்து யாகம் செய்.  நான் சொல்லும் மந்திரங்களைச் சொல். யாக குண்டத்தில் இருந்து ஒரு கருப்பு குதிரை வெளியே வரும். அதில், அமர்ந்து போரிட்டால் உன்னை வெல்ல யாராலும் முடியாது, என்றார்.

தந்தையின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக யாகம் செய்தான் தேவாந்தகன். அதிகாலை வேளையில் அந்த குதிரை வெளிப்பட்டது. அதில் ஏறியமர்ந்த தேவாந்தகன், மிகுந்த தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் போர்க்களத்தில் புகுந்தான்.

சித்தி, புத்தியரும் தங்கள் சக்தி படையையும், பவுத்தேவி தலைமையில் மற்றொரு படையையும் நிறுத்தியிருந்தனர். அந்தப் படையை அழிக்க, தேவாந்தகன் ஒரு உபாயம் செய்தான். தன் மானசீக சக்தியால், யாரும் அறியாமல் போர்க்களத்தின் ஒரு ஓரத்தில் யாக குண்டம் ஒன்றை வரவழைத்தான். மனதுக்குள் சில மந்திரங்களை ஓதினான். யாக குண்டத்தில் தானாகவே தீப்பற்றியது. அந்த வேள்வித்தீயில் இருந்து ஒரு பெண் பூதம் புறப்பட்டு வந்து, தேவாந்தகன் முன்னால் நின்றது.

எஜமானரே! ஏன் அழைத்தீர்! எனக்கு பசி வாட்டுகிறது. உடனே உணவிடும், என்றது.  தேவாந்தகன் சிரித்தபடியே, பூதமே! இதோ என் எதிரே நிற்கும் மகோற்கடரின் படையிலுள்ள சக்திகளையும், அவர்களோடு நிற்கும் பெண் பூதப் படையிலுள்ள ஒருவர் விடாமல் சாப்பிட்டு உன் பசியைப் போக்கிக் கொள், என்றான்.

அந்த பூதம் மிகுந்த மகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கியது. ஆனால், புத்திதேவி உருவாக்கிய பவுத்தேவி, அந்த பெண் பூதத்தை மடக்கி விட்டாள். அதனுடன் உக்கிரமாக சண்டையிட்டு, அந்த பூதத்தை கொன்று வீசினாள். பெரும் ஆத்திரமடைந்த தேவாந்தகன், மகோற்கடரின் படையைக் கட்டிப் போடும் மோகனாஸ்திரத்தை எய்தான். அது அவனுக்கு பலன் தந்தது.

மகோற்கடரின் படைகள் அந்த அஸ்திரத்துக்கு மயங்கி சாய்ந்தன. காசிராஜன் கலங்கி விட்டான். மகோற்கடரே! படைகள் எல்லாம் மயங்கி விட்டன. காசிநகரம் என்னாகுமோ? எனக் கதறினான்.

விநாயகர் புராணம் பகுதி-22
கடவுளே அருகில் இருந்தாலும் கூட பயம் என்ற தொற்று வியாதி மட்டும் ஏனோ மனிதனை விட்டு மறைய மறுக்கிறது. மனித இனத்தின் ஸ்பாவம் அப்படி? என்ன நடந்தாலும் நடக்கட்டுமே! இறைவன் நம் அருகில் இருக்கிறான் என்ற எண்ணம் ஏனோ மனிதனின் மனதுக்குள் நிரந்தரமாகத் தங்கிக் கொள்ள மறுக்கிறது.

காசிராஜனின் அருகில் சாட்சாத் விநாயகப்பெருமானே பூலோக அவதாரம் எடுத்து அருகில் இருந்தபோதும் கூட, அவன் கலங்கி நின்றான். மகோற்கடர் அவனைத் தேற்றினார். காசிராஜா! பைத்தியக்காரன் போல உயிர் பயத்தில் பிதற்றுகிறாயே! உன் தேச மக்கள் அழிந்து போகாத வரம் பெற்று வந்தவர்களா என்ன! ஆனால், நம் எதிரில் நிற்கும் தேவாந்தகன், ஐம்புலன்களையும் அடக்கி, சிவனை எண்ணி தவமிருந்து, அவரிடம் அழியா வரம் பெற்றிருக்கிறான்.

அது எப்படிப்பட்ட வரம் என்பது உனக்குத் தெரியுமா? இரவிலும், பகலிலும் நான் அழியக்கூடாது. ஆயுதங்களாலோ, விலங்குகளாலோ, பிற உயிரினங்களாலோ அழிவு வரக்கூடாது. இன்னும் பல நிபந்தனைகளின் பேரில் வரம் வாங்கியிருக்கிறான். என் தந்தை தன்னை மனதார நினைத்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்து விடுவார்.

ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அவனை அழிக்கவும் தயங்கமாட்டார். ஒன்றைச் சொல்கிறேன் கேள்! மனிதர்கள் தங்களைப் புத்திசாலிகள் எனக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேவாந்தகனும் அப்படியே! தான் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் தனக்கு அழிவே வராது என எண்ணிக்கொண்டிருக்கிறான்.

ஆனால், எப்பேர்ப்பட்ட அறிவாளியும், எங்காவது இடறி விடுவான். இவன் பகலிலும், இரவிலும் சாகக் கூடாது என வரம் வாங்கினானே ஒழிய, பகலும் அல்லாத இரவும் அல்லாத இரண்டும் கலந்திருக்கும் வைகறையாகிய அதிகாலைப் பொழுதில் சாகக் கூடாது என்ற வரம் பெறவில்லையே! அந்த நேரத்திற்காக காத்திருக்கிறேன்.

அப்படியே அந்தப் பொழுது வந்தாலும், இவனை ஆயுதங்களால் அழிக்க முடியாதே! எனவே, ஆயுதமல்லாத ஒரு பொருளால் தான் இவனை அழிக்க முடியும், பொறுத்திரு! வேடிக்கை பார்! எனச் சொல்லி விட்டார்.
மகோற்கடர் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தாலும், காசிராஜன் மனம் பதைக்க காத்திருந்தான். அன்று விடியவிடிய போர் நடந்தது. தனது படைகளைக் காப்பாற்ற மகோற்கடர் பினாகம் என்னும் வில்லை எடுத்தார். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான அம்புகளை பல திசைகளிலும் சிதறடிக்கச் செய்யும் வகையிலான வில் இது. இதைக் கொண்டு, அசுரப் படைகளில் பெரும் பகுதியைக் கொன்று குவித்து விட்டார்.

மயங்கிக் கிடந்த படைகளை எழுப்ப, அதில் ஞானாஸ்திரம் ஒன்றை இணைத்து அனுப்பினார் மகோற்கடர். அந்தப் பாணம் வெளிப்பட்டதுமே படைகள் எழுந்தன. எஞ்சியிருந்த படைகளை அவர்கள் அழிக்க ஆரம்பித்து விட்டனர். மனிதர்கள் அசுர குணங்களால் சூழப்பட்டு, கடவுளை மறந்து, தங்கள் இஷ்டம் போல் உலக இன்பங்களில் மயங்கிக் கிடப்பதை தேவாந்தகன் எய்த மோகானாஸ்திரம் குறிக்கிறது.

ஆசைகளில் கட்டுண்டு கிடப்பதில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்ற பேரறிவாகிய ஞானத்தைக் கொடுப்பதையே, மகோற்கடர் எய்த ஞானாஸ்திரம் குறிக்கிறது. இப்படி விடிய விடிய நடந்த சண்டைக்குப் பின் விடியல் பொழுதை நெருங்கி விட, காசிராஜன் மனம் பதைத்து நின்றிருந்தான். எதற்கும் கலங்காமல் போரிட்டுக் கொண்டிருந்த தேவாந்தகனின் அருகில், மகோற்கடர் சென்றார்.
விநாயகப்பெருமானாக விஸ்வரூபமெடுத்தார். தன் கொம்பை ஒடித்தார். யானை தந்தத்தை ஆயுதம் எனக்கூற முடியாதே! அதை அப்படியே தேவாந்தகனின் தலையில் பாய்ச்சினார். அவனது ஆவி பிரிந்து, விநாயகரை வலம் வந்தது.

ஒரு காலத்தில் சிவபெருமானை எண்ணி தவம் செய்த பெருமையுடையவன் என்பதால், அந்த பாக்கியம் தேவாந்தகனுக்கு கிடைத்தது. பின்னர் அவரது திருவடியில் சரணடைந்து அவருடனேயே ஐக்கியமாகி விட்டது. படை வீரர்கள் ஆர்ப்பரித்தனர்.

காசிராஜன் ஆனந்தக்கண்ணீர் வடித்தான். விநாயகப்பெருமானே! தாங்களே வந்து காசியைக் காத்தமைக்கு நன்றி. தாங்கள் இந்த தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும், என்று வேண்டினான்.

விநாயகரும் அதை ஏற்றார். பின்னர் தன்னை மகோற்கடராக சுருக்கிக் கொண்டு, அரண்மனைக்கு புறப்பட்டார். தனது மகனின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என காசிராஜன் கேட்டுக்கொள்ளவே, தந்தை காஷ்யபர் இட்ட உத்தரவுப்படி, புரோகிதராக இருந்து சிறப்புற நடத்தி வைத்தார். பின்னர், தன் இல்லத்துக்கு சித்தி, புத்தியருடன் திரும்பினார்.

காசிராஜனும், அவனது படைகளும் அவருடன் சென்றனர். காசிராஜன், காஷ்யபரிடமும், அதிதியிடமும் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பிரஸ்தாபம் செய்தான்.

அதைக்கேட்டு அவர்கள் மகிழ்ந்தனர். மகோற்கடரும் தனது மானிடப்பிறவி முடிந்து விட்டதாக காஷ்யபர், அதிதியிடம் விடைபெற்று விண்ணுலகம் புறப்பட்டார். மகனை ஆரத்தழுவிய பெற்றோர் தங்களையும் விநாயகரின் ஆனந்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல விரும்பினர்.

பூமியில் இன்னும் பல நற்செயல்கள் செய்து தன்னை வந்தடையும்படி விநாயகர் அருள்பாலித்து புறப்பட்டார். காசிராஜன் கண்ணீர் வடித்தார். கணங்களின் தலைவரே! தங்கள் பெற்றோருக்கு அருள் செய்த தாங்கள், என்னைப் போன்ற லோகாதயங்களை விரும்பும் ஈன ஜென்மங்களையும் உமது லோகத்துக்கு அழைத்துச் செல்லமாட்டீரா? அதற்காக, எந்த விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றதும் விநாயகர் கலகலவெனச் சிரித்தார். சித்தி புத்தியரும் சிரித்தனர்.

காசி மன்னா! எனது உலகத்தை அடைய விரும்பும் பக்தர்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன தெரியுமா? என்றதும், அவர் கேட்கும் விலையைத் தங்களால் கொடுக்க முடியுமா என காசிராஜனும், அவனுடன் வந்தவர்களும் ஆவலுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தனர்.


விநாயகர் புராணம் பகுதி-23
பக்தர்களே! நான் சொல்லும் இந்தக் கதையைக் கேளுங்கள். இதைக் கேட்ட பின், என் லோகத்தை அடைய, இங்கே கூடியிருக்கும் அனைவரும் கொடுக்க வேண்டிய விலையைத் தெரிந்து கொள்வீர்கள், என்று சொல்லி தன்னால் சம்ஹரிக்கப்பட்ட அனலாசுரன் பற்றி சொன்னார்.

ஒருமுறை, எமதர்மராஜா தேவலோகப் பெண்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த மோக மயக்கத்தில், அவரிடம் இருந்து அனலாசுரன் என்ற அசுரன் வெளிப்பட்டான். அவன் நின்ற இடம் தகித்தது. எமதர்மராஜா தன்னைப் பெற்றவர் என்பதால், அவரை விட்டுவிட்டு, மற்ற தேவர்களை விரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் நெருங்கினாலே கடும் வெப்பம் ஏற்பட்டதால் அவர்கள் தீயில் நிற்பதைப் போல உணர்ந்தனர்.

தங்களுக்கு புகலிடம் தேடி அவர்கள் திருமாலிடம் சென்றனர். திருமால் அவர்களைச் சமாதானம் செய்து, இந்த அசுரனை அழிக்கும் சக்தி என் மருமகன் கணபதிக்கு மட்டுமே உண்டு. எல்லோரும் கணபதியைத் தியானியுங்கள், எனசொல்லிவிட்டார். அனைத்து தேவர்களும் மானசீகமாக தங்கள் மனதில் விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபட்டனர்.

அப்போது விநாயகர், மனித முகத்துடன் ஒரு பிரம்மச்சாரி இளைஞனாக அவர்கள் முன் வந்து நின்றார். தேவர்களே! நீங்கள் ஏன் கலங்க வேண்டும்? அந்த அசுரனை என்னால் கொல்ல முடியும்? என்றதும், நீயோ சிறுவன், அவனோ அசுரன். உன்னால் எப்படி அவ்வளவு பெரிய அசுரனைக் கொல்ல முடியும்? என்று ஆதங்கத்துடன் கேட்டனர். அந்த இளைஞன் சிரித்தான்.

அந்நேரத்தில், தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி நின்று, ஒரு பிரம்மச்சாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அனலாசுரனுக்கு கிடைக்கவே, அவன் வேகமாக அங்கே வந்தான். தேவர்கள் வெம்மை தாங்காமல் அங்குமிங்கும் சிதறி ஓடினர். அந்த இளைஞனோ எதையும் கண்டு கொள்ளாமல் நின்றான். தேவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அனலாசுரன் இளைஞனின் அருகில் வந்து, வெப்பத்தால் உலகத்தையே அழிக்கும் சக்தி என்னிடம் உண்டு. நீயோ அப்படியே நிற்கிறாய். யார் நீ? என் உடலில் இன்னும் சூடேற்றினால் நீ உருகிப்போவாய், என எச்சரித்து கடைவாய் கோரைப் பற்கள் வெளிப்படும்படியாக சிரித்தான்.

அப்போது அவனது வாயில் இருந்து தீ வெளிப்பட்டது. விநாயகர் அதை ஊதி அணைத்தார். அவன் வெம்மையைக் கடுமையாக்கி பூலோகத்தில் பாய்ந்தான். அங்கிருந்த உயிர்களை அழிக்க முயன்ற போது, இளைஞனான கணபதி பூமியை விழுங்கி வயிற்றுக்குள் தள்ளிவிட்டார். இவ்வாறாக ஏழு லோகங்களையும் அவன் தீ வைக்க முயன்ற போது, எல்லா உலகங்களையும் தன்னுள் அடக்கினார் கணபதி. அவரது வயிறு பானை போல் ஆனது.

பின்னர் அந்த இளைஞனிடம், சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. மாயவேலைகளை எல்லாம் என்னிடம் காட்டாதே. ஏழு லோகங்களையும் விழுங்கி வேடிக்கை காட்டும் உன்னை அந்த லோகங்களுடன் விழுங்கி விடுவேன், என எச்சரித்தான். உடனே இளைஞனாக வந்த கணபதி சுயவடிவம் கொண்டு, தன் தும்பிக்கையால் அவனை வளைத்து இறுக்கி அந்தரத்தில் தூக்கினார். அவன் தும்பிக்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே குதித்தான்.

கணபதி அவனிடம், அனலாசுரா! உனக்கு கொடிய பசி போலும். என் வயிற்றுக்குள் போ. அங்கே ஏழு உலகங்கள் இருக்கின்றன. அத்தனையையும் எடுத்துக் கொள், என்றார். அவனும், நல்லது, நல்லது என்றபடியே வயிற்றுக்குள் சென்றான். அவன் உள்ளே சென்றானோ இல்லையோ,

மூடிய வாயைக் கணபதி திறக்கவில்லை. தப்ப வழியின்றி அவன் தவித்தான். விநாயகரோ அவனை உள்ளடக்கிக் கொண்டு வெப்பம் தாளாமல் தவித்தார்.

தேவர்கள் அவருக்கு கொடுத்த இளநீர், பால் எதுவும் சூட்டைத் தணிக்கவில்லை. சித்தி, புத்தியர் தங்கள் அங்கங்களால் அவரது வெப்பத்தைத் தணிக்க முயன்று தோற்றனர். என்ன தான் செய்வது! அவர்கள் விநாயகரையே சரணடைந்தனர். விநாயகர் அவர்களிடம், நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் என்னை திருப்திப்படுத்தாது.

எனக்குத் தேவை அருகம்புல். அதை உங்களால் முடிந்த அளவு கொண்டு வந்து குவியுங்கள். வெப்பம் தணிந்து விடும், என்றார்.

தேவர்கள் அருகம்புல்லைக் கொண்டு வந்து குவித்தனர். அவரது உடலையே அருகம்புல்லால் மூடுமளவு கொட்டினர். விநாயகரின் வெப்பம் தணிந்தது. அனலாசுரனும் உள்ளுக்குள்ளேயே ஜீரணமாகி விட்டான்.
இந்த வரலாற்றை பக்தர்களிடம் சொன்ன கணபதி, இப்போது சொல்லுங்கள், என் லோகத்தை அடைய நீங்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை! என சொல்லவே, ஆஹா... கருணைக் கடலே! பல்வகை நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க மாலைகளும், ஏராளமான பிரசாத வகைகளும் தங்களுக்கு தரப்பட வேண்டுமோ என நாங்கள் அறியாமையால் ஆளுக்கொரு வகையில் கற்பனை செய்தோம். எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் சாதாரண அருகம்புல்லால் உங்களை அடைந்து விடலாம் என்றால் நாங்கள் செய்த பாக்கியம் தான் என்னே! என்றனர்.

அன்றுமுதல், விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அருகம்புல் தவிர தங்களுக்கு பிடித்தமான பூக்களையும் நாங்கள் அணிந்து மகிழ ஆசைப்படுகிறோம். அதையும் சொல்லுங்கள், என்றனர் பக்தர்கள். ரோஜா, மல்லிகை, முல்லை, சம்பங்கி இன்னும் பல்வேறு வாசனையுள்ள மலர்களை இங்கே கூடியிருக்கும் பெண்களே வைத்துக் கொள்ளுங்கள்.

ஆடவர்கள் தங்கள் மார்புகளில் மாலையாகத் தரித்துக் கொள்ளுங்கள். எனக்கு அவை தேவையில்லை. உங்களுக்கு எது தேவையில்லை எனக் கருதுகிறீர்களோ, அதை எனக்கு மாலையாக அணிவித்தால் போதும், என விநாயகர் கருணை உள்ளத்துடன் சொன்னார்.
அது என்ன வகை பூ? என்று மக்கள் கேட்டதும், இதோ! இந்த பூவை யாராவது சூடுவீர்களா? என்று அங்கு நின்ற செடி ஒன்றைச் சுட்டிக்காட்டினார் விநாயகர். மக்கள் அதிசயித்துப் போயினர்.

விநாயகர் புராணம் பகுதி-24
அது ஒரு எருக்கஞ்செடி. அந்தச் செடியிலுள்ள பூக்களை எனக்கு அணிவித்தால் போதும் என்றார் விநாயகர். இறைவன் நம்மிடம், எதிர்பார்ப்பது பக்தியை மட்டும் தான். அன்புடன் அவனது பாதத்தில் ஒரே ஒரு பூவை வைத்து, அவனது திருநாமத்தை சொன்னால் போதும்! ஓம் கணபதியே நம என தினமும் 108 முறை யார் பக்திப்பூர்வமாக சொல்கிறார்களோ, அவர்களுக்கு விநாயகரின் ஆனந்தலோகம் நிச்சயம் கிடைக்கும். விநாயகப்பெருமானின் எளிய தன்மை பற்றியும், அவர் எதிர்பார்க்கும் எளிய பக்தி பற்றியும் மற்றொரு கதை ஒன்றையும் கேளுங்கள்.

மிதிலாபுரி மன்னர் ஜனகர் நற்பண்புகளைப் பெற்றவர். ஏராளமான கல்வியறிவுடன் திகழ்ந்தவர். ஆனாலும், தான் என்ற கர்வம் அவரை ஆட்டிப்படைத்தது. மக்களைக் காப்பாற்றும் அவர் தானே தெய்வம் என்று நினைத்துக் கொண்டார். ஒருமுறை நாரத மகரிஷி அவரைக் காண வந்தார்.

நாரம் என்றால் தண்ணீர். நாரதர் பிதுர் தேவதைகளை அளவுக்கதிகமாக பூஜிப்பவர். அவர்களுக்கு தீர்த்தம் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பார். இதன் காரணமாகவே நாரதர் என்ற பெயர் அவருக்கு அமைந்தது. நாரதர் எந்த இடத்திலாவது கண நேரம் தங்கிவிட்டால்கூட, அவ்விடத்தில் உள்ளோர் மோட்சத்தை அடைந்து விடுவார்கள். அப்படிப்பட்ட மகான் ஜனகரைக் காண வந்தால் அவருக்கு மோட்சம் உறுதிதானே! ஜனகர், நாரதரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்தார்.

நாரதர் அவரிடம், ஜனகரே! உமது ஆட்சியில் பகவான் கிருபையால் மக்கள் செழிப்புடன் வாழ்கின்றனர். உம்மை வாழ்த்துகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணமான அந்த பகவானுக்கு இங்கு என்ன வேலை? என்றார். நாரதர், ஜனகருக்கு புத்திமதி சொன்னார்.

ஜனகரே! நீர் அறியாமல் பேசுகிறீர். எல்லாவற்றுக்கும் காரணம் பகவான்தான். பகவானை தூஷிக்கும் இடத்தில் நான் அமர மாட்டேன், என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அவர் நேராக கவுண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றார். அந்த முனிவர் கணபதியை உபாசிப்பவர். அவரிடம் நாரதர், முனிவரே! விநாயகப்பெருமானிடம் சொல்லி ஜனகருக்கு நற்புத்தியை தரச் செய்ய வேண்டும். அவர் தானே பரம்பொருள் என்ற சிந்தனையுடன் இருக்கிறார். அந்த சிந்தனையை அகற்றி அவர் சாதாரண மானிட ஜென்மம் என்பதை உணரும் வகையிலான ஏற்பாட்டைச் செய்யுங்கள், என சொல்லிவிட்டு வைகுண்டம் புறப்பட்டார்.

கவுண்டின்ய முனிவரும் கணபதியிடம் இதைச் சொல்லி பூஜித்தார். கணபதி அவரது கோரிக்கையை ஏற்று குஷ்ட நோயுள்ள ஒரு அந்தணராக வடிவெடுத்து ஜனகரின் அரண்மனைக்குச் சென்றார். வாசலில் நின்றபடி, தனக்கு பிøக்ஷ இடுமாறு கேட்டார். மிக ஆச்சரியமாக பிராமணர் ஒருவர் அரண்மனை வாசலில் பசியுடன் வந்து நிற்கிறார் என்றால் யாருக்குத்தான் வியப்பிருக்காது! அவர்கள் அவசர, அவசரமாக ஜனக மகாராஜாவிடம் சென்று, பிராமணர் ஒருவர் பிøக்ஷ கேட்டு வந்திருப்பதை அறிவித்தார்கள்.

ஜனகர் அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். வேதியர் அருவருப்பான தோற்றத்துடன் உள்ளே வந்து நின்றார். பிராமணரே! எனது ஆட்சியில் இப்படி ஒரு நிலைமை தங்களுக்கு எப்படி ஏற்பட்டது? இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? எனக்கேட்டார்.

முதியவர் வடிவில் வந்த கணபதி, எனக்கு பசி தாளவில்லை. முதலில் உணவு கொடு! அதன் பிறகு பேசலாம், என்றார். ஜனகர் தன் மகனிடம், வேதியரை உணவறைக்கு அழைத்து செல்லும்படி கூறினார். அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. கணபதி சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அவரது தொந்தி வயிறை அவ்வப்போது தடவிக்கொள்வார். சமையல்காரர்கள் இருந்ததையெல்லாம் அவருக்கு வைத்து விட்டனர். அவரோ இலையை விட்டு எழுந்திருப்பது போல் தெரியவில்லை.

பின்னர், நூறு சமையற்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போதே கணபதி பசி தாளாதவர் போல அரற்றினார். இலை முன்பு உட்கார வைத்துவிட்டு, இப்படி என்னை பட்டினி போட்டு துன்புறுத்துகிறீர்களே! என கத்தினார். இளவரசனுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது. அத்துடன் பயமும் வந்துவிட்டது. அவனது உடல் நடுங்கியது. ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் அவனது அறிவுக்கு புலனாகிவிட்டது.

பாதி வெந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. இருக்கிற உணவையெல்லாம் அப்படியே எடுத்து வாருங்கள் என கணபதி சத்தம் போட்டார். சமையல்காரர்களும் அவ்வாறே செய்தனர். அதன் பின்பும் அவர் இலையை விட்டு எழவில்லை. உடனே இளவரசன் அவரிடம், வேதியரே! உம் பசி தீர எங்களது தானியக்களஞ்சியத்தை திறந்து விடுகிறோம். உமது இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளும், எனச் சொல்லி களஞ்சியத்தை திறந்து விட்டான். கண நேரத்தில் களஞ்சியத்தைக் காலி செய்து விட்டார் கணபதி.

விநாயகர் புராணம் பகுதி-25
ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டான் ராஜகுமாரன்.

விஷயம் ஜனகருக்கும் பறந்தது. அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஊரார் வரிசையாக உணவுப்பண்டங்களை அடுக்கினர். அந்தணர் வடிவில் இருந்த கணபதிக்கோ அது ஒரு கைப்பிடி அளவே இருந்தது. அதையும் காலி செய்துவிட்டு, பாவிகளே! பெரும் பசியுடன் வந்த எனக்கு கடுகளவு சாப்பாடு போட்டு, மேலும் என் பசியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே!

உம்... போடுங்க சாப்பாட்டை, என்று கத்தினார். ஜனகர் அவர் அருகே வந்து, வேதியரே! உமக்கு கொடுக்க எங்கள் நாட்டிலேயே இப்போது ஏதுமில்லை. என்னை மன்னிக்க வேண்டும். உமது பசியைப் போக்கக்கூடியவர் என நீர் யாரை நினைக்கிறீரோ அங்கேயே போய் நீர் பசியாறிக் கொள்ளலாம், என்றார்.

மன்னனே! நீ தானே பரப்பிரம்மம். அப்படித் தானே ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாய். கடவுளுக்கு சமமான உனக்கு யாசகம் கேட்டு வந்த அந்தணனின் பசியைத் தீர்க்க முடியவில்லையே. ஒரு சிறு பகுதியை ஆளத்தெரியாத நீ, கடவுளாக இருந்து இந்த பிரபஞ்சத்தையே எப்படி காக்கப் போகிறாய்? என் பசியைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்து விட்டு, அதைக்கூட காப்பாற்றாத நீயெல்லாம் தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறாயே, என்று அவருக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவிட்டு கோபப்படுவது போல் நடித்து வெளியேறி விட்டார்.

அவர் சென்ற பிறகு ஜனகர், தன்னைப் பரப்பிரம்மமாக நினைத்து கர்வத்துடன் நடந்து கொண்டதையும், யாசகம் கேட்டவருக்கு கூட உணவிட முடியாத தனது இயலாமையையும் எண்ணி வருந்தினார். அரண்மனையில் இருந்து புறப்பட்ட அந்தணராகிய கணபதி, திரிசுரன் என்ற தன் பக்தனின் வீட்டிற்குச் சென்றார்.

திரிசுரனும் ஒரு அந்தணர். அவரது மனைவி விரோசனை. கணவர் யாசகமாகக் கொண்டு வரும் அரிசியை சமைத்து விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடும் பழக்கமுடையவள். கணவருக்கு பூஜை வேளையில் பணிவிடை செய்பவள். அவர்களின் வீட்டுக்குச் சென்றதும், திரிசுரன் வெளியே வந்து அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றார்.

திரிசுரனே! நான் தீர்த்தயாத்திரை செல்கிறேன். வழியில் பசிக்கிறதே என்பதற்காக இந்த நாட்டு மன்னன் ஜனகரிடம் உணவு கேட்டேன். அவர்களோ குறைந்த அளவு தந்து, என் பசியை மேலும் தூண்டி விட்டார்கள். பசியடங்காத நான், உங்களிடம் உணவு கேட்டு வந்துள்ளேன். ஏதாவது கொடுங்களேன், என்றார். விரோசனைக்கு கண்ணீர் முட்டியது. சுவாமி! மற்ற நாட்களில் கூட நெல்லோ, அரிசியோ பிøக்ஷயாக ஏற்று வருவார் என் பர்த்தா. இன்றோ, அவர் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பி விட்டார்.

விநாயகருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல் மட்டுமே இங்குள்ளது. வேறு ஏதுமில்லை. நான் என்ன செய்வேன்? பசித்து வந்த தங்களுக்கு ஏதும் தர முடியாமல் தவிக்கிறேனே! என்று தங்கள் நிலைமையை வெளிப்படுத்தினாள்.

பெண்ணே! இதுபற்றி கவலை வேண்டாம். உன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாயே, அருகம்புல், அதில் ஒன்றிரண்டைக் கொடுத்தாலே போதும். என் பசி தீர்ந்து போகும், என்றார் சுவாமி. விரோசனையும் அவ்வாறே அவருக்கு இரண்டு அருகம்புல்லைக் கொடுத்தாள். கணபதி அதை வாயில் போட்டாரோ இல்லையோ, அந்த வீடு பொன்மயமாக ஜொலித்தது. அவ்வூரிலுள்ள குடிசைகளெல்லாம் மாளிகைகளாகி விட்டன. ஜனகரின் அரண்மனையில் முன்பையும் விட செல்வம் கொழித்துக் கொட்டிக் கிடந்தது. அவருக்கு பேராச்சரியம். அரண்மனைக்கு வந்த வேதியரே இதற்குக் காரணம் என்பதை அவர் புரிந்து கொண்டார். திரிசுரனின் இல்லத்திற்கு அவர் விரைந்தார்.

அப்போது விரோசனை, சுவாமி! தாங்கள் யார்? எங்கள் வீட்டின் நிலையையே மாற்றி விட்டீர்களே. பசும்புல்லுக்கு பசும்பொன் கொடுத்த புண்ணியரே! தங்களைப் பற்றிச் சொல்லுங்களேன், என்றதும் விநாயகர் தன் சுயரூபத்தை அவளுக்கு காட்டினார்.

திரிசுரன் அவரிடம், சுவாமி! இந்த ஏழையின் வீட்டுக்கா எழுந்தருளினீர்கள்! நான் அருகம்புல் தவிர தங்களுக்கு ஏதும் தந்ததில்லையே! இனிக்கின்ற மோதகமும், சித்ரான்னங்களும் படைத்து உம்மை வழிபடும் இடங்களுக்கெல்லாம் செல்லாமல், எங்கள் மகாராஜா தங்களுக்கு ஏராளமான உணவிட்டும் அவர் வீட்டில் காட்சி கொடுக்காமல் இங்கு வந்து காட்சி தந்தமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன், என்றார்.

இதற்குள் ஜனகரும் அங்கே வந்து விட, அவர் பரவசம் மேலிட கணபதியை வணங்கி, விநாயகரே! நானே பரம்பொருள் என இறுமாந்திருந்தேன். என் மாயையை தீர்த்த வல்லவரே! உம்மை மதிக்கத்தவறிய எனக்கு இனியும் இவ்வுடலில் உயிர் வேண்டாம். நான் உமது திருவடியை அடைந்து பாக்கியத்தை அருள்வீரா? நான் செய்த தவறுக்குரிய தண்டனை எதுவாயிருந்தாலும் கொடும்! ஆனால், என்னை மீண்டும் பிறவியெடுக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும், என்றார்.

கருணைக்கடலான விநாயகர் அவருக்கும் திரிசுரன் தம்பதிக்கும் அருள்செய்து, என்னைத் திருப்திப்படுத்த ஆடம்பரம் ஏதும் தேவையில்லை. ஒரு பூவையையோ,  இலையையோ எனக்கு அர்ப்பணித்தாலே போதும். அதுவும் இல்லாதவர், எனக்கு மந்திரங்கள் கூறியும், என் திருநாமங்களைக் கூறியும் இதயத்தில் இருந்து அருகம்புல்லையும், அதற்கிணையான வன்னி இலைகளையும் தந்தாலே போதும், என்றார்.
சுவாமி! தங்களுக்கு வன்னி இலை தூவி வழிபடுவதால், நாங்கள் அடையும் நன்மை என்ன என்பதை விளக்க வேண்டும்? என்று கேட்டாள் விரோசனை. விநாயகரும் அதுகுறித்த தனது பிரஸ்தாபத்தை ஆரம்பித்தார்.

விநாயகர் புராணம் பகுதி-26
விரோசனா! வன்னி இலையின் முக்கியத்துவத்தைக் கேள்.அருகம்புல்லை மாலையாகவும், வன்னியை எனக்கு அர்ச்சனை செய்வதற்காகவும் நீ பயன்படுத்தலாம். ஒரு காலத்தில், விதர்ப்ப தேசத்தை புண்ணிய கீர்த்தி என்பவன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை இல்லை. எனவே, அவனது காலத்துக்குப் பின் மந்திரிகள் ஒன்று கூடி, மன்னனின் உறவுக்காரனான சாம்பன் என்பவனை அரசனாக்கினர்.

ஆனால், அவன் எதிர்பார்த்ததைப் போல் நல்லாட்சி தராமல் கொடுமைகள் பலவற்றை அரங்கேற்றினான். பெண் பித்தனான அவன், பிறர் மனைவியரைக் கூட விட்டு வைக்கவில்லை. இவனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம், தனக்கு பதவியளித்த மந்திரிகளையே நீக்கி விட்டு, துர்மதி என்பவனை மந்திரியாக்கிக் கொண்டான். அவன் அரசனுக்கு எல்லா வகைகளிலும் உதவியதுடன், தானும் அவனைப் போலவே லீலைகளில் ஈடுபட்டான்.

இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க பாவங்களையே சேர்த்துக் கொண்டிருக்க, ஒருமுறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்கள். வரும் வழியில், எனது கோயில் ஒன்றைக் கண்டனர். அங்கு பக்தர்கள் ஒன்றுகூடி பூஜை செய்து கொண்டிருந்தனர். அங்கே வந்த ஒரு பக்தையிடமிருந்த மாங்கனிகளைப் பிடுங்கி, என் முன்னால் வைத்து, பிள்ளையாரே! இவங்க கொடுக்கறதையெல்லாம் நீ ஏத்துக்கிறே இல்லே! இதோ! நாங்க கொடுக்கிற இந்த கனிகளையும் ஏத்துக்கோ! என விளையாட்டாகச் சொன்னார்கள்.

பின்னர் அங்கிருந்து போய்விட்டார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகும், அவர்கள் கொடிய பல பாவங்களைச் செய்து இறந்தும் போனார்கள். எமதூதர்கள் அவர்களைக் கொடிய சாட்டைகளால் அடித்து இழுத்துச் சென்றனர். இங்கே, அனுபவித்த இன்பத்திற்கு பல மடங்கு ஈடான துன்பத்தை அவர்கள் அனுபவித்தனர். நரக <உலகத்தில் வாட்டி வதைபட்ட அவர்கள் பூச்சி, புழு, கரப்பான், நண்டு என பல இழிபிறவிகளை எடுத்தனர். மீண்டும் ஒரு பிறவியில் சாம்பன் மானிடனாகவும், துர்மதி அசுரனாகவும் பிறந்தனர்.

மானிடனாகப் பிறந்த சாம்பனுக்கு அப்பிறவியில் வீமன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. வீமன் அப்பிறவியிலும் திருடனாகவே இருந்தான். ஒரு முறை, பல பிராமணர்கள் யாகம் முடித்து விட்டு, அதற்குரிய தட்சணையாக தங்கம், பசுக்கள் முதலானவற்றை பெற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கொள்ளையனான வீமன், அவர்களை வழிமறித்தான். தங்கத்தையும், பசுக்களையும் தன்னிடம் தந்து விடும்படி மிரட்டினான். அந்தணர்கள் அவனுக்கு நற்புத்தி சொல்லவே, ஆத்திரமடைந்த அவன், அவர்களைக் கொலை செய்து அத்தனைப் பொருளையும் அபகரித்துக் கொண்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. செய்த பாவத்திற்கு பலன் கிடைக்க வேண்டாமா? சாம்பனின் மந்திரியாக இருந்த துர்மதி, அந்தப் பிறவியில் ராட்சதனாகப் பிறந்திருந்தான்.

அவன், பசுக்களையும், பெரும் செல்வத்தையும் திருடிக் கொண்டு வந்த வீமன் முன்னால் வந்து நின்றான். பசுக்களைப் பிடித்துத் தின்றான். வீமனையும் விழுங்க எண்ணம் கொண்டு அவனைப் பிடிக்க கையை நீட்டவும், வீமன் அலறியடித்து ஓடினான். அசுரனும் விடவில்லை. வீமன் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறினான். அப்போது அதில் இருந்த இலைகள் உதிர்ந்தன. அந்த மரத்தின் கீழே யாரோ சிலர் எனது சிலையை பிரதிஷ்டை செய்திருந்தனர்.

அந்த சிலையின் மீது அந்த இலைகள் உதிர்ந்தன. அசுரன் மரத்தருகே வந்து, வீமனைக் கீழே விழச் செய்வதற்காக மரத்தை உலுக்கினான். அப்போதும், என் சிலை மீது இலைகள் உதிர்ந்தன. ஒரு வழியாக அசுரன் வீமனைப் பிடிக்க, வீமன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தாக்கி சண்டை போட்டான். ஒரு கட்டத்தில் அசுரனை ஒரு பாதாளத்தருகே சமயோசிதமாக வரச்செய்த வீமன், அவனை உள்ளே விழும்படிச் செய்து விட்டான். அவன் உள்ளே விழுந்ததும், மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பிய அவன் நின்ற பாறையில் திடீரென கால் வழுக்கவே, அவனும் அதே பாதாளத்தில் விழுந்து இறந்தான்.

இவர்கள் இருவரும் மீண்டும் எமலோகம் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் கொடிய தண்டனை கிடைத்தது. இருப்பினும், அந்தப்பிறவியில் இவர்கள் தங்களை அறியாமலே என்னை வன்னி இலை கொண்டு அர்ச்சித்த பலன் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்ததும், புண்ணியத்தை அனுபவிக்கும் பாக்கியகாலம் வரவே, அவர்கள் தங்க விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு எனது லோகத்தை வந்தடைந்தனர். பாவிகளுக்கும் கூட மங்களத்தை அருளும் சக்தி வன்னி இலைக்கு உண்டு, என்றார். விரோசனை இந்த சம்பவம் கேட்டு உளம் மகிழ்ந்து, அங்கு நின்ற விநாயகருக்கு அர்ச்சனை செய்து கணவருடன் ஆனந்தலோகம் அடைந்தாள்.

விநாயகப்பெருமானை சதுர்த்தி நாளில் அவதரித்ததாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இந்நாளில் சந்திர தரிசனம் கூடாது. இது ஏன் தெரியுமா? யாராவது ஒருவர் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டால், அவரை ஏளனம் செய்யக்கூடாது என்பது நியதி. பிரம்மதேவன் இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டார். நாரதர் மூவுலகும் சஞ்சரிப்பவர். தினமும் சிவலோகம் வந்து ஒரு மாங்கனியை காணிக்கையாக வைத்து இசை பாடி சிவசக்தியைப் பரவசப்படுத்துவார்.

ஒருநாள், காணிக்கையாக கொடுத்த மாங்கனியை யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் கேட்டார். வழக்கமாக அப்பழம், விநாயகருக்கே கிடைக்கும். இப்போது முருகனுக்கு அப்பழத்தைக் கொடுக்கலாமே என பிரம்மா கூற, கணபதிக்கு கோபம் வந்து விட்டது. அவரது கோபத்துக்கு ஆளானால், பெரும் தண்டனைக்கு ஆளோவேமே என நடுங்கிய பிரம்மா அவரருகே சென்றார். கணேசரும் அவரை மன்னிக்க முடிவு செய்த வேளையில், பிரம்மாவின் நடுக்கத்தைப் பார்த்து சந்திரன் சிரித்தான்.

விநாயகரின் கோபம் சந்திரன் மீது திரும்பி விட்டது. ஒருவன் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவனைக் காப்பாற்ற முயல வேண்டுமே தவிர, அவனது வேதனையை எண்ணி சந்தோஷப்படக்கூடாது, என சந்திரனைக் கடிந்து கொண்டதுடன், இப்படிப்பட்ட உனக்கு உலகுக்கு ஒளி கொடுக்க தகுதியில்லை, என சபித்து விட்டார். சந்திரன் ஒளியிழந்ததால் தேவர்களுக்கு அமுத கிரணம் கிடைக்கவில்லை. அவர்கள் வாடி வதங்கினர். சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவன் சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்து ஒருநாள் தவிர மற்ற நாட்கள் சந்திரன் வளர்ந்து தேய்ந்து கிரணங்களைப் பொழிவான், என்றார். அதனால் தான் அமாவாசையன்று தேவர்கள் உபவாசம் இருப்பது போல, நாமும் உபவாசம் இருப்பது நல்லது. கணபதியின் பேரருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 13

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்