Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சைவமும் தமிழும் விரதங்களும் தோத்திரங்களும்

திருமூலர் - திருமந்திரம் - 10ம் திருமுறை

E-mail Print PDF

பத்தாம் திருமுறை

Read more...

பிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் "சோம சூட்ச பிரதட்சண" முறையும்

E-mail Print PDF

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

நோய்கள் நீங்கும்.

எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.

பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

Read more...

திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி - உரையுடன்

E-mail Print PDF


திருவெம்பாவை
(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

திருச்சிற்றம்பலம்
1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1

Read more...

பிள்ளையார் பெருங்கதை - பாடல்

E-mail Print PDF
pillayaarகணபதி துணை

வேழ முகம்
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றி மிகுத்து வேலவனைத் தொழ புத்தி மிகுத்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநயகனைத் தொழ துள்ளி ஒடும்
தொடர்ந்த வினைகள்
அப்ப முப்பழம் அமுது செய்தருளிய தொப்பையப்பனைத்
தொழ வினையறுமே

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம், நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
-விவேக சிந்தாமணி-

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
திருமந்திரம்


பிள்ளையார் கதை

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

Read more...

கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம்

E-mail Print PDF

அருளிச்செய்தவர் ஸ்ரீதேவராய சுவாமிகள்
கந்தஷஷ்டி கவசம்

காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமரர் இடர்தீர சமரம்  புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

Read more...

காயத்திரி மந்திரங்கள் - எல்லாத் தெய்வங்களுக்கும்

E-mail Print PDF

காயத்திரி மகா மந்திரம் - எல்லாச் செல்வங்களும் பெற
"ஓம் பூர் புவஹ ஸ்வஹ
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமகி
த்யோ யோநஹ ப்ரசோதயாத்”

இந்த காயத்திரி மந்திரத்தை 108 முறை சொல்லி லக்ஷ்மி தேவி அருள் பெற்று வளமுடன் வாழ்க

Read more...

Page 3 of 7

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்