Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சைவமும் தமிழும் விரதங்களும் தோத்திரங்களும்

சரஸ்வதி தோத்திரம்

E-mail Print PDF

சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர் அருளியது

வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து
உண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே. 1.

Read more...

கௌரிக் காப்பு தோத்திரம்

E-mail Print PDF
ammbal
தேவி துணை

ஓம் சக்தி

காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

Read more...

கேதார கௌரி விரதம் - ஆரம்பம் 30.09.2017 - தோத்திரங்கள் இணைப்பு

E-mail Print PDF

ஓம் சிவ சக்தி ஓம்

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம்

ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதம் இவ்வருடம் 30.09.2017 ஆரம்பமாவதாகவும் 19.09.2017 அன்று காப்புக் கட்டும் நிகழ்வுடன் நிறைவு பெறுவதாக சோதிடம் கணித்துள்ளது. இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என்பது ஐதீகம்.

Read more...

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும் -20.10.2017 முதல் 25.10.2017 வரை

E-mail Print PDF
Image may contain: 6 people, people standing
முருகன் துணை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

இவ்விரதம் இந்த வருடம் 20.10.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி  ஆறாவது தினமான 25.10.2017  புதன்கிழமை அன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவு பெறுவதாக சோதிடம் கணிக்கின்றது.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

Read more...

வினாயகர் அஷ்டகம்

E-mail Print PDF

காரிய சித்தி மாலை (விநாயகர் அஷ்டகம்)
(காசிப முனிவர் இயற்றியது, கச்சியப்பர் மொழிபெயர்த்தது
)
**************************************************************

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

Read more...

பட்டினத்தார் பாடல்கள்

E-mail Print PDF

paddi

திருப்பாடல் திரட்டு
பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது
1. திருவேகம்பமாலை
2. திருத்தில்லை
3. முதலாவது கோயிற்றிருவகவல்
4. இரண்டாவது கோயிற்றிருவகவல்
5. மூன்றாவது கோயிற்றிருவகவல்
6. நான்காவது கச்சித் திருஅகவல்
7. அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு
8. அருட்புலம்பல் - மகடூஉ முதலாக உள்ளது

Read more...

Page 4 of 7

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்