Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சைவமும் தமிழும் விரதங்களும் தோத்திரங்களும்

திருவாசகம்

E-mail Print PDF

 

மாணிக்க வாசகர் அருளிச் செய்த “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்"

சைவத்திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு.

முதல் எட்டு திரு முறைகளும் தேவாரம் என அழைக்கப்பெறுகின்றன. திருமுறைகள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.

திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும்.

சம்பந்தர் பாடல்களைத் ”திருக்கடைக் காப்பு” என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் ”தேவாரம்” என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் ”திருப்பாட்டு” என்றும் சுட்டுவது வழக்கம். தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

எட்டாம் திருமுறை “திருவாசகம்” என அழைக்கப்பெறுகின்றது. திருவாசகம் மாணிக்கவாசக நாயனாரினால் அருளிச் செய்யப் பெற்றவையாகும். ”திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது அதன் சிறப்பு

முதல் ஒன்பது திருமுறைகள் ’தோத்திரம்’ என்றும், பத்தாவது ”சாத்திரம்” என்றும், பதினொன்றாவது ”பிரபந்தம்” என்றும் பன்னிரண்டாவது ”புராணம்” என்றும் வழங்கப்படும்.

ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்று பெயர் பெறும். திருவிசைப்பா மாலை என்று அழைக்கப் பெறும். இத் திருமுறையில் 29 பதிகங்கள் உள்ளன. தற்சமயம் 301 பாடல்களே கிடைத்துள்ளன. தேவாரத்தைப் போன்று இதற்கும் பண் வகுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் திருமுறையை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிஅமுதனார், புருடோ த்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரால் அருளிச் செய்யப் பெற்றனவாகும்.

இத்திருமுறையில் உள்ள 29 பதிகங்களில் 16 தில்லையம்பதிக்கு உரியன. ஏனைய 13 பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் ஆகிய 13 தலத்துக்கு ஒரு பதிகமாக அமைந்துள்ளன.

திருவாசகம்

திருசிற்றம்பலம்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

Read more...

சிவத்தியான ஸ்தோத்திரம்

E-mail Print PDF

sivan

சிவத்தியான ஸ்தோத்திரம்

தியாயேத் நித்த்யம் மகேசம் ரஜதகிரிநிபம்
சாரு கந்திரா வதம்சம்
ரத்னா கல்போச் ஜூவலாங்கம் பரசுமிருகவராம்
பீதிகஸ்த்தம் பிரசன்னம்
பத்மாசீனம்ச சசாம்பம் ஸ்துதம் அமரகணேகிர்
வியாக்கிற கிறுத்திம் வசானம்
விஸ்வாத்தியம் விஸ்வவந்தியம் நிகிலபயகரம்
பஞ்சவக்திறம் திறினேத்திரம்

Read more...

இலட்சுமி தோத்திரம்

E-mail Print PDF

வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் அள்ளி வழங்கும் லட்சுமியின் அம்சங்கள் 16. இந்த 16 அம்சங்களும் "சோட லட்சுமிகள்" என்றழைக்கப்படுகின்றன.

இந்த 16 அம்சங்களும் ஒருமுகப்படுத்தப்பட்டு "அஷ்டலட்சுமிகள்" என அழைக்கப்பெறுகின்றனர்

அஷ்ட லக்குமிகளும் ஒன்றினைந்து ஏக லட்சுமியாக, "மகாலட்சுமி" யாக தோற்றமளிக்கின்றார்

அஷ்டலட்சுமிகள் மற்றும் ஒவ்வொரு லட்சுமிக்கும் உண்டான சிறப்புகள்

ஆதிலட்சுமி
ஆதி அந்தம் என்பார்கள். ஆதி என்றால் முதல் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த முதல் லட்சுமிதான் ஆதிலட்சுமி என்றழைக்கப்படுவது. இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்புகிறார்கள்.

தான்யலட்சுமி
ஆறு திருக்கரங்களுடன், கரங்களில் தானிய நெற்கதிர் மற்றும் கரும்பு உடையவளாய் கஜபீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள்.  இவள் உலகில் பசிப்பிணி தீர்ப்பவள். தானியங்களின் விளைச்சல் தருபவள். வயிறு சம்பந்தமான பிணி தீர்ப்பவள். இவளை வழிபட்டால் பசிப்பிணி போகும்.

தைரியலட்சுமி
மனத்திற்கு தைரியத்தைக் கொடுத்து தன்னம்பிக்கையூட்டுபவள். இந்த தைரியலட்சுமிக்கு வீரியம் அதிகம். செய்யும் காரியங்களில் வெற்றியும், மனோதைரியமும் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தேவி இவள்.

சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள்.  சந்ததி வளர குழந்தைச் செல்வம் தந்து வரமளிப்பதால் சந்தானலட்சுமி என்று பெயர் பெற்றாள்.  சடையுடன் கிரீடத்தைத் தரிசித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம்  ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் இரு கன்னிப் பெண்கள் சாமரம் வீசியபடியும், விளக்கைக் கையிலேந்தியும்  நின்று கொண்டிருக்கின்றனர்.  இவளை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும்.

விஜயலட்சுமி
அன்னப் பறவையின் மீது வீற்றிருப்பவள் விஜயலட்சுமி. விஜயம் என்றாலே ஜெயம். வெற்றி என்று பொருள். தன்னை வணங்கி காரியம் தொடங்குபவர்களுக்கு வெற்றி, ஜெயம் அருள்பவள் இவளே.

வித்யாலட்சுமி
கலைவாணியும் லட்சுமியும் இணைந்து நிற்பவள்தான் இந்த வித்யாலட்சுமி. இவள். வித்யை என்பதற்கு ஞானத்தின் மூலம் கற்கும் வித்தைகள் என்று பொருள். இந்தத் திருமகளை வழிபட்டால் கல்வியும் வளரும், செல்வமும் வளரும்.

கஜலட்சுமி
இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்ற, தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். கஜம் என்றால் யானை என்று பொருள். இருபுறமும்  யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்ற பெயர் அமைந்தது. கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி என்றும் அழைப்பதுண்டு.  கஜலட்சுமியின் உருவத்தை வீடுகளின் வாசல் நிலைப்படியில் பெரும்பாலும் காணலாம். வாழ்க்கையில் சௌபாக்கியங்களும் பெற விரும்புபவர்கள் கஜலட்சுமியை வணங்குங்கள்.

தனலட்சுமி
செல்வங்களை அள்ளியள்ளித் தரும் தனலட்சுமி இடது கரத்தில் கெண்டி வைத்துக் கொண்டும், வலது கரத்தில் தாம்பூல வெற்றிலை கொண்டும் காட்சி தருபவள். தன்னை நம்பி வருபவர்களுக்கு தனத்தை அளிக்கும் பாவனையே இந்த பாவனை.

தீபாவளி திருநாள் அன்று சதுர்தசியில் பிறந்த லட்சுமி அமாவாசையன்று பெருமாள் கரம் பிடிக்கிறார்.

Read more...

அம்பிகை கௌரிக்காப்பு தோத்திரம்

E-mail Print PDF

 

ammbal

 

தேவி துணை
ஓம் சக்தி


காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

 

Read more...

கந்தஷஷ்டி கவசம்

E-mail Print PDF


காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமரர் இடர்தீர சமரம்  புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

Read more...

கந்தர் அநுபூதி

E-mail Print PDF

muruga

அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரநுபூதி

காப்பு
நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத்தருள் சண்முக னுக்கியல்சேர்
செஞ்சொல்புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர வானை பதம் பணிவாம்.

 

Read more...

Page 5 of 7

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்