Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும் ஜோதிடம்

சாமுத்திரிகா லட்சணமும் மச்ச சாத்திரமும் - ஆண்கள்

E-mail Print PDF

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறுவது இந்த சாத்திரம்

அடிப்படை
தான் எப்படிப்பட்டவன்; தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுக்கு விடை அறிய எண்ணும் மனித வேட்கையின் விளைவுகளாக எழுந்த சந்தைச் சாத்திரங்கள் பல. அவற்றில் சிலவற்றிற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களும் வானவியல் அறிவின் அடிப்படைகளும் இருந்தன. கைரேகை சாத்திரம், ஜாதகம், எண் சோதிடம், கௌளி சாத்திரம், மச்ச சாத்திரம், அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை அவற்றில் சில. இந்த வகை சாத்திரங்களில் ஒன்று தான் சாமுத்ரிகா சாத்திரம்.

மேற்கத்திய வகை அறிவியல் வளர்ச்சிக்கு, எந்தக் கண்டுபிடிப்பையும் புத்தகபூர்வமாக்கிப் பரவலாக்கும் பாணி அடிப்படை. ஆனால் கீழை நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிஞர்கள் தாம் ஆய்ந்து அறிந்தவற்றைப் பொதுவாக்காமல் தம்முடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு மட்டுமே சொல்லித் தந்து மறையும் வழக்கம் இருந்தது. அதனாலேயே காலப்போக்கில் அடிப்படையும் ஆழமும் தனித் தன்மையும் இழந்து மறைந்துபோன பழமை வாய்ந்த இந்தியக் கலைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதிகம். சாமுத்ரிகா சாத்திரம் அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

Read more...

கிரகதோஷம் என்றால் என்ன? சோதிட விளக்கம்

E-mail Print PDF

அண்டவெளியில் சூரிய குடும்பத்தை சேர்ந்த கிரகங்கள் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகின்றன என்றும் அவை ஒவ்வொன்றும் தமக்கென உள்ள வேகத்தில் குறிப்பிட்ட பாதையில் குறிப்பிட்ட தூரத்தில் சுற்றி வருகின்றன என்பதும் அறிவியல் கூறும் உண்மை.  

ஆனால் சோதிடம்; பூமியை மையமாக வைத்து பூமியில் தம் கதிர்களால் ஆக்கிரமிக்கும் கிரகங்களாக சூரிய குடும்ப கிரகங்களையும், பூமியின் உப-கிரகமான சந்திரனையும், நிழற் கிரகங்களான இராகு, கேது கிரகங்களையும் சேர்த்து அவற்றின் கதிர்வீச்சுகளால் பூமியில் வாழும் மக்களில் ஏற்படும் தாக்கங்களை விபரிக்கின்றன.

Read more...

உடம்பில் உள்ள மச்சங்களும் அதன் பலன்களும்

E-mail Print PDF


மச்சங்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என அறிவியல் அறிஞர்கள் மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது. இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும்.
மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும்.

சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.

மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.

நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.

ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மனசாட்சிக்கு அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.

குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள் திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.

சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு. அதற்குக் கீழே இருப்பது செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில் உள் செவ்வாய் மேடு வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.

உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.

வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு வழியிலோ அல்லது வழக்குகளிலோ நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல் வழக்கில் எதிராளிக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.

கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.

புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன் செல்வது பல பெண்களிடம் செல்வது போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.

சுக்கிரன் மேட்டிற்கும் வெளிச் செவ்வாய் மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது உள்ளங்கையின் சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு.
சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள் நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும்.

ஆம். சிலருக்கு பிறக்கும்போதே மச்சங்கள் ஏற்படுவதில்லை. புள்ளிகள் இயற்கையின் விதிமுறைகளை முன்கூட்டியே எடுத்துக் கூறுவதாகும்.

இங்கு வந்தால் இது நடக்கும் இங்கு மச்சம் வந்தால் இந்த யோகம் கிட்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். சிலருக்கு ஒரு சில காலக்கட்டத்தில் மச்சம் தோன்றும். சனி ராகு சேர்ந்திருந்து சனி திசையில் ராகு புத்தி வந்தால் கரும் புள்ளிகள் தோன்றும்.

அதை நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிலதை கூட்டி சிலதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

உடலின் பிறப்பகுதியைக் காட்டிலும் உள்ளங்கையில் ஏற்படக் கூடிய கரும்புள்ளிகள் பொரும்பாலும் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு புள்ளிகள் முதலில் கருப்பாகத் தோன்றாது. பழுப்பு நிறுத்தில்தான் தோன்றும். அப்போது அது நல்ல பலன்களைத் தரும்.

அதேப்போல உள்ளங்கையில் இருக்கும் வெண் புள்ளிகள் அதிக பணப் புழக்கம் அறிவுக் கூர்மை எதையும் திட்டமிட்டுச் செய்யும் திறனைத் தெளிவுப்படுத்தும்.

பழுப்பு வெண் புள்ளிகள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் புள்ளிகள் நல்லது. ஆரஞ்சு புள்ளிகளால் திடீர் சொத்து வாங்குவது போன்றவை ஏற்படும்.

சிவப்பாக இருப்பவர்களின் கைகளில்தான் ஆரஞ்சு நிற புள்ளிகள் தெரியும். நமக்கு இருந்தாலும் அது பழுப்பு நிறத்திற்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாததால் கண்டுபிடிக்க முடியாது.

ஆம் மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.

முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு கண் புருவம் இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விடஇ பின் தலையில் இருக்கலாம்.

சிலருக்கு கருப்பையும் பச்சையையும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.

என் தாத்தா சில ஜாதகங்களைப் பார்த்ததும் இந்த பெண்ணுக்கு நாக தோஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர்கள் இல்லையேஇ எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள்.

அதற்கு முட்டியில் இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பச்சையும் கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல்வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.

லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திரனுடன் ராகு சேர்ந்தாலோ பூர்வ புண்ணியாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெல்லாம் ஏற்படும்.

பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

செவ்வாய் நீச்சமாகி ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக - அகோரமாக காட்சி அளிப்பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது.

பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.

வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம் ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம் அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மான் போன்று மச்சம் மீன் போன்று மச்சம் என்பதெல்லாம் உண்மையா?
உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு கேது செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறுபடும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்கையில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.

மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போதெல்லாம் அது அரிதாகிவிட்டது.

நெல்லிக்காய் போல மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இதுபோன்ற மச்சங்கள் கொண்டிருப்பர்

27 - நட்சத்திரங்களிலும் பிறந்தோருக்கான குணாம்சங்களும் பெண்களுக்கான சிறப்பு அம்சங்களும்

E-mail Print PDF

பொதுவாக ஒருவரோடு நெருங்கிப் பழகி அவரது நல்ல கெட்ட குணங்களை அறிந்து கொள்ள முடியாத சந்தற்பங்களில் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாக வைத்து சோதிடம் கணித்துக் கூறுகின்றது. அதனால் போலும் திருமண பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பெறுகின்றது

 

Read more...

ஆண், பெண் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

E-mail Print PDF

சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் அங்க அவயங்களை வைத்து அவரின் குணநலன்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது. இது பண்டை காலந்தொட்டு இந்தியாவில் இருந்து வரும் பாரம்பரிய சாஸ்திர முறையாகும். இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண பலாபலன்களை நமது பண்டைய கால இலக்கியங்கள், புராணங்கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் அதிகமாக காணலாம். எல்லாப் பெண்களுக்கும் இவ் லட்சணங்கள் எல்லாம் அமைவதில்லை. அப்படி அமைந்துவிட்டால் இறைவிக்கு நிகரான வாழ்கை அமையும். பொதுவாக பெண் பார்க்கச் செல்லும் பெரியோர்கள் அங்க லட்சணங்கள் (சாமுத்ரிகா லட்சணம்) பார்ப்பத்திலும், இளையோர் அழகை பார்ப்பதிலும் கவனமாக இருப்பார்கள்.

Read more...

நவரத்தினம் - அதிஷ்டக் கற்களும் அவற்றின் பலன்களும்

E-mail Print PDF

அதிஷ்டக் கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு?

பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்.

Read more...

Page 3 of 5

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்