Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா அறிவியல்

மனித உடல் - நாம் அறிந்ததும் அறியாததும்

E-mail Print PDF

நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும். அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...

மனித மூளையின் எடை 1.36 கிலோ

மனிதனுக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

மனிதனின் முதுகுத்தண்டு 33 முள் எலும்புகளால் ஆனது.

மனிதன் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

உடலில் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக இருப்பான்.

மனிதனின் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

மனிதன் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.

பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

“புல்லட் ரெயில்கள்” இயங்குவது எப்படி எப்படி?

E-mail Print PDF

அதிவேக ரெயில்கள் (புல்லட் ரெயில்கள்) `கோட் சிஸ்டம்’ எனப்படும் கணினியில் பதியப்பெற்ற சங்கேதக் குறிப்பு முறையில் இயக்கப்படுகின்றன. ரெயில் எத்தனை மணிக்கு, எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று கணினியில் தகவல்களை கட்டளைகளாகப் பதிவு செய்து விட்டால்,  அது ரெயிலின் இயக்கத்தை மிகச் சரியாகக் கட்டுப்படுத்துகிறது.

எங்கு மெதுவாகச் செல்ல வேண்டும், எங்கு வேகம் எடுக்க வேண்டும், எங்கு நிற்க வேண்டும் என்பதோடு, வேறு பல பிரச்சினைகளையும் கணினி கவனித்துக்கொள்கிறது.

இந்தக் கணினி தரும் சங்கேதக் குறிப்புகள் ரெயிலின் டிரைவிங் பகுதி, அதை இயக்கும் பகுதி போன்றவற்றுக்கும் தகவல்களாகச் செலுத்தப்படுகின்றன. இதுவே வெளிநாடுகளில் நவீன ரெயில்கள் இயக்கப்படும் விதமாகும்

தானாகவே இயங்கும் ரெயில்கள், ரெயில் பாதையில் ஏற்படும் மின்காந்த அதிர்வலைகளை வைத்து இயக்கப்படுகின்றன. வேகம் எடுப்பதற்கு அதிக அதிர்வலைகளும், `பிரேக்’ போடுவதற்கும், மெதுவாகச் செல்வதற்குக் குறைந்த அதிர்வலைகளும் தேவை.

இந்த சங்கேதக் குறிப்புகள் இயங்கத் தவறினால் ரெயில் தானாகவே நின்றுவிடும். `ஆட்டோமேட்டிக் சிக்னல்’களைக் கவனிக்க இந்த ரெயிலில் ஓர் இயக்குநர் மட்டும் இருப்பார். அவர் இரண்டு பட்டன்களை அழுத்தி ரெயிலை `ஸ்டார்ட்’ செய்வார். மற்றபடி சிக்னல்களின் குறிப்புப்படி ரெயில் ஓடும். அபாய வேளைகளில் அதற்கான உத்தரவு செலுத்தப்பட்டு ரெயில் நிறுத்தப்படும்.

ஆசியாக் கண்ட நாடுகள்

E-mail Print PDF

ஆசிய நாடுகளின் பட்டியல்

நாடுகள்

தலைநகரம்

மக்கள் தொகை
(மில்லியனில்)

1. ஆப்கானிஸ்தான்

காபூல்

16.56

2. பாகாரேயின்

மனாமா

0.43

3. பங்களாதேஷ்

தாக்கா

122.0

4. பூடான்

திம்பு

1.40

5. புரூணை

பந்தர் சேரி பெகவான்

0.27

6. கம்போடியா

நாம்பென்

12

7. சீனா

பெய்ஜிங்

1,143

8. சைப்ரஸ்

நிகோசியா

0.7

9. இந்தியா

புதுடில்லி

1,014

10. இந்தோனேசியா

ஜகார்த்தா

183

11. ஈரான்

தெஹரான்

58.10

12. ஈராக்

பாக்தாத்

17.90

13. இஸ்ரேல்

டெல் அவிவ்

5.20

14. ஜப்பான்

டோக்கியோ

124

15. யோர்தான்

அம்மான்

3.2

16. கசகஸ்தான்

அல்மா-ஆடா

16.70

17. குவைத்

குவைத்

2.10

18. கிர்கிஸ்தான்

பிஷ்கெக்

4.40

19. லாவோஸ்

வியன்டியன்

4.10

20. லெபனான்

பெய்ரூட்

2.76

21. மலேசியா

கோலாலம்பூர்

18.60

22. மாலைதீவுகள்

மாலே

0.214

23. மங்கோலியா

உலன் படோர்

2.30

24. மியான்மார்

யாங்கூன்

41.6

25. நேபாளம்

கத்மந்து

19.4

26. வடகொரியா

ப்யாங்யோங்

22.4

27. ஓமன்

மஸ்கட்

2.2

28. பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்

114

29. பிலிப்பைன்ஸ்

மணிலா

60.9

30. கட்டார்

தோஹா

0.4

31. ரஷ்யா

மாஸ்கோ

148.0

32. சவூதி அரேபியா

ரியாத்

15.4

33. இலங்கை

கொழும்பு

17.3

34. சிங்கப்பூர்

சிங்கப்பூர்

2.7

35. தென்கொரியா

சியோல்

43.3

36. சிரியா

தமஸ்கஸ்

12.6

37. தாய்வான்

தாய்பெய்

20.6

38. தாஜிகிஸ்தான்

துஷான்பே

5.4

39. தாய்லாந்து

பேங்காக்

57.6

40. துருக்கி

அங்காரா

59.8

41. துர்க்மெனிஸ்தான்

ஆஷ்காபாத்

3.7

42. ஐ.அ.அ.

அபுதாபி

1.9

43. உஸ்பெகிஸ்தான்

தாஷ்கன்ட்

20.7

44. வியட்நாம்

ஹோ சி மின் நகரம்

69.3

45. யெமன்

சனா

13.3

காண்டாமிருகம்

E-mail Print PDF

காண்டா மிருகங்கள் மிகவும் பலசாலிகள் இவற்றின் குட்டையான கால்களில் முன்று விரல்கள் உண்டு. அகன்ற தோல் இவற்றை இணைத்திருக்கும். தோளின் முன்புறமும் பின்கால்களின் முன்பும் தடித்த தோல் மூன்று மடிப்புகளாகக் கவசம் போல் அமைந்திருக்கும்.

இதனை துப்பாக்கிக் குண்டு கூடத் துளைக்க முடியாது என்பது தவறு. உயிரோடிருக்கும் போது இத்தோல் மிருதுவாகத்தான் உள்ளது. காண்டாமிருகம் இறந்துவிட்டால் தோல் உயர்ந்து குண்டு துளைக்க முடியாதபடி உறுதியாகிவிடும்.

மூக்கிலிருந்து வளர்ந்திருக்கும் கொம்பு தோலிலிருந்து வளர்கிறது. இது எதிரிகளைத் தாக்க அல்ல. கிழங்குகளைத் தோண்டவே. எதிரிகளைப் பற்களாலேயே கடிக்கும். யானைகளைக் கூடக் கொன்றுவிடக் கூடிய பலம் படைத்த இவை வெகு வேகமாக ஓடும்.

கேட்கும் சக்தி அதிகம், பார்க்கும் சக்தி குறைவு. பிராணிகளைக் கொன்ற போதிலும் புசிப்பது இல்லை. புல் பூண்டு, கிழங்குகளையே சாப்பிடும். தனித்து வாழ்வதையே விரும்பும் இது. சேற்றில் விழுந்து புரள்வதென்றால் கொண்டாட்டம்.

இரவில்தான் இரைதேடும். தடவைக்கு ஒரு குட்டி போடும். அதற்குக் கோபம் வந்தால் உடலெல்லாம் இரத்தம் போல் சிவப்பாக வியர்த்துக் கொட்டும். மூர்க்கத்தனமான இம்மிருகம் கண்ட இடத்தில் மலம் கழித்து அசுத்தப்படுத்துவது இல்லை. எப்போதும் குறிப்பிட்ட ஒரு இடத்திலேயே மலம் கழிக்கும். புல், அடர்ந்து காடுகளில்தான் இவை வசிக்கும்.

நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறது?

E-mail Print PDF


உலகம் முழுவதும், பிலட்த்ஹௌந்து எனப்படும் நாய்தான் துப்பறிவதற்கு அதிகம் பயன்படுகிறது.

காணாமல் போன குழந்தைகளைப் பிடிப்பதற்கு பேர் போனது. பொதுவாக நாய்கள் மனிதனைவிட 50 மடங்கு மோப்ப சக்தி மிக்கது என்றாலும், பிலடுவிடம் ஏராளமான மோப்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10/ச.செ.மீ. பிலடுக்கு 170/ச.செ.மீ. பரப்பில் மோப்ப செல்கள் உள்ளன.

நீங்கள் அடுப்பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்தில் நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது. ஆனால் மோப்ப நாய்க்கு அப்படி இல்லை. எப்படி இவை மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா..? நம் உடலிலிருந்து விழுந்த செல்களின் மூலம்தான்...!

உங்கள் உடலிலிருந்து தினமும் சுமார் 5,00,0000,00000000 செல்கள் ஏராளமான வியர்வையுடன் கொட்டுகின்றன.

ஆனால் வியர்வை/தோலுக்கு அவ்வளவு வாசனை கிடையாது. வாசனையை தானம் செய்பவை செல்களில் படிந்துள்ள பாக்டிரியாக்கள்தான்.

1.௧.செ.மீ பரப்பிலுள்ள தோலில் 100௦௦ முதல் 10௦,000௦௦௦ பாக்டிரியாக்கள் உள்ளன. இவைதான் உங்களுக்கான தனி மணத்தை உருவாக்குபவை. உங்களின் வாசனை, உங்கள் கைரேகை போல்தான். இதுவும் தனித்துவம் மிக்கது.

நன்றி: பேரா.சோ.மோகனா


பாம்புகள் - கண்ணை நோக்கித் துப்பும் : கொடிய கருநாகம்

E-mail Print PDF

கருநாகம்

பொதுவாக நல்ல (நாக)பாம்புகள்,  மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன. ஆனால்.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra / விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி சீறிப் பீச்சுகின்றன.

எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை எதிரியின் கண்களை நோக்கி பீச்சுகின்றன.இவ் விஷம் கண்ணில் பட்ட உடனே கண் குருடாகிவிடும்.

இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாம்பு தப்பிவிடும்.இரையை ஏணைய பாம்புகளைப்போல் கடித்து உணவாக்கிக் கொண்டாலும், சில வேளை இரை சவாலாக விளங்கும்போது இவ்வாறு விஷத்தை பீச்சிக் கொல்கின்றன.

இப்பாம்புகள் உணவாக தவளைகள்,  சிறு முலையூட்டிகள் மற்றும் பறவைகளை உட்கொள்கின்றன.இந்த விஷம் உமிழும் கறுப்பு நாக பாம்பினால் 2 மீட்டர் தூரத்திற்க்கு விஷத்தை பீச்ச முடியும்.

இப் பாம்புகள் 1.5 மீட்டர் நீளம் வரை வளரும்.யூன், யூலை மாதங்களில் இணை சேரும் இப்பாம்புகள்,  6 தொடக்கம் 20 முட்டைகளை இட்டு 88 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

 

வெள்ளைநாகம்

பாம்புகளில் சில பாம்புகள் மட்டுமே நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும். உயிருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய விசத்தைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலேயே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்றப் பறவைகளின் முட்டைகபள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடைகாக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வர்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.
பாம்புகளுக்குக் காதுகள் கிடையாது.

பாம்பின் கால் பாம்பறியும். கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் "மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது" என்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னாடி நகர்கிறது. மண்புழுவுக்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால் பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்ட கம்பிகள் போல் இருக்கும். பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும்.

Page 6 of 8

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்