Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா புதிர்கள்

பூக்களும் பறவைகளும்

E-mail Print PDF

 

தந்திரக் கணக்கு

கண்டு பிடியுங்கள்

ஒரு குளத்தில் கொஞ்ச தாமரைப் பூக்கள் பூத்திருந்தன

அவ் இடத்திற்கு பறந்து வந்த பறவைகள் அதன் மேல் ஒவ்வொன்றாக உக்காந்தன. ஆனால் ஒரு பறவைக்கு பூ இருக்கவில்லை. (ஒரு பறவை மிகுதியாக இருந்தது)

அதனால்; ஒவ்வொரு பூவிலும் இரண்டு இரண்டு பறவைகளாக இருந்தன. அப்போது ஒரு பூ மிகுதியாக இருந்தது.

கேள்வி: குளத்தில் எத்தனை பூக்கள் இருந்தன?,  எத்தனை பறவைகள் வந்தன? முயற்ச்சித்துப் பாருங்கள்.

விடை 10 க்குள் அடங்கும்.

பேரன்மாரின் எடை

E-mail Print PDF

http://amman.fatcow.com/panippulam/pan_summer2010/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.jpg

தந்திரக் கணக்கு

பேரன்மாரின் எடை:

பம்பாயில் இருந்து வரும் கணக்கரின் மகன் புது மாப்பிள்ளை தமிழ் நேசனை வரவேற்க புறப்பட்ட கணக்கர், தன பேரன்மார் தமிழ்மாறன், தமிழ்ச்செழியன், தமிழ்ச்செல்வம் ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு நெல்லை சந்திப்புக்குச் சென்றார்.

நிலையத்தில் நுழைந்ததும் எடைப் பொறியைப் பார்த்த மாறன், "தாத்தா எடை பார்க்க வேண்டும், ரூ.1 கொடுங்கள்" என்று கேட்டான்.

தாத்தாவிடம் ரூபாயை வாங்கிக் கொண்டு எடைப் பொறியில் ஏறினான். "நானும் கூட நிற்பேன்" என்று செல்வம் அவனோடு எடைப் பொறியில் ஏறி நின்று கொண்டான். பணத்தை விழுங்கிய எடைப்பொறி எடை அட்டையைக் கக்கியது. அது 66 கிலோ காட்டியது.

அடுத்து செழியன் எடைப் பொறியில் ஏறினான். செல்வம் அவனோடும் ஏறி நின்று கொண்டான். எடை அட்டை இருவரும் சேர்ந்து 56 கிலோ காட்டியது.

மூன்றாவது மாறனையும், செழியனையும் எடைப் பொறியில் நிற்கச் செய்து ரூபாயைப் போட்டார் கணக்கர். அட்டை 70 கிலோ காட்டியது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வரும் ஒலி கேட்டு பேரன்மாரோடு விரைந்தார் கணக்கர்.

மகனை அழைத்துக் கொண்டு கணக்கர் எல்லோருடனும் நடந்தார். பையன்களின் கையில் இருந்த அட்டைகளை கவனித்த தமிழ் நேசன் "டேய், பிளாட்பாரம் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றான்.

"மாமா, இது பிளாட்பாரம் டிக்கெட் அல்ல. எடை அட்டை" என்றான் செல்வம்.

அட்டைகளை வாங்கிப் பார்த்த தமிழ் நேசன், அதில் எடை போட்டு இருப்பதைப் பார்த்து "இவைகள் உங்களுடைய எடை அட்டைகளா?" என்று கேட்டான்.

அவர்கள் இருவர் இருவராய் எடை பார்த்த விவரங்களைக் கூறினார்கள்.

"மாமா, நாங்கள் தனித்தனியா எடை பார்க்க வேண்டும். ரூபாய் கொடுங்கள்" என்றான், தமிழ்ச்செழியன்.

நான் கணக்குப் பார்த்து தனித்தனியா உங்கள் எடையை கூறுகிறேன் என்று தமிழ்மாறன்,தமிச்செழியன்,தமிழ்ச்செல்வம் ஆகியோரின் எடையை அவர்களிடம் கூறினான் தமிழ் நேசன். அவர்களுக்கு மகிழ்ச்சி.

அந்த மூன்று எடை அட்டைகளை வைத்து கணக்கரின் பேரன்மாரின் எடையை உங்களால் கூற முடியுமா?

Page 3 of 3

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்