Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா புதிர்கள்

கண்களை நம்பாதீர்கள் - மாயத் தோற்றம்

E-mail Print PDF

கீழே உள்ள சதுரங்களிற்கிடையில் எத்தனை வெள்ளைப் புள்ளிகளும் கறுத்தப் புள்ளிகளும் உள்ளன?

இங்கே உள்ள எல்லாமே வெள்ளைப் புள்ளிகள்

ஆனால் கட்டத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியை பார்க்கும் போது அருகில் உள்ள வெள்ளைப் புள்ளி கறுப்பாக தோன்றும்


மாயப் படங்கள் (Magic Pictures)

E-mail Print PDF

இதன் மேற்பரப்பினைக் கண்டுபிடியுங்கள்

சிந்திக்க சில...

E-mail Print PDF

முதலாவதக உள்ள முக்கோணதில் காணப்படும் நிற வடிவங்களை இடம் மாற்றி அதே அளவிலான முக்கோணத்தை அமைக்கும் போது இடைவெளி ஏற்படுமா?

முதலாவது முக்கோண வடிவத்தில் பதியப்பெற்ற நிற வடிவங்கள் அதே அளவுள்ள முக்கோண வடிவத்திற்கு இடமாற்றப்பெற்றுள்ளன

இங்கே இடைவெளி உருவாகிறதே. அது எப்படி ?

விடுகதைகளும் விடைகளும்

E-mail Print PDF

மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
-தீபம்

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
-நிலா

மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
-மஞ்சள்

இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-இதயம்

உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
-தக்காளி

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
-கடல்

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-கண்

மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?
-காளான்

எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
-மின்விசிறி

வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
-பூட்டும் திறப்பும்

காய்க்கும் பூக்கும் கலகலக்கும்
காகம் இருக்கக் கொப்பில்லை.
-நெல்லு-

கத்தி போல் இலை இருக்கும்
கவரிமான் பூ பூக்கும்
தின்ன பழம் கொடுக்கும்
தின்னாத காய் கொடுக்கும்
-வேம்பு.-

ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
-காட்ஸ்.-

கடலில் கலக்காத நீர்,
யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
-கண்ணீர்-

அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் – அவன் யார்?
-மேளம்-

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
-வாய்-

விடுமுறை இல்லாத கடை எது?
-சாக்கடை-

சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?
-தீக்குச்சி-

வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?
-பாம்பு-

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும்.
அது என்ன?
-கண் இமை-

வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?

– ஆறு அல்லது அருவி-

அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?

-வெங்காயம்-

வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

-நெருப்பு-


தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?

-முதுகு-

மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?

-சிலந்தி வலை-

முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?

-மின்சாரம்-

நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?

-சிலந்திவலை-

நடக்கவும்  மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்?

-மணிக்கூடு-

காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

-நிழல் அல்லது விம்பம்-

பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?

-சீப்பு-

வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?

-முட்டை-

ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?

-உள்ளங்கையும் விரல்களும்-

தொப்பொன்று விழுந்தான்  தொப்பி கழன்றான் அவன் யார்?

-பனம்பழம்-

சட்டையைக்  கழற்றினால் சத்துணவு அது என்ன?

-வாழைப்பழம்-

பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

– செத்தல் மிளகாய்-

அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?

-சங்கு-

தட்டச் சீறும் அது என்ன?
-தீக்குச்சி-

உரிச்ச புறா சந்தைக்குப் போகுது அது என்ன?

-தேங்காய்-

நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?

-தையல் ஊசியும் நூலும்-

உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?

-எறும்பு-

கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?

-நிழல்-

முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?

– நத்தை-

ஓயாது இரையும் இயந்திரம் அல்ல.உருண்டோடி வரும் பந்தும் அ
ல்ல அது என்ன?
-கடல் அலை-

வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?

-வழுக்கை-

தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?

-பென்சில்-

காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
-பலூன் -

பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?

-கிளி-

அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?

-அம்மி குளவி-

கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?

-பூசனிக்கொடி-

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

-கரும்பு-

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

-தலைமுடி-

வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?

-விளக்கு-

நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?

- நாய்-

உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?

-இளநீர்-

தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?

-அன்னாசிப்பழம்-

எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?

-நண்டு-

படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?

-பட்டாசு-

சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

-நுளம்பு-

கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?

– சோளப்பொத்தி-

மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?

-அன்னாசிப்பழம்-

ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?

-தேங்காய்-

நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?

-நத்தை-

ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர்,  தண்ணீர் அல்ல அது என்ன?

-கண்ணீர்-

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?

-மெழுகுதிரி-

தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?

-நுங்கு-

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?

-பற்கள்-

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

-அகப்பை-

ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

-முட்டை.-

ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

– கடிதம்-

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?

-கல்வி-

பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?

-முருங்கைமரம்-

தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?

-உப்பு –

குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?

-கத்தரிக்காய்-

காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான்.  அவன் யார்?

-புல்லாங்குழல்.

ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?

-ரத்தம்-

தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?

-உப்பு-

வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

-கத்தரிக்கோல்-

ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

-துடைப்பம்(தும்புத்தடி)-

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?

-ஊதுபத்தி-

மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

-பஞ்சு-

தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?

-எழுமிச்சம்பழம்(தேசிக்காய்)-

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

-விக்கல்-

கம்பிக் கட்டை

E-mail Print PDF

நூறு  மீற்ரர் நீளமான ஒரு வேலிக்கு கம்பி அடிக்க 5 மீற்றர் தூரத்திற்கு ஒரு மரம் நடவேண்டி உள்ளது.

ஒரு மரம் நட  150 ரூபா செலவாகும்.

கேள்வி:  தேவையான மரங்களை நடுவதற்கு (மாத்திரம்) எவ்வளவு செலவாகும்?

எந்தப் பக்கம்?

E-mail Print PDF

வடக்கு வாசல் வீடொன்றின் குசினி மேசையின் மீது கைபிடியுள்ள ஒரு தேநீர்க் கப் இருக்கிறது.

குசினி, வீட்டின் வட-கிழக்கு மூலையில் இருக்கிறது.

கிழக்குத் திசையை நோக்கி நிற்கும் ஒருவருக்கு அந்தக் கப்பின் கைபிடி வலப்பக்கமாக இருக்கிறது.

கேள்வி: கப்பின் கைபிடி எந்தப் பக்கத்தில் இருக்கிறது?

உதவி: கொடுக்கப் பெற்ற தரவுகள் சில இடங்களில் உதவியாகவும், சில சந்தற்பங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்காக தரப்படுகின்றன.

விடை: கப்பின் கைபிடி அதன் வெளிப்பக்கத்தில் இருக்கிறது.

Page 2 of 3

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்