Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை சினிமா

பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வருவேன்: ஸ்ரேயா நம்பிக்கை

E-mail Print PDF


நடிகை ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில், தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், இந்தியில் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.

இத்தனைக்கும் இவர் நடித்த, மிசன் இஸ்தான்புல், அவார்பன் போன்ற, இந்தி படங்கள் ஓரளவுக்கு, தயாரிப்பாளர்களின் கல்லா பெட்டிகளை நிரப்பத் தான் செய்தன.

இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டால், தமிழ், தெலுங்கு படங்களில் மிகவும் பிசியாக இருப்பதால், இந்தி படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

இப்போது கூட பாருங்கள், டொரண்டோவில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு, அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அங்கிருந்து, அப்படியே, டோக்கியோவுக்கு செல்ல வேண்டும். சிவாஜி படம், 3டி யில் உருவாகியுள்ளது. அது குறித்த விழா, டோக்கியோவில் நடக்கிறது. அதில், பங்கேற்பதற்காகவே, அங்கு செல்கிறேன்.

ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்காக புக் ஆகியுள்ளேன். அந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்த படத்துக்கு பின், பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வருவேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.

பர்பி படத்திற்காக 6 கிலோ எடை குறைத்த ஒல்லி இலியானா..

E-mail Print PDF


மெல்லிடையாள், இலியானாவை, தெலுங்கு ரசிகர்கள், நம்பர் ஒன் இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கின்றனர்.

நண்பன் படத்தில் நடித்த பின், தமிழ் ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார். இப்போது, இந்தி ரசிகர்களும் இலியானாவை, கொண்டாட தயாராக உள்ளனர்.

கிக் படம் வாயிலாக, இந்தி பட உலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இலியானா, தற்போது, பர்பியில் நடித்து முடித்துள்ளார்.

கால்ஷீட் கேட்டு, இயக்குனர் வந்த போது, ஆர்வமே இல்லாமல் தான், கதை கேட்டிருக்கிறார், இலியானா. பிறகு, அவர் கதையைச் சொன்ன விதம், இலியானாவை தூங்க விடவில்லையாம்.

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துவிட்டு, கிக் படம் மூலம், இந்தி பட உலகத்தில் நுழைந்தேன். அதில், என் கிளாமரில் ரசிகர்கள் கிறங்கிப்போயினர்.

ஆனால், இப்போது நடிக்கும், பர்பி என்னோட, நடிப்பாற்றலை முன்னிறுத்தும். இந்த கதையில் நடிக்க, ஆரம்பத்தில் ரொம்ப தயங்கினேன்.

இயக்குனர் கதை சொன்ன விதம், என்னை தூங்கவிட வில்லை. ஏனென்றால், கதை அப்படி. இந்த படத்துக்காக, ஆறு கிலோ எடை குறைந்துள்ளேன் என்கிறார் இலியானா

சினேகாவுக்கு விருது கிடைக்குமா?

E-mail Print PDF


சினேகா தற்போது நடித்து முடித்திருக்கும் படம், “ஹரிதாஸ்! பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, இந்தப் படத்தில், “கமிட்டான அவர், திருமணத்துக்கு பிறகும், சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அதோடு “என் கேரியரில், “ஹரிதாஸ் முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லி, ரஜினியின், “கோச்சடையான் படத்திலிருந்து கூட வெளியேறினார்.

இந்த படத்தில் சினோகாவுக்கு ஆசிரியை வேடம். “அது மிக வலுவான கதாபாத்திரம், என, கூறும் இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன், “இதுவரை சினேகா நடித்த வேடங்களில், இது சிறப்பாக இருக்கும்.

முக்கியமாக, அவர் நடிப்புக்கு விருது கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார் என்கிறார்.

பாகனால் உயர்வேன் ஜனனி

E-mail Print PDF

 


சின்னத்திரையிலும் மொடலிங் உலகிலும் வலம் வந்த ஜனனி ஐயர், ஆரம்ப நாட்களில் கொலிவுட் படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

பாலாவின் 'அவன் இவன்' படத்தில் பொலிஸ் பேபி வே'ம் கட்டிய பிறகு ஜனனி ஐயர் கொலிவுட்டில் மும்முரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நாயகியாக நடித்துள்ளார். இந்த காதல்- கொமெடி படத்தில் அனுபவித்து நடித்தேன்.

நாயகன் ஸ்ரீகாந்த்துடன் இரண்டு ^யட் பாடல்களிலும் ஒரு 'சோலோ' பாடல் காட்சியிலும் நடித்துள்ளேன்.

நான் நடிக்கும் போது படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் எனக்கு சினிமா சம்பந்தமாக 'டிப்ஸ்' வழங்கினார்.

தமிழ் சினிமாவில் 'பாகன்' படம் என்னை புதிய உயரத்துக்கு கூட்டிச்செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

"சொட்ட வாழக்குட்டி" படத்தில் தனுஷூடன் ஜோடி சேர்கிறார் அமலாபால்

E-mail Print PDF


தனுசுடன் அமலாபால் ஜோடி சேர்கிறார். ஏற்கனவே தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது.

ஆனால் திடீரென அமலாபாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை நாயகியாக்கினர்.

தற்போது சற்குணம் இயக்கும் 'சொட்ட வாழக்குட்டி' படத்தில் இருவரும் நடிக்கின்றனர்.

சற்குணம் 'களவாணி', 'வாகை சூடவா' படங்களை டைரக்டு செய்தவர்.

அமலாபால் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கிலும் ஒரு படம் கைவசம் உள்ளது.

N.S.A. Video - சுவிஸ் சசியின் இயக்கத்தில் ஒரு பாடல் காட்சி வீடியோவில்

E-mail Print PDF

சுவிஸ் நாட்டில் புகழ் பெற்று விழங்கும் N.S.A VIDEO நிறுவனத்தின் அதிபர் சசியின் இயக்கத்தில் சினிமாப் பாடல்  ஒன்று காட்சியாக்கப்பெற்றுள்ளது

காட்சிகளைப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

Page 10 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்