Tuesday, Mar 20th

Last update12:10:08 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை சினிமா

”ஜிகிர்தண்டா” ஏப்.25 வெளியாகிறது

E-mail Print PDF

பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் இரண்டாவது படம் ஜிகிர்தண்டா இந்த மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது.

ஒரு கோடிக்குள் எடுக்கப்பட்ட பீட்சா தமிழ் சினிமாவின் போக்கை சிறிது மாற்றியது என்று சொல்லலாம். அதன் ரீமேக் ரைட்ஸ் பெரும் தொகைக்கு விற்கப்பட்டது. மினிமம் பட்ஜெட்டில் நிறைவான படத்தை தர முடியும் என்பதை பீட்சா நெத்தியடியாகச் சொன்னது.

பீட்சாவை இயக்கியவரின் படம் என்பதால் ஜிகிர்தண்டாவை ருசிக்க அனைவரும் காத்திருக்கின்றனர். உண்மையில் இந்த ஸ்கிரிப்டைதான் கார்த்திக் சுப்பாராஜ் முதலில் எழுதினார். என்னுடைய பட்ஜெட் ஒரு கோடி என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் சொன்னதால் ஜிகிர்தண்டாவை ஒதுக்கி வைத்து பீட்சா கதையை எழுதி படமாக்கினார்.

ஜிகிர்தண்டாவில் சித்தார்த், லட்சுமி மேனன், சிம்கா, கருணா உள்பட பலர் நடித்துள்ளனர். வித்தியாசமான ஆக்ஷன் படம். ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏப்ரல் 25 படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார் - நடிகை லட்சுமி மேனன்

E-mail Print PDF

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்.

பேட்டி
நடிகர் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரிÕயும், யு டி.வி. நிறுவனமும் இணைந்து Ôநான் சிகப்பு மனிதன் என்ற படத்தை தயாரித்துள்ளன. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதையட்டி நடிகர் விஷால், நடிகை லட்சுமி மேனன் ஆகிய இருவரும் சென்னையில் இன்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது விஷால் கூறியதாவது:

நான் சிகப்பு மனிதன் படத்தில் பரபரப்பான 2 காட்சிகள் உள்ளன. அதில் ஒன்று கடலுக்கு அடியில் நானும், லட்சுமி மேனனும் நடித்த காட்சி, இன்னொன்று உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்த காட்சி. இது, ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் முத்தக்காட்சி போல் இருக்குமென்று எதிர்பார்க்க வேண்டாம். கதையோடு வருகிற முத்தக்காட்சி இது. இவ்வாறு விஷால் கூறினார்.

முத்தக்காட்சியில் நடிக்க தயார்

நடிகை லட்சுமி மேனனிடம், விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா? என்று நிருபர்கள் கேட்டார்கள்.

அதற்கு பதில் அளித்து லட்சுமி மேனன் கூறியதாவது:

கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார். மேற்கண்டவாறு லட்சுமி மேனன் கூறினார்.

கேரள நாட்டிளம் பெண்களுடனே - திரை விமர்சனம்

E-mail Print PDF

மலையாள பெண்ணைக் காதலித்து தோற்றவர் அப்பா ஞானசம்பந்தம். ஆனாலும் கேரள கலாசாரம் மீதும் பெண்கள் மீதும் அதீத ஆசை. தன் மகனுக்கு உன்னி கிருஷ்ணன் என்ற பெயர் வைத்து கேரள கலாசாரத்துடன் வளர்க்கிறார். தனக்கு மலையாள பெண்குட்டிதான் மருமகளாக வரவேண்டும் என்பதற்காக மகனை கேரளாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

அங்கு திருமண தகவல் நிலையம் நடத்தும் காளியிடம் சேர்கிறார் அபி. அங்கு காயத்ரியை கண்டு பிரேமிக்கிறார். அவரது தோழி ஒருவருக்கு உதவப்போன இடத்தில் அறிமுகமாகும் அபிராமியும் அபியை பிரேமிக்கிறார், இதற்கிடையில் அபியின் அம்மா ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீக்ஷிதாவை பேசி வைத்திருக்கிறார். மூவரில் யாரை அபி திருமணம் செய்கிறார் என்பதை காமெடி கெட்டிமேளம் கொட்டி சொல்கிறார்கள். காமெடி கதை வழியே கேரள கலாசாரத்தையும், கேரள-தமிழ்நாட்டுக்குமான உறவையும் சொன்னவிதத்தில் கவனம் பெறுகிறார் இயக்குனர்.

கதையின் நாயகன் அபி ஹீரோவுக்குரிய அங்க லட்சணங்களுடன் இருக்கிறார். ஆங்காங்கே நன்றாக நடித்திருந்தாலும் காமெடியிலும், காதலிலும் புகுந்து விளையாட வேண்டிய காட்சியில் தேமே என்று வந்து போகிறார். அவரது நண்பராக வரும் காளி காமெடிக்கு கியாரண்டி கொடுக்கிறார். கடைசி வரை ஒருவர் தினமும் வந்து அடித்துவிட்டு போவதும், அதற்கு ஒருவர் காரணம் கேட்கும்போது, அதை சொன்னா இந்த ஊரே அடிக்கும். அதுக்கு இவனே அடிச்சிட்டு போகட்டும் என்று சொல்லும் காட்சியில் சிரிப்பில் மிதக்கிறது தியேட்டர். ஞானசம்பந்தனின் தமிழ் கலந்த மலையாள பேச்சு ரசிக்க வைக்கிறது. கணவனின் கேரள மோகத்தை வெறுக்கும் மனைவியாக ரேணுகா கவர்கிறார். மூன்று நாயகிகளில் முதலிடம் பெறுகிறவர் காயத்ரி. முல்லை பெரியாரா கேட்டேன். உன் முல்லை சிரிப்பைத்தானே கேட்டேன்...

என்கிற வைரமுத்து வரிகளுக்கேற்ப அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். போலீசாக வரும் தீக்ஷிதாவும் அழகாக இருக்கிறார். நடிக்க வாய்ப்பு குறைவு. தனது படம் என்பதால் பாடலிலும், பின்னணி இசையிலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன். காமெடி படம் என்றாலும் பின்னணி இசை ரகிக்க வைக்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு கேரளாவின் அழகை அள்ளி வந்து கொட்டுகிறது.

அபியை மாறி மாறி கடத்தும் தாதா கும்பலின் சலம்பல்களும், கிளைமாக்ஸ் கலாட்டாவும் நாடகத்தனமாவை. ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதில் காட்டியிருக்கும் முனைப்பை மற்ற விஷயங்களிலும் காட்டியிருந்தால் கேரள பெண்கள் இன்னும் கூடுதலாக ரசிக்க வைத்திருப்பார்கள்.

குக்கூ - திரை விமர்சனம்

E-mail Print PDF

பார்வையற்ற இளைஞர் தினேசுக்கு, பார்வையற்ற மாளவிகா மீது காதல். மாளவிகாவுக்கு பார்வையுள்ள இளைஞன் மீது காதல். இது தினேஷூக்குத் தெரியவரும்போது, தன் காதலை கண்ணீரால் அழித்து விடுகிறார். ஆனால் மாளவிகாவின் காதல் தோற்றுவிட தினேஷ், மாளவிகாவின் காதல் பூத்து, காய்த்து, கனியாகிறது. மாளவிகாவின் அண்ணன், அவளை தன் கூட்டாளி ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறான். தினேஷை அடித்து நொறுக்கி ஆஸ்பத்திரியில் படுக்க வைக்கிறான். மாளவிகா கண்காணாத இடத்துக்கு காணாமல் போகிறாள். மீண்டும் இவர்கள் இணைந்தார்களா என்பது கதை.

இந்த காதல் கதை படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வதற்கான மைய இழை. இதன் வழியாக சென்னையில் வாழும் பார்வையற்றவர்களின் உலகத்துக்கு அழைத்துச் சென்று இப்படியும் ஓர் உலகம் நம்மோடு இருக்கிறது என்பதை காட்டிய வகையில் தனித்துவம் பெறுகிறது படம். கனமான கேரக்டரில் நடித்து அசத்தி இருக்கிறார் தினேஷ். தலையை சாய்த்து, கண்களை உருட்டி, வார்த்தைகளை வெட்டிப் பேசும் பார்வையற்றவரின் உடல் மொழியை பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாளவிகாவின் ஸ்பரிசம் கிடைக்கும்போதெல்லாம் அதை வெளிப்படுத்தும் போதும், காதலில் தோற்று, மாளவிகாவின் திருமணத்துக்கு நன்றி கார்டு அடித்து கொடுக்கும்போதும் போலீஸ் நிலையத்தில் கதறும்போதும் கலங்க வைக்கிறார்.

மாளவிகா இன்னும் ஒருபடி மேல். கையை நீட்டி நடந்து பார்வையற்ற பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். பார்வை உள்ளவனை மணக்கப்போகும் சந்தோஷத்தில் பூரித்து, அது ஏமாற்றமாகும்போது கலங்கி, அண்ணன் கொடுமையில் அழுது என காட்சிக்கு காட்சி மிரட்சியை ஏற்படுத்துகிறார். தான் காதலித்தவன் இன்னொரு பெண்ணை மணக்க போவதாகச் சொல்வது, தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் உடைத்த செல்போனை தேடுவது என வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்சராக விளாசுகிறார்.

தினேஷின் நண்பராக வரும் பார்வையற்ற இளங்கோ, மாளவிகாவின் தோழியாக வரும் நந்தினி, முருகதாஸ், நாடக குழு நடத்தும் ஈஸ்வர் எல்லோருமே அவ்வப்போது ரிலாக்ஸ் தருவதோடு கதைக்குப் பலமாகவும் இருக்கிறார்கள். இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான் என்றாலும் படத்துக்கு உயிர் கொடுப்பவர் இளையராஜா. பொருத்தமான இடத்தில் அவரது பாடல்களைப் பயன்படுத்தியிருப்பதும், மற்ற இடங்களில் அவர் பாணியில் பின்னணி இசை அமைத்திருப்பதும் அருமை. அழகான இந்தக் கதையை வண்ணமாகத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா.

அழகாகவும், யதார்த்தமாகவும் கதை சொன்ன இயக்குனர், கடைசி 20 நிமிட கிளைமாக்சில் வழக்கமான தமிழ் சினிமா ஓட்டியிருப்பதுதான் மைனஸ். கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்து அனுப்ப வேண்டும் என்கிற வழக்கமான கிளைமாக்ஸ் பார்முலாவுக்குள் சிக்கி படத்தையும் சிக்க வைத்திருக்கிறார். எந்த பிரச்னை என்றாலும் ஒன்றுகூடி நியாயம் கேட்கும் பார்வையற்றவர்கள், தினேஷின் காதல் பிரச்னைக்கு வெறும் பணம் மட்டும் கொடுத்து உதவுகிறார்கள். மூன்று லட்சம் ரூபாயை ஒரு பார்வையற்றவர் தனி ஆளாக கொண்டு செல்கிறார். பார்வையுள்ள நண்பன் முருகதாஸ் உடன் சென்றிருக்கலாமே. மும்பையில் இருக்கும் மாளவிகாவைத் தேடி தனியாக தினேஷ் செல்வதும், இடையில் புனேயில் அவரைச் சந்திப்பதும் அக்மார்க் சென்டிமென்ட் சினிமா.

காதல் சொல்ல ஆசை - திரை விமர்சனம்

E-mail Print PDF

வேலையில்லாமல் தவிக்கும் அசோக்கிற்கு தடாலடியாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு பெரும் கோடீஸ்வரரை, கொலை முயற்சியில் இருந்து காப்பாற்ற, அவர், தன் நிறுவனத்தில் அசோக்கை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார். அதே கம்பெனியில்  வேலை செய்யும் வஷ்னா மீது அசோக்கிற்கு காதல் வருகிறது. அவரது தொலைந்து போன செல்போனை அசோக் எடுத்துக் கொடுக்கிறார்.

வில்லன்களால் கடத்தப்பட்டவரைக் காப்பாற்றுகிறார். இருவருக்குமே காதல் இருந்தும் சொல்ல தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் கோடீஸ்வரரின் மகன் மது வருகிறார். அவர் வஷ்னாவை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இறந்து போன காதலி போலவே அவர் இருப்பதால் அவரையே திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் அவரது அன்பை பெற முயற்சிக்கிறார். மதுவும் வஷ்னாவும் காதலிப்பதாக கருதும் அசோக் அவரை விட்டு விலகிச் செல்கிறார். அசோக்கும், வஷ்னாவும் காதலைச் சொன்னார்களா? மதுவுக்கும், வஷ்னாவுக்கும் திருமணம் நடந்ததா என்பது மீதிக் கதை.

80-களிலேய பல பேர் அரைத்து மாவாக்கிய கதையை, புதிதாகத் தரப்பார்த்திருக்கிறார்கள். எது மாதிரியும் இல்லாமல் போயிருக்கிறது. படத்தின் முன்பகுதியை கலகலப்பாகக் கொண்டு செல்வதற்கு ரொம்பவே மெனக்கெடுகிறார் அசோக். வஷ்னாவை இம்ப்ரஸ் பண்ண அவர் செய்யும் சேட்டைகள் கலகல ரகம். தான் காப்பாற்றியவர் தன்னை பாதுகாவலனாக நியமிக்கும்போது என்னை அடியளாக்க பார்க்குறீங்களா என்று கொதிப்பது, நல்ல நடிப்பு. வலுக்கட்டாயமாக போலீஸ் வேலைக்கு அனுப்ப நினைக்கும் அப்பாவை வெறுப்பதும் பிறகு அவர் ஆசையில் நியாயம் இருப்பதை உணர்வதுமாக நிறைவாகச் செய்திருக்கிறார். இவரைப் போலத்தான் மது ரகுராமும், காதலியை இழந்த சோகம், அவளைபோன்ற தோற்றம் கொண்டவளை பார்த்த சந்தோஷம், லேசாகத் தலைதூக்கும் வில்லத்தனம், பின்பு நிலை உணர்ந்து மாறும் மனமாற்றம் என கேரக்டரை உள்வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார்.

வஷ்னாவுக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை. அசோக், மதுவுடன் ஆடும் டூயட்டில் கவர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது. வில்லனாக வரும் ராஜேந்திரனும் அவரது அடியாட்களும், சீரியசான வில்லனாகவும் இல்லாமல் காமெடியனாகவும் இல்லாமல் இருக்கிறார்கள். அசோக்கின் நண்பனாக வருகிறவர் சிரிக்க வைக்கிறார். ஆனால் தம்பி ராமையாவை அப்படியே காப்பி அடித்திருப்பது எரிச்சல். எம்.எஸ்.பாஸ்கரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.

எம்.லேகாவின் இசையில் பாடல்கள் கேட்கும் தரம். மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் ஒரு காதல் கதையை தர முயற்சித்திருக்கிறார்கள். நடிப்பு, உழைப்பு, தொழில்நுட்பம் அனைத்தும் ஒத்துழைத்திருந்தபோதும் திரைக்கதை வடிவம் மற்றும் பார்த்த காட்சி அமைப்புகளால் சொல்ல வந்ததை சரியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் வெளியாகும் "சிகப்பு மனிதன்".

E-mail Print PDFஏப்ரல் 24 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபாவுக்கான தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் திரையரங்குகளின் வசூல் கணிசமாக குறையும். பெரிய படங்கள் தேர்தலை முன்னிட்டு வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கும் முனைப்பில் உள்ளன. ஏப்ரல் 11 வெளியாவதாக அறிவித்த கோச்சடையானும் பின்தங்குகிறது. அதே தேதியில் வெளிவருவதாக அறிவித்த நான் சிகப்பு மனிதனின் நிலை என்ன?

ஏப்ரல் 11 கோச்சடையான் வெளியாவதாக அறிவித்த போதே விஷால் கலங்கவில்லை. கோச்சடையான் வந்தாலும் நான் சிகப்பு மனிதன் கண்டிப்பாக சொன்ன தேதியில் வெளியாகும் என்றார். கோச்சடையானுக்கே பயப்படாதவர் தேர்தலுக்கா கலங்கப் போகிறார்?

Page 2 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்