Saturday, Jun 24th

Last update08:56:50 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை வாங்க சிரிக்கலாம்

எவ்வளவு செலவாகும்?

E-mail Print PDF

ஒரு கோ-எடுகேசன் காலேஜின் முதல் நாள். புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் ப்ரின்சிபால்.

"பொண்ணுங்களோட ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது. யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.

யாராவது ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும்.

மூணாவது தடவையா மாட்டினா 300 ரூபா கட்டணும்" என்றார் ப்ரின்சிபால்.

ஒரு மாணவன் கேட்டான், "சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும் சேர் என்று?"

அறுவை!

E-mail Print PDF

காலேஜ் புரொபசர் : என் கிளாஸ் ரொம்ப அறுவையா இருக்குன்னு இந்த பையன் பண்ற வேலை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை சார்!

பிரின்ஸிபால் : என்ன செய்யறான் அப்படி?

புரொபசர் : டைப்ரைட்டர் மிஷின வச்சு லொட லொடன்னு தட்டறான். ஏன்னு கேட்டா, நோட்ஸ் எடுக்கறேன்னு சொல்றான் சார்.

அட்வைஸ்!

E-mail Print PDF

"இப்டி ஊதாரித்தனமா செலவு செய்யாதடா மச்சி, நாளைக்குன்னு ஏதாவது சேமிச்சு வக்க வேண்டாமா?"

"என்ன திடீர்னு அட்வைஸ் பண்ற?"

"பின்ன என்ன நான் ஒரு வாரமா உங்கிட்ட 1000 ரூபா கடன் கேக்கறேன் எப்ப கேட்டாலும் காசில்ல, காசில்லன்னே சொல்லிட்டிருக்கியே"


முட்டாள்!

E-mail Print PDF

ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த புரிய வைக்க முடியலையோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?

மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்...

ரத்தம்!

E-mail Print PDF

ரத்தம் கொடுக்கறவங்களுக்கு வேலைன்னு சொன்னாங்க அத நம்பி போய் மோசம் போயிட்டேன்டா மச்சான்!

ஏன் கொடுத்துட்டு வேலைய கரெக்ட் பண்ண வேண்டியதுதான?

14 காலன் ரத்தம் வேணுமாம்!

படிப்பு ஆர்வம் !

E-mail Print PDF

படிப்பு ஆர்வம்தான் உன்னை இப்படி திருடனாக்கிடுச்சா?

ஆமாங்க எஜமான் முதல்ல லைப்ரரியில் பெரிய பெரிய புத்தகமா திருட ஆரம்பிச்சு இப்ப இப்டி ஆயிட்டேங்க.

Page 3 of 4

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்