Saturday, Oct 21st

Last update05:45:10 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழக வெள்ளிவிழா - நிகழ்வுகள் - புதிய படங்கள் இணைப்பு 25.12.2012

E-mail Print PDF

 

வெள்ளி விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கனடா - பண் கலை பண்பாட்டுக கழகம் தனது 25 வருட பூர்த்தியை 25,12,2012  நத்தார் தினம் ”வெள்ளி விழா”வாக கொண்டாடியது. இவ் விழாவில் கனடா வாழ் ஊர் மக்கள் அனைவரும் அணிதிரண்டு  வருகை தந்து சிறப்பித்தார்கள்.

வெள்ளி விழா நிகழ்வுகள் இக் கழகத்தினை உருவாக்கி வளர்ப்பதில் முன்னின்று உழைத்த ”இளந்தொண்டன்” அமரர். விமலன்(சங்கர்) கந்தசாமி அவர்களின் பெற்றோர்களான திரு. திருமதி. கந்தசாமி-குலமணி தம்பதியினரால் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து. உயிர் நீர்த்த உறவுகளுக்கும், கழக நிர்காகிகளுக்கும் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப் பெற்றதுடன் தமிழ்தாய் வாழ்த்தும், கனடா நாட்டின் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடப்பெற்றன. கனடா- பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 25 வது பிறந்த நாள் விழாவில் 3x2 அடி அளவுள்ள கேக் வெட்டப்பட்டு கழக கீதம் பாடப்பெற்று சிறப்பாக கொண்டாடப் பெற்றது.

இவ் விழாவின் பிரதம விருந்தினராக பல்மொழி வித்தகரும், பல்மொழி எழுத்தாளரும், தலை சிறந்த பேச்சாளருமான பெரியார்-அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மார்க்கம் மாநகரசபை பிரதிநிதியும், சிறந்த கல்விமானும், மார்க்கம் மாநகரசபையில் பல செயல் திட்டங்களுக்கு தலைமைப் பதவி வகிப்பவரும், கனடாவின் மூர்த்த தமிழ் அரசியல் வாதியுமான பெருமதிப்பிற்குரிய கணபதி லோகன் அவர்களும்; எமது உறவுகளில் ஒருவரும், பல்கலைக் கழகங்களில் வழங்கப்பெறும் அதிஉயர் பட்டமான “கலாநிதி” பட்டத்தினை பொறியியல் துறையில் ஜேர்மனி நாட்டில் பெற்றுக் கொண்டவருமான Dr.-Ing. பகிரங்கன் சிவபாதம் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

இவ் விழாவின் போது எம் மூர் மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அத்துடன் இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த பிரதம, சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப் பெற்று கேடயங்கள் வழங்கி பாராட்டப்பெற்றனர்.

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டங்களை வளர்த்தெடுக்க முன்நின்று பணம், பொருள் உதவிகள் புரிந்த எமது ஊர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப் பெற்றதுடன் கேடயங்கள் வழங்கியும் பாராட்டப்பெற்றனர்.

வெள்ளி விழா நிகழ்வுகள் பார்வையிட இங்கே அழுத்துங்கள் பகுதி - 1

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்ற Dr.-Ing. பகிரங்கன் சிவபாதம் அவர்கள் கனடா ரொறொன்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கழக அங்கத்தினர்களாலும், உறவுகளாலும் வரவேற்கப்பெறும் காட்சி-பார்வையிட இங்கே அழுத்துங்கள்

பண் கலை பண்பாட்டு கழகம் - கனடா

Read more...

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் இளையோருக்கான - "தமிழ்" சொல்வது எழுதல் போட்டி - 2012

E-mail Print PDF

 

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா நடாத்தும் இளையோருக்கான சொல்வதெழுதல் போட்டி - தமிழ்

சொல்வதெழுதல் போட்டிக்கான பிரிவுகள்; வயது அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதுடன், போட்டியின்போது பிள்ளைகளின் அடையாள அட்டை மூலம் அவர்களின் வயது சரிபாக்கப்படும்.

இப்போட்டி நவம்பர்மாத இறுதியில் இடம்பெறும் என்பதனை அறியத் தருவதுடன்; போட்டி நடைபெறும் இடம், காலம் என்பன பின்னர் அறியத் தரபெறும்

போட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்

இப் போட்டியானது ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இடம்பெற உள்ளமையால் நீங்கள் போட்டி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்ததும் போட்டி ஆரம்பமாகும்.

உங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்களை நீங்களே உங்கள் அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும், இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்

போட்டி பற்றிய முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ள திரு. மனுவேந்தன் அவர்களை (416-569-5121) அழையுங்கள்

கழக இணையத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கழகத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் - இங்கே அழுத்துங்கள்

இள மழழைகள் பிரிவு:- பிறந்த வருடம்:2007-2008
1.   கறி
2.   கண்
3.   தோடு 
4.   மண் 
5.   கால்
6.   அடி
7.   தோல்
8.   துணை
9.   தடி
10.  மிதி
11.  முடி
12.  விடு
13.  பல் 
14.  பாடு
15.  சொதி
16.  கொடு
17.  வீதி
18.  காது
19.  பொன்
20.  பாதி
21.  கலை
22.  கதை  
23.  ஆடை
24.  மழை
25.  நனை
26.  வீணை 
27.  கல்
28.  மேசை
29.  போடு
30.  நாய்

முதுமழழைகள் பிரிவு:-பிறந்த வருடம்:2005-2006

1.   சிறுமி
2.   பாம்பு
3.   பேச்சு
4.   கொண்டை
5.   தினம்
6.   சோகம்
7.   திரள்
8.   நினைவு
9.   மறதி
10.  ஞானம்
11.  சக்தி
12.  கோபம்
13.  பிறகு
14.  கல்வி
15.  காற்று
16.  சிவன்
17.  அரசி
18.  அழகு
19.  கவிதை
20.  வெற்றி
21.  முடிவு
22.  இறுதி
23.  உறவு
24.  கிழவி
25.  பழமை
26.  தலைவி
27.  மீறல்
28.  மலிவு
29.  பாவம்
30.  தங்கை

மத்தியபிரிவு :-பிறந்த வருடம்:2003-2004
1.   பருப்பு
2.   பிறந்த 
3.   தாக்கம்
4.   அரசன்
5.   புலவன்
6.   பந்தம்
7.   இன்பம்
8.   உயரம்
9.   பிடித்த
10.  கிராமம்
11.  சமயம்
12.  வட்டம்
13.  சிரிப்பு 
14.  பங்கிடு
15.  படிப்பு
16.  பக்கம்
17.  முருகன்
18.  தண்ணீர்
19.  அண்ணன்
20.  மீனாட்சி
21.  இறங்கு
22.  அணிதல்
23.  ஓரளவு
24.  வாகனம்
25.  பார்வதி
26.  இனிப்பு
27.  நடிப்பு
28.  கருத்து
29.  சூரியன்
30.  அளத்தல்


மேற்பிரிவு :-பிறந்த வருடம்:2001-2002
1.   ஏராளம்
2.   விளக்கு
3.   மறுப்பு
4.   நெருப்பு
5.   பாடசாலை
6.   கிழவன்
7.   பேரறிவு
8.   தலையிடி
9.   தலைவன்
10. இராகம்
11. பிழையான
12. குளிர்மை
13. கழகம்
14. பிழைப்பு
15. களைத்த
16. எழுத்து
17. சோம்பல்
18. புளிப்பு
19. ஒழுங்கு
20. சொந்தம்
21. இழுப்பு
22. பழமொழி
23. குறும்பு
24. அழிப்பு
25. பொரியல்
26. சிந்தனை
27. ௬ட்டம் 
28. அழுதான்
29. கலைஞன்
30. புலவன்
31. மனிதன்
32. பாய்தல்
33. உலகம்
34. படிப்பு
35. கடிதம் 

அதிமேற்பிரிவு :-பிறந்த வருடம்:1999-2000

1.   கற்கண்டு
2.   நள்ளிரவு
3.   சருக்கரை
4.   சந்தனம்
5.   நீர்த்துளி
6.   சுணக்கம்
7.   பொரித்தல்
8.   நினைத்தால்
9.   உயர்ச்சி
10. பெரியவன்
11. ஒலித்தல்
12. பதற்றம்
13. காய்ச்சல்
14. புன்சிரிப்பு
15. முதியவள்
16. இழுத்தல்
17. நம்பிக்கை
18. ஏமாற்றம்
19. விநாயகன்
20. ஒழுக்கம்
21. கலைவாணி
22. மண்டபம்
23. வருத்தம்
24. வாழ்பவன்
25. வாசித்தல்
26. சரசுவதி
27. நல்லவன்
28. ஒட்டகம்
29. பிறந்தநாள்
30. ௬ட்டுத்தொகை
31. விழுங்கு
32. விளங்கு
33. பாடுவோம்
34. தேடுவோம்
35. தேவாரம்
36. மணக்கிறது
37. பேச்சுக்கள்
38. உற்சாகம்
39. உடுப்புகள்
40. கொடுங்கள்

அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகளை இப்போட்டிகளில் பங்குகொள்ள செய்வதன் மூலம் பிள்ளைகளின்
தமிழறிவு,  சமயஅறிவு,  பண்பாடு,  தமிழ் சமூகத்துடனான தொடர்பு என்பன வளர்ச்சியடையும்.

அத்துடன் இப் போட்டிகளில் பங்குபற்றுவதனால் பரீட்சைகளின் போது ஏற்படும் மனப் பயம், மேடைக் கூச்சம்
என்பன தெளிவு பெற்று
பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில் முன்னிலை வகிக்க வழிவகுகின்றது

எனவே பரிசில்களை விட பங்குபற்றும் திறமையும்,  ஆர்வமும் மேலானது

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா

வாணிவிழா 2012 - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

படங்கள்: முகுந்தன் கனகரத்தினம் அவர்கள்

மானிடனாக பிறந்த ஒவ்வொருவரும் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளங்களையும் (ஐஸ்வரியங்களையும்) பெற்று பேரோடும் புகழோடும் இன்புற்று வாழவே விரும்புகின்றார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களின் கர்ம வினைப் பயனால் எல்லா வளங்களும் எல்லோர்க்கும் கிடைப்பதில்லை. இந்த கர்ம வினைகளை வேரறுக்கும் சக்தி இறையருளுக்கு உண்டு என்பது சைவசமய உண்மை. இறைவனை துதி செய்து இறையருளைப் பெற்றோமேயானால் எல்லா வளங்களையும் பெற்று நாமும் இன்பமாக வாழலாம்.

இப் பூவுலகில் மானிடராகப் பிறந்து இலட்சுமி தேவியின் அருள்கடாட்சம் குன்றியமையால் சகல ஐஸ்வரியங்களையும் இழந்து "நடைப் பிணமாக" வாழ்வோரையும்; துர்க்காதேவியின் அருள் கடாட்சம் குன்றியமையால் உற்சாகமும், மனவலிமையும், தன்னம்பிக்கையும் அற்றவர்களாக உடம்பில் தென்பின்றி அங்கவீனர்கள்போல் துக்கிகளாகி "சோம்பேறிகளாக" வாழ்வோரையும் தனது அருள்காட்சத்தால் மாமேதைகளாக்கி இராசசபையிலும், கற்றோர் அவையிலும் சரியாசனம் கொடுத்து மேன்மைப்படுத்தி சிறப்புற வாழ வைக்கும் "கலைவாணி"க்கு பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா 20.10.2012 அன்று விழா எடுத்து வழிபாடு செய்தது.

சர்வலோக நாயகியாகிய பரமேஸ்வரி; வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் அருளும் பொருட்டு துர்க்கா தேவி, இலட்சுமி தேவி, சரஸ்வதி தேவி ஆகிய தோற்றத்துடன் முப்பெரும் தேவிகளாக காட்சி தருகின்றாள். அதன் பின் துர்க்காதேவி 9 அம்சங்களைக் கொண்ட நவதுர்காவாகவும், இலட்சுமி தேவி 8 அம்சங்களைக் கொண்ட அஷ்ட இலட்சுமிகளாகவும், சரஸ்வதி தேவி 8 அம்சங்களைக் கொண்ட அஷ்டசரஸ்வதிகளாகவும் தோற்றமளிக்கின்றனர்.

இவற்றுள் எந்த அம்சத்தை நாம் வணங்கினாலும் முப்பெரும் தேவிகளான துர்கை, இலட்சுமி, சரஸ்வதியின் பேரருள் பெற்று சீரோடும் சிறப்போடும் பெருவாழ்வு வாழலாம் என்பது சைவ சமைய நியதியாகும்.

இவ்விழா நிகழ்வுகள் யாவும் நிழல் படங்களாக கீழே பதிவாகியுள்ளன. இந் நிகழ்வை தானாகவே முன்வந்து  தமது அதிநவீன தொழில் நுட்ப உபகரணங்கள் மூலம் எமது சமூகத்திற்கு செய்யும் ஒரு தொண்டாக வீடியோ படம் எடுத்து சிறப்பித்த "அபிநயா வீடியோ" உரிமையாளர் மதிப்பிற்குரிய  ஆனந்தன் அவர்களின் சேவையை பாராட்டுகின்றோம். இவ் வீடியோ கூடிய விரைவில் எம்மூர் இணையங்களில் உங்கள் பார்வைக்காக பதிவிலிடப்பெறும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.

இவ் விழாவை சிறப்புற நடாத்துவதற்கு "பெரிய சிவன் ஆலய விழா மண்டபத்தினை" சலுகை அடிப்படையில் குறைந்த கட்டணத்துடன் எமக்கு வழங்கிய ஆலய தர்மகர்த்தா "அடியார்" அவர்களுக்கும், இவ் விழாவில் பங்குபற்றி சிறப்பித்த எம்மூர் உறவுகள் அனைவருக்கும், மேடை அலங்காரம், பூசைக்கு தேவையான நெய்வேத்தியம், மற்றும் உணவுகள் தயாரிக்க உதவிய அன்பு உள்ளங்க்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

 

எல்லா நிகழ்வுகளையும் பார்வையிட இங்கே அழுத்துங்கள்


பேச்சுப் போட்டி - 2012 முடிவுகள் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

E-mail Print PDF

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் கடந்த 30.09.2012 அன்று நடாத்திய பேச்சுப் (தமிழ்)போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. இவற்றிற்கான பரிசில்கள் 20.10.2012 அன்று நடைபெற இருக்கும் வாணிவிழா - 2012 நிகழ்வின் போது வழங்கப்பெற உள்ளமை குறிப்பிடத் தக்கது.

பரிசில்கள் வழங்கப்பெறும்போது பெற்றோரும் மேடைக்கு அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பெற இருப்பதால் வெற்றி பெற்றவர்கள் மேடைக்கு வரும்போது தமது பெற்றோருடன் வருகை தரல் வேண்டும். அத்துடன் பரிசில்களை அன்று பெறத் தவறியவர்களுக்கு பின்பு பரில்கள் வழங்கப்பெற மாட்டாது என்பதனையும் அறியத் தருகின்றோம்.

கழக இணைய முகவரி அறிமுகம்: எதிர்வரும் காலங்களில் பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் நிகழ்வுகளை http://panculture.org/ என்ற கழக இணையத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

பேச்சுப் போட்டி - 2012 -  முடிவுகள்
இள மழழைகள் பிரிவு:பிறந்த வருடம்:2007-2008
முதலாவது இடம்:  பகிசன்  சிவநேசன்
இரண்டாவது இடம்:  சஸ்மிதா ராஜேஸ்வரன்
மூன்றாவது இடம்:  ஆதித்தியா பாலசிங்கம்

பங்குபற்றிய ஏனையோர்:
பிரித்திகா விநோதருபன்

முது மழழைகள் பிரிவு:பிறந்த வருடம்:2005-2006
முதலாவது இடம்:  துர்க்கா பாலகுமார்
இரண்டாவது இடம்:  கஜானன் கிருபைநாதன்
மூன்றாவது இடம்:  சபிநயா முருகதாஸ் 

பங்குபற்றிய ஏனையோர்:
திவ்யன் விமலருபன்
அனோஜ் நடேசன்

மத்தியபிரிவு:  பிறந்த வருடம்:2003-2004
முதலாவது இடம்:  கோபிசன் விநோதருபன்
இரண்டாவது இடம்:  சதுஜன் பாலகுமார்
மூன்றாவது இடம்:  வேணுஜன் நந்திவரன்   

பங்குபற்றிய ஏனையோர்:
கஜாயினி சண்முகம்

மேற்பிரிவு:  பிறந்த வருடம்:2001-2002
முதலாவது இடம்:  சலோபன் விமலரூபன்   
இரண்டாவது இடம்:  தனுஜன் நந்திவரன்
மூன்றாவது இடம்:  சாரங்கி சிவனேஸ்வரன்

பங்குபற்றிய ஏனையோர்:
ஆரணிசா நடேசன்
சியானி சிவானந்தம்  

அதிமேற்பிரிவு:  பிறந்த வருடம்:1999-2000
முதலாவது இடம்:  அபிசன் நந்திவரன்  
இரண்டாவது இடம்:  சிவவிதுனா சிவனேஸ்வரன்
மூன்றாவது இடம்:  அபிதாரணி நடேசன்

பங்குபற்றிய ஏனையோர்:
ராகவி கிருபைநாதன்
விபிசன் நடேசன்
சபேசன் சிவகுமார்

இப் பேச்சுப்போட்டியில் பங்கு பற்றிய எல்லா மாணவ மாணவிகளுக்கும்; அவர்களை ஊக்கப் படுத்தி மனப் பாடம் செய்வித்து நேரத்திற்கே வருகை தந்து பங்குபற்ற  செய்த பெற்றோருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்வதில் நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

"வாணி விழா" - 2012 அழைப்பிதழும் - நிகழ்ச்சி நிரலும் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 20.10.2012 இன்று

E-mail Print PDF

கனடா -  பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் "வாணி விழா-2012" நாளை 20.10.2012 சனிக்கிழமை ஸ்காபறோ "பெரிய சிவன் ஆலய விழா மண்டபத்தில்" மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை கனடா வாழ் எம்மூர் மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ்விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும், பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், "கலைவாணியின் சிறப்பு" சொற்பொழிவுகளும், இராப்போசனமும் இடம்பெறும்

இவ் விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு எம்மூர் அன்பு உள்ளங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்

இவ் விழாவில் தங்கள் நிகழ்ச்சிகளை மேடையேற்ற விரும்பும் அன்பர்கள், திரு. மனுவேந்தன் அவர்களுடன்
(416-569 5121) தொடர்பு கொண்டு தங்கள் நிகழ்ச்சிகளை முங்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா


பெரிய சிவன் ஆலய விழா மண்டப முகவரி
1148 - Bellamy Road
Scarborough, ONTARIO
Telephone
416-907-7434 / 416-769-7747


பண்கலை பண்பாட்டுக் கழகம்  - வாணிவிழா - 2012 - நிகழ்ச்சி நிரல்

1.   நவராத்திரி பூஜை
2.   மங்கள விளக்கேற்றல்
3.   அமைதிவணக்கம்
4.   தமிழ்த்தாய் வாழ்த்து
5.   தலைமையுரை: கழகத் தலைவர்: திருமதி யோகராணி சிவானந்தம்
6.   பாடல்:- பங்குபற்றுவோர்:-சயம்பு-மனுவேந்தன்
7.  பேச்சு: பேச்சுப்போட்டி அதிகீழ்ப்  பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.---பகிசன் சிவநேசன்
8.   பரதநாட்டியம்:- பங்குபற்றுவோர்-காவியா ஜெகதீசன்,சௌமிகா நகுலேஸ்வரன்,அர்ச்சனா சுதாகரன்.
9.   பாடல்:- பங்குபற்றுவோர்:-லயானா-கிருபைநாதன்,ராகவி-கிருபைநாதன்,கஜானன்-கிருபைநாதன்.
10.    பேச்சு: பேச்சுப்போட்டி  கீழ்ப்பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.-- துர்க்கா பாலகுமார்
இடைவேளை
11.  பரதநாட்டியம்:- பங்குபற்றுவோர்:-சுவேதா-புலேந்திரன்.
12.  பாடல்:- பங்குபற்றுவோர்:-சாயினி-சண்முகம்,கஜாயினி-சண்முகம்.
13.  பரதநாட்டியம்:- துர்க்கா பாலகுமார்
14.  பேச்சு: பேச்சுப்போட்டி மத்தியபிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.--கோபிசன் வினோதரூபன்
15.  பாடல்:-பங்குபற்றுவோர்-பகீசன் சிவநேசன்,ஆதித்தியா பாலசிங்கம்
16.  பரதநாட்டியம்:- பங்குபற்றுவோர்-அபர்ணா தயானந்தன்,அர்ச்சனா தயானந்தன்
17.  பேச்சு: பேச்சுப்போட்டி  மேற்பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.—சலோபன்-விமலரூபன்
18.  பாடல்:- பங்குபற்றுவோர்-காவியா ஜெகதீசன்,சௌமிகா நகுலேஸ்வரன்.
19.  நாட்டியம்:- செல்வன்-கார்த்திகேசு.
20.  பேச்சு:- பேச்சுப்போட்டி  அதிமேற்பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.- அபிசன் நந்திவரன்

21.  பாடல்:- பங்குபற்றுவோர்-சிவவிதுனா சிவனேஸ்வரன், விதுசா முகுந்தன்.
22. பரதநாட்டியம்:- -பங்குபற்றுவோர்:-அபிதா-நடேசன்,ஆரணிசா,நடேசன்,சியானி சிவானந்தம்.

மேலும்  பல...

 

Read more...

கனடா - மொன்றியால் அருள்மிகு திருமுருகன் தேர்த்திருவிழா - 18.08.2012 - ஆலய வீடியோ, வரலாறு இணைப்பு

E-mail Print PDF

கனடா-மொன்றியால் நகரில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருமுருகன் வருடாந்த மஹோற்சவ விழா 05.08.2012  கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி வடைபெற்று வருகின்றது.

இவ் ஆலயம் சுமார் இருபத்தைந்து வருடங்கள் பழைமை வாய்ந்ததும், கனடா வாழ் தமிழ்
சைவ பக்தர்களின் வழிபாட்டிற்காக ஆரம்பிக்கப் பெற்ற முதல் மூன்று (றிச்மன்ஹில்-பிள்ளையார், எட்மின்ரன் விநாயகர், மொன்றியால்-திருமுருகன்) ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். எம்மூர் சமயப் பெரியாரும், பேச்சாளருமானர் “மணிக்குரல்" அமரர். வ. சுப்பிரமணியம் (அதிபர்) அவர்கள் தனது இறுதிக் காலங்களில் இவ்வாலயத்தில் தொண்டு செய்து வந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

இவ் ஆலயத்தில் மஹோற்சவ விழா 15 தினங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஆவணி
(தமிழ்) மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்ற விழாவும் அதனைத் தொடர்ந்து விசேட திருவிழாக்களும் நடைபெற்று 14ம் நாள் வள்ளி தேய்வானை தமேதராய் திருமுருகன் சித்திரத் தேரின் பவனி வந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறுகின்றன.

இவ் ஆலய பிரதம குருக்களான பிரம்மஸ்ரீ.வெங்கடேஸ்வரக் குருக்கள் (ஸ்ரீ-ஐயா) அவர்கள் பலகாலமாக இவ் ஆலயத்தில் நித்திய, நைமித்திய காமிக கிரியைகளை செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

1985 ம் ஆண்டு குறிப்பிடத்தக்க தமிழ் இந்து பக்தர்களால்  ஆரம்பிக்கப்பெற்ற இவ் ஆலயமானது காலப்போக்கில் அருள்மிகு திருமுருகன் திருவருளினால் பல நூறு அடியார்கள் ஒன்றிணைந்து கலியுக வரதன் முருகப் பெருமானுக்கு ஆகம விதிகளுக்கு அமைவாக சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஆலயம் அமைத்து, 29.05.1995 ம் ஆண்டு புதிய ஆலயத்தில் அருள் மிகு திருமுருகபெருமானுக்கும், பரிவார தெய்வங்களுக்கும், கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நிகழ்த்தப் பெற்றது.

இவ்வாலயத்தின் பிரதான வாயிலில் 51 அடி உயரமான இராச கோபுரமும், கருவறையில் 32 அடி உயரமான விமானமும் அமையப்பெற்று மொன்றியால் நகரில் கம்பீரமாக தோற்றமளிக்கின்றது.

இவ் ஆலயத்தின் பரிவார மூர்த்திகளாக விநாயகர், சிவன், பார்வதி, வெஞ்கடேஸ்வரர், நடேசர், பைரவர் ஆகிய தெய்வங்களும்; நவகிரக தோஷ நிவர்த்தி செய்வோருக்காக நவக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளன.

இவ் ஆலயம் மொன்றியால் நகரில் 1611 St-Regis Blvd, DDO என்ற முகவரியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தை தரிசிக்க (வலம்வர) இங்கே அழுத்துங்கள்...

அருள்மிகு திருமுருகன் கோயில் வரலாறு

'அருவமும் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்ப தோர் மேனியாகிக்
கருணைகூர் முகங் ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய'

-கந்தபுராணம்

தமிழினத்தின் சமய வாழ்வியலில் திருக்கோயில் மிகவும் சிறப்பானதோர் இடத்தைப் பெற்று விளங்குகிறது.  தமிழினம் வரலாற்று அறிவிற்கெட்டிய முற்காலம் தொட்டே இறைவனைக் கைப்பொருளாகக் கண்ணுக்கினிய பொருளாக ஏற்று திருக்கோலத் திருமேனி அமைத்து வழிபட்டு வந்திருக்கிறது. இறைவனுக்கு ஆலயம் எடுத்த தமிழர்கள் வான்முட்டும் வனப்புக் கோபுரங்களையும் அதில் அமைத்தாரர்கள். 

தமிழகத்தை ஆண்ட பேரரசுக்கள் தாம் வாழ்ந்த மனைகளைக்கூட வளமனைகளாக எடுக்காமல் குடிமக்களோடு  குடிமக்களாக ஒன்றித்து வாழ்ந்து உலகுக்கு அம்மையப்பராக விளங்கும் இறைவனுக்கு விண்ணளந்து காட்டி வேண்டிய வரம் கொடுக்கும் கோயில்கள் நிறைய எடுத்தார்கள்.  இன்றுகூட கிராமங்களில் உள்ள கோபுரங்களின் உயரம் சிறியதாக இருந்தாலும், அங்குள்ள வீடுகள் செல்வந்தர்களுக்கு சொந்தமாக இருந்தாலும் கோபுரத்தைவிட உயர்ந்ததாக தங்கள் இல்லங்கள் இருந்தல் கூடாது என்ற நடைமுறைச் சம்பிரதாயம் வழக்கில் உள்ளது.

கோயில்கள் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தின் தனிப்பெரும் சிறப்பாக விளங்குவதோடு மேல் நாட்டவரும் வியந்து புகழத் தக்க விதத்தில் பொறியியல், கட்டிட, சிற்ப, ஓவியக் கலைகளின் திறனையும் பறைசாற்றி வருகின்றன.  தமிழர்கள் புலம்பெயர்ந்து எங்கெல்லாம் குடியேறி உள்ளார்களோ அங்கெல்லாம் தமிழ் தெய்வமமாம் முருகனுக்கு கோயில் எடுக்கத் தவறவில்லை.  உலகின் பிரபல்யமான மேல் நாட்டு நகரங்களில் எல்லாம் முருகனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் மொன்றியால் மாநகரில் குடியேறிய ஈழத் தமிழர்கள் அமைத்துள்ள திருமுருகன் கோயில் பண்டைக்கால தமிழ் நாகரிகத்திற்கும், சிற்ப, ஓவியக்  கலைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்ககிறது.  இது கனடா வாழ் அனைத்துத் தமிழர்களுக்கும் பெருமையாகும்.

கியுபெக் சைவ மகாசபையின் தோற்றம் 1984ம் ஆண்டில் கனடாவின் பூமியாகிய கியுபெக் மாநிலத்தின் மொன்றியால் நகரில் குடியேறிய ஈழத் தமிழர்கள் நாம் குடியேறிய நாட்டின் வேற்று கலாச்சாரம், மாறுபட்ட இரு மொழிகள், பொருளாதாரக் கஷ;டம், தொழில் இன்மை, தாயகத்தில் தம் உடன் பிறப்புகளின் கவலை ஆகியனவற்றால் வேதனைப்பட்டிருந்த காலத்தில் தம் கவலைகளை இறைவனிடம் வருந்தி வேண்டி ஆறுதல் அடைய இடமில்லாது இருந்த போது தீரக்கதரிசனமுள்ள சில சைவப் பெரியோர்களின் பெரு முயற்சியால் வாரத்தில் ஒரு நாள் ஒன்றுகூடி வழிபாடுகள் நடத்துவதற்கு மொன்றியால் நகரில் (PIE IX) 'பீனெவ்' என்ற இடத்தில் அமைந்திருந்த 'ஹரே கிருஷ;ணா' கோயிலில் ஒழுங்கினைச் செய்தார்கள்.  

ஹரே கிருஷ;ணா கோயில் இந்துக்  கோயிலாக இருந்தபொழுதிலும் அவர்களுடைய வழிபாட்டு முறைகளும் சைவ அடியவர்களின் வழிபாட்டு முறையும் வேறாக இருந்ததாலும் இன்னும் சில வசதியீனங்கள் காரணமாகவும்  அவ்விடத்தில் இருந்து விலகி 955, பெல்சரச் அவெனியூவில் அமைந்திருந்த (Bellechase)  வட இந்தியர்களுக்கு சொந்தமான 'இந்து' மிசன' கோயில் மண்டபத்தில் (Hindu Mission))  வாரத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் வழிபாடுகளை நடாத்த ஆரம்பித்தனர்.

சிறிதாக ஆரம்பித்த ஒன்றுகூடல் நாளடைவில் பெரிதாகவே, சைவத் தமிழ் மக்களுக்கென்று ஓர் தனியான வழிபாட்டு மையத்தை ஒழுங்கு செய்யவேண்டிய தேவை தோன்றவே தமிழ் தெய்வமாம் முருகனுக்கு வேத சிவ ஆகம முறைப்படியும் அழியாப் பழந்தமிழ் சிற்ப ஓவியக் கலைகளைப் பறைசாற்றும் வண்ணம் இராஜ கோபுரத்துடன் அமைந்த முறையான திருக் கோயிலையும், தம் இன மக்களின் சமூக, கலாச்சாரத் தேவைகளுக்கு உதவுக்கூடிய மண்டபத்தையும் அமைக்கும் எண்ணத்துடன் 1985ம் ஆண்டு கியுபெக் சைவ மகாசபை என்னும் அமைப்பைத் தோற்றுவித்தனர்.  

ஸ்ரீசாமிக் குருக்கள் ரங்கநாத ஐயர், திரு செல்லையா இராசரத்தினம், திரு அப்புத்துரை கனகலிங்கம் ஆகிய சைவப் பெரியோர் மூவரும் சட்டத்தரணி மெல்வின வைகல் (Melwin Weigel) அவர்களின் உதவியுடன் கியுபெக் சைவ மகாசபையை  கியுபெக் மாநில அரசில் பதிவு செய்ய மனுச் செய்தனர்.  ஸ்ரீரங்கநாத ஐயர் அவர்கள் குடும்பத்துடன்  'இந்து மிசன' மண்டபத்தில் தங்கி இருந்து வாரம் தோறும் பூசைகளை நடாத்தி வந்தார்.

1985ம் ஆண்டு ஆவணி மாதம் திரு. செ.இராசரத்தினம் (தலைவர்) அ.கனகலிங்கம் (உபதலைவர்) சி.பாலசுப்பிரமணியம் (செயலாளர்) ச.திருநடராசா (உப செயலாளர்) சா.ரங்கநாதஐயர் (பொருளாளர்) பெ.10காந்தா, ச.திருநீலகண்டர், தி.இரத்தினேஸ்வரன், சி.சீவரத்தினம், தி.சிவேந்திராஜா, சி.விக்கினேஸ்வரபிள்ளை ஆகிய பதினொரு அங்கத்தவர்களைக் கொண்ட கியுபெக் சைவ மகாசபையின் முதலாவது நிர்வாக சபை தெரிவு  செய்யப்பட்டது.

1986ம் ஆண்டு பங்குனி மாதம் 11ம் நாள் (11-03-1986) கியுபெக் சைவ மகாசபை கியுபெக்  மாநில அரசினால் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு அங்கீகரக்கப்பட்டது.  1987ம் ஆண்டு சித்திரை முதலாம் நாள் (01-04-1987) கியுபெக் சைவ மகாசபை ஓர் வரி விலக்களிக்கப்பட்ட சமய ஸ்தாபனமாக கனடா மத்திய அரசினால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

பல வசதியீனங்கள், இடைஞ்சல்களுக்கும் மத்தியில் வழிபாடுகளை நடாத்தி வந்தபோதும் இயன்றளவு விதி முறை  தவறாது பூசைகளை நடாத்தி வந்தனர்.  நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ;டி, சித்திரைப் புத்தாண்டு, பங்குனி  உத்தரம் போன்ற முக்கிய விரத தினங்களிலும் மற்றும் விரத தினங்களிலும் சிறப்பான பூசைகள் நடாத்தப்பட்டன.

1986ம் ஆண்டு ஆனி மாதம் திருமுருக கிருபானந்த வாரியார் வருசை தந்திருந்தபோது சுவாமிகளை தரிசித்து  அவர்களின் ஆசிகளைப் பெற்றார்கள்.  படங்களின் மூலம் பரமனை வழிபட்டுவந்த அடியவர்களின் குறை நீ;ங்க திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வருகையின்போது அறிமுகமாகிய அன்பர் திரு அனந்த கிருஷ;ணன் அவர்கள் முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானின் கற்சிலை ஒன்றை உபயம் செய்து உதவினார்.

1986ம் ஆண்டு ஆவணிச் சதுர்த்தி தினத்தில் இவ்விக்கிரகம் ஒட்டாவாவில் இருந்து வருகை தந்திருந்த வெங்கடேஸ்வர  ஐயர் ரொறன்ரோ சென்றமையால் பூசைகளை நடாத்துவதற்கு அந்தணர் இல்லாதிருக்க திரு சௌந்தராஜன் என்னும்  அன்பர் சிறிது காலம் பூசைகளைச் செய்து வந்தார். 1986ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று வேணு ஐயா என்று எல்லோராலும் அன்பாக அழைபக்கப்படும் கோவிந்தராஜக் குருக்கள் அவர்கள் பூசைகளை முறையாக செய்ய
ஆரம்பித்தார்.

1987ம் ஆண்டு மார்கழி மாதம் விநாயகர் சஷ;டி விரத தினத்ததன்று ரொறன்ரோவிலிருந்து வருகைதந்த  பகவதீஸ்வர சாஸ்திரிகள், விஜயகுமாரக் குருக்கள், சர்வானந்தக் குருக்கள் ஆகியோருடன், கோவிந்தராஜக் குருக்களும், திரு அனந்த கிருஷ;ணனும் இணைந்து வெகு சிறப்பாக விநாயகப்பெருமானுக்கு பூசைகளை நடாத்தினார்கள்.

1988ம்  ஆண்டு ஆங்கிலப் புதுவருட தினமாகிய ஜனவரி முதலாம் நாள் மொன்றியால் விக்டோரியா விளையாட்டுக் கழகத்தினரின்  உபயமாக சிறப்புப் பூசை நடைபெற்றது.

பல வருடங்களாக மொன்றியாலில் உள்ள தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய பொங்கல் விழாவை 1988ம்  ஆண்டு தை மாதம் கியுபெக் சைவ மகாசபை பொறுப்பெடுத்து மற்றைய அமைப்புக்களுடன் இணைந்து வெகு சிறப்பாக  நடாத்தத் தொடங்கியது. மொன்றியாலில் வாழும் வசதி குறைந்தோர் நலன் கருதி சன் யுத் நிறுவனத்தினூடாக நிதி  உதவி வழங்கியது. பொங்கல் விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. முருகனுக்கு கோட்டம் அமைப்பதற்கு பல
கட்டிடங்களும், நீலகங்களும் தொண்டர்களால் பார்க்கப்பட்டன. முறையான இடம் அமையாத போதிலும் உறுதியான  பக்தியும், தளராத முயற்சியுடனும் ஈடுபட்டனர்.

1989ம் ஆண்டு வைகாசி மாதம் சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் வருகைதந்து சிறப்புப் பூசை நடாத்தினார். அவ்வாண்டு  ஆனி மாதம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வருகைதந்து அருளுரை வழங்கினார்கள்.

1990ம் ஆண்டு மாதம் தொட்டம் வேணு ஐயாவின் சகோதரராகிய 'ஸ்ரீஐயா' என்று எல்லோராலும் அழைக்கப்படும்  வெங்கN;டஸ்வர சர்மா வேணு ஐயாவுக்குத் துணையாக இருந்து பூசைகளைச் செய்தார்.

1990ம் ஆண்டு சித்திரை மாதம் கியுபெக் சைவ மகாசபையின் யாப்பு திருத்தப்பட்டு திரு அ.கிருஷ;ணன் (தலைவர்)  த.பாலேந்திரன் (உப தலைவர்) செ.இராசரத்தினம் (ஸ்தாப அங்கத்தவர் செயலாளர்) பேராசிரியர் கி.சிவராமன்  (கொன்கோடியா பல்கலைக்கழகம்) கா.பிரேம்குமார், சு.இரவீந்திரமூரத்தி, செ.சரவணபவன், க.விஜயகாந்தன், சு.சிவா,  பா.பரம்சோதி (நிர்வாக சபைத் தலைவர்) ச.திருநடராசா (நிர்வாக சபைச் செயலாளர்) ஆகிய நியமிக்கப்பட்டு  பொதுச்  சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது. சிறிது காலத்தில் பேராசிரியர் கி.சிவராமன் சிவபதம் அடைந்ததால் திரு நர ஹரி அவர்கள் அறங்காவலராக நியமிக்கப்பட்டார். அறங்காவல் சபையின் முதலாவது கூட்டம் 1992ம்  ஆண்டு சித்திரை மாதம் நடைபெற்றது.

1991ம் ஆண்டு ஆடி மாதம் ஹரே கிருஷ;ணா தாபனத்தினர் வருடம்தோறும் நடாத்தும் தேர் திருவிழாவில் பக்தர்களின்  காவடி ஆட்டம், கர்பூரச் சட்டி, கரக ஆட்டம், முருக நாம பஜனை பாடலுடன் மொன்றியால் மாநகரின் முக்கியமான  வீதிகளில் முருகன் அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் வலம் வந்தார். அதே வருடம் சிவானந்த ஆச்சிரம தாபகர் சுவாமி விஷ;ணுதேவனந்தரின் வேண்டுதலின்படி வல்மொன்றீன் நகர வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் காவடி ஆட்டம்,  கரக ஆட்டம், முருக நாம பஜனை சகிதம் முருகன் ரதத்தில் வலம் வந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளும் இத்திருவிழாவை  சைவ மகாசபை நடாத்தி வந்தது.

1991ம் ஆண்டு புரட்டாதி மாதம் ஈழத்து மாமுனிவர் சிவயோகசுவாமிகளின் பிரதம சீடரும் இருபதாம் நூற்றாண்டின்  சைவத்தின் காவலருமான சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் வருகைதந்து அருளுரை வழங்கி நிதி சேகரிப்பை ஆரம்பித்து  வைத்ததுடன் அமையப்போகும் திருக்கோவிலின் மூல விக்கிரகமான வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானது விக்கிரகத்தை உபயம் செய்ய முன்வந்தார்.

திருமுருகன் கோயில் புண்ணிய பூமி கொள்வனவு

காலம் நேரம் வர எல்லாம் கைகூடும் என்ற பெரியோர்களது வாக்குக்கமைய 1992ம் ஆண்டு மாசி மாதம் 12ம் நாள்  (12-02-1992) திருமுருகப் பெருமானது திருவருளால் முருகனுக்கு கோட்டம் அமைப்பதற்கு முறையான புண்ணிய பூமி  72,000 சதுர அடி நிலம் கூ450,000 டாலர்களுக்கு மொன்றியால் மாநகருக்கு அண்மையில் டொலார்ட் டெஸ் ஓமோ நகரின் (Dollard - Des Ormeaux) சென்ற ரெஜீஸ் வீதியில் ((St Regis Blvd); வாங்கப்பட்டது.

1992ம் ஆண்டு சித்திரை மாதம் வியாகரண சிரோன்மணி சிவஸ்ரீ ஸ்ரீ பூரணதியாகராஜக் குருகளும், சிவஸ்ரீ கோவிந்தராஜக்  குருக்களும் முறையாக பூமி பூசையை செய்து வைத்தார்கள். திரு அனந்த கிருஷ;ணனின் இயந்திரத்தின் உதவியுடன்   தொண்டர்களி;ன சேவையினால் பூமி துப்பரவு செய்யப்பட்டது. புரட்டாதி மாதம் 12ம் நாள் (12-09-1991) நிலத்தில் மர நாட்டு விழர் சிறப்பாக நடாத்தப்பட்டது. ஆடி மாதம் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் வருகைதந்து அருளுரை
வழங்கினார்கள்.  

ஆரம்பகாலத்தில் இருந்து ரிச்மன்டஹில் இந்து ஆலய நிர்வாகத்தின் உதவியால் தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த  கலைஞர்களைக்கொண்டு நிகழ்ச்சிகள் நடாத்தி நிதி சேகரிக்கப்பட்டது. 1987ம் ஆண்டும் 1992ம் ஆண்டும் நிரதனாலயா  நாட்டியக் கல்லூரியின் அதிபர் திருமதி வசந்தா கிருஷ;ணன் அவர்கள் நாட்டிய நிகழ்ச்சிகள் நடாத்தி நிதி வழங்கினார்.

பீலி அர்பணா நாட்டியப் பள்ளியின் அதிபர் திருமதி சரசாய் ராஜ் அவர்களும், திருமதி கல்பலதா பில்ட்டோ அவர்களும்  நாட்டிய நிகழ்ச்சி நடாத்தி நிதி வழங்கினார்கள்.

வேல் மூலம் முருகனை வழிபட்டுவந்த பக்தரிகளின் குறை நீங்க திரு கந்தையா சற்குணானந்தன் குடும்பத்தினர் வள்ளி  தெய்வாளை சமேத முருகப் பெருமானது பஞ்சலோக விக்கிரகத்தை உபயம் செய்தார்கள். 1992ம் ஆண்டு ஐப்பசி மாதம்  16ம் நாள் (16-10-1992) வெள்ளிக்கிழமை சிவஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் திருமுருகனின் விக்கிரகத்தை இந்து மிசன்  மண்டபத்தில் பிரதிஷ;டை செய்து வைத்தார்கள். இதுவரை பொபியன் பிள்ளையார் கோயில் என்று மக்களால் அழைக்கப்பட்ட கோயில் முருகன் கோயில் என்று அழைக்கப்படலாயிற்று.

மகாபலிபுரம் சிற்பக் கலைக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், உலகெங்கும் பல கோயில்களை நிர்மாணித்தவருமான  சிற்பக் கலை கணபதி வல்லுனர் வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி அவர்கள் வருகை தந்து 1993 வைகாசி விசாக  தினத்தில மேற்படி நிலத்தில் கோயில் அமைப்பு ஆரம்ப விழாவை நடாத்தி, முதலாவது வரை படத்தைத் தயாரித்துக்  கொடுத்தார். சிவாகம சடங்குகளை சிலாபம் முன்னீஸ்வர தேவஸ்தானம், நல்லூர் சிவன் கோவில் ஆகியவற்றின் பிரதம சிவாச்சாரியரான சிவஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்களும், கோவிந்தராஜக் குருக்களும் நடாத்தி வைத்தார்கள்.

1994ம் ஆண்டு தை மாதம் சிறார்களுக்குப் பண்ணிசைப் போட்டி நடாத்தி வருடந்தோறும் நடைபெறும் பொங்கல் விழாவில்  பரிசில்கள் வழக்கத் தொடங்கப்பட்டது. திரு ந.வாகீசனின் முயற்சியால் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு வந்த சிறார்களுக்கு  இந்து மிசன் மண்டப மேல் மாடியில் சமய, தமிழ் வகுப்புக்களை நடாத்த ஆரம்பிதார்கள். ஆசிரியர் திரு அருள் சுப்பிரமணியம் அவர்கள் முதலாவது ஆசிரியராக தொண்டாற்றினார். சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட வகுப்புக்கள் இன்று நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட  மாணவர்களுடன் கலாச்சார மண்டபத்தின் கீழ் தளத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிர்மைகளில் நடைபெறுகின்றன.

ரொன்றோ ரிச்மன்ட் ஹல் பிள்ளையார் கோயில், ஒட்டாவா கால்டன் இந்துக் கோயில், இந்து சமய அமைப்புக்கள் ஆகியனவற்றின்  ஆதரவுடன் 1994 ஆடி மாதம் அனைத்துலக சைவசித்தாநக் கருத்தரங்கு வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. இதுவே கனடா நாட்டில் நடைபெற்ற முதலாவது சைவசித்தாந்தக் கருத்தரங்காகும். ஆத்மஜோதி முத்தையா அடிகளார், சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள்,  புலவர் ஈழத்து சிவானந்தன், தமிழ்நாட்டுத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் திரு நாகசாமி அவர்கள், மற்றும் இங்கிலாந்து, இந்தியா,  இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் வருகைதந்த அறிஞர்கள் இந் நிகழ்வைச் சிறப்பித்தனர்.

1995ம் ஆண்டு தொடக்கம் வருடம்தோறும் நடைபெறும் பொங்கல் கலைவிழாவன்று தாயகத்தில் அல்லலுறும் எம் உடன்பிறப்புக்களின்  நன்மை கருதி தமிழர் புணர்வாழ்வுக் கழகத்துனூடாக நிதி வழங்கப்பட்டு வருகிறது.

1995ம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் அடியவர்கள் வங்கி மூலம் மாதாந்தம் நிதியுதவி செய்ய ஒழுங்கு செய்யப்பட்டது.

கலாச்சார மண்டபமும் பாலாலயமும்
1995 வைகாசி மாதம் 29ம் நாள் (29-05-1995) அன்று நல்லோரையில் கலாச்சார மண்டபத்தின் கால்கோள் விழா சமய முறைப்படி  வெகு சிறப்பாக நடைபெற்றது.

1995 ஆனி 18ம் நாள் (18-06-1995) காலையமைந்த நல்லோரையில் கலாச்சார மண்டபத்துக்கான அத்திவாரத்தில் சங்குதாபன வைபவம் பெருந தொகையான பக்தர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. வியாகரண சிரோன்மணி சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்களும் கோவிந்தாராஜக் குருக்களும், மற்றும் அந்தணர்களும் சிவ ஆகம் கிரியைகளை நடாத்த அமரர் ஆத்மஜோதி முத்தையா  அடிகளாரும், மாநகர முதல்வர், மற்றும் அரசியல் பிரமுகர்களும், நூற்றுக்கணக்கான பக்தர்களும் சங்கு வைத்தார்கள்.

புதிதாக அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் சிற்பக் கலைஞர் சரவணமுத்து ஜெயராஜாவின் தலைமையில் சிற்ப கலைஞர்களும்,  தொண்டர்களும் இணைந்து பாலாலயத்தை அமைத்தனர். பாலாலயத்தில் முருகனை மூலவராகக் கொண்டு, கணபதி, திருமால், நடராசர்,  வயிரவர் ஆகிய தெய்வங்களுக்குச் சந்நிதிகளும், வசந்த மண்டபமும் அமைத்து 1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 12ம் நாள்  (12-11-1995) சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்களின் தலைமையில் பல அந்தணப் பெரியோர் இணைந்து பாலாலய கும்பாபிஷேகத்தை  வெகு சிறப்பாக நடாத்தி வைத்தார்கள். கணபதி சந்நிதானத்தை திரு அனந்த கிருஷ;ணன் குடும்பத்தினரும், முருகன் சந்நிதி பொது மக்களின் உபயமாகவும், திருமால் சந்நிதி ஜெயவீரசிங்கம் குடும்பத்தினரும், வசந்த மண்டபத்தை சற்குணானந்தன் குடும்பத்தினரும்,

நடராசர் சந்நிதியை சின்னையா குடும்பத்தினரும் உபயம் செய்தனர். பாலாலயத்தில் 1996ம் ஆண்டு நவக்கிரகங்களுக்கு சந்நிதி  அமைக்கப்பட்டு நவக்கிரகங்கள் பிரதிஷ;டை செய்து வைக்கப்பட்டன. திரு கஜராம் குடும்பத்தினர் சந்நிதியையும் விக்கிரகங்களையும்  உபயம் செய்தார்கள். கும்பாபிNஷகம் நடைபெற்ற நாள்தொடக்கம் சிறி ஐயா ஆலயத்தில் தங்கியிருந்து பூசைகளைச் செய்துவந்தார்.

கலாச்சார மண்டபத்தில் தமிழ் நாட்டைச் சார்ந்த சிற்பக் கலைஞர் திரு ஆறுமுகம் அவர்களின் தலைமையில் சிற்பக் கலைஞர்களும்  தொண்டர்களும் இணைந்து துர்க்கா தேவிக்கு நிரந்தரமான ஆலயத்தை நிர்மாணித்தனர். 1996ம் ஆண்டு ஆவணி மாதம் 25ம் நாள்  25-08-1996 கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. திரு சேனாதிராசா உதயகுமார் குடும்பத்தினர் சந்நிதியையும், துர்க்கா  தேவியின் விக்கிரகத்தையும் உபயம் செய்தன்ர்.

தற்காலிகமான பாலாலயமாக இருந்த போதிலும் பூசைகளும் திருவிழாக்களும் ஆகம் விதி முறை தவறாது வெகு சிறப்பாக நடைபெற்றன. ஆவணி மாத முதலாவது சனிக் கிழமையை ரதோற்சவமாகவும், ஞாயிற்றுக்கிழமையை தீர்த்தோற்சவமாகவும், கொண்ட அலங்காரத் திருவிழா  1996ம் ஆண்டு தொடக்கம் நடைபெற ஆரம்பிக்கப்பட்டது. சிற்பக் கலைஞர் சரவணமுத்து ஜெயராஜாவின் கைவண்ணத்தில் அழகான  சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. இதுவே மேலை நாடுகளில் உருவாக்கப்பட்ட முதலாவது சித்திரத் தேராகும்.

திங்கட்கிழமை பூங்காவனமும், செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையுடன் அலங்காரத் திருவிழா நிறைவுபெறும். 1996ம் ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான பக்தர்களால்  கந்தசஷ;டி விரதம் வெகு சிறப்பாக அனுஷ;டிக்கப்பட்டு கொட்டும பனியையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது சூரசம்காரம் வெளி வீதியில்  வெகு விமரிசையாக நடைபெறும். 1996ம் ஆண்டு தொடக்கம் ஆவணிக் கடைசி ஞாயிற்றுக்கிழமை திருமாலுக்கு உறியடித் திருவிழா  நடைபெற்றுவருகின்றது.

1996ம் ஆண்டு ஆனி மாதம் தொண்டர்கள் கோபுரம் என்னும் கலை நிகழ்சியை நடாத்தி நிதி சேகரித்து வழங்கினர். இந் நிகழ்ச்சி தொடர்ந்து  ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

திருமுருகன் கோயில் தொண்டர் திரு செல்வகுமார் அவர்கள் 1998, 2000, 2002ம் ஆண்டுகளில் இறு வெட்டு (ஊனு ) வெளியிட்டு நிதி சேகரித்து  கோயிலுக்கு வழங்கினார். திரு புஷ;பன், திரு இரவீந்திரன் ஆகியோரின் முயறச்சியினால் இளைஞர் வட்டம் மூன்று ஆண்டுகள் நிகழ்ச்சிக்ள நடாத்தி நிதி சேகரித்து வழங்கினார்கள். 1997ம் ஆண்டு தை மாதம் ஆலயத்தில் நூல் நிலையம் தொடங்கப்பட்டது.

1998ம் குளிர்காலத்தில் நடைபெற்ற கொடுரமான பனிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களை கோயிலில் தங்க வைத்ததுடன் உணவும் உதவியும்  வழங்கி ஆதரிக்கப்பட்டது;.

2001ம் ஆண்டு பங்குனி மாதம் ரொன்றொவில் உள்ள சைவ மகாசபையின் முன்னாள் அங்கத்தவர்கள், திருமுருகனின் பக்தர்கள், ரொன்றோவில்  உள்ள ஆலய அறங்காவலர்கள், சமயப் பெரியோர், பத்திரிகையாளர்கள், தொலைக் காட்சி நிறுவனத்தினர் ஆகியோரை கூட்டி ஆலய வளர்ச்சி  சம்பந்தமாக ரொன்றோ ஸ்காபரோ நகர சபை மண்டபத்தில் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

அருள்மிகு திருமுருகன் திருக்கோயில் திருப்பணி
2002ம் ஆண்டு ஆனி மாதம் 6ம் நாள் (6-6-2002) அன்று காலை நல்லோரையில் அருள்மிகு திருமுருகனின் திருக்கோயில் கால்கோள் விழாவை  வியாகரண சிரோண்மணி சிவஸ்ரீ பூரண தியாக ராஜக் குருக்களும் மற்றும் குருமார்களும் வெகு சிறப்பாக நடாத்தி வைத்தார்கள். தமிழ்நாடு  காரைக்குடியைச்சார்ந்த திரு தட்சணாமூர்த்தி ஸ்தபதி அவர்கள் கோயிலை விதி முறை தவறாது அமைக்கும் பொறுப்பை Altapex என்னும்  உள்ளுர் நிறுவனம் கட்டிடத்தை அமைக்கும் ஒப்பந்தத்தை ஏற்று கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தது.

2002ம் ஆண்டு ஆனி மாதம் 13ம் நாள் வியாழக்கிழமை (13-06-2002) அதி காலை சுப முகூர்த்தத்தில் திருக்கோயிலின் அத்திவாரத்தில் சங்குதாபன  வைபவம் முறையாகத் தொடக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக 16-06-2002 ஞாயி;ற்றுக்கிழமை வரை தொடர்ந்து நடைபெற்றது. நூற்று;ககணக்கான பக்தர்கள் அத்திவாரத்தில் சங்கு வைத்தார்கள்.

உள்ளூர் கட்டிட ஒப்பந்த தாபனத்தினால் கட்டிடம் கட்டிக்கொடுக்க, தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த திரு தெட்சணாமூர்த்தி ஸ்தபதியின்  சிற்பிகள் திருக்கோயில் நிர்மாணிக்கும் பணியை 2003ம் ஆண்டு சித்திரை மாதத்தில் ஆரம்பித்து வெகு அழகாகவும், சிறப்பாகவும் கட்டத் தொடங்கினார்கள்.

அருள்மிகு திருமுருகன் கோயில் அமைந்திருக்கும் பகுதியில் இருபத்தி ஆறு அழ உயரத்துக்குமேல் கட்டிடங்கள் கட்டப்படாது என்று மாநகரசபை   சட்டம் அமைந்திருந்த போதிலும். முருகன் கோயில் கோபுரத்தை நாற்பத்தி ஏழு அடி உயரத்தில் கட்ட அனுமதித்துள்ளது.

'ஊருக்கு அழகு கோயில்' என்பார்கள். திருமுருகன் கோயில் தங்கள் நகரத்தை அழகுபடுத்தும் என்று கருதி நகரசபையினர் அனுமதி வழங்கினர். கோயிலுக்குச்  சென்று தரிசிக்க இயலாதவர்களும் வசதியாக இறைவனை நினைத்து வழிபடுவதற்காக ஆலயங்களின் கோபுரங்களையும் தூபிகளையும் மிகவும்  பிரமாண்டமான முறையில் அமைப்பது நம் முன்னோர் வழக்கம். 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' 'துபியினைக் கோபுரத்தை ஈசன் எனக் கண்டு தொழு' என்பது ஆன்ரோர் வாக்கு. திருமுருகன் கோயிலில் பஞ்ச தளங்களைக் கொண்ட இராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

முதல் தளத்தின் உச்சியில் ஏழு தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் அத் தளத்தின் கிழக்குத் திசையில் இந்திரனும்,  வடக்குத் திசையில், பிரம்மாவும், மேற்குத் திசையில் திருமாலும் தெற்குத் திசையில் தெட்சணமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள்.

அடித் தளத்தின் கிழக்குத் திசையில் முருகன் வள்ளி தெய்வானை சகிதம் வீற்றிருக்கிறார். கோபுர வாசல் நிலையில் கஜலக்குமி அமர்ந்துள்ளார். வாசலில்  பதினான்கு அழ உயரத்தில் திறமான வேலைப்பாட்டுடன் திருக்கதவு பொருத்தப்பட்டுள்ளது. கதவை திரு ஜெயராஜா ஸ்தபதி அவர்கள் அழகாகவும் வெகு சிறப்பாகவும் செய்து கொடுத்தள்ளார்.

இந்து மதத்தின் ஆறு பிரிவினரும் வேற்றுமையின்றி ஓரே கோயிலில் தங்கள் வழிபாடுகளை நடத்தும் விதத்தில் தெய்வ சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலினுள் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் தெய்வ சந்நிதிகள் அமைந்துள்ன. வலது புறத்தில் முழுமுதற்  கடவுளாம் விநாயகரின் சந்நிதி அமைந்துள்ளது. பெருந்தொகையான பக்தர்களின் வேண்டுதலின்படி 1986ம் ஆண்டு தொடக்கம்  வழிபட்டுவரும் விநாயகரின் விக்கிரகம் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது.

நடுநாயகமாக கருவறையின்மேல் இருபத்தி ஏழு அழ உயரமாக விமானத்துடன்  முருகப் பெருமானின் கருவறை அமைந்துள்ளது. ஈழத்து  மாமுனிவர் சிவயோக சுவாமிகளது சீடராகிய சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளினால் உபயம் செய்யப்பட்ட வள்ளி தெய்வானையுடனான முருகப்பெருமாள் மூலமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார் சந்நிதியின் முன் முகமண்டபத்தில் சண்முகப்பெருமாள் இரு தேவியருடன்  தென் திசை நோக்கி மயிலின் மீது அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறார்.

முகமண்டபத்தின் முன் வலது பக்கத்தில் சிவலிங்கப்பெருமானும்,  இடது பக்கத்தில் பார்வதி தேவியும் அமர்ந்துள்ளனர். மூலமூர்த்தியின் இடது பக்கத்தில் வெங்கடேஸ்வரப் பெருமானது சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் தென் திசை நோக்கி நடராசப் பெருமானது சபை அமைந்துள்ளது. சபையில் நடராசப்பெருமாள் சிவகாமி அம்பாள், பதஞ்சலி, வியாக்கிரபாதர் சகிதம் எழுந்தருளுகிறார். நடராச்பபெருமானது சந்நிதிக்கு அடுத்து வசந்த மண்டபம் அமைந்துள்ளது அதற்கு அடுத்து நவக்கிரகங்களின் சந்நிதி உள்ளது.

கோபுர வாசலுக்கு இடது பக்கததில் வயிரவரின் சந்நிதி உள்ளது. மண்டபத்தின் நடுவே வெள்ளிக் கவசமிடப்பட்ட கொடித் தம்பம் உரிய இடத்தில் உள்ளது. மண்டபத்தில் ஆறு தூண்கள் ஆறுபடை வீடுகளின் முருகனுடன், கணபதி, சிவன், சக்தி, முருகன், திருமால், வயிரவர் ஆகிய தெய்வங்களின் தோற்றங்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்களுடன் அமைந்துள்ளன. அத்துடன் நாலு பக்க சுவர்களிலும் மொத்தம் ஒன்பது அரைத் தூண்கள் அமைக்கப்பட்டு தெட்சணாமூர்த்தி, திருமால், முருகன்,.

சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களின் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. தூண்களிலும், வெங்கடேஸ்ரர் சந்நிதியிலும் திருமாலின் தச அவதாரங்களைச் சித்தரிக்கும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தெற்கு பிரகாரத்தில் நால்வருக்கு சிறு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அச்சந்நிதியில் ரிஷபகுஞ்ரத்தின் திருக்காட்சி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வாசலில் சிறு கோபுரம் அமைத்து முருகனின் திரு உருவம் பதிக்கப்பட்டுள்ளதுடன் அழகான கதவும் பொருத்தப்பட்டுள்ளது. துர்க்கை அம்பாளின் சந்நிதி ஏற்கனவே நிரந்தரமான நிலத்திலும் சுவர்களிலும், திருக்கோயில் மண்டபத்தில் நிலத்திலும் கல் பதிக்கப்பட்டுள்ளது.


2004ம் ஆண்டு அலங்காரத் திருவிழாவின் மூன்றாவத நாள் ஷ்ரீசிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் பிரதம சீடரும் ஹவாய் சைவசித்தாந்த் பீடத்தின் தற்போதையத் தலைவருமான போதிநாத வேலன் சுவாமிகள் வருகை தந்து அருளுரை வழங்கினார்கள். ஐப்பசி மாதம் திருமதி தாரகா சற்குணபாலா அவர்கள் நாட்டிய நிகழ்ச்சி நடாத்தி நிதி வழங்கினர்கள்.

2004ம் ஆண்டு மார்கழி மாதம் நடைபெற்ற கொடூரமான ஆழிப்பெருக்கினால் பாதிப்புற்றவர்களுக்காக கோயில் வழிபாடுகள் நடாத்தியதுடன் நிதியும் சேகரித்து வழங்கப்பட்டது. துக்கம் அனுஷ்டிப்பதற்காக ஆண்டுதோறும் நடைபெறும பொங்கல் விழா 2005ம் ஆண்டு நடாத்தப்படவில்லை.

தேரோடும் வீதியையும், பக்தர்களின் வாகனத் தரிப்பையும் பெருப்பிப்தற்கும், எமது இன மக்களின் சமூக கலாச்சாரத் தேவைகளுக்கு பெரு மண்டபத்தை அமைப்பதற்குமாக கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள ஐம்பதினாயிரத்து இருநூறு சதுர அடி நிலம் 368,000 டாலர்களுக்கு 2005ம் ஆண்டு தை மாதம் வாங்கப்பட்டது.

வாங்கிய புதிய நிலத்தில் 2005 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24ம் நாள் கியுபெக் தினத்தில் அன்னை துர்க்காதேவிக்கு பெருந்தொகையான அடியவர்கள் பொங்கலிட்டு வழிபட்டார்கள். இப்பொங்கல் வைபவம் வருடம்தோறும் நடைபெறவுள்ளது.  

பெருஞ்சாந்தி விழா
`அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறார் மணிவாசகர். இறைவனை வணங்குவதற்கே அவன் அருள் வேண்டியிருக்கும் பொழுது அவ் இறைவனுக்கு கோயில் கட்டி குமபாபிஷேகம் நடாத்துவதற்கு அவன் அருள் பன்மடங்கு தேவையாகிறது. `காலம் நேரம் வர எல்லாம் கைகூடும்' என்பதும் பெரியோர் வாக்கு.

விய வருடம் வைகாசித் திங்கள் நாள் (22-05.2006) திங்கட்கிழமை காலை கணபதி வழிபாட்டுடன் கிரியைகளை ஆரம்பித்து விய வருடம் வைகாசித் திங்கள் 15ம் நாள் (28-05-2006) ஞாயிற்றுக்கிழமை காலை 7-00 மணிக்கு இராஜ கோபுரத்துக்கும் முரகனின் கருவறையின் விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று காலை 7-47 இல் இருந்து 8-50 வரையிலுள்ள மிதுன லக்கினம் கூடிய தெய்வீக முகூர்த்தத்தில் பெருஞ்சாந்தி வெகு சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், எகாம்பரநாதேஸ்வரர் கோயில்களின் பிரதம சிவாச்சாரியராகிய `சைவ சித்தாந்த சாகரம்' `சிவாகமச் செல்வர்' சிவஷ்ரீ இராஜப்பா சிவாச்சாரியர் பிரதான சர்வ போதகாச்சார்யாராகவும், கலாநிதி சிவஷ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள் சர்வ போதகாச்சார்யராகவும், `வியாகரண சிரோண்மணி' சிவஷ்ரீ பூரண தியாகராஜ சிவாச்சார்யர் பிரதம பிரதிஷ்டா சிவாச்சார்யராகவும் இருந்தது. தமிழ்நாடு, இங்கிலாந்து, டென்மார்க், ரொரன்றோ ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்த பிரபல்யமான சிவாச்சார்யர்களுடன், திருமுருகன் கோயில் சிவாச்சார்யர்களும், மொன்றியாலில் உள்ள அந்தண்ப் பெரியோரும் ஒன்றுகூடி கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடாத்தினார்கள்.

சரவணமுத்து ஜெயராஜா ஸ்துபதியின் தலைமையில் தொண்டர்கள் அழகான யாகசாலையை அமைத்துக் கொடுத்தனர். ஹவாய் சைவ சித்தாந்த பீடத்தின் தற்போதையத் தலைவரான போதிநாத வேலன் சுவாமிகள் வருகை தந்து அருளுரை வழங்கியதுடன் கும்பாபிஷேகத்திலும் கலந்து கொண்டார். ரொரன்றோ மாநகரில் உள்ள பிரபல்யமான கோயில்களின் அறங்காவலர்களும், சிவாச்சார்யர்களும் தமது ஆலயங்களின் சீர் வரிசையுடன் வருகை தந்து கும்பாபிஷேகத்தைச் சிறப்பித்தார்கள். ஆன் கோயிலின் படத்துடன் சிறப்பு முத்திரையும் வெளியிடப்பட்டது.

பெரியோர், சிறியோர், கற்றவர், கல்லாதவர், வசதி படைத்தோர், வசதியற்றோர் என்ற வேறுபாடும், ஏற்றத் தாழ்வுமின்றி எல்லோரும் ஒரு குடும்பத்தவர்கள், முருகன் அடியவர்கள் என்ற பரந்த நோக்குடன். இருபத்தி இரண்டு வருடங்களின் அயராத உழைப்பு, விடாமுயற்சி, உறுதியான பக்தி, தன்னலங்கருதாத் தொண்டு, தாரளமான கொடை, இறைவனின் பெருங் கருணை இவையே

மொன்றியாலில் வாழும் சிறு ஈழத் தமிழ் சமூகத்தினால் பல போடி டாலர் செலவில் தமிழ் தெய்வமாம் முருகனுக்கு வேத சிவ ஆகம முறை தவறாது, உலகில் இன்று துலங்கும் மிகப் பழம்பெரும் நாகரீகமான அழியாத் தமிழ் நாகரிகத்தையும் திராவிட சிற்ப, ஓவிய, கட்டிக் கலைகளையும் பறைசாற்றும் விதத்தில் வானளாவும் இராஜ கோபுரத்துடன், கலை அம்சம் நிறைந்த திருக்கோயிலைக் கட்டி கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடாத்த துணைபுரிந்து பல அருளாளர்களதும், உலகோரினதும் பாராட்டுக்களவைப் பெற உதவியது என்று பெருமையாகக் கூறலாம்.

நமது தாயத்தில் கோயில்கள் பரந்த நிலப்பரப்பில் பல பிரகாரங்களுடன், வானளாவும் கோவுரங்கள், தூபிகளுடன்  கட்டப்படும். மாறுபட்ட சூழல், சுவாத்தியம், பல்லின காலாச்சாரத்தைக் கொண்ட நாம் குடியேறிய நாடுகளில் அந் நாட்டுச் சூழல், சுவாத்தியம், நாட்டு, மாநில, மாநகர, கட்டுப்பாடுகளுக்கு அமைய கோயில்களைக் கட்டவேண்டியுள்ளோம். முருகப்பெருமானது திருவருளால் டொலார்ட் மாநகர  சபையும், கியுபெக் மாநில அரசும், கனடா மத்திய அரசும் திருமுருகன் கோயில் திருப்பணிக்கு தடையின்றி ஆதரவை வழங்கின.

ஆன்மீக ஒளியை விளக்கும் சமய அடிப்படையில் எழுந்தவை நமது கலாச்சாரமும் பண்பாடும். நமது பண்பாட்டிற்கு நிரந்தரச் சான்றுகளாக விளங்கி வரும் பழங்கங்களில் ஒன்று தீரத்த யாத்திரையும், தல யாத்திரையுமாகம். ஆலய வழிபாடு நம் சமுதாய வாழ்வின் அடிப்படையாகவும் திகழ்கிறது. நடமாடும் தெய்வமாக விளங்கிய அருளாளர்கள் பலர் தரை தோய நடந்து சென்று எத்தனையோ தலங்களை தரிசித்து மகிழ்ந்து ஆலயங்களின் சிறப்பையும் ஆலய வழிபாட்டின் அவசியத்தையும் அற்புதமான பாசுரங்களின் மூலம் அறிவித்துள்ளனர்.

கனடா, வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில வாழும் சைவப் பெருமக்களே! மொன்றியால் அருள்மிகு திருமுருகன் கோயிலுக்கு யாத்திரை செய்து திருமுருகனின் அருளைப்பெறுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு கோயில் இணையத் தளத்தைப் பாருங்கள்.
www.montrealmurugan.org


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்


"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

பக்தியுடன்
கியுபெக் சைவ மகாசபை


Page 8 of 15

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்