Sunday, Aug 20th

Last update07:08:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா

பண் கலை பண் பாட்டுக் கழகம் - கணித அறிவுப்போட்டி முடிவுகள்.

E-mail Print PDF

பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் புதிய முயற்சியாக இவ் வருடம் முன்னெடுக்கப் பெற்ற மழலைகள் வகுப்பினருக்கான கணித அறிவுப்போட்டி SCARBOROUGH  CIVIC  CENTER  இல் 20 -02 -2012  திங்கள் அன்று 2.30  மணிக்கு ஆரம்பமாகியது. இக் கணிதப் போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய பிள்ளைகள் அனைவரும் கழகத்தின் தலைவி திருமதி. யோகராணி சிவானந்தம் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும், செல்விகள். றிசாயினி மனுவேந்தன், வினிதா ஜெயநேசன் ஆகியோரின் நடுநிலையிலும், நெறிப்படுத்தலிலும் ஒழுங்கான முறையில் நடைபெற்றது.

போட்டிகளின்போது பிள்ளைகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முடிவுகள் பின்வருமாறு:

பாலர் கீழ்ப்பிரிவு - JUNIOR KINDERGARTEN:

1. அபினா ஆனந்தகுமார் - ABINA ANANTHAKUMAR
2. ஷாகிஷ்ஜன் சர்வானந்தன் - CHAHISHJAN, SARVANANTHAN
3. பகிஷன் சிவனேசன் - PAHISAN ,SIVANESAN
4.ஜதுர்ஷன் முகுந்தன் - JATHURSAN ,MUHUNTHAN

பாலர் மேற்பிரிவு - SENIOR KINDERGARTEN:

1.அபிஷன் ரதீஸ்குமார் - APISON ,IRADEESCUMAR
2.அனுசன் கனகரெட்ணம் - ANUSAN KANAGARADNAM
3.அகிசன் கனகரெட்ணம் - AGISAN KANAGARADNAM

போட்டிகள் முடிந்ததும்  இவ்வாண்டுக்குரிய புதிய நிர்வாகத்தின் முதலாவது நிர்வாகசபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்போது இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்து அங்கத்தினர்களின் கருத்துக்கள் ஆராயப்பட்டு ஆக்க பூர்வமான முடிவுகள்  எடுக்கப்பட்டதுடன்  கூட்டம் இனிதே நிறைவேறியது.

பண் கலை பண் பாட்டுக் கழகம்.

போட்டிகளையும்  நிர்வாக சபைக் கூட்டத்தினையும் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கனடா-பண் கலை பண்பாட்டுக் கழக புதிய அங்கத்தினர் தெரிவு - 2012

E-mail Print PDF

கனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் நடப்பு வருடத்திற்கான (2012) நிர்வாக அங்கத்தினர் விபரம்

தலைவர்:
திருமதி. யோகராணி சிவானந்தம்
உபதலைவர்:
திரு. முகுந்தன் கனகரத்தினம்

செயலாளர்:
திரு. சிவநேசன் மகாதேவர்
உபசெயலாளர்:
திரு. மனுவேந்தன் செல்லத்துரை

பொருளாளர்:
திரு. நடேசன் சிவபாதம்
உபபொருளாளர்:
திரு. குகன் தம்பிமுத்து

கலைத் தலைவர்:
திரு. றங்கன்  சின்னத்துரை

சமயத் தலைவர்:
திரு. விமலரூபன் துரைராஜா

விளையாட்டுத் தலைவர்:
திரு. தவராசா தங்கராசா

விளம்பரத் தொடர்பு:
திரு. இளங்கண்ணன் நவரட்ணம்

நிர்வாக உறுப்பினர்கள்:
திரு. கெங்காதரன் சிவபாலசிங்கம்,
திரு. உதயகுமார் கார்த்திகேசு,
திரு. புலேந்திரன் தம்பிமுத்து,
திரு. கிருபைநாதன் மயில்வாகனம்

போஷகர்கள்:
திரு.
கந்தையா தம்பிப்பிள்ளை
திரு. கனகரத்தினம் கணபதிப்பிள்ளை

கனடா - பண்கலை பண்பாட்டுக் கழகம்

கனடா அரசியல் அமைப்பும் அதிகாரங்களும் – அமைச்சர்கள் விபரம் இணைப்பு - அறிந்து கொள்வோம் -

E-mail Print PDF

வரைபடம்கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் 10 மில்லியன் சதுர கிலோமீற்ரர் நிலப் பரப்பளவை தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாகும். வடக்கே ஆட்டிக் சமுத்திரமும், கிழக்கே அத்தலாண்டிக் சமுத்திரமும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசுபிக் சமுத்திரமும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

Read more...

கனடா பண் - ஒளி ஆண்டு மலர் 2011 - மலர்ந்துள்ளது

E-mail Print PDF

கடந்த 25.12.2011 அன்று கனடா -  பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய குளிர்கால ஒன்று கூடல் விழாவின் போது வெளிட்யிடப் பெற்ற

"பண் ஒளி ஆண்டு மலர் - 2011"

மலரைப் பார்வையிட - இங்கே அழுத்துங்கள்

இன்பம் பொங்கும் விழாவாக நிகழ்வுற்ற குளிர்கால ஒன்றுகூடல் - கனடா

E-mail Print PDF

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய், அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய், பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த நத்தார் பண்டிகை நன்நாளில் (25.12.2011) கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய குளிர்கால ஒன்றுகூடல் இன்பம் பொங்கும் பெருவிழாவாக சிறப்பாக நிகழ்வுற்றது.

இவ் விழாவினை திரு. திருமதி. கனகரத்தினம் – தனலட்சுமி தம்பதியினர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்ததுடன், எம்மூர் இளையோரின் தமிழ் தாய் பாடல், கனடா தேசிய கீதம் ஆகிய பாடல்களுடன் விழா ஆரம்பமாகியது.

பணிப்புலத்தில் பிறந்து, பனிபடர்ந்த நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர் கலை, கலாசாரம், பண்பாடு அழிந்து போகாது வளர்ப்பதில் எம்மூர் மக்கள் முன்னோடிகளாக திகழ்வதை காணும்போது உள்ளம் பூரிப்படைகின்றது.

இளையோரை ஊக்குவிற்கும் முகமாக பல போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி அவர்களுக்கு ஊக்கமும், உச்சாகமும் கொடுத்து வளர்த்தெடுத்து; கல்வி, கலை, கலாச்சரம், ஆன்மீகம் போன்ற துறைகளில் எம்மூர் மக்களை ஈடுபடச் செய்து அவர்களை வருங்காலத்தில் முன்னோடிகளாக பேரோடும் புகழோடும் வாழ வழிகாட்டுவதில் கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் வெகு சிறப்பாக செயல்பெற்று வருகின்றமை போற்றுதற்குரியது.

அத்துடன் சிறார்களின் ஊக்கமும், கடும் உழைப்பும்; பெற்றோரின் தூண்டுதலும், உறுதுணையும் அவர்களை ஊரார் மத்தியில் வியப்போடு பார்க்க வைத்துள்ளது.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய “கலைவாணி பரதநாட்டிய கலாலய” அதிபர் செல்வி. றிசாயினி மனுவேந்தன் அவர்கள் வழங்கிய தமிழ், ஆங்கில நிகழ்ச்சித் தொகுப்பு இவ்விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.

இவ் நிகழ்வை காணமுடியவில்லையே என ஏங்கும் எம் உறவுகளை அவ்விழாவிற்கு அழைத்துச் சென்றது போன்ற காட்சிகளை அதிநவீன கமராக்கள் மூலம், ஒளிப்பதிவு செய்த எம்மூர் "அபிநயா" வீடியோ உரிமையாளர் ஆனந்தன் அவர்களினதும், ஒலி அமைப்பை வழங்கிய “ராகவன்” அவர்களின் நிபுணத்துவ திறமையும்,  அதனை சமூக நிகழ்வுகளுக்கு தாமாகவே முன்வந்து தம் பணியாக (இலவசமாக) செய்யும் உயர்ந்த நோக்கும், எம் சமூகத்தை சிறப்பாக இன்புறச் செய்யும் சேவையும் போற்றுதற்குரியது.

இவையாவற்றிக்கும் மேலாக எம்மூர் சிறார்களை கல்வியிலும், கலைகளிலும் உலகில் சிறந்தவர்களாக பிரகாசிக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் வீடு வாங்குதல்-விற்றல் முகர்வர்கள்ளாக கனடாவில் தொழில்புரியும் மதிப்பிற்குரிய சிவகுமார் சிவநேசன் அவர்களும், மதிப்பிற்குரிய கிறிஸ்ணகுமார் சிவபாதம் அவர்களும் பெறுமதி மிக்க பல பரிசில்களை ஒவ்வொரு நிகழ்விலும் வழங்கி இளையோரை ஊக்கிவித்து வருகின்றமை எமது சமூகத்திற்கு அவர்கள் செய்யும் அரும் பெரும் தொண்டை நாம் போற்றாது இருக்க முடியாது.

அத்துடன், புலத்தில் வாழும் எம்மூர் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்வகையில் ஆறுமுக வித்தியாலையத்திற்கு தேவையென கோரப்பட்ட போட்டோ கொப்பி எடுக்கும் எந்திரம் ஒன்றை  வழங்குவதற்கான செலவினை வீட்டுமுகவர் மதிப்பிற்குரிய சிவகுமார் சிவநேசன் அவர்களும், வீட்டுமுகவர் மதிப்பிற்குரிய கிறிஸ்ணகுமார் சிவபாதம் அவர்களும், ஒலி அமைப்பாளர் மதிப்பிற்குரிய ராகவன் முருகேசு அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் மூவரும் இப்பாடசாலையில் கல்வி கற்காதவர்களாக இருந்தபோதும் ஊரின் வளர்ச்சியில் இருக்கும் அக்கறையும், பாச உணர்வும், இரத்த உறவும் அவர்களை தூண்டியுள்ளன.

அவர்களுக்கு நன்றிக்கடனாக கனடா வாழ் எம்ஊர் மக்கள் அனவரும் தங்கள் தேவைகளை நமகு நம்பிக்கையுள்ள, எமக்காக அலோசனைகள் கூறும் எங்கள் முகவர்கள் மூலம் செய்விப்பதனால் அவர்களை மேலும் மேலும் பல ச்மூகப் பணி செய்ய ஊக்குவிக்கும் என்பது திண்ணம்.

உறவாடாத உறவும், வெளிப்படுத்தாத திறமையும் ஒருவருக்கு இருப்பதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. உறவுகளுடன் உறவாடி உறவை மேம்படச்செய்யவும், திறமைகளை வெளிப்படுத்தி மேலும் பல திறமைகளை செய்யும் ஆற்றலைப் பெறும் ஒரு கொண்டாட்டமாக  இவ் நிகழ்வு இனிதே நிகழ்வுற்றது. இவ் விழாவை முன்னெடுத்த கனடா-பண்கலை பண்பாட்டுக் கழகத்தினருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

நன்றி
பணிப்புலம்.கொம்

பகுதி - 3 பார்வையிட இங்கே அழுத்துங்கள்

பகுதி - 2 பார்வையிட இங்கே அழுத்துங்கள்

Page 10 of 15

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்