Tuesday, Jan 16th

Last update11:57:46 PM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள்,

சாந்தை சித்திவிநாயகர் மஹோற்சவ விழா - 2017 முன்னறிவித்தல்.- விளக்கங்களுடன்:

E-mail Print PDF

Image may contain: text

ஆடி மாதத்தில் பௌர்ணமி திதியில் தீர்த்த உற்சவம் நிகழக்கூடியதாக மஹோற்சவ விழாவுக்கான கொடியேற்ற தினம் கணிக்கப் பெறுகின்றது. சுருக்கமாக சொல்வதானால் ஒவ்வொரு வருடமும் கதிர்காமக் கந்தனின் தீர்த்த தினத்தில் இவ் ஆலயத்திலும் தீர்த்த உற்சவம் நிகழ உள்ளது. இவ் ஆலயத்தில் 12 தினங்கள் மஹோற்சவ விழா நிகழ்வதால்; அதன் பிரகாரம் இவ் வருடம்:

கொடியேற்றம்: 27.07.2017
தேர்த்திருவிழா: 06.08.2017

தீர்த்தம்: 07.08.2017

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்

வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்

வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்

துள்ளியோடும் தொடர்வினைகளே!

அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய

தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.

பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட

அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர்,

நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார். தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்கு இனிமையான

அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.

இவ் இல்வாழ்க்கையில் சித்தியும்,  முக்தியும் பெறுவதற்காக மானிடராக பிறந்திருக்கும் நாம்;

சித்தி, முக்தி என்னும் இரு சக்திகளையும் தம் சக்திகளாகப் பெற்று; மிகவும் பழமையும், கீர்த்தியும், நிறைந்து சாந்தைப் பதிதனில்

அருள்பாலிக்கும் சித்திவிநாயகரை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு, எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கடாட்சத்தை பெற்று உய்வோமாக

நன்றி

சுளிபுரம்-வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம் - 06.02.2017 - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

No automatic alt text available.

சுழிபுரம் வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானபைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் - 06.02.2017

மிகவும் பழமையும், புதுமையும் நிறைந்த காடேறிபைரவர் என அழைக்கப் பெற்ற காடேறிஞான பைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் 06.02.2016 அன்று
காலை 8:30 மணிமுதல் 10:30 மணிவரை அமைந்துள்ள சுபமுகூர்த்த வேளையில் நிகழ்வுற இறையருள் பாலித்துள்ளது என்பதனை அறியத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் விழாவின்போது அனைவரும் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து சிவனின் ஒரு தோற்றமாக விளங்கும் ஞானபைரவரின் கும்பாபிஷேக விழாவினை தரிசித்து இஸ்டசித்திகளை பெற்று இன்புற்றிருக்க வேண்டுகின்றோம்.

ஆலய நிர்வாக சபை

06.02.2017 இன்று நிகழ்வுற்ற குப்பாபிஷே நிகழ்வினை தரிசிக்க இங்கே அழுத்துக

கும்பங்கள் எடுத்துச் செல்லும் காட்சி

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும் விளக்கமாக அறிந்து கொள்ள

 

Read more...

புளியங்கூடல் மகாமாரி அம்மன் ஆலயம் - IBC தமிழ் தமது ”வணக்கம் தாய்நாடு” நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பெற்ற வீடியோ இணைப்பு

E-mail Print PDF

Image may contain: one or more people, people on stage and people standing

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தோற்றத்திற்கு காரணமான புனித கத்தியானது ஆலய ஸ்தாபகரால் மூலமூர்த்தியுடன் கருவறையில் பிரதிஷ்டை செய்யப் பெற்று பூஜைகள் செய்யப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இவ் ஆலயத்தில் தமது நேர்த்தியாக பலியிடுவதற்கு புளியங்கூடலில் இருந்து கொண்டுவரப் பெற்ற ஆட்டுக் கடா தாமதமாக வந்தமையால், குழப்பம் ஏற்பட்டது.

அதன்போது ஆலய கருவறையில் இருந்த புனித கத்தியை புளியங்கூடலில் இருந்து வந்தோரால் எடுத்துச் செல்லப் பெற்று; செருத்தனைப்பதி என்னும் இடத்தில் ஆலயம் அமைத்து அக் கத்தியை பிரதிஷ்டை செய்து. தாம் நேர்த்திக்காக கொண்டுவந்த ஆட்டுக்கடாவை அங்கு பலியிட்டனர். மஹாமரி அம்மன் ஆலயம் ஸ்தாபிக்கப் பெற்று சுமார் 350 வருடங்களாகியும் இவ் புனித கத்தி ஆலய கருவறையில் வைத்து பூஜை செய்வதை தெளிவாக காணலாம்

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்கள் இவ் ஆலய கொடியேற்ற நிகழ்வின்போது வெளியிட்ட சீடி யில் இவ் ஆலயத்தில் மிருகபலியிடுவதற்கு பாவித்த ஆசூசமான கத்தியை எடுத்துச் சென்ற புளியங்கூடல் இராஜ மகாமாரி அம்மன் ஆலய ஸ்தாபகர் அதனை கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளதாக குறிக்கப்பெற்றுள்ளமை வேதனை தருவதாக உள்ளது.

உண்மையில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய கருவறையில் இருந்த புனித கத்தியானது அம்பிகையின் பேரருள் நிறைந்த (காமாட்சி) விளக்கினைப் போன்றது. அவ் விளக்கானது பணிப்புலம் அம்பாள் ஆலயத்தில் அம்பிகையின் பேரருள் நிறைந்த ஒளியினைை ஏற்றியபின் புளியங்கூடலில் இருக்கும் தம் அடியார்களுக்கு பேரருள் பாலிப்பதற்காக இறைவியின் அருளினால் அங்கு எடுத்துச் செல்லப்பெற்றுள்ளது என்பதே உண்மை. ஒரு தீப விளக்கினைக் கொண்டு கோடிக் கணக்கான தீபங்களை ஏற்றலாம் என்பது இங்கு நிரூபணமாகின்றது.

புளியங்கூடல் -  செருத்தனைப்பதி இராஜ மஹாமாரி அம்பாள் ஆலய வரலாறும் நிகழ்வுகளும் - வீடியோவில்

 

 

 

 

 


சாத்தாவோலை - சம்புநாதீஸ்வர் ஆலய மஹோற்சவிழா விஞ்ஞாபனம் - 2017 - சம்புநாதீஸ்வரர் ஆய்வறிக்கை இணைப்பு

E-mail Print PDF

Image may contain: outdoor

சாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய  மஹோற்சவ விழா 16.02.2017 வியாழக்கிழமை அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் பெருவிழாக்கள் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

24.02.2017வெள்ளிக்கிழமை (சிவராத்திரி தினம்) தேர்த் திருவிழாவும்; மறுநாள் 25.02.2017 அன்று தீர்த்தத் திருவிழாவும் (சம்பில்துறை தீர்த்தக் கரையில்) நடைபெற்று மஹோற்சவ விழா நிறைவு பெறும்.

இவ் விழாக்காலங்களில்  அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக விரதம் அனுஷ்டித்து சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் திருவருள்பெற்று உய்வீர்களாக

சுபம்

ஆக்கம்:  "தொண்டர்" கு. வி. கந்தசாமி அவர்கள்  (கனடா) (முன்னைநாள் பிரதம முகாமையாளர்
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)எழுதிய சம்புநாதீஸ்வர ஆய்வறிக்கை

வாசிக்க இங்கே அழுத்துக

கனடா ஐயாப்பன் ஆலய - நெய் அபிஷேகம் - 27.12.2016

E-mail Print PDF

Image may contain: one or more people, people standing and indoor


கனடா ஐயப்பன் இந்து ஆலயத்தில் மாலை அணிந்து சபரிமலை செல்லாத சாமிமார் இன்று 27.12.2016 இருமுடி தரித்து சபரி மலை செல்வதாக தம் மனதில் ஆவகணித்து அண்மையில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சென்று வணங்கிய பின் ஐயப்பன் இந்து ஆலயத்திற்கு திரும்பி வந்து 18 படிகளில் பாதம் பதித்து கருவறையில் ஐயப்பன் பொற்பாதம் பணிந்து குருசாமி மூலம் இரு முடி இறக்கி தாம் எடுத்துச் சென்ற நெய்யை அபிழ்ஷேகம் செய்யும் வரை காத்திருந்து மனமுருகி வணங்கிய காட்சி நெஞ்சை உருக்கியது.

நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக


Page 4 of 40

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்