Tuesday, Jan 16th

Last update11:57:46 PM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள்,

முத்துமாரி அம்பாள் - தேர் . தீர்த்தம், பூங்காவனம் - மேலும் அனேக படங்களுடன்

E-mail Print PDF
ஓம் சக்தி ஓம்
பணிப்புலம் திருவருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோயில்
விகிர்தி வருட (2010 ஆம் ஆண்டு) மஹோற்சவ விழா
மேலும் அதிக புதிய படங்கள் பதியப் பெறுகின்றன
பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் தேர்த்திருவிழா

pan_summer2010/14-96-1.jpg

Read more...

சம்பில்துறை - சம்புநாதீஸ்வரர் - ஆய்வறிக்கை ”தொண்டர்” கு. வி. கந்தசாமி அவர்கள்

E-mail Print PDF

புராதன சம்புநாதீஸ்வரத்தில் சிவபெருமானின் தியான சிலை - சிவ தொண்டர் சபை


சிவமயம்

ஆக்கம்:  "தொண்டர்" கு. வி. கந்தசாமி அவர்கள்  (கனடா) (முன்னைநாள் பிரதம முகாமையாளர்
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)

சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய வரலாறு

பண்டைய ஆய்வுகள்:
நாம் வாழ்கின்ற இந்தப் பூவுலகின்கண் இருபத்தோராம் நூற்றாண்டு பிறக்கும் வரைக்கும், கடந்து போன காலச் சம்பவங்களைப் பற்றி, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.

இந்த பூகோள இயற்கை அமைப்பும், இங்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் இற்றை வரைக்கும் ஏற்பட்ட சம்பவங்களும், இவற்றினால் உலகில் உண்டான மாற்றங்கள், எல்லாவற்றையும் நன்கு துரிவிப் பூரண ஆதாரங்களோடு ஆராய்ந்துள்ளனர்.

இயற்கையாக:
உலகில் உண்டான பூமிப்பிரளயம், பூமிநடுக்கம், எரிமலை, பெரும்புயல், பெருமழை, வெள்ளப்பெருக்கு, கடல்கொந்தளிப்பு, கொடிய தொற்றுநோய்கள் போல்வனவும் பிறவும்.

செயற்கையாக:
மனித குல இனச் சண்டை, நிலச்சண்டை, மதச்சண்டை, மொழிச்சண்டை, கல்வெட்டுகள், புதைபொருள் ஆராச்சிகள், கர்ண் பரம்பரையாக வந்த கதைகள், பண்டைக்கலப் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், சமய நூல்கள் இப்படிப் பலவுமே வரலாறுகளாக வெளிக் கொணரப் பெற்றிருப்பன.

பகுத்தறிவு பெற்ற மனிதராக வாழத் தொடங்கிய காலத்தை, இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகக் கணித்துள்ளனர். அக்கால உலகில் வாழ்ந்த மக்களின் வாழ்வு முறை (நாகரீகம்) வளர்ந்திருந்த இடங்களாகக் காணப்பெற்றவை.
1.   சுமேரிய நாகரீகம்
2.   நைல் நதிக்கரை நாகரீகம்
3.   சிந்து நதிக்கரை நாகரீகம் என்பனவே முக்கியமானவை.

எம்முடைய ஆராச்சிக்கு, ஆசியாக் கண்டத்து  சிந்துநதிக்கரை நாகரீகம் பற்றித் தெரிந்து கொள்வதே சிறப்புடைத்து. இதற்கு சிறந்த ஆய்வறிக்கையாக கொள்ள சிறந்த நூல் "பண்டைய இந்திய வரலாறு" என்பதாகும்.

இது "சேர் யோன் மாஷல்" போன்ற தலைசிறந்த பல்துறை ஆராய்ச்சிப் பேராசிரியர் போன்றோர்களினால் எழுதப் பெற்றுள்ள வரலாற்று நூலாகும்.

இமயமலையின் வடக்கே உற்பத்தியாகி, பாகிஸ்தான் பிரதேசத்துள் பாய்ந்து கொண்டிருக்கிறது சிந்துப் பெருநதி. இதன் கரையோரங்களில் 1000 மைல்தூர இடைவெளியில் "மொகன்சதாரோ", "கறப்பா" என்ற இரு பண்டைக்காலப் பெரு நகரங்கள் மண்ணுள் மாண்டிருப்பதைக் கண்டனர்.

ஆதி திராவிட தமிழ் இனத்தின் தொன்மை வரலாறு:
பல்லாண்டுகளாக இவற்றினை ஆழத்தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டனர். கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகவே இதைக் கணக்கிட்டுள்ளனர். சுட்ட களிமண் கட்டிகளினால் பல அடுக்கு மாளிகைகளாகக் கட்டி இருந்தமையும், நீண்ட விசாலமான தெருக்கள் அமைக்கப் பெற்றிருந்தமையும், நீச்சல் தடாகங்கள் இருந்தமையும் கண்டறியப் பெற்றன. மக்கள் குடியிருந்த இடங்களின் அதிஉயர் புனிதமான பகுதிகளில், சிவலிங்க சொரூபங்களை வைத்து இறைவழிபாட்டுமுறை அமைந்திருந்ததையும் நன்கு ஆராய்ந்து அறிக்கைசெய்துள்ளனர். அன்று வாழ்ந்த மக்கள் "ஆதி திராவிடர்" என்பதே ஆராச்சியாளரின் முடிபாகும்.

தமிழின் தொன்மை:
ஆதிதிராவிட மக்களின் "சிவலிங்க" வழிபாட்டுடன் பின்னிப் பிணைந்தது "சைவசமயம்". இது கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பதாகும். பல தடவைகள் இயற்கை அனர்த்தங்களான பூமிப்பிரளையம் போன்றவற்றால் மண்ணுள் மாண்டுபோன சம்பவங்களும் தெளிவாயிற்று. அன்று வாழ்ந்திருந்த ஆதிதிராவிடர் தம் எண்ணக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டது "பழம் தமிழ் மொழி" என்பதும் மொழி ஆராச்சிகளை மேற்கொண்டோர் கண்ட முடிவாகும்.

பண்டைக்காலம் வாழ்ந்த மக்கள் பேச்சு வழக்கில் இருந்த பல மொழிகளில் "Greek", "Latin" போல்வன சிறந்தனவாகவே இருந்த போதும், நாளடைவில் வழக்கொழிந்து போக நேர்ந்து விட்டது. ஆயினும் அன்றும் இன்றும் தனது இளமை குன்றாது இருக்கின்ற ஒரே மொழி "தமிழ்" என்பதாகும்.  உலக வழக்கிலுள்ள் மொழி ஆராய்ச்சியில் பல்லாண்டுகளாக ஈடுபட்ட மேதாவிகளினால் இன்று எமது தாய் மொழி தமிழ் "செம்மொழி" என்ற் கணிக்கப் பெற்றிருப்பது சிறப்புடைத்து.

மக்கள் பெருக்கமும், இடமாற்றமும், மொழிமாற்றமும்:
பண்டைக் காலத்தில் வட இந்திய சிந்து-நதி தீரங்களில் வாழ்ந்த மக்கள் ஆதி திராவிடர் என்பதும், பேச்சில் இருந்த மொழி தமிழ் என்பதும்,  வரலாற்றில் ஏற்கப் பெற்றது. காலப் போக்கில்; சனப் பெருக்கம் காரணமாகவும், இருப்பிட மாற்றங்கள் ஏற்படக் காரணமான போது தாய் மொழியாம் தமிழ்மொழி சிதைந்து, சேய்-மொழிகளாகக் கன்னடம், தெலுங்கு, கவின் மலையாளம் துளு எனப் பலமொழிகள் உருவாகி வளம் பெறலாயின. ஒரே இனம், ஆதிதிராவிட இனத்தவர் மத்தியில், பல்மொழிப் பிரயோகமும் ஒரு சைவ வழிபாடும் தொடர்ந்து வருவது "இறைசக்தி" திருவிளையாடலன்றி வேறல்ல.

ஆரியர் படையெடுப்பும் ஆதிக்கமும்:
கி.மு. 3500 ஆண்டுகள் வாக்கில், மேற்காசியக் கண்டத்திலிருந்து "ஆரிய" இனத்தவர்கள் ஹைபர் கணவாய் வழியாகக் கிழக்கு நோக்கி குதிரைப் படையுடன் வந்து வட இந்தியாவுக்குள் புகுந்தனர். பரந்திருந்து வாழ்ந்த பன்மொழி பேசிய திராவிடர் மத்தியில் பன் மொழிப் பிரயோகம் பலவகைகளிலும் பாதித்தது. இந்த சிக்கல் நிலையினை ஆரிய - அந்தணர்கள் மூலதனமாக்கிக் கொண்டு தமது முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தி சைவ சிவலிங்க வழிபாட்டுக்கு மந்திர மொழி என்று "சமஸ்கிருதத்தை" வழிபாட்டுத் தெய்வ மொழியாக்கிக்  கொள்ள முடிந்தது. அன்று தொடங்கியது, இன்று வரைக்கும் சில ஆயிரம் ஆண்டுகளாக நிலை பெற்றிருப்பதும் வியப்பன்றோ!

கி.மு. 3500 ஆண்டுவாக்கில் வட இந்தியாவுள் நூளைந்த ஆரியப் படையெடுப்பாளர்கள்; வட இந்தியாவில் வாழ்ந்த ஆதிதிராவிட பன்மொழி பேசியோரைச் சுலபமாக வெற்றி கண்டு, மேலாதிக்கம் பெற்று, அடக்கி ஆழவும் முனைந்தனர். இதனால் வெறுப்புற்ற தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளம் பேசிய மக்கள் புலம்பெயர்ந்து இந்தியத் தென்னாடு நோக்கி வந்து "டெக்கான்" பிரதேசத்துள் குடியேற நேர்ந்தது. ஆரியர் என்ற பிராமணரும் பிந்தொடர்ந்து வந்து, சகல இன மக்களோடும் இரண்டறக் கலந்து கொண்ட போதும், சமஸ்கிருத பூசை ஆராதனை ஆகியவற்றை நிலைநாட்டிக் கொண்டனர்.

உயர்ந்த சாதித் தோறணையும், சைவசமய பூசாராதனை மேலாதிக்கமும், சமஸ்கிருத மந்திரமொழிப் பிரயோகமும், இன்றும் உறுதியாகவே இருக்கின்றது. ஆரியர் என்போரது சாதுரியத்தினால், பல சென்ற நூற்றாண்டுகளாக பல்வகை அந்நியரின் இந்தியப் படையெடுப்புகளின் போதும் தம் செல்வாக்கைப் பேணிக் காத்திருக்கின்றனர். இறுதியாகத் தென்கிழக்காசியப் பிரதேசத்தையே கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியரும், இந்திய நாட்டில் உருவாகியிருந்த பல மதக்கொகைகளும், எண்ணரிய கற்பனைத் தெய்வங்களையும், ஒன்றாக இணைத்து "இந்துமதம்" என்ற பெயரில் ஆரியப் பிராமணரின் செல்வாக்குடனேயே  சமஸ்கிருத ஆராதனை ஆதிக்கம் பெற்றிருக்கின்றது.

6ஆம், 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில், மறு சமயங்களான சமணம், பௌத்தம் போல்வன புகுத்த முனைந்தபோது நாயன்மார்-நால்வர் தேவார-திருவாசங்கள் தமிழில் பாடி அற்புதங்களை நிகழ்த்தியதாக அறிகின்றோம்.

பூமிப்பந்தில் இயற்கை/செயற்கை செல்வாக்கு:
நாம் இன்று காண்கின்ற இந்து மகா சமுத்திரம், பரந்து விரிந்த பெரு நிலப்பரப்பாகவே முன்பு இருந்ததாகவும், அதற்கு ஐரோப்பியர் "லமூறியாக் கண்டம்" என்றனர். சங்ககால இலக்கியத்தில் தமிழ்பாவில்  "குமரிக் கண்டம்" என்றனர்.

இடைக் காலங்களில் ஏற்பட்ட பூமிப் பிரளயங்கள், சமுத்திர கொந்தளிப்புகள் போன்ற பல இயற்கை அனர்த்தங்களினால், இந்து சமுத்திரம் உருவாகியும், பல நூறு தீவுகள் உருவாகவும் நேர்ந்ததென்று ஆராச்சி வரலாறு கூறுகின்றது.  இப்படி இயற்கை கோளாறினால் தென்னிந்தியாவில் இருந்து; இலங்கைத்தீவும் உருவாகி உள்ளது உண்மை. இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்-இந்திய , கன்னியாகுமரி, நாகர்கோவில் பிரதேசங்களோடு, வட-இலங்கையும் சேர்ந்து பரந்திருந்தது.

இதனை நிரூபிக்கச் சிறந்த ஆதாரங்கள் இன்றும் பலவுள.  கன்னியாகுமரி, நாகர்-கோவில் பிரதேசத்துடன் வலிகாமம் பிடதேசம் சேர்ந்து இருந்தது. அங்கெல்லாம் தமிழர்களே வாழ்ந்தார்கள். இவ் இரு பிரதேசங்களிலும் இன்னும் அணு அளவேனும் வேற்றுமையை காணமுடியாது.  நிலவளம், நீர்வளம், வான்பயிர், செய்-பயிர், தோட்டம், துரவு, கிணறு, துலா, இறைப்பு முறை, வீடு வளவு, தெருத்திண்ணை, மாடு, ஆடு வளப்பு, பேச்சுத் தமிழ், ஆண், பெண் உடை நடை பாவனை, கோவில், குளம், விரதம், பூசை ஆராதனை, மக்களின் தோற்றத்தோடு மரபணு ஒற்றுமை, (பாச உணர்வு) அனைத்தும் ஒன்றாக இருப்பதை இன்றும் உறுதி செய்கின்றன.  இவை தவிர உலகின்கண் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களோ, செயற்கை யுத்தங்கள், புலம் பெயர்வுகள், ஆட்சி அதிகாரங்கள், மாற்றங்கள் இப்படியான எதுவித செல்வாக்கும் புகுந்து விடாத படிக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகவே உலகில் பல பிரதேசங்களில் நிறையச் சேரிகளும், பட்டிதொட்டிகளும் இருந்து வருகின்றதையும் அவதானிக்கலாம்.

நாம் திருச்சுழிபுரம் பதியை உற்று நோக்குமிடத்து, பிரளயத்தால் நிலப்பரப்பு இந்து சமுத்திரம் ஆனபோதும், சம்பில்துறை பட்டினம் சமுத்திரக் கொந்தளிப்பால் சங்கமம் ஆனபோதும், வளமைபோல் இங்கு நிலை கொண்டிருந்த சைவசமயச் செல்வாக்கினுள் வேறு எந்தச் சமயச் செவாக்காவது இடம் பிடித்திருக்க இன்று வரைக்கும் அங்கு இயலவில்லை என்பதும் உற்று நோக்கற்பாலது. மிகப் பழமையான பல சைவ ஆலயங்கள் நிறைந்திருப்பதும், பல சித்தர்கள், சிரேஷ்டர்கள், யோகர்கள் இங்கு வாழ்ந்து, புனித பூமியாக்கிப் பிரிந்ததும், ஆதாரபூர்வமான (இறந்தகால) வரலாறுகளாகும்.

திருச்சுழிபுரம் சீமைக்கு சிறப்பளிக்கும் சிவாலயம்:
கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சிந்து வெளி நாகரீக காலத்தில் வாழ்ந்த ஆதிதிராவிடரின் வணக்கத்துக்கான "சிவலிங்க விக்கிரக" வழிபாட்டு முறை முறை உருவாக நேர்ந்த் தத்துவ ஆராய்ச்சி, சைவத்தின் தமிழ் இனத்தின், பண்டைக்காலத்து மிக உச்ச நிலைமயை நன்கு படம் பிடித்துக் காட்டுவதாகும்.

அண்டசராச்சரங்கள் அனைத்தினதும் ஆகர்ண சக்தியை கண்டுணர்ந்து, களித்தவர்களில் பலர் அக்காலத்தில் வாழ்ந்த ஆதிதிராவிடராகும். பூமிப்பந்தும், கிரகங்கள், நட்சத்திரங்களும், மனித ஊனுடலை இயக்கு சக்தியாக விளங்கும், ஆத்மாவோடு ஆகர்ண சக்திப் பிணைப்பு உண்டென்பதை அவதானித்து சோதிடக் கலையை நிலைநாட்டியுள்ளனர். சோதிடக் கணிப்புக்கு பஞ்ச (5) அம்சங்கள்:
1. வாரம்,  2. திதி,  3. நட்சத்திரம்,  4. யோகம்,  5.  கரணம் என்பன.

இவற்றின் இயக்க ஈப்பும், மானிட இயக்கு சக்திக்குக் காரணம் என்பதை அன்று தொட்டு இன்று வரைக்கும் மறைபொருள் ஞானமாக கொண்டிருப்பதால் விளங்க முடியும்.

பகுத்தறிவு படிப்படியாக மேலோங்க வாழ்ந்த மானிடப் பிறப்பில், ஆதிதிராவிடத் தமிழ் மக்கள் தம் மரபு அணுவும்மாறாது, இன்று வரைக்கும் இருந்து வருவதும் தனிச்சிறப்பேயாம். பண்டைய நாட்களில் பலர் வாழ்க்கையின் மர்மத்தைப் பற்றி ஆழ்ந்திருந்து சிந்திக்கத் தலைப்பட்டனர்.

யோகக்கலை மூலம் கண்டு கொண்ட ஞானஒளி:
மானிடர் பிறப்பது, வாழ்வது, இறப்பது இவை எதனால்? எப்படி? ஏன்? என்பது கேள்வி. மனிதர் வேடுவராக அலைந்த போது, உணவுக்கு மிருகங்களைப் பறவைகளைக் கொன்று தின்றதைப் பகுதறிவு மேலிடச் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது.  ஐந்தறிவு படைத்தவற்றை உற்று நோக்கி, மாமிசபோசினி, தாவர போசினி, இவற்றின் வேறுபட்ட தன்மைகளால் ஈர்க்கப் பெற்றும், பாவம், புண்ணியம் பற்றி உணரவும் முடிந்தது.  தாவர போசினிகளான யானை, குதிரை, ஒட்டகம், மாடு, ஆடு, எருமை, மான், மரை அனைத்தும் அன்றிலிருந்த ஆதி திராவிடருக்கு, அறிவூட்டிகளாக தெரிந்தன.

பல சிறந்த சிந்தனையாளர்கள், தனித்திருந்து ஆழ்ந்து சிந்திக்கலாயினர். ஆற்றங்கரை ஓரங்களில் மரநிழலின் கீழும், குகைகளிலும் தவம் மேற்கொள்ள முனைந்தனர். உயிர்வாழ உணவுக்கு இலை, குழை, தளைகளும், கிழங்கு பழ் வகைகளும், தாகத்திற்கு நன்நீரும் பருகினர்.  உடல் வளம் பேணப் பிராணயாமப் பயிற்சியோடு, யோகக்கலைகளையும் கற்றுக் கொண்டனர். உள்மனதில் அருள் ஒளி பிரகாசித்த போது சிறந்த சிந்தனைகளுக்கே ஆளாக ஏதுவாயிற்று.

திராவிடர்களில் இப்படிச் சிறந்து நோக்கியவர்களே; பண்டைய ஞானிகள்,முனிவர்கள், தபசிகள், யோகிகள், இருஷிகள், சித்தர்கள் என்போர். இவர்களுக்கு நீண்ட ஆயுட்பலமும் கிடைக்கப் பெற்றதும் உண்மை.

சைவ சித்தாந்த முப்பொருள் தத்துவ விளக்கம்:
உலகில் சீவாத்மாக்களின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்பதற்கான காரண காரியங்களைக் கண்டறிய விளைந்தோரின் ஆழ்மனதில் கண்டுணர்ந்த முப்பெரும் தத்துவங்களே; பதி,  பசு,  பாசம் என்பன.  என்றுமுள்ள பசு = ஆன்மா = உயிர்.  ஆணவ மலத்துடன் (பாசம்), கர்ம வினைக்கேற்ப, ஐம்பெரும் பூதங்களின் (மாயை) ஆக்கத்தில், பிறவிகள் பலவிதம் எடுப்பதாகும்.

இதுவேதான் பண்டக்கால ஆதிதிராவிட, வீரசைவர்களான ஞானிகளின் நீண்ட தவத்தின் பயனாகத் தெளிந்து, உலகுக்கு அறியத்தந்த, "சைவசித்தாந்த முப்பொருள் தத்துவமாகும்".  அஃதே (1)  பதி,   (2)   பசு,   (3)   பாசம்.

"பதி" எங்கும் நிறைந்ததும், சுயசொரூபமற்றதுமாகும்.  தெய்வீக அருள் கைவரப் பெற்ற ஔவைப் பாட்டியின் அருள்வாக்கின்படி அணுவுக்குள் அணுவாகி, அப்பாலுக்கு அப்பாலாய், கணுமுற்றி நின்றது என்னும் போது; விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளின்படி பிராணவாயு போன்றவற்றை, மேலும் பிளந்து  Neutron, Proton, Electron  போன்றவற்றின் சக்தி வலிமைக்கு அப்பாலுக்கப்பாலான எல்லாம் வல்ல பொருளே இறைசக்தி = பதி.

மேலே குறிக்கப்பெற்ற கடவுளின் படைப்பாகக் காண்கின்ற அண்ட சராசரங்களையும் அணுவும் பிறளாது இயங்க வைத்து, ஆத்மப் பிறவிகளையெல்லாம் மும்மலப்பிடியில் பிறந்து, வாழ்ந்து, பிரிந்து, பின்பு பிறக்ககும் போது பிராரப்தவினைப் பயனாகவே பிறக்க வைக்கிறார். இங்கே மனிதர் ஒன்றை நன்றாக உணரவேண்டும்; நல்வினை, தீவினைப் பயனே மறுபிறவிக்கு மூலகாரணம்.

ஆதி திராவிடர் பகுத்தறிந்தபடி விலங்குகளில், தாவர மாமிச போசினிகளில் கண்டறிந்த பாவ புண்ணிய தத்துவப் பொருளை உணர்ந்தோம? இல்லை.

உருவம் இல்லாத "பதி" பகுத்தறிவு பெற்ற மனிதப் பிறவிக்கு, பட்டுண்ர்வை வலியுறுத்தவே சிவலிங்கத் திருவுருவம் அருளப் பெற்றதாகும்.  அண்டசராசரங்கள் அனைத்திலும் எண்ணிறந்த வடிவில் பிறப்பது, வாழ்வது, பிரிவது எதனால் ? ஏன் ? என்பதாகும். அனத்துவித பிறப்பு உருவாவதற்கு எதிமறையான இருபால் உறவே ஆதிமூல ஆதாரம் என அறிந்து கொண்டனர். நாதம் - விந்து என்கின்ற ஆண் - பெண் எதிர்மறையான இருபால் பிணைப்பை (Possitive + Negetive)  அருள் வடிவாக்கி "சிவலிங்க சொரூப" அருளைப் பெற்றது.

சிவலிங்க வழிபாடு:
ஆதித் திராவிடர் தம் வாழ்விட மத்தியில், சிவலிங்க சொரூபத்தை ஆதிமூலத்தில் அமர்த்தி, ந்ல்நீர் கொண்டு நீராட்டி, ஒளிவிளக்கேற்றி, சேமக்கலம், சங்கு, மணி கொண்டு ஓசை எழுப்பி, தீப தூபங்காட்டி, பூச்சொரிந்து, அமைதி காத்துத் தனித்திருந்து சிந்தையை அடக்கி, தேவையைத் தியானித்து, தெய்வத்திடம் வேண்டினர்.  இப்படியே பல்லாயிரம் ஆண்டுகள் பறந்தோடியதன் பின்பே, கிமு.3500 ம் ஆண்டுகள் வாக்கில் ஆரிய அந்தணரின் ஆதிக்கம் ஆரம்பமாயிற்று.

ஆரியரின் படையெடுப்புக்கு முன்பதாக பரந்த ஆசியாக் கண்டத்தில் ஏற்பட்ட பிரளயத்தால்; சகல் பாகங்களிலும் இருந்த சிவலிங்க வழிபாடுகள் மண்மூடிப் போகக் காரணமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டிலும், மண்ணுள் மாண்டிருக்கும் சொரூபங்கள் கண்டெடுக்கப் பெற்றுள்ள வரலாறுகளையும் கண்டோம்.

பரந்த பூமிப்பந்தில் மறைந்த சிவலிங்க சொரூபங்கள்:
கீழைத்தேசத்துக்கும் மேலைத்தேசத்திற்கும் இடையில், பசுபிக் சமுத்திரத்தில், காவாய் தீவுகளில் ஒன்றான ”குவை” என்னும் தீவில், 1975ம் ஆண்டு மாசிமாதம்"வைலு" ந்திக்கரையில், அமெரிக்க சுப்பிரமுனிய சுவாமிகளால் ஓர் "சுயம்புலிங்கம்" இருக்கக் கண்டு அதனையே மையமாகக் கொண்டு இன்று அங்கு "சன்மார்க்க இறைவன் கோவில்" உருவாகி வருகிறது.  ஆசியாக் கண்டத்தின் பல பாகங்களிலும், சொரூபங்கள் மண்மூடிக் கிடப்பதைக் கண்ட வரலாற்களும் பல உள.  இலங்கத்தீவின் எட்டுத்திக்கிலும் பண்டைக்காலச் சிவாலயங்கள் இருப்பதைக் காண்கிறோம்.  வடநாட்டில்லிருந்து (பங்களாதேஷ்) 2500 ஆண்டுகளுக்கு முன்பு; நாடு கடத்தப்பட்ட அரசகுமாரன் "விஜயன்" தன் 700 பரிவாரங்களோடு பயனித்து வந்து சேர்ந்த இலங்கையில், பழுதடைந்த 5 சிவாலயங்களைத் திருத்திக் கொடுத்த வரலாற்றினை, சிங்கள் மக்களின் இதிகாசமான பாளி மொழி ”பௌத்த மகாவம்சத்தில்” குறிப்பிட்டிருப்பதில் காணலாம்.  அவற்றுள் நான்கு வெளிப்ப்டையக கண்டு கொள்ளப்பெற்றன. 5 வது சம்புநாதீஸ்வரர் என அறிய வருகின்றது.

7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மாரினால் தேவாரப் பதிகத்தில் பாடப்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான "திருக்கேதீஸ்வரம்" 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மாதோட்டக் காட்டுக்குள் மாண்டிருந்து, தோண்டி எழுந்தருளப் பெற்றதும் நாம் அறிந்ததே.  ஆரிய அந்தணர் காலத்தில் ஆக்கப் பெற்ற புராண இதிகாச வரலாறுகள் சஸ்கிருதத்தில் எழுதப் பெற்றுத், த்மிழிலும் மொழி பெயர்க்கப்பெற்றன. பதினெண் புராணங்களில் தட்ஷ்ண காண்டத்தில் "சுயம்புநாத படனம்" விரித்துரைகின்ற சிவாலயமே திருச்சுழிபுரத்தின் சிறப்ப்னை உலகறியச் செய்யப் போகின்ற நாதீஸ்வரம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக மறைஎது கிடப்பதை, கனடியத் திரு நாட்டிலேதான் "உதயன்" வாரச் செதியாக 5 தடவைகளாக வெளிக் கொணரத் திருவருள் கைகூடியது.

புராண இதிகாச, இலக்கியங்களில் சைவசமய புரட்டுகள்:
நடந்த வரலாறுகளுக்கு உண்மைக்குப் புறம்பான உப கதைகளை புகுத்தி, கடவுள்களின் அவதார்ங்களாக வருணித்தும், பொகளை மெய்களாக்கியும், சமஸ்கிருத மூலமொழியில் எழுதப் பெற்ற பல புராண இதிகாசங்கள் ஆதிதிராவிடர் பரம்பரையிலேயே வந்தவர் மத்தியில் இன்று வரைக்கும் ஆதிக்கம்  செலுத்துவதை அறியலாம்.

இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முற்பட எழுதப்பெற்ற சஸ்கிருத நூலே பதினெண்புராணம். சுயம்புநாத படனத்தின் உண்மை வரல்லாற்றுக் குறிப்பின் படிக்கு;  ”நாவலிங்ககாட்டில்”, தோட்டம் செய்ய விரும்பிய வேளாண் வைரவன்; காட்டை வெட்டி அழித்த போது கண்டு கொண்டதே சுயம்புநாத சிவலிங்கம். கேள்வியுற்ற வன்னி அரசன், அங்கு அமைச்சரை அனுப்பி ஆலயம் அமைத்து , பூசைகளின் செலவுக்காக, நிலபுலங்களை மானியமாக அளித்தான்.

உண்மை வரலாற்றினை உறுதிப்படுதும் அளவுக்கு அங்கே எந்தப் பெரிய ஆலயங்களுக்கும் இல்லாத அளவுக்கு (3500 ஆண்டுகளுக்கு முன்பு) வழங்கிய மானியங்களின் எச்சங்கள்; இன்று வரைக்கும் பொன்னாலை,  நெல்லியான், திருவடி நிலை, சம்பித்துறை, மாதகல், சில்லாலை, வரைக்கும் இருப்பது வியப்பன்றோ!.

20ஆம் நூற்றாண்டில்  நாம் நன்கு கண்டறிந்தது; சிவாலயத்தின் நன்செய், புஞ்சை நிலபுலங்களை அனேக பொதுமக்கள் அங்கு குத்தகைக்கும், ஈட்டுக்கும் பெற்றவற்றை சத்தியக் கடதாசி மூலம் பின்பு அறுதி உறுதி முடித்து, அபகரித்தும், விற்றும், அவமே சிடைவுற்றதை ஆதாரபூர்வமாகக் கண்டு கொண்டோம்.

வேளாண்வைரவன் பரம்பரையின் சுயம்புநாதீஸ்வரம்,; காலப்போக்கில் சம்பில்துறைப் பட்டினத்தின்ல் எழுந்தருளி இருந்த போது, சைவ வணிகச் செட்டியார்களின் ஆதிக்கச் செல்வாக்குக்கு சென்றடைந்தது. இவர்களின் காலத்தில்தான், அசோகச் சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரையும், தம்பி மகிந்தனும், அரசமரக்கிளைகளோடு புத்த மதத்தை இலங்கையி பரப்புவதற்காக கடல் வழி வந்து இறங்கிய துறைமுகம் "சம்பில் துறைமுகமாகும்".

சம்பில்துறை பட்டினத்தில், சம்புநாதீஸ்வரமும்,  காவிரிப்பூம்பட்டினத்தை கடல்கொள்ளை கொண்டது போல்; இங்கேயும் இந்து சமுத்திரக் கொந்தளிபினால் சம்பிதுறை பட்டினமும் சங்கமமாகியது. 20ஆம் நூற்றாண்டு ந்டுப்பகுதியில் சம்பில்துறைச் சமுத்திரத்தில் நீண்டதூரம் நீந்திச் சென்றபோது, நீருக்குள் முருகைக்கல் கட்டிட இடிபாடுகள் இருக்க நாம் கண முடிந்தது.  பண்டைய வணிகச் செட்டியார் பரம்பரையினர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு முன்பு , துறைமுகங்களில் குலதெய்வங்களுக்கு ஆராதனை நிகழ்தாது வணிகத்தை ஆரம்பிப்பதில்லை.

சமுத்திரத்தில் சங்கமான பின்பு; சம்புநாத சிவாலயம் இடம் மாறி மாறி இறுதியாக 1820 ல் கடற்கரையை அண்டியிருக்கும் வயல்கரை - சாத்தாவோலை என்னும் செட்டிகுறிச்சியில் எழுந்தருளப் பெற்று , நித்திய பூசைகள் நிகழ்ந்தன. அப்போது நைமித்திய திருவிழாக்கள் இங்கு நடைபெறவில்லை.  ஆலய நிலபுலங்களே; இவ் ஆலயம் நெடுங்காலமாக அழியப்படாதிருக்க அருள்பாலித்தது.  "சிவசக்தி" திருவிளையாடலின் அற்புத நிகழ்வுகளை ஆழ்ந்து சிந்திக்க வல்லார் நன்கு அறிந்து கொள்ளமுடியும்.

திருச்சிற்றம்பலம்

1956.23.02.2016

திருகோணமலை - பாலையூற்று ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம்

E-mail Print PDF

பணிப்புலம் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் திருகோணமலை-பாலையூற்று பகுதியின் மத்தியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயம்

இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்கள், திருப்பணி வேலைகளை; மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக இவ் ஆலயத்தின் பெயரில் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுளதாக ஆலைய நிர்வாகிகள் அறிவிக்கின்றனர்.விபரங்களை காண: http://srignanavyravaralayam.shutterfly.com

பைரவர் வழிபாட்டின் பலன்கள்….
பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் சிறந்த நாளாகும். ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும், பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். பைரவருக்கு பிடித்தமானது சந்தனகாப்பு.

இதில் வாசனை திரவியங்களான புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது சிறப்பாகும். சந்தனகாப்பு செய்வதால் ஒருகோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது.

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தனமாலை அணிவித்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், தேன், செவ்வாழை, வெல்லப்பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பைரவரை காலையில் வழிபட சர்வநோய்களும் நீங்கும்.

பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை கிட்டும்.

பைரவருக்கும் சிறு துணியில் மிளகை சிறு பொட்டலமாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாக பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பணிப்புலம் அம்பாள் கீதம்

E-mail Print PDF

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் கீதம்

எழுதியவர்: திரு .யாதவன்
தொகுப்பு: ஜெ.நிவர்சன்

பணிப்புலத்து அம்பிகையே பாதங்களைத் தொழுகின்றேன்

நினைத்திடும் நிர்குணர்வை இவ்வுலகில் பெறுகின்றேன்

கனிதரும் சேலையிலே கருங்குயில்கள் பாட்டினிலே
ஒலித்திடும் சுருதிலே சுகராகம் பாடுகின்றேன்

சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்

சிங்கத்தின் மீதமர்ந்து
சிங்கார எழிலோடு
சங்கவி அம்பிகையே
தரனியில் வலம் வருவாய்

சிங்கத்தின் மீதமர்ந்து
சிங்கார எழிலோடு
சங்கவி அம்பிகையே
தரனியில் வலம் வருவாய்

மங்காத புகழுடனே
மானிலத்தில் மகிழ்வுடனே

மங்காத புகழுடனே
மானிலத்தில் மகிழ்வுடனே

எங்கும் எம்மக்கள் வாழ அருள் தருவாய் அம்பிகையே

எங்கும் எம்மக்கள் வாழ அருள் தருவாய் அம்பிகையே

பணிப்புலத்து அம்பிகையே பாதங்களைத் தொழுகின்றேன்

நினைத்திடும் நிர்குணர்வை இவ்வுலகில் பெறுகின்றேன்

கனிதரும் சேலையிலே கருங்குயில்கள் பாட்டினிலே
ஒலித்திடும் சுருதிலே சுகராகம் பாடுகின்றேன்

சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்

கலியுகத்தாய் அவளைக்கதியென நினைத்தால்

கலியாகி எங்களுக்கு சகலவரம் தருவாள்

கலியுகத்தாய் அவளைக்கதியென நினைத்தால்

கலியாகி எங்களுக்கு சகலவரம் தருவாள்

எலிவாகனன் தாய் ஏறுமயலேன் தாய்
எலிவாகனன் தாய் ஏறுமயலேன் தாய்

நலியாத நல்லருளை நமக்கு நமக்கு சுரந்நிடுவாள்
நலியாத நல்லருளை நமக்கு நமக்கு சுரந்நிடுவாள்

பணிப்புலத்து அம்பிகையே பாதங்களைத் தொழுகின்றேன்

நினைத்திடும் நிர்குணர்வை இவ்வுலகில் பெறுகின்றேன்

கனிதரும் சேலையிலே கருங்குயில்கள் பாட்டினிலே
ஒலித்திடும் சுருதிலே சுகராகம் பாடுகின்றேன்

சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்

அஞ்சிடும் நிலைமாற வெங்சவர் அடங்கட்டும்

நெஞ்சினில் நின்று வஞ்சங்கள் ஒளியட்டும்

அஞ்சிடும் நிலைமாற வெங்சவர் அடங்கட்டும்

நெஞ்சினில் நின்று வஞ்சங்கள் ஒளியட்டும்

பஞ்சமது பாரினிலே பஞ்சாக எரியட்டும்
பஞ்சமது பாரினிலே பஞ்சாக எரியட்டும்

தஞ்சம் என அம்பிகையின் கால் களைப் பணிகின்றேன்
தஞ்சம் என அம்பிகையின் கால் களைப் பணிகின்றேன்

பணிப்புலத்து அம்பிகையே பாதங்களைத் தொழுகின்றேன்

நினைத்திடும் நிர்குணர்வை இவ்வுலகில் பெறுகின்றேன்

கனிதரும் சேலையிலே கருங்குயில்கள் பாட்டினிலே
ஒலித்திடும் சுருதிலே சுகராகம் பாடுகின்றேன்

சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்
சுகராகம் பாடுகின்றேன்

எழுதியவர்: திரு .யாதவன்
தொகுப்பு: ஜெ.நிவர்சன்


--

 

 

சரித்திர நோக்கில் சாந்தையும், சித்திவிநாயகர் ஆலயமும்

E-mail Print PDF

சரித்திர நோக்கில் சாந்தையும் விநாயகர் ஆலயமும் ( ஆய்வுக்கட்டுரை)


ஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
சாந்தை,
பண்டத்தரிப்பு.

ஈழத்திருநாட்டின் சிரசாம் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண நன்நகரின் முகமென தோன்றும் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள்மிகு சித்தி விநாயகராவார். இக் கோயில் எந்தக் காலத்தது என்பது திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இலங்கையின் சரித்திரத்தை ஆராயும் பொது இது மிகவும் பழமை வாய்ந்தத்தாகக் கருத இடமுண்டு.

கி.மு. மூன்றாம்  நூற்றாண்டு இலங்கையை  ஆண்ட  மன்னன் தேவநம்பியதீசன் இந்துசமயத்தவன். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாகரீக இனம் நாகர் இனமாகும். இவர்களும் இந்து சமயிகளாவர். அனுராதபுரத்தை ஆண்ட மூத்த சிவன் யாழ்பாணத்தின் கதிரமலையின் அரசாண்ட நாகர் குலத்தில் திருமணம் செய்தான் எனவும், அவர்களின் புதல்வனே தேவநம்பியதீசன் எனவும் மிகப்பழம் சிங்கள இலக்கிய நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவிலிருந்து வந்த மகிந்ததேரர் என்னும் புத்தபிக்குவின் உபதேசத்தில் மனம் மாறிய தேவநம்பியதீசன் புத்தசமயத்தைத் தழுவிக் கொண்டான் இருப்பினும் தீவிர சைவர்கள் தம்மதத்தை விட்டுக் கொடுக்காது சைவசமயத்தை கடைப்பிடித்தனர் என மகாவம்சம் கூறுகிறது. மக்கவம்சம் ஒரு சிங்கள பௌத்த இலக்கிய நூலாகையால் அது பௌத்தத்தை முதன்மைப்படுத்தியே கூறியுள்ளது. எனவே மகாவம்சத்தை அடிப்படையாக வைத்து நாம் இந்து சமயத்தின் நிலைமையை ஊகித்தறியமுடியும். இக்கூற்றின் படி இந்துசமயிகள்   இங்கு வாழ்ந்ததால் இந்துக்கோயில் நிச்சயமாக இருந்திக்கும்.

எனவே இலங்கைக்கு புத்தசமயம் கொண்டு வரப்பட்டபோது இங்கு இவ்வாலயம் இருந்து இருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. ஏனெனில் புத்த பிக்குணியாகிய சங்கமித்தை புனித வெள்ளரசங்கிளையுடன் வந்து சம்பில்துறையில் இறங்கிய பொது தேவநம்பியதீசன் இவ்வாலயம் இருக்கும் இடத்தில் வடபுறம் ஒருமடத்தில் (அவனால் அமைக்கப்பட்டதென்பர்) தங்கி இருந்து வரவேற்றான் என மகாவம்சம் கூறுகிறது..

கர்ணபரம்பரைக் கதை
எனினும் இம்மடம் முற்காலத்தில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் மடமாக இருந்ததென கர்ணபரம்பரை மூலம் அறிய முடிகிறது . அதாவது பல நூறு வருடங்களுக்கு முன் சாந்தை என்ற இடம் இந்துமயானமாக இருந்ததெனக் கூறப்படுகிறது. இதற்காதாரமாகச் சில தடயங்களும் தகவல்களும் காணப்படுகின்றன. இவ்வாலயத்தின் முன்பக்கத்தில் உள்ள காணிகள் "சுடுகாட்டுப்பிட்டி"  என உறுதியில் குறிப்பிட்டிருப்பதும், பின்புறத்தில் உள்ள நெற்காணிகள் "குருக்கள் வரவை" என அழைக்கப்படுவதும் இதன் தெற்குப்புறமாக ஒரு கேணியும் அரசமரமும்  இருந்ததாகவும் வடக்குப்புறமாக மடம் குருக்கள் பிதிர்க்கடன் செய்து இக்கேனியின் புண்ணிய தீர்த்தத்தில் சேர்ந்ததாகவும் நம் முன்னோர்களால் வழிவழியாகக்  கூறப்பட்டு வருகின்றன. தெற்குப்புறம் இருந்த அரசமரம் சங்கமித்தை நாட்டியதாகச் சிலர் கூறுவது அறியாமையாகும். சங்கமித்தை பொற்கலத்தில் கொண்டுவந்த  புனித வெள்ளரசங்கிளை மிகவும் புனிதத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று அநுராதபுரத்தில் விழா எடுத்து நாட்டியதாக  மகாவம்சம் கூறுகிறது. சிலர் ஊருக்குப் புகழ் என நினைத்து "பொல்லு கொடுத்து அடி வாங்கும் " நிலையில் தவறான கருத்து விளங்குகிறார்கள். சங்கமித்தை வரமுன்பு இங்கு அரசமரம் இல்லை என கூற முடியாது. இந்த மரம் அதற்கு முற்பட்ட கால மரமாகவும் இருக்கலாம்.

சங்கமித்தை கொடு வந்தது புனித வெள்ளரசமரம் ஆனால் இங்கிருந்ததோ சாதாரண அரச மரம். புத்தர் ஞானம் பெறும் பொழுது அவருக்கு நிழல் கொடுத்தது தான் புனித வெள்ளரசமரம். அந்த மரத்தின் கிளை தான் அநுராதபுரத்தில் நாட்டியதாக மகாவம்சம் கூறுகிறது. எனவே இவர்களின் கருத்து புனித அரசமரத்தை கொச்சைப்படுத்தும் ஒரு கருத்தாகவே நான் கருதுகிறேன்.

சாந்தை சுடலையாக இருந்ததற்கு உதாரணம்

இப்பகுதி சுடலையாக இருந்ததென்பதை இக்கால மக்கள் ஏற்க மறுக்கலாம். ஏனெனில் இது பலநூறு வருடங்களுக்குமுன் ஏற்பட்ட ஒரு விடயம். இந்த சுடலை தான் பிற்காலத்தில் சம்பில்துறைமயானமாக மாறியது. இந்தச் சம்பில் மயானம் கடந்த முப்பது வருடங்களாக நாட்டு நிலை காரணமாக உபயோகிக்முடியாது மீண்டும் உள்நோக்கி வந்து சாந்தை வயற்கரையின்  மேற்கு அந்தமான சந்நியாசி கேணியடிக்கு மாற்றப்பட்டதை யாவரும் அறிவர்.

எமது சம்பில்துறை மயானம் இன்று நரசிங்க சுவாமிகளால் (வெற்றிவேல் சாமி) சம்புநாதீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டு அவரின் அதிகாரத்துக்கு உட்பட்ட சொந்த இடமாகக் காணப்படுவதை யாவரும் அறிவர். ஆனால் எமக்குப்பின்வரும் எமது வருங்காலச் சந்ததியினர் இவை பற்றி அறியமாட்டார்கள். இந்த நிலைதான் சாந்தை சுடலையின் நிலையும். சம்பில் சுடலை மாறியது இப்போது. சாந்தை சுடலை மாறியது அப்போது. ஆகவே கர்ணபரம்பரைக் கூற்றுக்களை நாம் மறுக்கவும் முடியாது. சம்பில்துறையில் அமைந்து இருந்த சம்புணாதேஸ்வரர் ஆலயம் இன்று உள்நோக்கி வந்து பணிப்புலம் சாந்தா ஒல்லை என்ற இடத்தில் அமைந்து இருப்பதை நாம் அறிகிறோம். இவை கால ஓட்டத்தில் நிகழ்ந்தவை.

செட்டியார்மாரின் வருகையும் குடியேற்றமும்

இவை நிற்க, ஆலய விடயத்துக்கு வருவோம். சுடலையாக  இருந்த கிராமம் அக்கால தென்னிந்திய செட்டிமாரின் வணிகப் பிரதேசமாக மாறியது.சம்பில்துறை அக்காலத்தில் ஒரு வணிகத்துறையாக  விளங்கியது. தென்னிந்தியச் செட்டிமாரே அக்கால வணிகர்களில் பிரசித்தி பெற்றவர்களாக விளங்கினர்.

இவர்கள் இத்துறை மூலம் வணிகம் செய்த போது இத்துறையை அண்டிய இக்கிராமத்தில் தமது குடியிருப்புக்களையும் அமைத்தனர். சாந்தை, பணிப்புலம், செட்டிகுறிச்சி என இப்போது அழைக்கப்படும் இடங்கள் முற்காலத்தில் இந்தியாவிலிருந்து குடியேறிய செட்டிமாரின் குடியிருப்புகளாகும். இவர்கள் அங்கிருந்து வந்து இங்கு குடியேறிய போது "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்னும் கூற்றுப்படி தாம் வணங்கிய குலதெய்வங்களை இங்கு கொண்டு வந்து வழிபட்டனர் எனக் கூறப்படுகிறது. சாந்தா ஒல்லை சம்புநாதேஸ்வரர் ஆலயம், சாந்தை ஈஸ்வர விநாயகர் (இன்று சித்தி விநாயகர்) சுழிபுரம் கண்ணகை அம்மன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம்(இடும்பன் ஆலயம்) வெற்றிமடம் முருகன் ஆலயம் என்பன செட்டிமாரின் பராமரிப்பில் இருந்து இன்று கைமாறியுள்ளதை  அறிகிறோம். இவர்களின் மூதாதைகள் பரிபாலித்து வந்த ஆலயங்கள் உள்ள பிரதேசங்கள் இன்று எவ்வளவு மாற்றம் பெற்றுள்ளன என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். எனவே செட்டிமாரின் வருகையுடன் இவ்வாலயம்   ஆரம்பமானது என்பதிற்  சந்தேகமில்லை.

செட்டிமார் வரவு என்பது தென்னிந்திய வாணிபம். இங்கு நடைபெற்ற காலமாகும். இவர்கள் தென்னிந்தியாவில் வழிபட்ட குலதெய்வமான சந்தோஷி விநாயகரை இங்கு கொண்டு வந்து ஒரு பாரிய இலுப்பை மரத்தடியில் வைத்து வணங்கினர். பிற்காலத்தில் சந்தோஷி என்ற சொல் மருவிச் சாந்தை எனப்பட்டது. இதனால் சாந்தை விநாயகர் எனப்பட்டதுடன் இவ்விடம்  சாந்தை எனப்பெயர் வந்ததெனக்  கர்ணபரம்பரைக்கதை கூறுகிறது.

இவ்விநாயகர் சாந்தகுணம் உள்ளதால் சாந்த விநாயகன் எனப்பட்டு பின் சாந்தை விநாயகன் எனப்பட்டார் எனக் கூறுவாருமுளர். எப்படி இருப்பினும் விநாயகரின் சம்பந்தப்பட்ட காரணப்பெயரே "சாந்தை" எனத் துணியலாம் (சந்தோஷி விநாயகர் சம்பந்தப்பட்ட புராணக் கதை பின்  ஒரு சந்தர்ப்பத்தில் கூறுவோம்).இதற்குப் பின்வந்த அந்நியர் ஆட்சியில் இந்து  ஆலயங்கலளிக்கப்பட்ட போதுங்கூட இச்சிறு ஆலயம்மட்டும் அழியாது தப்பிப் பிழைத்தது இவ்வாலய மூர்த்தியின் கீர்த்தியேயாகும்.

செட்டிமார்களின் பரம்பல் தேய்ந்து போனமை

இலுப்பை மரத்தடியில் ஓலைக்கொட்டிலில் சந்ததி சந்ததியாக இங்கிருந்த செட்டிமார்களினால் பூசிக்கப்பட்டு வந்த இவ்வாலயம் பிற்காலத்தில் ஆதரித்தவர்கள் அயற்கிராமங்களுக்கும்,  அந்நிய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்ததால் இங்கு நிரந்தரமாகக் குடியிருந்த  வினாசித்தம்பிச் செட்டியார், கந்தர் செட்டியார் என்போரின் பராமரிப்பில் வந்தது. வினாசித்தம்பிச் செட்டியார் தன் சகோதரனான கந்தர் செட்டியாரிடம் பூசைகளை ஒப்படைத்தார். இதன் பின் கந்தர் செட்டியாரின் பரம்பரைக்கு இக்கோயில் வந்தடைந்தது. கந்தர் செட்டியாரின்பின் அவர் மகன் ஆறுமுகச் செட்டியார் பராமரிப்பில் வந்தது. இக்காலத்தில் 1930  பணிப்புலம் பிலபல வர்த்தகர் சிவதொண்டர் திரு.த.சிவசம்பு அவர்களால் கர்ப்பக்கிரகத்துடன் கூடிய ஒரு ஆலயமமைத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆறுமுகச் செட்டியார் காலத்தில் பூசைகள் ஒழுங்காகவும்  புனிதமாகவும் நடைபெற்று வந்ததை நாம் அறிவோம். இவ்வாலயத்துக்கு என அக்காலச்  செட்டியார்கள் பல நெற் காணிகளை நிரந்தகமாக எழுதி வைத்திருந்தார். ஆனால் அக்கானிகள் இன்று ஆலயத்தின் பெயரில் இல்லாமல் போனது துர் அதிர்ஷ்டமே. ஆறுமுகச் செட்டியாரின் பின் அவர் மகன் பஞ்சாச்சரச் செட்டியாரின் காலத்தில் இவ்வாலயத்தின் நடைமுறைகள் மாற்றங்களுக்கு  உள்ளாகின. இவ்வாலயத்தை புனிதமாக பராமரிக்க சந்ததிகள் இங்கு இல்லாது போய்விட்டது. வெளிநாட்டு மோகம் சந்ததி சந்ததியாக வணங்கி வந்த விநாயகரையே பிரித்து விட்டது. இவர் தமது பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தம் வாழ்வைத்  தேடிக்கொண்டார். இவரின் வெளிநாட்டுச் சங்கமிப்புடன். விநாயகர் ஆலயம் ஊர் மக்களின் பராமரிப்பில் வந்தது.

கிராம மக்கள் பொறுப்பில் ஆலம்
ஊர் மக்கள் பொறுப்பேற்றதும் ஆலயம் புனருத்தானம் செய்யப்பட்டது. 2001இல் கும்பாபிசேகம் செய்யப்பட்டு இன்றுவரை கிராம மக்கள் நிர்வாகத்திலேயே பரிபாலிக்கப்படுகிறது. கருவறை, மகாமண்டபம், தம்பமண்டபம், மடப்பள்ளி, மணிக்கோபுரம் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டு  2010 இல் வசந்த மண்டபமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போது நித்திய பூசைகளும்,விசேஷ பூசைகளான மாதச் சதுர்த்தி, விநாயக சஷ்டி, மற்றும் விசேஷ தினப் பூசைகளுடன் ஆவணி மாத விநாயக சதுர்த்தியை இறுதி நாளாகக் கொண்டு 12 நாட்கள் அலங்காரத்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலய மூர்த்தியின் கீர்த்தி பற்றி கூறும் கர்ணபரம்பரைக் கதைகளில் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.

1) பெட்டைக்கடலுடன் போராடியமை.
மிகப்பழங்காலத்தில்  அண்மையில் ஏற்பட்ட சுனாமி போன்று ஒரு பெரும் கடற்கோள் ஏற்பட்டது. சம்பில்த்துறைக்கடல் பெரும்சீற்றத்துடன்  பொங்கி எழுந்து வயல் வெளிக்கு மேலாகப்பாய்ந்து  வந்தது. அப்போது இங்கிருந்த மக்கள் அலறி அடித்து விநாயகனை ஓலமிட்டனர். உடனே  மக்களைக் காக்க வேண்டி விநாயகன் இடப்பக்கம்திரும்பி பெட்டைக்கடலே எனக்கூறி தடுத்து எதிர் கொண்டார் அப்போது விநாயகனின் இடக்கண்ணும் இடக்காதும் கடலால்தாக்கப்பட்டு கண்ணையும் காதையும் இழந்தார் எனவும் கடல்திரும்பிச்சென்றதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. இக்கதையில் உண்மை இருக்கலாம் என்பதற்கு சிவபெருமான் தேவர்கள் அமிர்தம் கடையும் போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு  தம் தொண்டையில் நிறுத்தித் தேவர்களைக் காத்தமையைக் கூறும் புராணக்கதையை நோக்கலாம். இன்றும் சம்பில்கடலை பெட்டைக்கடல் என்றே கூறப்படுகிறது. இதற்குப்பின் இக்கடல் சீற்றம்கொள்வது இல்லை என்பதை   அண்மைய சுனாமியின் போது அறிய முடிந்தது.

2)தேவ பூசை (சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம்)
கந்தர் செட்டியார் பூசை செய்த காலத்தில் வியாபரத்தின் நிமித்தம்   வெளியூர் செல்வது வழக்கம் இக்காலத்தில் அவரது சகோதரர் வினாசித்தம்பிச்  செட்டியார் விநாயகருக்கு பூசை செய்வார். ஒரு முறை செட்டியார் இருவரும் வெளியூரில் தங்கவேண்டி ஏற்பட்டதால் சிலநாட்கள் விநாயகருக்குப் பூசை நடை பெறவில்லை. அக்காலத்தில் இக்கோயிலின் அயலில் இப்போது போன்று குடிகள் இல்லை. சுமார் 100 மீற்றருக்கு அப்பால் எனது பாட்டனார் வீடு மட்டும் (ஒட்டு வீட்டு வைத்தி) இருந்தது. ஒரு நாள் இரவு விநாயகர் அமர்ந்திருந்த இலுப்பைமரத்தடியில் சங்கு சேமக்கல ஒலிகள் கேட்டதாகவும் எனது பாட்டனார் உடன் அவ்விடம் சென்று பார்த்த போது எதையும் காணாது அதிசயத்துடன் திரும்பி  வந்ததாகவும் பின்னர் செட்டியார் ஊருக்கு திரும்பியதும் நடந்த அதிசயத்தை கூறியதாகவும் அப்போது செட்டியார் இது தேவ பூசை எனக்கூறி பூசை சிலநாட்கள் செய்யாததால் தான் தேவர்கள் வந்து பூசை செய்தனர் எனவும்  அன்றில் இருந்து நாள் தப்பாது கிரமமாக பூசை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது

3) அரச மரம் பற்றிய கதை (சுமார் 40 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்)
இக்காலம் கந்தர் செட்டியார் மகன் ஆறுமுகச் செட்டியார் காலமாகும். இவர் விநாயகருக்கு மிக விசுவாசமாக பூசை செய்பவர். கோயில் வாசலில் எமது வீடு உள்ளதால் நான் சிறுவனாக இருக்கும் போது அவரிடம் சென்று அன்றாடம் பூசைப்பிரசாதம் வாங்கி உண்பது வழக்கம். அப்போது இவ்வாலயம் பற்றி பல கதைகள் சொல்வார் அவற்றில் ஒன்று தான் பெட்டைக்கடல் கதையாகும். இவர் காலத்தில் ஆலயத்தின் தெற்குப்புறம் இருந்த அரச மரம் பற்றி புகழ் பிரசாரம் செய்யப்பட்டதால் பௌத்த துறவிகள் ஒரு நாள் இங்கு வந்து இந்த அரச மரத்தைப் பார்த்து இங்கு உள்ளவர்களிடம் இது பற்றி விசாரித்துச்  சென்றனர். இதைக்கண்ட ஆறுமுகச் செட்டியார் வேதனை அடைந்தார். பௌத்த பிக்குகள் இவ்விடத்தை ஆக்கிரமித்து புத்த கோயில் கட்ட போகிறார்கள் எனவும் எமது விநாயகர் ஆலயத்துக்குப் பேராபத்து வரப்போகிறதே எனவும் பயந்தார். அன்றிரவு விநாயகர் செட்டியார் கனவில் தோன்றி "இந்தச் சர்ச்சைக்குரிய அரச மரம் இருப்பதால் தானே நீர் கவலைப்படுகின்றீர் இதை இல்லாமற்  செய்தால் உமது கவலையும் இல்லாமற்  போகும்"  எனக்கூறி மறைந்தார். சில நாட்களில் அந்த பாரிய அரச மரம் பட்டுப்  போனது. அரச மரம் நின்ற இடமே  தெரியாமற் போனது. செட்டியார் கவலையும் நீங்கியது.

4) யுத்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவு
இது மிக அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஆகும். இராணுவத்தாக்குதலினால் எமது தமிழர் பகுதிகள் நாசமாகிக்கொண்டு இருந்தன. மாதகளில் நிலை கொண்டிருந்த இராணுவமும் சம்பில் கடலில் நிலை கொண்டிருந்த கடற்ப்படையும் ஏவிய பீரங்கிக் குண்டுகளும் எறிகணைகளும் விமானப்படையினரின் விமானக்குண்டு வீச்சும் தமிழர் பகுதிகளை மிக மோசமாகத் தாக்கி  பேரழிவுகளை ஏற்படுத்திய வேளை எமது விநாயகர் ஆலயத்தின் முன் உள்ள பகுதிகள் எவ்வித அழிவுகளுக்கும் உட்படவில்லை. எமது ஆலயத்துக்கு தெற்கே உள்ள சம்புநாதீஸ்வரம் மேற்கே  உள்ள காட்டு வைரவர் ஆலயம் வடக்கே உள்ள அந்தோனியார் ஆலயம் உட்பட இவ்வாலயத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள சில வீடுகளும் முற்றாக சேதமடைந்தன. அனால் எமது சாந்தை விநாயகர் ஆலயத்தில் ஒரு ஓடு தானும் உடையவில்லை. இது இக்காலத்தில் ஏற்பட்ட மிக அதிசயமாகும்.

இப்படி விநாயகனின் கீர்த்தி  இருந் போதும் சிலர் காலத்துக்கு ஏற்காத நம்ப முடியாத சில வதந்திகளைக் கூறி மக்களிடம் மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் அதே நேரம் தாமும் நகைப்புக்கு ஆளாகின்றனர். அண்மையில் நடை பெற்ற ஒரு வதந்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உண்மையே பேசி அறியாத ஒருவர் கோயில் மணியை அடித்துக்  கொண்டு இருந்த போது பட்டப்  பகலில் திடீரென ஒரு சோதி தோன்றியதாம். அவர் திரும்பிப் பார்த்த போது விநாயகர் கோயிலுக்குள் நுழைவதைப்  பார்த்ததாகவும் பின்னர் சென்று பார்த்த போது கோயிலின் பல வருடங்களுக்கு  முன் அமைக்கப்பட்ட உலர்ந்த சீமெந்துத்   தரையில் காலடிகள் இருப்பதாகவும் கூறி மக்களைக் குழப்பி உள்ளார். இக்காலத்தில் இப்படி கிறீஸ்தவ ஆலயங்களிலும் அற்புதங்கள்  நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. இது காலத்துக்கு ஏற்காத கட்டுக்கதையாகும். விஞ்ஞானம் மலிந்துள்ள இக்காலத்தில் மக்கள் குழம்பி கடவுள் நம்பிக்கையை இழக்க வைக்கும் கேலிக் கட்டுக்கதைகளைத் தயவு செய்து பிரபல்யப்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடம்  கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி


சாந்தை வினாயகர் வரலாற்றை விரிவாகாக் கூற வேண்டி ஏற்பட்டதால் சரித்திரத்தை ஆராய வேண்டி ஏற்பட்டது. எனது சரித்திர ஆராய்ச்சிக்கு உட்பட நூல்களாவன,
1. யாழ்ப்பாணச்சரித்திரம் - முதலியார் இராசநாயகம் எழுதியது.
2.யாழ்ப்பாணச்சரித்திரம் -கல்லாநிதி முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியது
3.யாழ்ப்பாண இராச்சியம் -A.S.உதயகுமார் எழுதியது

நேரடித்தகவல் தந்து உதவியவர் -நூறு வயதைத் தாண்டி இன்றும் சுய அறிவுடன் ஆரோக்யமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் செட்டிகுறிச்சி செட்டியார் பரம்பரையில் உதித்த சம்புமுத்து ஆச்சி (இவரின் தந்தையார் வினாசித்தம்பிச் செட்டியாரின் கந்தர் செட்டியாரும் கூடப்பிறந்த சகோதரர்களாவர்)

எனது ஆய்வு பற்றிய அபிமானிகளின் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.

நன்றி.

திரு.த.குணத்திலகம்
ஓய்வு பெற்ற ஆசிரியர்
சாந்தை
பண்டத்தரிப்பு.
10.09.2010

 

 

 

 

758.23.05.2014

பணிப்புலம் - வயல்கரை சம்புநாதீஸ்வரர் ஆலய வரலாறும் நிகழ்வுகளும்.

E-mail Print PDF

Image may contain: one or more people

“மூர்த்தி சிறியது ஆனாலும் அவர் கீர்த்தி மிகவும் பெரியது”

திருசிற்றம்பலம்

இலங்கையில் பிரசித்திபெற்று விளங்கிய பழம் பெரும் சிவாலயங்களில்  சுயம்பு சேஷ்திரமாகிய சம்புநாதர் சேஷ்திரம் என அழைக்கப்படும் சம்புநாதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இவ் ஆலயம் தட்சண கைலாசமாகிய திருகோணமலைக்கு (கோணேஸ்வரத்திற்கு) வடக்கு திசையிலும் இராமசேதுவுக்கு (இராமேஸ்வரத்திற்கு) கிழக்கு திசையிலும் (குறிப்பாக வலிகாமம்-மேற்கில்) அமைந்திருந்ததாக தட்சண கைலாய புராணம் - சுயம்புநாத படலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

Read more...

Page 39 of 40

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்