Tuesday, Mar 20th

Last update12:10:08 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள்,

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய நெய் நிரப்பும் விழா - 25.12.2016

E-mail Print PDF

No automatic alt text available.

 

நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

அடியார்கள் கூட்டம் அதிகமாக இருந்தமையால் கிடைத்த இடத்தில் நின்று கிளிக் செய்தவை

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய மகர மண்டல பூஜை - 18.12.2016 - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

கனடா - ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய மகரமண்டல பூஜையின் 33வது நாள் பூஜை 18.12.2016 அன்று பணிப்புலம் மக்களின் விழாவாக நிகழ்கின்றது.
இவ் விழா கனடா வாழ் மாலை அணிந்த (மணிகண்ட சாமிமார், கன்னிச் சாமிமார்) சாமிமார் ஆதரவில் நிகழ்வுற்றது.

நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

Image may contain: 1 person, indoor

 


பறாளை சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான புனராவர்த்தன கும்பாபிஷேகம் - புனருத்தாரண திருப்பணி நன்கொடை கோரல்

E-mail Print PDF

No automatic alt text available.

ஓம் சரவணபவ

பறாளை முருகன் துனை

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே

சுழிபுரம் பறாளை முருகன் தேவஸ்தான ”புனராவர்த்தன கும்பாபிஷேகம்” எதிவரும் 09.04.2017 ம் திகதி அமைந்துள்ள சுப முகூர்த்தத்தில் நடைபெற வேண்டும் என சிவாச்சாரியர்களினால் நிர்ணயிக்கப் பெற்றுள்ளதால்; ஆலய புனருத்தாரண வேலைகள் ஆரம்பிக்கப் பெற்று நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

ஆலய கருவறை, பிரகாரம், கோபுரம், உள்பிரகார தரை முதலியன பழுது பட்டிருப்பதனால்; மூலவர், பரிவார மூர்த்திகள் பாலஸ்தாபனம் (பாலாலயம்) செய்து; பழுதடைந்த கட்டிடங்கள் புனருத்தாரணம் செய்யப் பெற்று, வர்ணங்கள் பூசப் பெற்று அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்பிரகார வேலைகள் ஆரம்பிக்கப் பெற்று நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன்; மூலமூர்த்தியும், பரிவார மூர்த்திகளும் 19.01..2017ம் திகதி அமைந்துள்ள சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபனம் செய்யப் பெற்று; கருவறை-ஸ்தூபி, மகாமண்டப-ஸ்தூபி, மற்றும் கோபுர வேலைகள் ஆரம்பமாக உள்ளன.

Read more...

பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் மஹோற்சவ விழா முன்னறிவித்தல் -2017 - விளக்கம் இணைப்பு

E-mail Print PDF

No automatic alt text available.

அம்பிகையின் தீர்த்த உச்சவம் "ஆடிப்பூரம்" தினத்தில் நடைபெறுவதால்; அத் தினத்தை ஆதாரமாக கொண்டு கொடியேற்ற விழாவுக்கான தினம் தீர்மானிக்கப்பெறுகின்றது. அத்துடன் தீர்த்த உச்சவம் காலைப்பொழுதில் நடைபெறுவதால் "பூரம் நட்சத்திரம்" காலைப் பொழுதில் உதயமாகி உள்ளதா என்பது கவனத்தில் கொள்ளப் பெறுகின்றது.

அதன் பிரகாரம் கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும்  மஹோற்சவ விழாவின் பன்னிரண்டாவது நாள் ”வேட்டைத் திருவிழா”வும், பதின்மூன்றாவது நாள் ”சப்பறத் திருவிழா”வும், பதின்நான்காவது நாள் ”தேர்த்திருவிழா”வும், பதினைந்தாவது நாள் ”தீர்த்த திருவிழா”வும் நடைபெற்று நிறைவு பெறுகின்றது.

 


பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் - அன்னதான சபை நியமனம்

E-mail Print PDF

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலையத்தில் நடைபெறும் நைமித்திய, காமிக பூசைக் காலங்களில் அன்னதான சேவையை நடாத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னின்று நடாத்திய தொண்டர்கள் முன்வராத நிலையில்; ஆலய ஆதீனகர்த்தாக்கள் ஆலய முன்றலில் அவசரமாக கூடிய கூட்டத்தில் அன்னதான சபைக்கான நிரந்தர உறுப்பினர்களை தெரிவு செய்யும்வரை தற்காலிகமாக அன்னதான குழு தெரிவு செய்யப்பெற்றது.

அதில் கணேசரத்தினம் சபாநாயகம், இராசையா சிவபாதம், நாகராசா சிவசங்கர், கணபதிப்பிள்ளை கனகரத்தினம் ஆகியோர் அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்களால் தெரிவு செய்யப்பெற்றனர்.

அன்றைய தினமே அன்னதான மண்டபத்திற்கு சொந்தமான பொருட்களும், அன்னதான மண்டப திறப்புகளும் தற்காலிக அன்னதான குழு பொறுப்பாக பொறுப்பேற்ற கணேசரத்தினம் சபாநாயகம் அவர்களிடம் ஒப்படைக்கப் பெற்றன.

அத்துடன்; கடந்த வருடம் மிகுதியாக வங்கியில் இருந்த பணம் வங்கி வட்டியுடன் 2,71612 இருப்பதாக கூறி சிவஸ்ரீ. பாலசுப்பிரமணியம் ஐயா 2,50000 ரூபாவை க. சபாநாயகம் அவர்களிடம் ஒப்படைத்தார்.

இப் பணத்தைப் பெற்ற அன்றைய தினமே அன்னதான மண்டபத்திற்கு வெள்ளை அடித்து மறுதினம் நடைபெற இருக்கும் கொடியேற்ற விழாவிற்கு அன்னதானம் வழங்க ஆயத்தமாகினர்.

27.07.2016 அன்று ஆலய ஆதீனகர்த்தாக்களினால் முன் அறிவித்தல் கொடுக்கப் பெற்று ஆலய ஆதீனகர்த்தாக்கள் அனைவரதும் சமூகத்துடன் ஆலய மணிமண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆலய அன்னதான மண்டபத்திற்கான நிரந்தர அன்னதான சபை பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றது.

திரு. சின்னத்தம்பி ஜெயராசா (செயன்) அவர்கள் தலைவராகவும்,
திரு. தி.ஜெ. ஜெயகாந்தன் அவர்கள் செயலாளராகவும்,
திரு. ஆ. த. குணதிலகம் அவர்கள் பொருளாளராகவும்,
திரு. ப. ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் உப-தலைவராகவும்,
திரு. கு. ஜெகதீஸ்வரன் அவர்கள் உப-செயலாளராகவும்
நிர்வாக உறுப்பினர்களாக:
1. திரு. அ. ஜெ. ஜெயகாந்தன் அவர்களும்,
2. திரு. சி. கனகலிங்கம் அவர்களும்
3. திரு. பே. ஜெகநாதன் அவர்களும்
4. திரு. ஜெ. கேதீஸ்வரன் அவர்களும்
5. திரு. மோ. கண்ணதாசன் அவர்களும்
6. திரு. க. சபாநாயகம் அவர்களும் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றனர்.
இவர்களில் சிலர் ஆலய திருப்பணி சபையில் இணைந்து கொள்வதற்காக தமது அன்னதான சபை பதவியை இராஜினாமாச் செய்து திருப்பணிச் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Page 6 of 39

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்