Wednesday, Aug 23rd

Last update07:08:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள்,

வல்லிபுர ஆழ்வார் மஹோற்சவ விழா - 2015

E-mail Print PDF

வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக சுயம்பு வடிவில் (தானாகவே) தோன்றிய விஷ்ணுவின் ”சுதர்சனச் சக்கரம்” அமைந்துள்ளது. ஆலயத்தில் திருத்த வேலைகளுக்காக பாலஸ்தானம் செய்யப் பெறும்போது கூட இவ் சுதர்சன சக்கரம் பாலஸ்தானம் செய்யப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.

ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திரு விழா நடைபெறும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்தம்” உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் ”பட்டுத் தீர்த்தம்” உற்சவமும் நிகழ்த்தப்படும்.

இவ் வருடம் இவ்வாலய மஹோற்சவ விழா 12.09.2015 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகியதுடன் 25.09.2015 சப்பறத் திருவிழாவும், 26.09.2015 இரதோற்சவமும், 27.09.2015 தீர்த்த உற்சவமும், மறுநாள் பட்டுத் தீர்த்தவிழாவும் (கேணிநீராட்டு திருவிழா) நிகழ இறையருள் பாலித்துள்ளது.

இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக “சுயம்பு மூர்த்தியாக தோன்றிய கிருஷ்ணரின் சுதர்சனச் சக்கரம்” அமைந்திருப்பதும், அலங்கார மூர்தியாகவும்  ”சக்கரம்” அமைந்திருப்பதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பம்சங்களாகும். இவ் ஆலயத்தை ஏழு தளங்களை கொண்ட சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இராச கோபுரம் பிரதான கிழக்கு வாசலில் அலங்கரிக்கின்றது. இவ் ஆலயம் மூன்று பிரகாரங்களை (வீதிகளை) தன்னகத்தே கொண்டுள்ளது. உள் வீதி முழுவதும் “ரெறாசோ” என்னும் பளிங்கு  பதிக்கப்பெற்று இருப்பதுடன், பரிவார மூத்திகளின் கோயில்களும் அமைக்கப் பெற்றுள்ளன.

இரண்டாவது பிரகாரமானது; “ரெறாசோ” பதிக்கப் பெற்ற அழகாக அலங்கரிக்கப்பெற்ற விசாலமான வசந்த மண்டபத்தினையும், தூண்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. இவ் வீதியின் தெற்கு, மேற்கு, வடக்க வீதிகள்  சீமெந்தினால் அமைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது பிரகாரமானாது; இப் பகுதியின் இயற்கை வளமாக விளங்கும், மெருதுவான மணல் தன்மையும், விசாலமான விருட்சங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. உற்சவ காலங்களில் மாதவானின் அருள்பெற வரும் அடியார்களுக்கு சேவை செய்வதற்காக அமைக்கப் பெற்ற அன்ன சத்திரங்களும், தாகசாந்தி நிலையங்களும், வியாபார நிலையங்களும் வெளி வீதியை அலங்கரிக்கின்றன. 

இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகள் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும். இவ்வாறு இறைவன் ஒருவனே என்ற கருத்தின் அடி நாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவனும் திருமாலும் ஒருவரே என்ற உண்மையை வெளிப்படுத்தும் திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது. இங்கு விபூதியும் திருநாமமும் பிரசாதமாக வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையைக் கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.

காரணப் பெயர்
வல்லிபுரம் என்ற பெயர் இக்கிராமத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாகர்களுடைய ஆட்சி கி.பி. 303 இலும் லம்பகர்ணர் ஆட்சி 556 இலும் முடிவுக்கு வந்தது என்பது வரலாறு.

இப்பகுதிகளில் குடியேறிய படை வீரர்களின் ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியபோது வட மறவர்கள் ஆட்சி செய்த இடம் வடமராட்சி எனப்பட்டது. நூலாசிரியரான ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கருத்துப்படி தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதாகவும் அவர்கள் குடியேறிய பிரதேசத்திற்கு வடமராட்சி என்று பெயரிட்டதாகவும் தெரியவருகிறது. அக்குழுவின் தலைவனாக வல்லியத்தேவன் என்பவன் இருந்ததாகவும் அவனின் பெயரைக் குறிக்கும் முகமாக இக்கிராமத்திற்கு வல்லிபுரம் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது

வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்ற ஒரு கருத்தும் புரம் என்றால் கோவில் என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்பாடிக் கோவிலாகவும் கண்ணன் வளர்த்த இடமாகவும் கொள்ளப்படுகிறது. இவ்வாறு வல்லிபுரம் என்ற பெயர் வரக்காரணமான பல விடயங்கள் கூறப்பட்டாலும் இப்பிரதேசத்தில் குடியேறிய மக்கள் தெலுங்கர்களாகவும் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்ததாக கருதவும் இடமுண்டு.

ஆழ்வார்

ஆழ்வார் என்ற சொல் திருமாலையும் ஆழ்வான் என்ற சொல் சூரியனையும் குறித்து நிற்கிறது. வேத காலத்தில் சூரியனோடு தொடர்புடைய தெய்வமாக விஷ்ணு போற்றப்படுகிறார். இதன் காரணத்தாலும் வல்லிபுரநாதரை வல்லிபுர ஆழ்வார் என்று வழிபட்டிருக்கலாம். அது மாத்திரமல்லாமல் இலங்கையின் வட பகுதியை நாகர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் நாகம், சூரியன் ஆகியவற்றை வழிபட்டதாகவும் அவர்கள் வசித்த பிரதேசங்களில் ஒன்றாக வல்லிபுரம் இருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.

சக்கர வழிபாடு
ஸ்ரீ வல்லிவுர ஆழ்வார் கோவிலின் மூலஸ்தானத்தில் சக்கரம் வைத்தே பூசை நடைபெறுவது வழக்கம். சூரிய வழிபாட்டிலும் வழிபாட்டுச் சின்னமாகச் சக்கரம் இடம்பெறுகிறது. இதே வழிபாட்டுச்சின்னம் பௌத்த மதம் ஆதிக்கம் பெற்ற காலத்தில் தர்ம சக்கரமாக மாறியதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் வைணவ குடியேற்றத்தால் திருமாலின் சக்தி வாய்ந்த சக்கர ஆயுதமாக இச்சக்கரம் பூஜிக்கப்படுகிறது.

செவிவழி வந்த கதை வல்லிபுர ஆழ்வார்
வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குரிய நிலத்தில் பழைய கட்டிடத்தின் அழிபாடுகளுக்கிடையில் 1936 ஆம் ஆண்டளவில் வல்லிபுரப் பொன்னேட்டுச் சாசனம் கண்டெடுக்கப்பட்டது. 4 வரிகளைக் கொண்ட இச்சாசனம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பியகுக என இடம் தற்காலத்திலுள்ள புங்குடுதீவுடன் அடையாளம் காணப்படுகிறது. எனவே வல்லிபுர பிரதேசமும் ஆழ்வார் கோவிலும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்குரிய இடமாகக் கருதப்படுகின்றது.

ஐதீகக் கதை
வல்லிபுர ஆழ்வார் கோவிலின் ஐதீக வரலாறு அற்புதமானது. தற்போது இக் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று (மீன்) துள்ளிக்குதித்து, ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. கற்கோவள கடலோடிகள் அந்த மச்சத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கை கூட வில்லை. இவ்வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற வல்லி எனப்படும் ”வல்லி நாச்சி” பிள்ளை வரம் வேண்டி பயபக்தியுடன் விரதமிருந்தார் (தவமிருந்தார்). அவர் கனவில் தோன்றிய பகவான் சிலவற்றைக் கூறி மறு நாள் ”கற்கோவளம்” எனும் குறித்த இடத்திற்கு வருமாறு பணித்தார். மறு நாள் காலை அங்கு சென்று கரையில் உட்கார்ந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தார். அப்போது அந்த மீன் (மச்சம்) கடலில் இருந்து துள்ளிக் குதித்து அவர்மடியில் அழகிய குழந்தையாக மாறியது. கண்ணன் உதித்தான் என ஆரவாரம் செய்த அடியவர்கள் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றனர்.

களைப்புற்ற மக்கள் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர். பின்னர்பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தபோது பல்லக்கு மாயமாக மறைந்தது. சக்கரம் ஒன்று தோன்றியது. எனவே அம்மக்கள் அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை அமைத்து அச்சக்கரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இக்கதை ஐதீகக் கதையாகக் காணப்படுவதனால் அன்று தொட்டு இன்று வரை செவி வழியாகப் பேணப்பட்டு வருகிறது.

பிள்ளையார் வழிபாடு

வைஷ்ணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் பிள்ளையாருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆலமரம், அழகிய குளம், நெல் வயல்கள் என இயற்கையின் அரவணைப்பில் உள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை செய்வது வழக்கமாகும்.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர்கள் மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்திற்கு செல்பவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபட எண்ணுவார்கள் என்பதுவும் இக்கோவிலுக்கு பெருமை சேர்க்கக் கூடிய விடயமாகும்.

Displaying 00_big.jpg

தேர் ஏறி வருகின்றாள் தெல்லிப்பளை துர்க்கை - 27.08.2015

E-mail Print PDF

ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம் - தெல்லிப்பழை

ஆலயத்தை ரிசிக்க இங்கே அழுத்துக

2013 - தேர்த்திருவிழாவை தரிசிக்க இங்கே அழுத்துக

எங்கும் நிறைந்தவனாக, எல்லாம் வல்லவனாக, அணுவுக் கணுவாய், அப்பாலுக்கப்பாலாய், ஓருருவம், நாமமின்றி, அகிலத்தை ஆள்பவன் இறைவன். எங்கும் நிறைந்த இப்பரம்பொருளைச் சிவம் என்று போற்றுகின்றோம்.

நெருப்பிலே சூடு போலச் சிவத்துடன் இரண்டறக் கலந்திருப்பவள் சக்தி. சிவம் வேறு சக்தி வேறல்ல. ஒன்றின் அம்சமாக மற்றொன்று காணப்படுகின்றது. பழந்தமிழர் வழிபாட்டிலே, சக்தியைப் போற்றி வணங்குவது முதன்மைக் குரியதாகக் காணப்படுகின்றது.

சிவபூமியாக விளங்குகின்ற ஈழவள நாட்டில், சக்தி வழிபாடும் புராதன வழிபாடாகக் காணப்படுகின்றது. தெல்லிப்பழையில் துர்க்காதேவி, நயினை நாகபூசணி அம்மன், நல்லூர் வீரமாகாளி அம்மன், தாழையம்பதி துர்க்கை அம்மன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன், திருகோணமலை பத்திர காளியம்மன், வற்றாப்பளை கண்ணனை அம்மன், மாத்தளை முத்துமாரி அம்மன், பணிப்புலத்தில் முத்துமாரி அம்மன் போன்ற பல கோயில்கள் ஈழத்தில் பிரசித்தி பெற்ற அன்னை வழிபாட்டுத் தலங்களாகக் காணப்படுகின்றன.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம், உலகெங்குமுள்ள சக்தி உபாசகர்களால் ஏற்றிப் போற்றப்படும் ஆலயமாக விளங்குகின்றது. இவ்வாலயம் யாழ்ப்பாணத்தின் வடபால், காங்கேசன் துறைப் பெருந்தெரு வழியே, எட்டாவது மைல் கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையை உடையது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீதுர்க்காதேவி, சகல வல்லமை படைத்தவளாக, வேண்டியவற்றை வேண்டியாங்கு பக்தர்களுக்குக் கொடுப்பவளாக விளங்குவதால், தாயைத் தேடி ஓடும் கன்றைப்போல், துர்க்கை அன்மையை நாடிப் பக்தர்கள் ஓடுகின்றனர். இவ்வன்னை, பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் வாரி வழங்குபவளாகக் காணப்படுகின்றாள. இத்தேவியின் மகிமை அபிராமிபட்டரின் திருவாய் மொழிக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.

தனந்தருங் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனந் தருந் தெய்வ வடிவுந் தருநெஞ்சில் வஞ்சமில்லா
வினந் தரு நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பர்க்கே
கனந் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


அகிலாண்டநாயகியான அன்னை பராசக்தியின் துர்க்கா திருக்கோலம், மக்களை வாழவைக்கும் தன்மையுடையது.

இவ்வாலயத்தின் பூர்வீகவரலாறு கதிர்காமர் என்னும் சைவப்பெரியாரோடு தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இவர் தெல்லிப்பழையிலுள்ள உழுகுடைப்பதியில், வவுனாவத்தையில் சைவமரபிலே தோன்றியவர். திருமூலர் வாக்கிற்கிணங்க ஊனுடம்பு ஆலயம் என்னும் சைவநெறியின் உத்தமநெறியிலே ஒழுகியவர். எங்கெல்லாம் சைவாலயங்கள் காணப்படுகின்றனவோ அங்கு சென்று வணங்கித் தலயாத்திரை செய்வதில் இன்பங்கொண்டவராகக் காணப்பட்டார். இவரது இந்த ஆர்வத்தின் பயனாகவே தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் தோன்றியது.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே காணப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இங்கு வருவதும், இங்குள்ள மக்கள் அங்கு செல்வதும் சாதாரண வழக்கமாகக் காணப்பட்டுள்ளது. அவ்வாறே தென் இந்தியாவை ஆண்ட அரசர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டுள்ளனர். ஈழமன்னர்கள் தென் இந்தியா மீது போர் தொடுத்துள்ளனர். இவ்வாறான நிகழ்வுகள் காலங்காலமாக நடைபெற்றுத் தற்காலத்திலும் தொடர்கின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தொடர்பினால் தென்னிந்திய அரசர்கள் ஈழத்தில் பல சைவக் கோயில்களைக் கட்டியும் திருத்தியும் சைவப்பணி புரிந்துள்ளார்கள்.

இரு நாடுகளுக்குமான தலயாத்திரை கடல் போக்குவரத்தின் மூலம் பெரிதும் விருத்தியடைந்து காணப்பட்டது. ஈழத்திலிருந்து தல யாத்தரைக்காகச் செல்வோர், அங்கிருந்து தெய்வ மூர்த்தங்களைக் கொண்டுவருவது சாதாரண விடயமாக அக்காலத்தில் காணப்பட்டது. கற்றோரும் மற்றோரும் ஞானியரும் ஈழத்திலிருந்து சென்று, இந்தியாவில் தங்கிச் சமயப்பணி, தமிழ்ப்பணி புரிந்துள்ளமையைச் சான்றுகள் சூழ்நிலையே தெல்லிப்பழையில் துர்க்கையம்மன் அருளாட்சி ஏற்படக் காரணமாக அமைந்ததெனலாம்.

வவுனாவத்தை உழுகுடைப்பதியில் வசித்த பெரியவர் கதிர்காமர், 1750 ஆம் ஆண்டளவில் தலயாத்திரை செய்யத் தீர்மானித்தார். அண்மையிலிருந்த காங்கேயன் துறையிலிருந்து தோணியேறி, தென்னிந்தியாவிலுள்ள வேதாரணியம் கரையை அடைந்தார். இவர் தலயாத்திரை சென்ற காலத்தில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. விரும்பியபோது, விரும்பிய இடங்களுக்குச் சென்றுவர எந்தத் தடையும் காணப்படவில்லை. வேதாரணியத்திலுள்ள தலங்களைத் தரிசித்த கதிர்காமர், பாதயாத்திரையாகக் காசி செல்லத் தீர்மானித்தார். பாதயாத்திரை செல்லும் வழியிலுள்ள தலங்களைத் தரிசித்து இறுதியில் காசியை அடைந்தார். ஏறக்குறையப் பத்துவருடங்களாகத் தலங்களையெல்லாம் தரிசித்து வழிபாடியற்றி வந்தார். இக்காலப்பகுதியில் தமிழில் மேலும் தேர்ச்சி பெற்றதோடு சமஸ்திருதத்தையும் கற்றுத் துர்க்காதேவி உபாசகராக மாறியிருந்தார். 1760 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பத் தீர்மானித்த கதிர்காமர், தன்னோடு துர்க்காதேவி இயந்திரமொன்றையும், வெண்கலத்தினாலமைந்த திருமுகக்கெண்டி ஒன்றிணையும் கொண்டுவந்தார்.

திருக்கோயிலின் உயிர்நிலையாக மூலஸ்தானம் அல்லது கருவறையில் எழுந்தருளியுள்ள திருவுருவம் விளங்குகின்றது. திருக்கோயிலுக்குச் செல்லும்பொழுது முதலில் கண்ணில்படுவது கோபுரம். முதலில் கோபுரத்தை வணங்கிய பின்னர் கோயிலினுள் சென்று கருவறையில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தியையும் ஏனைய தெய்வங்களையும் வழிபடுகின்றோம்.

திருக்கோயில்களிலே எழுந்தருளியுள்ள இத்தெய்வங்களின் அருள்வீச்சிற்கு, மந்திரங்களினால் அருள்பெற்ற யந்திரப்பிரதிஷ்டையும் கும்பாபிஷேகக் கிரியைகளுமெ காரணமாகக் காணப்படுகின்றன. கோயிலின் உயிர்நிலையாகவுள்ள கருவறைத் திருவுருவம் இறைவனின் அருள் வடிவமாகவும், கோபுரம் இறைவனின் அருட்சின்னமாகவும் விளங்குகின்றன. சாதாரண உலகவழக்கில் யந்திரம் என்பது இயக்கும் கருவியைக் குறிப்பது. யந்திரம் இல்லாத வண்டி ஓடாது. அதே போல யந்திரபிரதிஷ்டை செய்யப்படாத திருவுருவத்தில் பூரணமான தெய்வீக அலைகள் ஏற்படுவதில்லை எனப் புராணங்களிலே கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான மந்திரசக்தியுள்ள துர்க்காதேவி யந்திரமொன்றைப் பெரியவர் கதிர்காமர், ஈழம் திரும்பும்பொழுது கொண்டுவந்தார். இந்தியாவிலுள்ள சக்திபீடங்கள் அறுபத்து நான்கு எனக் கூறப்பட்டுள்ளத. இவற்றுள் காசியிலே அமர்ந்து அருள்பாலிக்கும் சொப்பனேஸ்வரி பீடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இங்குள்ள துர்க்காதேவி பீடம். சகல கலைகளுடனும் அருட்பொலிவுடன் விளங்கும் சக்திபீடமாக விளங்குகின்றது. பல வருடங்கள் காசியில் தங்கியிருந்த கதிர்காமர் அன்னையின் பெருமையையும் புகழையும் எண்ணத்தில் கொண்டு, தன்னுடன் கொண்டு வந்த யந்திரத்தைக் காசியிலிருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பது சான்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

காசியாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய கதிர்காமர், காங்கேயன்துறையை வந்தடைந்து, கீரிமலை சென்று அங்கு தீர்த்தமாடி, ஆலயதரிசனம் செய்தார். பின்பு அங்கிருந்து மூன்று மைல் தூரமுடைய தெல்லிப்பழையை நோக்கி நடந்துவந்து கொண்டிருந்தார். இவ்வாறு நடந்து வரும்பொழுது களைப்பு மேலீட்டால் நடையிலே தளர்வுகண்டார். இந்தியாவெங்கும் பல நூற்றுக்கணக்கான மைல்களைப் பாதயாத்திரையாகச் சென்ற கதிர்காமரின் உள்ளக்கிடக்கையில் ஒளிந்திருந்த அன்னை துர்க்கையானவன், அவ்விடத்திலே தங்கத் திருவுளம் கொண்டாள் போலும். களைப்பு மேலீட்டால் அங்கிருந்த இலுப்பைத்தோப்பிலே இளைப்பாறினார்.

திருவருட் கருணையால் அவர் முன் ஒரு சோதி தோன்றி, அவர் காசியிலிருந்து கொண்டுவந்த துர்க்கா யந்திரத்தை அவ்விடத்திலே ஸ்தாபிக்குமாறு ஆணையிட்டது. அவ்வாக்கைச் சிரமேற்கொண்ட கதிர்காமர், அவ்விடத்திலிருந்த இலுப்பைமரத்தடியில் யந்திரத்தையும் திருமுகக் கொண்டியையும் ஸ்தாபனம் செய்து வழிபடத் தொடங்கினார். இவ்வாறு இவர் வழிபட ஆரம்பித்த இடமே இன்று தெல்லிப்பழை, உழுகுடைப்பதி துர்க்காதேவி தேவஸ்தானமாக மாறியுள்ளது.

இத்தோப்பிலே பூசைநேரத்தில் நாகசர்ப்பங்கள் வருவதுண்டு. அவை பூசை முடிந்தவுடன் மறைந்துவிடும். இந்த நாகசர்ப்பங்களால் எவருக்கும் எவ்விதமான துன்பமும் ஏற்படவில்லை. இவற்றைக்கண்டு பக்தர்கள் அச்சமடையாது வழிபட்டு வந்துள்ளது. பூசை நேரங்களில், குருக்கள் இவற்றிற்குப் பாலும் பழமும் வைத்து வழிபடுவதும், அவை இவற்றை உட்கொள்ளலும் உண்டு. இவ்வாறு கதிர்காமரால் ஸ்தாபனம் செய்யப்பட்ட துர்க்காதேவி யந்திர வழிபாடு ஆன்மார்த்த வழிபாடாகவே ஆரம்பத்தில் காணப்பட்டது. தற்காலத்தில் அழகிய தேவஸ்தானமாகி, கோபுரமும் அலங்கார வளைவும் கொண்ட நுழைவாயிலுடன், தெப்பக்குளமும் அமைந்து எழிலுக்கு எழிலூட்டும் அருள்மிகு சக்தி ஆலயமாக தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் விளங்குகின்றது.

ஆன்மார்த்த வழிபாட்டு முறையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், தற்காலத்தில் ஆகமமுறைப்படி நடைபெறும் வழிபாட்டு முறைகளைக் கொண்ட பரார்த்த பூசைக்குரிய தேவஸ்தானமாக மாற்றம் பெற்றுள்ளது. ஏறக்குறைய நூற்றிஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்திலிருந்து அந்தணப்பெரியாரொருவர் யாத்திரை நோக்கமாகப் படகு மூலம் காங்கேயன் துறையை வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டுத் தெல்லிப்பழையை வந்தடைந்தார். களைப்பு மேலீட்டாலும் பசியாலும் உழுகுடைப்பதியில் ஒரு மரத்தின் கீழ் அயர்ந்து துங்குவராயினர். உழுகுடைப்பகுதியில் நாகநாத உடையார் என்பவர் செல்வமும் செல்வாக்கும் படைத்தவராகக் காணப்பட்டார். ஒரு குறித்ததினத்தன்று அவருடைய கனவிலே ஸ்ரீ துர்க்காதேவி தோன்றி, தன்னையும் அநாதரவாயிருக்கும் காஞ்சி அந்தணரையும் ஆதரிக்குமாறு உணர்த்தினாள். ஆதியில் கதிர்காமர் காசியிலுள்ள சக்தி பீடங்களுள் ஒன்றான சொப்பனேஸ்வரி பீடத்திலிருந்தே துர்க்காதேவி யந்திரத்தைக் கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. சொப்பனம் என்றால் கனவு என்று பொருள்படும். சொப்பனத்தில் தேவி உணர்த்திய அருள்வாக்கின்படி, நாகநாத உடையார் ஆலயத்தையும் அந்தணரையும் ஆதரிக்க முற்பட்டார். தேவியின் கருணைக்குப் பாத்திரமாக விளங்கிய காஞ்சியிலிருந்து வந்த அந்தணரையே துர்க்காதேவி ஆலய அர்ச்சகராக நியமித்தார். இவ்வந்தணரின் சந்ததியினரே இன்றும் இவ்வாலம் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.

எட்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த ஸ்ரீசங்கர பகவத்பாதர் அருளிய அறுவகை வழிபாடு, இந்து மதத்திற்கு ஆதாரமாக விளங்குகின்றது. சக்தியை முழுமுதற்தெய்வமாகக் கொண்ட சமயம் சாக்தம் என அழைக்கப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் சக்தி வழிபாட்டில் தந்திர சாத்திரம், நரபலி போன்ற அம்சங்கள் காணப்பட்டன. இவற்றை மாற்றி இயந்திரம் அமைத்துத் தேவியை வேதமுறைப்படி வழிபடும் தத்துவத்தை நடைமுறைக்குக் கொண்வந்தவரும் ஆதிசங்கரரே.

சிவமும் சக்தியும் வேறல்ல. ஒன்றிலிருந்து ஒன்று மாறாத தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. அண்டங்கள் யாவும் சிவசக்திமயமாகவே காணப்படுகின்றன. சிவம் என்பது சேதனம்-அறிவுப்பொருள். சக்தி என்பது அசேதனம்-ஐடம்பொருள். இவை இரண்டும் இணைபிரியாது உலகெங்கும் காணப்படுகின்றன. மனித உடலிலும் சிவமும் சக்தியும் இரண்டறக் கலந்து காணப்படுகின்றது. உடல் அறிவில்லாதது, அசேதனம். அறிவின் வடிவாய்ப் பிரகாசிப்பது ஆத்மா. இரண்டும் இணைந்தே மனிதவாழ்க்கை இயக்கமாக அமைகின்றது. உலகிலுள்ள யாவற்றிலும், எல்லா இயங்குவனவற்றிலும் இதனைக் காண்கின்றோம். நெருப்பும் ஒளியும், மழையும் குளிர்ச்சியும், மண்ணும் வளமும், பூமியின் சுழற்சியும் பருவமும், சிவசக்தி தத்துவத்தை இயற்கை மூலம் எடுத்துக்காட்டுகின்றது. சக்தியில்லையேல் சிவம் இல்லை. அதனால்தான் சக்தியற்றுச் செயலாற்றுப் படுத்திருப்பவனைச் சிவனே என்று இருக்கின்றான் என்று கூறுவர்.

ஐடப்பொருளில் இயங்குகின்ற சக்தி ஒன்றுக்கொன்று உடன்பாடாய் இருக்கும்போது அதற்குக் கவர்ச்சி (Attraction) என்று பெயர். எதிர்மறையாய் இருக்கும்போது விலக்கு (Repulsion) என்று பெயர். ஜீவித தத்துவத்திலும் இதேபோல விருப்பும் வெறுப்பும் உள்ளன. இவை யாவற்றையும் கடந்து விளங்குவது அன்பு. இதுவே இறை வடிவாய்த் திகழ்கின்றது. 'சக்தியாய் சிவமாய்' என்று சொல்லும் பெரியோர்கள் 'அன்பே சிவம்' என்றும் கூறியுள்ளார்கள். சிவனைச் சக்திமான் என்ற பெயராலும் அழைப்பர்.

இவ்வாறான பெருமை படைத்த சக்தியானவன் அனேக அம்சங்களைக் கொண்டவளாக விளங்குகின்றாள். யார் யார் எப்படி விரும்புகின்றார்களோ அம்முறையில் காட்சி தருகின்றான். எங்கும் நிறைந்தவளாகக் காணப்படும்போது பூரணி என்றும், சக்தி நிறைந்தவளாய் சகல வல்லமையும் கொண்டவளாக விளங்கும்போது, ராஜராஜேஸ்வரி, மூலப்பிரகிருதி என்றும் துதிக்கப்படுகின்றாள். காலசொரூபிணியாகும் பேர்து காளியாகின்றாள். வித்தையின் வடிவமாகும் போது சரஸ்வதியாகின்றாள். தனதானியத்தைக் கொடுக்கம் போது இலக்குமி ஆகின்றாள். ஞாலத்தை ஆதரிக்கும்போது மகாதேவி, பவதாரிணியாகப் போற்றப்படுகின்றாள். யாவற்றிலும் மேலாக ஈஸ்வரனுக்கு ஒப்பாகும்போது துர்க்கை என்று துதிக்கப்படுகின்றாள்.

கயிலைவாசன் கருணைபுரியக் கவலைக்கு மருந்தாக, இன்னல்களைப் போக்கி வேண்டியவற்றை அளிப்பவளாகத் துர்க்காதேவி தோற்றம் பெற்றாள். இத்தகைய பெருமை பெற்ற துர்க்கை வழிபாடு, பெரியவர் கதிர்காமரின் அன்பின் கருணையால், தெல்லிப்பழை உழுகுடைப்பதியில் சிறப்புற்றுக் காணப்படுகின்றது. கோயிற்கடவை எனப் புராதன பெயர் கொண்ட மாவிட்டபுரத்திற்கும் தெல்லிப்பழை துர்க்காதேவி கோயிலுக்கும் புராதன தொடர்புண்டு என்பதைப் பழைய ஏட்டுப்பிரதிகள் மூலம் அறியலாம்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் அன்னியரால் அழிக்கப்பட்டுப் பின்னர் 1815 ஆம் ஆண்டு கருங்கற்பணி நிறைவேற்றப்பட்டு, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துர்க்காதேவி ஆலயத்திலும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1829 ஆம் ஆண்டு புரட்டாசி விஜயதசமியன்று, மாவை முருகன், துர்க்காதேவி ஆலயத்திற்கு எழுந்தருளி வந்த வன்னிவாழை வெட்டும் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப்பகுதியில் நிலவும் போர்ச்சூழுல் காரணமாகப் பல ஆண்டுகளாக இவ்விழா நடைபெறாது தடைப்பட்டது.

வன்னிவாழை வெட்டு, நவராத்திரியோடு தொடர்புடையது. உலக மக்களை வாட்டி வதைத்த மகிடாசுரன் என்ற அரக்கனை அழித்து, அன்பையும் சமாதானத்தையும் நிலைநாட்டிய வெற்றித்திருநாள் விஜயதசமி. இத்தினத்தன்று வன்னிவாழை வெட்டுத் திருவிழா சக்தி ஆலயங்களில் மிகச்சிறப்பாக நடைபெறும். வன்னிவாழை வெட்டு என்பது தத்துவார்த்தமாகவும் ஆழமான கருத்துடையது. ஓவ்வொரு மனிதனிடத்திலும் தாமசம், சாத்வீகம் என்ற எதிர்மாறான இரு குணங்கள் காணப்படுகின்றன. தாமசகுணம் நிறைந்தவனால் உலகிற்கு அமைதியின்மை ஏற்படும். சாத்வீகம் எண்ணமுடைய மனிதனால் அன்பும் சமாதானமும் உலகிலே பேணப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டதே வன்னி வாழைவெட்டும் நிகழ்ச்சி. பராசக்தியானவள், மகிடாசுரனை வதம் செய்ததை நினைவு கூர்வதுடன், ஒவ்வொருவரிடமும் மறைந்துள்ள மகிடமாகிய தாமசகுணத்தை ஒழித்து, அமைதியான சாத்வீக குணத்தை அருளும் நிகழ்வே வன்னிவாழை வெட்டும் நிகழ்வாகும். இன்னுமோர் கோணத்தில் நோக்கின் மகிஷாசுரன் என்பது அஞ்ஞானம். தேவி ஞானவடிவானவள். மனித மனத்திலுள்ள அஞ்ஞானத்தை அழித்து ஞானம் மேலோங்கச் செய்பவள் துர்க்கை எனவும் கருத முடியும். இதனையே பாரதியார்,

நெஞ்சிற் கவலை நிகழும் பயிராக்கி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை - தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மகாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு


எனக் கூறியுள்ளார்.

துர்க்கை என்பது அகழியைக் குறிக்கும். அகழி, எதிரிகள் மதிலை அடைய முடியாதபடி தடுப்பது போல, தன்னை வழிபடும் அன்பர்களுக்குத் துன்பம் அணுகாவண்ணம் காப்பதால் துர்க்கை என்று அழைக்கப்பட்டாள் என்று சாக்த சமயத்தின் தந்திர நூல்கள் கூறுகின்றன. துர்க்கை வழிபாடு தொன்மையானது. அகத்திய முனிவர், வனத்திலே துர்க்கையை பிரதிஷ்டை செய்து தரிசித்தமையால் வனதுர்க்கா என்ற பெயரைத் துர்க்கை பெற்றாள். கொற்றவையே துர்க்கை எனப் போற்றப்படுகின்றாள். சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் துர்க்கையைப் போற்றி,

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி
செங்கண் அரிமாண் சினவிடைமேல் நின்றாய்
கங்கை முடியணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்தவே நிற்பாய்


எனக் கூறப்பட்டுள்ளது.

துர்க்கையின் உருவநலன்களைப்பற்றி ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நான்கு அல்லது எட்டுக்கரங்களை உடையவள். மூன்று கண்களை உடையவள். கருணா நிறமுடையவள். மஞ்சள் உடை உடுத்தியிருப்பாள். எருமைத்தலை பீடத்தின்மீது நின்ற நிலை அல்லது சிஙகத்தில் மீது அமர்ந்த நிலையில் காணப்படுவாள். மார்பகங்கள் பாம்பினால் கட்டப்பட்டிருக்கும் என்று வரிணிக்கப்பட்டுள்ளது. சுப்ரதே ஆகமங்கள் இவளைத் திருமாலின் இளையதங்கை என்றும் ஆதிசக்தியிலிருந்து வந்தவளென்றும் கூறுகின்றன. இவளுடைய எட்டுக் கரங்களில், சக்கரம், சூலம், அம்பு, கேடயம், வில், மணி, பாசம் ஆகியவற்றை ஏந்தியிருப்பாள். சக்தி வழிபாட்டைக் கூறும் நூல்கள் தந்திரங்கள் எனப்படும். துர்க்கையில் மகிமையைக் கூறும் நூல்களுள் முக்கியமானது தேவிமகாத்யில் என்னும் நூல். இந்நூல் 700 பாடற்தொகுதிகளைக் கொண்டது.

அன்னை பராசக்தியின் வடிவமாகிய துர்க்கையை வேண்டிப்போற்றுவோர் துர்க்கையின் அருளைப்பெறுவர் என்று ஆன்றோர் கூற்று. போர்த்தெய்வமான கொற்றவை மகனாய் முருகன் போற்றப்படுவதைச் சங்க இலக்கியங்களில் காணலாம். நக்கீரரின் 'வெற்றிவேல்' போர்க் கொற்றவை சிறுவர் என அடிகள் முருகனுக்கும் சக்திக்குமுள்ள தொடர்பை உணர்த்துகின்றது. நக்கீரர் குறிப்பதற்கேற்ப, முருகப்பெருமானும் துர்க்காதேவியும் ஒரே போரில் அசுரரை அழித்து அமரரைக் காத்த வரலாறு ஒன்றுண்டு. தீயவர் அழிந்ததை விழாவாகக் கொண்டாடி, நல்லதைச் செய்ய மக்களைத் தூண்டும் இவ்விழா, தெல்லிப்பழை துர்க்காதேவி கோயிலில் இன்றுவரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவின் அடிப்படை ஒரு புராண வரலாறாகக் காணப்படுகின்றது. மகிஷாசுரன் என்னும் அசுரன் மும்மூர்த்திகளை நோக்கித் தவமிருந்து அளப்பரிய வரங்களைப் பெற்று அதன் மூலம் தேவர்களையும் மற்றையோரையும் பெற்று அதன் மூலம் தேவர்களையும் மற்றையோரையும் துன்புறுத்தி வந்தான். இவர்கள் பரம்பொருளாகிய பரமனிடம் சென்று முறையிட்டனர். இவர்கள் துயர்துடைக்க மும்மூர்த்திகளின் சக்திகளும் சேர்ந்து ஒருருவமாகத் தோன்றியவளே துர்க்கை. துர்க்கையுடன் துணையாக முருகப்பெருமானும் இணைந்து அசுரர்படைகளை அழித்தனர். அஞ்சத்தக்க தோற்றங்கொண்ட வியாக்கிராசுரன் அரசனாகவும், அவனது அமைச்சனாக மகிஷாசுரனும் விளங்கித் துன்பம் விளைத்ததால், முருகப்பெருமான் வியாக்கிராசுரனையும், துர்க்காதேவி முகிஷாசுரனையும் அழித்தாள். இதன்காரணமாகத் துர்க்கையானவள் மகிஷாசுரமர்த்தினி என்னும் திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள்.

துர்க்கையைப் போற்றிப் பேரருள்பெற்றோர் பலர். இவர்களில், பாதாளலோகம் சென்ற கிருஷ்ணனைக் காணாது, துன்புற்று வசுதேவரும் தேவகியும், மற்றும் பாரதப்போரில் அர்ச்சுனனும் பல சித்திகளைப் பெற துர்க்கையை ஆராதித்துள்ளனர். பூலோக அவதாரபுருஷர்களும் அரும்பெருங் காரியங்களை முடிப்பதற்கு முன் துர்க்கைபூசை செய்துள்ளனர். இராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் துர்க்காபூசை செய்தே புறப்பட்டார். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் காலத்தில் தங்கள் நிலையை அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களிடம் எடுத்துரைத்தார்கள். முனிவர்கள் பஞ்ச பாண்டவர்களுக்கு மந்திர உபதேசம் செய்து 'நம் எல்லோரையும் துன்பத்திலிருந்து காப்பாற்றுபவள் துர்க்கையே துர்க்கையை வழிபட்டால் எவ்விதத் துன்பமும் தொடராது மறைந்துவிடும். அவளிடம் சென்று முறையிடுங்கள். அவன் எந்தக் குறையும் வராது காப்பாற்றுவாள்' என்று கூறினார். அவ்வாறே பாண்டவர்களும் துர்க்காதேவியை வணங்கி மகரிஷிகளால் உபதேசம் செய்யப்பட்ட ஸ்ரீ துர்க்கா நட்சத்திர மாலிகா துதி என்ற இருபத்தியேழு சுலோகங்களை, நாள்தோறும் துதித்து, அன்னை துர்க்கையின் அருளைப் பெற்றனர். தாயின் கருணைக்கு எல்லையே கிடையாது. இக்காரணத்தினாலேயே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், அம்மையே அப்பா, தாயினும் நல்ல தலைவர், பால்நினைந்தூட்டும் தாய், தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை, தாயிற் சிறந்த தயவான தத்துவனே, மாத்ருதேவோ பவ என்றெல்லாம் இறைவனையும் தாய்மை விளங்கப் போற்றியுள்ளனர்.

இவ்வாறான மகத்துவங்களைக் கொண்ட துர்க்காதேவி வழிபாடு தெல்லிப்பழையில் சிறப்புப் பெற்றுக் காணப்படுகின்றது. இவ்வாலயத்தில் 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மகோற்சவம் மிக முக்கியமானது. ஆவணி மாத வளர்பிறை பூரநட்சத்திரத்தில் ஆரம்பமாகி, திருவோணத்தில் தீர்த்த விழாவோடு நிறைவுபெறும். இவ்வாலயம் பொதுமக்கள் ஆலயமாக விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக் கொடியேற்றத்திருவிழா பொதுமக்களின் உபயமாக இடம்பெறுகின்றது. பன்னிரண்டு தினங்கள் மிக விமரிசையாக நடைபெறும் திருவிழாவைக் காண நாட்டின் பல பாகத்திலிருந்தும் மக்கள் இங்கு கூடுவர். அன்னபூரணி மண்டபம் மகோற்சவ காலங்களில் அன்னம் பாலிக்கும் மண்டபமாகக் காட்சியளிக்கும்.

இங்கு காலத்திற்குக் காலம் அமைக்கப்படும் திருத்தொண்டுகளின் காரணமாக வெளிவீதி புதுப்பொலியோடு காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் சித்திரத்தேர் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மிக அழகிய சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட இராசகோபுரமும், அலங்கார நுழைவாயிலும் அமைக்கப்பட்டன. 1982 இல் துர்க்கா புஷ்கரணித் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு அழகிய சப்பரம் கட்டப்பட்டது. இவற்றோடு அன்னபூரணி கலியாண மண்டபம், பக்தர்கள் விடுதி, இசைக்கலை மண்டபம், அகதிகள் சாலை, அன்னதான மண்டபம், அலுவலர் இருப்பிடம், அந்தணர்கள் இருப்பிடம் ஆகியனவும் ஆலய வெளிவீதிக்கு அழகூட்டும் அமைப்புகளாகக் காணப்படுகின்றன.

1981 ஆம் ஆண்டு, சித்திரை மாதம், இராசகோபுரத்திற்கு நடைபெற்ற மகாகும்பாபிஷேகம் மிகச்சிறப்புடையது. இவ்விழாவிற்குத் தமிழகத்திலிருந்து வேதவிற்பன்னர்களும், உறரிதாஸ் சுவாமிகளும் வருகை தந்தனர். இதேயாண்டு மே மாதம் இவ்வாலய முன்றலில் சென்னை சைவசித்தாந்த மாநாட்டுப் பவளவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வைபவம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழகச் சைவசித்தாந்த பீடத்திற்கு ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் ஐம்பதினாயிரம் ரூபாவை வைப்பு நிதியாக வழங்கியமை, தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் சமய, சமூக மேம்பாட்டில் கொண்ட ஆர்வத்தை எடுத்துக் காட்டுகின்றது. ஸ்ரீவஸ்ரீ நாவலர் பெருமான் பேணிக்காத்த சைவமரபைப் பேணிக்காப்பதில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் அன்றும் இன்றும் முன்னணியில் நிற்கின்றது.

ஆலயங்கள் வெறும் அர்ச்சனைக்கூடங்களாகவும், விழாக்களை மட்டும் நடத்தும் மண்டபங்களாகவம் அமையாது, அறச்சாலைகளாக அமைந்து, மக்களோடு இணைந்து சமுதாயப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கையை இன்று வரை கடைப்பிடித்து வரும் தெல்லிலிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம், ஏனைய ஆலயங்களுக்கோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இவ்வாலயத்தின் சமூகப் பணிகள் ஏராளமானவை. பிறந்த மண்ணிலேயே தமிழ்மக்கள் காலந்தோறும் அகதிகளாக்கப்படும் கொடுமை நடைபெற்றுவந்துள்ளது. நாட்டிலே இனக்கலவரம் நடைபெற்ற காலங்களில் தமிழர்கள் தமது சொத்துக்களை இழந்து அகதிகளாக நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவது காலங்காலமாக நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணமன் தமது தாயகம் என்ற உணர்வோடு, தமிழர்களுக்குப் பாதுகாப்பளிக்கக்கூடிய பூமி என்ற உணர்வும் இதற்குக் காரணமாயிருக்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டிலே 500-க்கும் மேற்பட்ட அகதிகளை இக்கோயில் ஆதரித்து உணவு, உடை, உiயுள் வழங்கியது யாவரும் அறிந்த செய்தி. கலவரத்தினால் ஊனமுற்றோர் பல்வேறு உதவிகளைப் பெற்றனர். குருநகர்ப் படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், மட்டக்களப்பில் தமது வீடுகளை இழந்து தவித்தோருக்கும் பல உதவிகள் வழங்கப்பட்டது. பாதிப்பற்று வீடுகளைத் திருத்துவதற்கும், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அகதியாகக் காணப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பணஉதவியையும் செய்து, மக்கள் பணியே மகேசன் பணி என, சொல்லும் செயனும் ஒன்றாகி, ஈழத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஸ்ரீதுர்க்காதேவி ஆலயம் விளங்குகின்றது.

ஏழையின் சிரிப்பில் ஆண்டவனைக் காணலாம் என்ற கொள்கையை முன்னெடுப்பதிலும், துன்பப்பட்டோர் துயரழிப்பதிலும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றது. விழிப்புலனற்றோர், முடமானோர், புற்றுநோயாளர் ஆகியோரின் வதிவிட வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கும், யாழ் அரசினர் வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவிற்கும், தெல்லிப்பழை அரசாங்கவைத்தியசாலை, தெல்லிப்பழை கூட்டுதல் வைத்தியசாலை ஆகியவற்றிற்கும் அன்பளிப்புச் செய்துள்ளது. அவற்றோடு பாடசாலைகளுக்கு வேண்டிய உதவிகளையும் அவ்வப்போது செய்து வந்துள்ளது.

அக்காலத்தில் மன்னர்களின் ஆதரவுடன் நடைபெற்று வந்த ஆலயங்கள், சமய சமூகப் பணியோடு, தாய்மொழி வளர்ச்சி தொடர்பான விடயங்களிலும் அக்கறை செலுத்தியுள்ளன. அந்த மரபை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் காணக்கூடியதாயுள்ளது. ஈழமண்ணிலே பல அறிஞர்களும் பல்வேறு புலமை பெற்றோரும் நூல்களை எழுதி, அவற்றை அச்சிற்கொண்டுவர வசதியின்றி வாழ்ந்துள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்து அந்நூல்களைத் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் நூல்வடிவாக்கி வெளியிட்டது. தேவஸ்தான நிதியில் ஒருபகுதி நூல்வெளியீட்டுக்காக ஒதுக்கப்பட்ட செய்தி பலருடைய புலமை வெளிவர உதவியது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் ஆற்றும் பணிகளில் தலையாயதும் அறப்பணியாகக் கருதப்படுவதுமான பணி, துர்க்காபுரம் மகளிர் இல்லப் பணியாகும். 1982 இல் ஆரம்பிக்கப்பட்ட இம்மகளில் இல்லம், ஆரம்பத்தில் சிறிய கட்டிடமொன்றிய, ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை ஆதரித்து, சகல பராமரிப்புகளையும் வழங்கியது. இன்று நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகளை இவ்வில்லம் பராமரித்து வருகின்றது. இவர்களுள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் அடங்குவர். பெற்றோரை இழந்தவர்கள், விவாகமாகாத பெண்கள், விதவைப்பெண்கள் எனப் பல்வேறுபட்ட பெண்களை இவ்வில்லம் ஆதரித்து வருகின்றது. இந்த இல்லம் சிறப்புற நடைபெறப் பலர் உதவியுள்ளனர். அறச்சிந்தனையுள்ள பலர் நிரந்தர வைப்புகளை ஏற்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் வட்டிப்பணத்திலிருந்து உணவு, உடை, கல்வி போன்ற செயற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். வைத்தியத்துறையில் பணியாற்றும் பலர் தமது உதவியை இவ்வில்லத்திற்கும் தயங்காது செய்து வருகின்றனர்.

இவ்வாறான பணிகளில் துர்க்காதேவி தேவஸ்தானம் ஈடுபடுவதற்கு இங்கு நடைபெறும் சீரான நிர்வாகமுறையே காரணமாக இருக்கின்றது. 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட துர்க்காதேவி திருப்பணிச்சபையில் இணைந்து, அதன் பொருளாளர் பதவியை ஏற்று, ஸ்ரீ துர்க்காதேவி ஆலய முன்னேற்றத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். 1965 ஆம் ஆண்டு இவ் அம்மையாரது பெரு முயற்சியின் காரணமாக ஸ்ரீதுர்க்காதேவி கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர் 1977 ஆம் ஆண்டு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இன்றுவரை தொடர்ந்து அறங்காவலர் சபைத் தலைவராக அம்மையாரே இருந்து வருகின்றார். செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய தலைமையில் இச்சபை மிகக் கண்ணியமான பணியை ஏறக்குறை கடந்த நான்கு தசாப்தங்களாகச் செய்து வருகின்றது.

அறப்பெருஞ்செல்வியான இந்த அம்மையாரின் பணி உலகெங்குமுள்ள இந்துக்களைத் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலயத்தின்பால் கவனங்கொள்ளச் செய்துள்ளது. துர்க்கா துரந்தரி என்ற பெயருக்கேற்ப (துரம் - பாரம், தரி - தாங்குபவர்) துர்க்காதேதவியின் பொறுப்பையும் தாங்குபவராக இவர் காணப்படுகின்றார். மனத்துக்கண் மாசிலராசி, துர்க்காதேவி தேவஸ்தானத்தை அறமுறையின் நெறிப்படுத்துவதோடமையாது, மக்கள் ஆலயமாக வளர்த்தெடுத்து பெருமை இவ் அம்மையாரையே சாரும். அறங்காவலர் ஒருவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். உலகெங்கும் பரந்து காணப்படும் இந்து ஆலயங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தைத் திகழவைத்த பெருமை செல்வி. தங்கம்மா அப்பாக்குடடி அவர்களையே சாரும்.

கோயிற் சூழலில் வாழும் குடும்பப்பெண்களை இணைத்துத் தொண்டர் சபையை ஏற்படுத்தி, அவர்களை ஆலயத்தொண்டிலும் சமூகத்தொண்டிலும் ஈடுபடச் செய்தவர். இவர்கள் கூட்டுவழிபாடு, அன்னதானப்பணி மற்றும் திருவலகிடம் போன்ற பணிகளிலும் தம்மை ஈடுபடுத்தும் முறையில் வழிகாட்டியவர். தெல்லிப்பழை இந்து இளைஞர்சங்கம். இவ்வாலயத்தோடு இணைந்து சரியைத்தொண்டாற்றும் முறையில் வழிமுறைகளை ஏற்படுத்தியவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற வாக்கைத் தாரக மந்திரமாகக் கொண்டு அயராது உழைத்து வருபவர். செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தமது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி அறக்கட்டளையொன்றை நிறுவி, அதன் மூலம் அறச்செயல்களைச் செய்து வருகின்றார். இந்நாளில் வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்புச்செய்தல், ஏழை மாணவருக்கு உதவுதல், சிறந்த நூல்களை வெளியிடுதல், முதிய அறிஞர்களைப் பாராட்டுதல் போன்ற நற்பணிகளையும் செய்து வருகின்றார். சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி, திருவாசகக்கொண்டல், செஞ்சொற்செம்மணி, சிவஞானவித்தவர் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பட்டங்களோடு அண்மையில் யாழ் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.

தமிழ் சமயப் பணிகளில் ஆழங்காண முடியாத சமுத்திரமாக, சிவத்தமிழ்சமுத்திரமான விளங்குபவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள். இவருடைய சமய, தமிழ்? அறப்பணிகளுக்கு ஈடாக எவரையுமே குறிப்பிட முடியாது. தனக்குத்தானே நிகராக, சொல்லும் செயலும் ஒன்றாகி வாழும் அம்மையார் அவர்களால் தமிழும் சமயமும் மட்டுமல்ல தமிழ் சமூகமே சிறப்புப் பெற்றுக் காணப்படுகின்றது. அம்மையார் அவர்களை விட்டு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய வரலாற்றை ஆராய்வதென்பது முடியாது காரிணம். 'யாழ்ப்பாணத்தின் இந்து மதப்பண்பாட்டில், அண்மைக் காலத்தில் இரு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று, இந்துக்களால் வழிபடப்பெறும் ஒரு பெண் தெய்வத்தின் வழிபாடு பற்றியது. மற்றது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் கோயில் முகாமை பற்றியது. செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி என்ற ஒரு தமிழாசிரியையின் ஆன்ம யாத்திரையினூடாக, அவரது புலமை முதிர்ச்சியின் வழியாக, அவரை வழி நடத்தும் சமூக, மத தரிசனத்தினூடாக இந்த இரு மாற்றங்களும் நிறைவேறியுள்ளன' எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறிய கூற்று, சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியின் சான்றாண்மையையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்றது.

இத்தகை பெருமைகளைக் கொண்டவர், துர்க்கையின் அருளால் தான் போற்றி வளர்க்கும் மகளிர் இல்லப் பிள்ளைகளின் பெரியம்மாவாக, சகோதரியாக மிக அடக்கமாக வாழ்ந்து வருகின்றார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் பின் சைவத்தமிழ் மரபுக்கு அச்சாணியானவர் துர்க்காதுரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.

நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பரமர்க் கங்காமே

என்றவாறு அறப்பணி செய்வோர் தெய்வத்தின் அருளைப் பெற்றவர்களே.

இவ்வாறாகத் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம் பல்வேறுவகையிலும் சிறப்புப்பெற்று, வெறும் பூசைகளையும் விழாக்களையும் நடத்துகின்ற ஆலயமாகக் காணப்படாது, மக்கள் ஆலயமாகச் சிறந்து விளங்குகின்றது.

ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
தாளைப் புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்
குசமம் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணி யைத் தொழு
வார்க்கு ஒரு தீங்கில்லையே


என்றவாறு, தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவியைச் சரணடைந்தவர்கள் அல்லல்கள் நீங்கி இன்புற்று வாழ்வர்.


துர்க்காதேவியை (2012) தேரினில் தரிசிக்க இங்கே அழுத்துங்கள்

 

771-9-13

நல்லூர் கந்தன் மஹோற்சவ பெருவிழா - தேர்த் திருவிழா - 20.08.2017

E-mail Print PDF


சிவமயம்

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் வருடாந்த மஹோற்சவ பெருவிழா 28.07.2017 காலை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகியது.

20.08.2017 (24ம் திருவிழா) தேர்த்திருவிழாவும், (அதிகாலை முதல் விசேட பூஜைகள் ஆரம்பிக்கப்பெற்று நல்லைக் கந்தன் சித்திரத் தேரில் ஆரோகணிப்பார்)

29.08.2017 ம் திகதி (25ம் திருவிழா) தீர்த்தத் திருவிழாவும்; நிகழ திருருவருள் பாலித்துள்ளதுஎன்பதனை அறியத்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

Read more...

ஆலயத்திற்கு சொந்தமான அசையும் அசையா சொத்துக்களை (சூறையாடும்) தம்முடமையாக்கும் ஆலய ஆதீனகர்த்தாக்கள் - பல புதிய விபரங்களுடன்:

E-mail Print PDF

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான அசையும், அசையா ”சமயத்தரும நம்பிக்கைச் சொத்துக்களை” இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் இருவர் தமது சொந்த ஆதனங்களாக  02.08.2012 ம் திகதி உறுதி இலக்கம் 1405 இலக்க உறுதி மூலம் தமதாக்கியுள்ளனர்.

1.    யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சுழிபுரம் இறை “பணிப்புலம்” பரப்பு நிலம் இலாச்சம் ஏழு என்னும் ஆதனத்தில் எழுந்தருளியிருக்கும் மகாமுத்துமாரி அம்மன் கோவிலும் அதனைச் சேர்ந்த ஆதனங்களும், அசையும் அசையா சொத்துக்களுக்கும் சுழிபுரத்தைச் சேர்ந்த வேலாயுதர் கனகர் அவர்கள் உரிமையாளராகவும், தர்மகர்த்தாவாகவும், மனேச்சராகவும், பூசகருமாக உள்ளார் என 25.06.1906 ம் திகதி பிரசித்த நொத்தாரிஸ் வீ. சீனிவாசகம் அவர்கள் அத்தாட்சிப் படுத்திய உறுதி இலக்க 11265 ல் உறுதியின் பிரகாரம் உறுதிப்படுதப் பெற்றுள்ளது.

2.    15.02.1934 அன்று பிரசித்த நொத்தாரிஸ் தா. வைத்திலிங்கம் 399ம் இலக்கத்தில் அத்தாட்சிப் படுத்திய உறுதி மூலம் பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் சுழிபுரம் இறை “பணிப்புலம்” பரப்பு நிலம் இலாச்சம் ஏழு என்னும் ஆதனத்தில் எழுந்தருளியிருக்கும் மகாமுத்துமாரி அம்மன் ஆலயத்தின் உரிமைகளையும், அசையும் அசையா சொத்துக்களின் உரித்துக்களையும் தனது ஆண் பிள்ளைகளான பூசகர் சுப்பையா, கந்தையா, பூசகர் வேலாயுதம், பூசகர் தம்பிப்பிள்ளை ஆகியோருக்கு சமபங்காக கையளித்து ஆலயத்தின் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார்.

3.    23.11.1979 ம் திகதி யாழ்/மாவட்ட நீதிமன்றினால் அங்கீகரிக்கப் பெற்று அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கட்டளை பிறப்பிக்கப் பெற்ற “ஆலய பரிபாலன முகாமைத்துவ நடவடிக்கை முறைத் திட்டத்தின்” முதலாம் பந்தியில் குறிப்பிட்டிருப்பதாவது;

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சுழிபுரம் இறை ”பணிப்புலம் பரப்பு நில இலாச்சம் ஏழு” என்னும் காணியில் எழுந்தருளி இருக்கும் மகாமுத்துமாரி அம்மன் கோவிலும் அதைச் சேர்ந்த அசைவுள்ள அசைவற்ற ஆதனங்களும் ”சமயத்தரும நம்பிக்கைச் சொத்தாகும்” என 23.11.1979 அன்று யாழ்மாவட்ட நீதிமன்றினால் அங்கீகரிக்கப் பெற்று அதனை அமூல் படுத்துவதற்கான கட்டளையும் அன்றே பிறப்பிக்கப் பெற்றுள்ளது.

4.    இவ் ஆலயமும், அதனுடன் இணைந்த எல்லாக் கட்டிடங்களும், அதனைச் சேர்ந்த அசையும், அசையா சொத்துக்கள் யாவும் பொது மக்கள் நன்கொடைகளாகவும், நேர்த்தியாகவும் ஆலயத்திற்கு அவ்வப்போது வழங்கப் பெற்ற பொதுச் சொத்தாகும்.

இவ் ஆலய வளாகமானது தற்பொழுது நில இலாச்சம் 33.01 பரப்பளவைக் கொண்டதாகும். இதில் ஆலயத்தின் சொந்த நிலமாக ஆலயம் அமைந்த நில இலாச்சம் 7 பரப்பு தவிர்ந்த மிகுதி 26.01 பரப்பு நிலம் ஆலய தேரோடும் வீதி அமைப்பதற்காகவும், ஆலயத்தை விசாலமாக அமைப்பதற்கும் பொது மக்கள் அவ்வப்போது ஆலயத்திற்கு வழங்கப் பெற்ற பொது நிலமாகும். இதற்கான ஆவணங்கள் எதுவும் ஆலயத்டை பரிபாலிப்பவர்களிடம் இல்லை என்பதே உண்மை. ஆலய பரிபாலகர்கள் இன்றுவரை பரப்பு நில இலாச்சம் 7 பரப்பிற்கான வரிப் பணத்தையே ”பிரதேச சபை” யில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ் ஆலயத்திற்கு சொந்தமான ”கண்ணாம்பிச் சாந்தை”, ”வேட்டையாடு சாந்தை”, ”இடையன்புலம்” ஆகிய மூன்று ஆதனங்களையும் கந்தையா சதாசிவக் குருக்கள், வேலாயுதம் பேரின்பநாதக் குருக்கள் ஆகியோர் இரு பங்குகளாக கூறு போட்டு அவர்களது சொந்த ஆதனங்களாக வெளிப்படுத்தி உறுதியாக்கப் பெற்றுள்ளது. ஆலய பங்குரிமைகாரர்கள் தங்கள் பங்குக் காலத்தில் இவ் ஆதனங்களில் இருந்து வரும் வருமானங்களையும் பெற்று பூசைகளை சிறப்பாக செய்வதற்காகவே பொது மக்களால் இவ் ஆதனங்கள் நன்கொடையாக வழங்கப் பெற்றவைகளும்.

5.    ”ஆலய சமயத்தரும நம்பிகைச் சொத்துக்களை”; ஆலய தர்மகர்த்தாக்களோ, அன்றி ஆலயத்தை பரிபாலிப்பவர்களோ, மேற்பார்வை செய்பவர்களோ அல்லது ஆலயத்தில் பூசை செய்து வருபவர்களோ அவற்றிற்கு சொந்தம் கொண்டாடவோ, அபகரிக்கவோ, தம்வயப்படுத்திக் கொள்ளவோ அல்லது ஆட்சி உரிமையை காட்டி நன்கொடை வழங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது என்பது யாபெரும் அறிந்ததே.

ஆனால்; 02.08.2012 ம் திகதி உறுதி இலக்கம் 1405 உறுதி மூலம் ஆலய பரிபாலனத்தையும், ஆலய வளாகத்தின் ஆலயத்தின் வடக்கு-உள்வீதிக்கும், வடக்கு வெளிவீதிக்கும் இடைப்பட்ட நிலத்தை ஆலய  ஆதீனகர்த்தாக்கள் இருவருக்கு 1. கந்தையா சதாசிவக் குருக்கள், 2. வேலாயுதம் பேரின்பநாதக் குருக்கள் ஆகியோருக்கு அவர்களது சொந்த ஆதனங்களாக வெளிப்படுத்தப் பெற்றுள்ளதுடன்; கந்தையா சதாசிவம் குருக்கள் தனது இளைய மகனான சிவஸ்ரீ அற்புதராசா குருக்களுக்கும், வேலாயுதம் பேரின்பநாதன் குருக்கள் தனது இளையமகனான சிவஸ்ரீ இன்பராசா குருக்களுக்கும் அவர்களின் சொந்த ஆதனங்களாக வெளிப்படுத்தி தமது சீவிய உரித்துடன் ஒப்படைத்துள்ளனர்.  சிவஸ்ரீ பேரின்பநாதக் குருக்கள்  பெற்றுக் கொண்ட வீட்டுடன் கூடிய ஆதனத்திற்கு ஆலய வடக்கு உள்வீதியில் அமைந்துள்ள இரண்டாம் தீர்த்தக் கிணற்றிலும், ஆலயவெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள கிணற்றில் வழிவாய்கால் பாவிப்புடன் கூடிய கிணற்றுப் பங்கும் (ஆலய மணிமண்டப வாசலின் முன்பக்கமாக) வழங்கி உறுதியாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய வளாக ஆதனத்தில் ஆலய வடக்கு உள்வீதிக்கும், வடக்கு வெளி வீதிக்கும் இடையில் அமைந்த நிலத்தில் பூந்தோட்டமும், அபிழ்சேகத்திற்கு தேவையான இளநீர், வெற்றிலை, பாக்கு மற்றும் தேசிக்காய் போன்றனவற்றை பெற்றுக் கொள்வதாக தென்னை, கமுகு, வெற்றிலைக் கொழுந்து என்பனவற்றையும் பூ மரங்களையும் சமாதியாகிய ஆதீனகர்த்தாக்கள் பயிரிட்டு பூசைக்குரிய பூக்களையும், அபிழ்ஷேகத்துக்குரிய பொருட்களையும் பெற்று வந்தனர். அவை இப்போது அழிந்து விட அவற்றை மாற்றீடு செய்யாது தமது ஆட்சி உரிமை காட்டி அவ் ஆதனத்தை தமது சொந்த ஆதனமாக உரிமையாக்கியுள்ளார்கள்.

அதனால்; ஆலய வாக்னசாலையை விசாலமாக்கி கட்டுவதற்கோ, அல்லது புதிதாக வேறு தேவைகளுக்கான கட்டிடங்களை அமைப்பதற்கோ இடமின்மை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலயத்திற்கு பொதுமக்கள் தங்கள் நேர்த்திகளாக வழங்கும் வாகனங்கள், குடைகள் யாவும் இடமின்மை காரணமாக உள்வீதியில் வைக்கப் பெற்று இருப்பதனால்; தூசுகளினாலும், மழைத் தூவானங்களினாலும் சேதமடைகின்றன.  

வேலாயுதம் பேரின்பநாதன் குருக்களுகள் உறுதியாக்கிக் கொண்ட ஆதனத்தில் அமைந்துள்ள வீடு ஆலய பங்குரிமைகாரர்கள் தமது பங்குரிமைக் காலத்தில் தங்கியிருந்து ஆலயத்தை பரிபாலித்து வருவதுடன்; மஹோற்சவ விழாகாலத்தில்  வெளியூர் குருக்கள்மாருக்கு தங்குமிடவசதி கொடுக்கவேண்டி இருந்தமையால் இவ் வீட்டையும் திருத்தி விசாலமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால், 2003 – 2006 ஆண்டு காலத்தில் இராசகோபுரம் அமைப்பதற்காக சுமார் 35 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட முன் கொட்டகை கழற்றப் பெற்ற போது அவறில் இருந்த ஓடுகள், மரங்கள், தீராந்திகளைக் கொண்டு இவ் வீட்டில் வசித்து வந்த வேலாயுதம் பேரின்பநாதக் குருக்கள் அவர்கள் ஆலய வீட்டு வாடகைப் பணத்தை செலவு செய்து அவ் வீட்டை விசாலமாக திருத்தி அமைக்கும் திருப்பணியச் செய்துள்ளார்.

(1975 - 1976 ஆகிய காலப் பகுதியில் அமைந்த தமிழ் வருடம் பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களின் பூசை உருமைக்காலமாகும். அதனால் பூசகர் வேலாயுதம் அவர்கள் ஆலய வீட்டில் தங்கியிருந்து ஆலயத்தை பரிபாலித்து பூசைகளை செய்வித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த தமிழ் வருஷம் பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களுக்கு உரிய காலமாகும். பூசகர் கனகர் வேலாயுதம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தமையால் தம்பியாரான பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களின் அனுமதியுடன் அங்கு வாழ்ந்து அதே வருடம் இறைபதம் எய்தினார்.

இறைபதம் எய்திய தந்தையாரின் பிதிர் கடமைகளை செய்வதற்காக பேரின்பநாத குருக்கள் அவ் வீட்டில் வசித்து வருகையில் ஆலயத்தில் உரிமைகாரர்களுக்கும், திருப்பணிச் சபையினருக்கும்ம் இடையே எழுந்த உரிமைப் பிரச்சனை காரணமாக ஆலயம் பூட்டப் பெற்றது. அதனால் ஆலயம் மீண்டும் திறக்கும் வரை பூசகர் பேரின்பநாதன் அவர்கள் அவ் வீட்டிலேய வசித்து வந்தார்.

அத்துடன் ஆலய பூசை உரிமை பங்காளிகளுடன் செய்த ஒப்பந்தத்தின் பிரகாரமும், பூசை உரிமை பங்காளிகள் ஆலய வீதிச் சுற்றாடலில் வசித்து வந்தமையாலும், வாடகையாக ஆலயத்தில் திருப்பணி செய்வதாகவும் கூறியமையால் இன்றுவரை அவரே கோயில் வீட்டில் வசித்து வருகின்றார். (அதனால் அவர் அங்கு வசித்த காலத்தை தனது ஆட்சிக் காலம் என குறிப்பிடுகின்றார்.)

6.    (இவ் ஆலயம் பூசைகள் இன்றி பூட்டப் பெற்றதற்கான சூழ்நிலை) இவ் ஆலய ஆதீனகர்த்தாக்களாக இருந்த பூசகர் வேலாயுதம் அவர்களும், பூசகர் தம்பிப்பிள்ளை அவர்களும் இருவாரகால இடைவெளியில் சமாதியடைந்ததும்; இவ் ஆலயத்தில் இயங்கி வந்த திருப்பணிச் சபையினர் ஆலய நிர்வாகத்தை கைப்பற்ற முயன்றதால்; ஆலய ஆதீனகர்த்தாக்களுக்கும் ஆலய திருப்பணிச் சபையினருக்கும் இடையில் எழுந்த உரிமைப் பிரச்சனை காரணமாக இவ் ஆலயம் பூட்டப் பெற்று மஜிஸ்றேற் / மாவட்ட / உயர் நீதிமன்றுகளில் (10845, TR-1807, TR-2149) வழக்கு நடைபெற்று வந்தன.

ஆலயம் நிரந்தரமாக பூட்டப் பெற்றிருந்த 1976ம் - 1994ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்; இடைக்கால தீர்ப்பின் பிரகாரம் 1978ம் ஆண்டு ஆலய உரிமைகாரர் சுமார் 1½ வருடம் கீரிமலை ஐயம்பிள்ளைக் குருக்கள், அளவெட்டி நவரத்தின குருக்கள் மூலம் பூசைகள் செய்து வந்ததுடன், அவர்களை பூசைகள் செய்யவிடாது இனம் தெரியாதோர் மறித்ததினால்; 1979ல் நித்திய பூசைகளை செய்வதற்காக இதுவரைகாலமும் ஆசாரமற்று இருந்த கந்தையா சதாசிவம், வேலாயுதம் பேரின்பநாதன், தம்பிப்பிள்ளை அம்பிகைபாலன் ஆகியோர் சமயதீட்சை பெற்று வீரசைவர்களாகி ஆசாரசீலர்களாக நித்திய பூசைகளை செய்து வந்துள்ளனர். அதனைத் தொடந்து எழுந்த குழப்பம்கள் காரணமாக மீண்டும் ஆலயம் பூட்டப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சில வருடங்களின் பின்னர் வழிபடுவோர் சபையினர் சமர்ப்பித்த மனுவின் பிரகாரம் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பெற்று சுழிபுரம் குடியிருப்பு பிராமண குருமார் மூலமும் சுமார் 9 வருடங்கள் 1985 முதல் 1994ம் ஆண்டுவரை ஆலயத்தை பரிபாலித்து, திருப்பணிகள்செய்தும், நித்திய, நைமித்திய, காமிக பூசைகளை பிராமண குருமார் மூலம் வெகுசிறப்பாக செய்வித்தும் வந்துள்ளனர்.

இக் காலகட்டத்தில்; மல்லாகம் நீதிமன்று தீக்கிரையானதால் வழக்கு கோப்புகள் யாவும் அழிந்துபோயின. 1993ம் ஆண்டு தமிழீழ காவல்துறையினர் தலையிட்டு விசாரணை செய்த பின்னர் 1994.02.05 அன்று ஆலய முழுப்பொறுப்பையும் ஆலய பரம்பரை உரிமைகாரரிடம் ஒப்படைத்தனர்.

(1970ம் ஆண்டிற்கும் 1976 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலம்) 1970ம் ஆண்டு முதல் 1976 ம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதியில் இவ் ஆலய நித்திய (மூன்று காலம்) பூசைகளும், நைமித்திய, காமிக பூசைகளும் சுழிபுரம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராமண (பறாளாய் முருகன் ஆலய பிரதம குரு பாலகுருசாமி சர்மா முதலான) குருமார் மூலம் நடாத்தப் பெற்று வந்துள்ளது.

இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் ஆசாரமற்றவர்களாக இருந்தமையால்; 1970ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் பின்னர் பிராமண குருமாரே எல்லாப் பூசைகளையும் செய்ய வேண்டும் என பொது மக்கள் விரும்பினர். அதனால் திருப்பணிச் சபையினர் ஆலய பூசகர்களின் முழுச் சம்மதத்துடன் பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்று நித்திய பூசைக்கான ஊதியத்தை பிராமண குருமாருக்கு வழங்கி வந்தனர். ஆனால் நைமித்திய, காமிக பூசைகளுக்கான ஒழுங்குகள் யாவும், ஆதீனகர்த்தாக்கள் செய்து வந்ததுடன். அதற்கான ஊதியத்தையும் பிராமண குருமாருக்கு வழங்கி வந்துள்ளனர்.

7.    இவ் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள நிலமும், வீடும், கிணறும் ஆலயத்தின் அசையா சொத்தாகும் என யா/மாவட்ட நீதிமன்றம் 23.11.1979 ம் திகதி வழங்கிய கட்டளையை இவ் ஆலய பங்குரிமைக்காரர்கள் அனைவரும் முழுச் சம்மதத்துடன் ஏற்றுக் கொண்டு யாழ்/மாவட்ட நீதிமன்றில் ஒப்பமிட்டுள்ளனர். அக் கட்டளையையும் மீறி தற்போதைய ஆதீன கர்த்தாக்கள் இருவர்; உறுதி இலக்கம் 1405 உறுதி மூலம் அவற்றை தமது சொந்த ஆதனமாக உறுதியாக்கியுள்ளனர்.

இதுவரை காலமும் இவ் ஆலய ஆதீனகர்த்தாக்களாகவும், பரிபாலகர்களாகவும், பூசகர்களாகவும் செயல் பெற்று; ஆலயத்தை பொதுமக்களின் நேர்த்திகள், நன்கொடைகளுடன் வளர்த்தெடுத்து; தமது சொந்த வருமானத்திற்கேற்ப (ஆலய சொத்துக்களை, நன்கொடைகளை தீண்டாது) வாழ்ந்து  சமாதி அடைந்த (ஆலய ஸ்தாபகார்) பூசகர் வேலாயுதர் கனகர், பூசகர் கனகர் வேலாயுதர், பூசகர் வேலாயுதர் கனகர், பூசகர் கனகர் சுப்பையா, பூசகர் கனகர் கந்தையா, பூசகர் கனகர் வேலாயுதம், பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை ஆகியோரினால் ஆலய அசையும் அசையா சொத்துக்களை தமக்கு உரிமையாக்கிக் கொள்ள முடியாது இருந்த அல்லது செய்ய விரும்பாது இருந்த ஆலய (அசையும், அசையா) வளங்களை இரகசியமாக தமக்கே உரிமையாக்கும் சுயநல செயலை; தற்போதைய ஆதீனாகர்த்தாக்கள் இருவர் செய்துள்ளனர்.

ஆலயத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து ஆலய அசையும், அசையா சொத்துக்களை பராமரித்து, பாதுகாத்து ஆலயத்தை வளர்த்தெடுக்க வேண்டிய ஆதீன கர்ர்த்தாக்களே பயிரை மேய்ந்து தம் பிள்ளைகளை போசிக்கின்றனர்.

8.    (”ஆலய பரிபாலன முகாமைத்துவ நடவடிக்கை முறைத் திட்டம்” உருவான சூழ்நிலை); சமாதியாகிய பூசகர் வேலாயுதம், பூசகர் தம்பிப்பிள்ளை ஆகியோரின் பின்உரிமைகாரர்கள் நியமிக்கப் பெற்ற பின்னர், அவர்களின் உரிமைகளையும், பங்குகளையும் உறுதிப் படுத்திக் கொள்வதற்காகவும்; ஆலயத்திற்கு சொந்தமான அசைவுள்ள அசைவற்ற ஆதனங்களின் உரிமை சம்பந்தமாகவும்; இவ் ஆலயத்தின் ½ பங்கிற்கு உரிமைகாரனாகிய பூசகர் கந்தையா சதாசிவம் அவர்கள் தமது சட்டத்தரணி திரு. த. சங்கரப்பிள்ளை அவர்கள் மூலம் ”ஆலய பரிபாலன முகாமைத்துவ நடவடிக்கை முறைத் திட்டம்” எனும் மனுவை 11.04.1979ம் திகதி யாழ்/மாவட்ட நீதிமன்ற நம்பிக்கைச் சொத்து வழக்கு இலக்கம் TR-74 வழக்கில் சமர்ப்பித்திருந்தார்.    

இவ் மனுவில், சமாதியாகிய கனகர் வேலாயுதம், பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை ஆகியோரின் பின் உரிமைகாரர்களாக நியமிக்கப் பெற்ற ஆண், பெண் பிள்ளைகளும், அவர்களின் அப்போதைய மருமகன்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பெற்று இருந்தனர்.

இவ் மனுவானது, 23.11.1979 திகதி யாழ்/மாவட்ட நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப் பெற்றபோது பிரதிவாதிகள் அனைவரும் சமூகம் கொடுத்து ”ஆலய பரிபாலன முகாமைத்துவ நடவடிக்கை முறைத் திட்டத்தினை” ஒருமுகமாக ஏற்றுக் கொண்டதனால் அத் திட்டமானது அன்றே நீதிமன்றினால் அங்கீகரிக்கப் பெற்று அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கட்டளையும் பிறப்பிக்கப் பெற்றது.

அதன் பிரகாரம், 23.11.1979 ம் திகதியில் இருந்து சுழிபுரம் இறை பணிப்புலம் நில இலாச்சம் 7 எனும் காணியியில் எழுந்தருளியுள்ள மகா முத்துமாரி அம்மன் கோயிலும் அதைச் சேர்ந்த அசையும், அசையா சொத்துக்கள் யாவும் ஆலய ”ஆலய பரிபாலன முகாமைத்துவ நடவடிக்கை முறைத் திட்டம்” மூலம் பரிபாலிக்க வேண்டும் என கட்டளைபிறப்பிக்கப் பெற்றுள்ளது. அத்திட்டத்தின் முதலாம் பந்தியின் பிரகாரம் மகா முத்துமாரி அம்மன் கோயிலும் அதைச் சேர்ந்த அசையும், அசையா சொத்துக்கள் யாவும் “ஆலய சமயத்தரும நம்பிகைச் சொத்துக்களாகின்றன”.

9.    அத்துடன், இவ் ஆலயம் 23.12.1988 திகதி,  இந்து கலாச்சார திணைக்களத்தில் HA/5/JA/116 இலக்கத்தின் கீழ் பதிவாகியும் உள்ளது. பொது ஆலயங்கள் மாத்திரமே இந்து கலாச்சார திணைக்களத்தில் பதிவுசெய்வது வழக்கம். ஆனால் இவ் ஆலயம் தனிப்பட்ட ஆலயமாக இருந்தும் பதிவுசெய்யப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆலய திருப்பணிச் சபையினர் நிறைவு செய்த பெரும் தொண்டுகள்:
1965ம் ஆண்டு வரை, சுண்ணாம்பு கட்டிடமாக இருந்த இவ் ஆலயமும், அதனைச் சேர்ந்த அனைத்து மண்டபங்களும் (கருவறை, நிருத்த மண்டபம், மகாமண்டபம் மற்றும் பரிவார தெய்வங்களாக அமைந்திருக்கும் விநாயகர், முருகன் கோயில்களும்) ஆகம முறைப்படி திருத்தப்பெற்று வெள்ளை வைரக் கற்களினால் பொது மக்களின் நன்கொடைகளைப் பெற்று ஆலய திருப்பணிச் சபையினரால் திருத்தி அமைக்கப் பெற்றதுடன்;  உட்பிரகார கொட்டகைகள், வசந்த மண்டபம், அன்னதான மடம், யாகசாலை ஆகிய கட்டிடங்களும் பொது மக்களின் நன்கொடைகளைப் பெற்று ஆலய திருப்பணிச் சபையினரால் புதிதாக அமைக்கப் பெற்றவைகளாகும்.

இவ் ஆலய கட்டிடங்கள் யாவும் பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் திருத்தியும், புதிதாகவும் அமைக்கப் பெற்றன என்பதனை வெளிப்படுத்துவதற்காக ஆலய மகாமண்டப வாசலில் கதவுநிலைக்கு மேலாக கட்டப் பெற்றிருக்கும் தனி வெள்ளை வைரக் கல்லில் திருப்பணிச் சபையினரால் ”பொதுசன உபயம்” என்னும் வாசகம் செதுக்கப்பெற்றிருந்தது. அவ் வாசகம் தற்போது வேண்டுமென்றே சீமெந்து பூசப்பெற்று வர்ணம் தீட்டப் பெற்று மறைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆலய பிரதான வாசலில் அமைந்துள்ள ஐந்து தளங்களைக் கொண்ட இராச கோபுரமும், மணி மண்டபமும் பொது மக்களின் நன்கொடைகளைப் பெற்று (2003 – 2006 காலப்பகுதியில்) திருப்பணி குழுவினரால் அமைக்கப் பெற்றவைகளாகும். இவ் இராசகோபுரத்தை அமைப்பதற்கு முன்நின்று உழைத்தவர்களில் ”நிதிப் பொறுப்பாளர்” சூரசங்காரன் அவர்களினதும், திருப்பணிக் குழுத் தலைவர் பாலசுப்பிரமணியம் அவார்களின் முழுநேர ஒத்துழைப்பும், மற்றைய அங்கத்தினர்களின் சேவையும் போற்றுதற்குரியது.

மேலும், ஆலய உட்பிரகார பரிவார மூர்த்திகளாக அமைந்திருக்கும் நவக்கிரக ஆலயமும் (திரு. சண்முகம் அவர்களின் உபயம்), சண்டேஸ்வரி ஆலயமும் (திரு. சி. தங்கராசா அவர்களின் உபயம்), மணிக்கூட்டு கோபுரத்துடன் கூடிய-வைரவர் ஆலயமும் (திரு. மயில்வாகனம் அவர்களின் உபயம்) பொதுமக்களின் தனி உபயமாகவும் அமைக்கப் பெற்றுள்ளன.

இவை மட்டுமன்றி; இவ் ஆலய நித்திய, நைமித்திய பூசைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக பொது மக்களால் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பெற்ற இரண்டு ஆதனங்களும், சமாதியாகிய ஆதீன கர்த்தாவினால் (1946ம் ஆண்டிற்கு முன்னர்) ஆட்டுக் கடா வெட்டுவதற்கு தட்சனையாக பெற்றுக் கொண்ட பணத்தில் ஆலயத்திற்கு வாங்கப் பெற்ற ஆதனமுமாக மூன்று ஆதனங்களும் (”கண்ணம்பிசாந்தை” – பரப்பு நில இலாச்சம் 3 3/8, ”வேட்டையாடுசாந்தை” - பரப்பு நில. இலாச்சம் 3¼, ”இடையன்புலம்” – பரப்பு நெல். இலாச்சம் 6 ஆகிய ஆதனங்களும்) ஆலயத்தின் அசையா சொத்துக்களாகவும் இருக்கின்றன.

சமாதியாகிய ஆலய தர்மகர்த்தாக்கள் (உரிமைகாரர்கள்) இவ் ஆதனங்களை தங்கள் பங்குக்காலத்தில் பராமரித்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பூசைப் பணத்தைக் கொண்டும் பூசைகளை செய்து வந்துள்ளனர்.

பூசகர் கனகர் வேலாயுதர் அவர்கள் (பூசகர் கனகரின் தந்தையார்) ஆலய வளாகத்தில் ஆலயத்துடன் இணைந்தாற்போல் (ஆலய வடக்கு உள்பிரகாரத்திற்கும், வடக்கு வெளிப்பிரகாரத்திற்கும் இடையில்) இடையில் இருக்கும் ஆலயத்தோடு இணைந்த நிலத்தில் அமைந்திருந்த இரு அறைகளைக் கொண்ட சுண்ணாம்பினாலான வீட்டில் வாழ்ந்து வந்ததுடன், அவரின் பின்னர் அவரின் மகன்களில் ஒருவரான பூசகர்  வேலாயுதர் கனகர் அவர்கள் தம் முதல் மனைவியுடனும், மனைவி சமாதியடைந்த பின்னர் மறுமணம் செய்து மனைவி தையலம் அவர்களுடனும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். 23.11.1979 ம் திகதியின் பின்னரும், அதற்கு முன்னரும் இந்த வீடானது ”ஆலயத்தின் சமயத் தரும நம்பிகைச் சொத்தாகவே” இருந்துள்ளது.

ஆலய சமயத்தரும நம்பிகைச் சொத்துக்களை; ஆலய தர்மகர்த்தாக்களோ, அன்றி ஆலயத்தை பரிபாலிப்பவர்களோ, மேற்பார்வை செய்பவர்களோ அல்லது ஆலயத்தில் பூசை செய்து வருபவர்களோ அவற்றிற்கு சொந்தம் கொண்டாடவோ, அபகரிக்கவோ, தம்வயப்படுத்திக் கொள்ளவோ அல்லது ஆட்சி உரிமையை காட்டி நன்கொடை வழங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது என்பது யாபெரும் அறிந்ததே.

அத்துடன்; ஆலயமும், அதனைச் சேர்ந்த அசையும் அசையா சொத்துக்கள் யாவும்  பொது மக்கள் நன்கொடைகளாகவும், நேர்த்தியாகவும் ஆலயத்திற்கு வழங்கப் பெற்ற பொதுச் சொத்துக்களாகும். அதனை பரிபாலிக்கவும், மேர்ப்பார்வை செய்யவும், ஆலயத்தில் பூசைகள் செய்வதற்கும் ஆலய ஸ்தாபகர் பரம்பரையில் வந்த ஆலய ஆதீனகர்த்தாக்கள் எதுவிதத்திலும் அவற்றிற்கு சொந்தக்காரர் ஆகிவிட முடியாது என்பது வெளிப்படை.

ஆனால்; 02.08.2012 ம் திகதி உறுதி இலக்கம் 1405 உறுதியில் இவ் ஆதனங்களில் ஆலய வளாகத்தின் ஆலய வடக்கு-உள்வீதிக்கும், வடக்கு-வெளி வீதிக்கும் இடைப்பட்ட நிலத்தை பூசகர் கந்தையா சதாசிவம் அவர்களும், பூசகர் வேலாயுதம் பேரின்பநாதன் அவர்களும் இரண்டு துண்டுகளாக கூறுபோட்டு பிரித்து அவற்றை அவர்களது சொந்த ஆதனங்களாக (02.08.2012ம் திகதி உறுதியாக்கப் பெற்ற உறுதி இலக்கம் 1405 ல் 15ம் பந்தியின் அ, ஆ, இ, ஈ ஆகிய பிரிவுகளின் படியும்; இரண்டாம் ஆதன அட்டவணை, மூன்றாம் ஆதன அட்டவணையின் படியும்) வெளிப்படுத்தி அவற்றிற்கு ஆலய வடக்கு உள்வீதியில் அமைந்துள்ள இரண்டாம் தீர்த்தக் கிணற்றில் தண்ணீர் பங்கும் தூர்வை வழிவாய்க்கால் பாவிப்பு உரித்தும் வழங்கி உறுதியாக்கியுள்ளார்.

இவற்றுள் பூசகர் வேலாயுதம் பேரின்பநாதன் அவர்களுக்கு உறுதியாக்கிக் கொண்ட ஆதனத்தில் அமைந்த வீடும் அவரது சொந்த வீடு என குறிப்பிடப் பெற்றுள்ளது. இச் செயலானது, (இவ் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள நிலமும், வீடும், கிணறும்) ஆலயத்தின் அசையா சொத்தை யாழ்/மாவட்ட நீதிமன்றம் 23.11.1979 ம் திகதி வழங்கிய கட்டளையையும் மீறி பூசகர் கந்தையா சதாசிவம் அவர்களும், பூசகர் வேலாயுதம் பேரின்பநாதன் அவர்களும் சொந்தமான ஆதனங்களாக வெளிப்படுத்தி உறுதியாக்கியுள்ளார்.  

இதுவரை காலமும் இவ் ஆலய ஆதீனகர்த்தாக்களாகவும், பரிபாலகர்களாகவும், பூசகர்களாகவும் செயல் பெற்று; சமாதி அடைந்த பூசகர் கனகர், பூசகர் வேலாயுதர், பூசகர் கனகர், பூசகர் சுப்பையா, பூசகர் கந்தையா, பூசகர் வேலாயுதம், பூசகர் தம்பிப்பிள்ளை ஆகியோரினால் ஆலய அசையும் அசையா சொத்துக்களை தமக்கு உரிமையாக்கிக் கொள்ள முடியாது இருந்த அல்லது செய்ய விரும்பாது இருந்த ஆலய (அசையும், அசையா) வளங்களை; சூறையாடி தமக்கே உரிமையாக்கும் சுயநல செயலை; தற்போதைய ஆதீனாகர்த்தாக்கள் பூசகர் கந்தையா சதாசிவம் அவர்களும், பூசகர் வேலாயுதம் பேரின்பநாதன் அவர்களும் செய்ததினால் அவர்கள் ஆலயத்தின் வளர்ச்சியில் அக்கறையின்றி இருப்பதையும், தமது குடும்பத்தை வளப்படுத்துவதில் மட்டுமே மிகவும் அக்கறையுடன் இருக்கின்றார்கள் என்பதனையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆலயத் திருப்பணியும், பொது திருப்பணிச் சபையின் அவசியமும்:
மஹோற்சவ காலத்தில் தேர் உற்சவத்தின் போது அம்பிகை வீதி வலம் வரும் தேரினது சில்லுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தும் அதனை திருத்தி அமைப்பதற்கோ அல்லது சித்திரத் தேர் அமைப்பதற்கோ இதுவரை காலமும் திருப்பணி பொறுப்பாளர் எதுவித முயற்சியும் எடுக்காததினாலும்; அத்துடன் ஆலயத்தின் உள் கொட்டகைகள் கடந்த காலத்தில் இடம்பெற்ற செல்-வெடி தாக்குதலினால் சிதைவுண்டும் நெடுநாட்களாக திருத்த வேலைகள் நடைபெறாத காரணத்தினாலும்; கொட்டைகையில் பொருத்தப் பெற்றுள்ள பீலித் தகடுகள், ஓடுகள் பழுதடைந்து மழை காலத்தில் ஒழுகிய வண்ணம் இருப்பதனாலும்; தற்பொழுது திருப்பணி  உண்டியல், ஏலவிற்பனை, திருப்பணி நன்கொடைகளைப் பெற்றும் எதுவித திருப்பணியும் நடைபெறாத காரணத்தினாலும்; ஆலயத்தின் தேவைக்காக பொதுமக்களின் பணத்தில் வாங்கிய ஏணி போன்ற பொருட்களை தமது சொந்த தேவைகளுக்காக தமது வீடுகளுக்கு எடுத்துச் சென்று சொந்த பாவனைக்காக பாவித்து பழுதடையச் செய்வதனாலும், (ஆலயத்தில் எதுவித உரிமைகளும் இல்லாது) இது எங்கள் சொந்த ஆலயம் என்னும் இறுமாப்புடன் ஆலயத்தில்தில் தொண்டுகள் (கூட்டுவதற்கும், கழுவுவதற்கும், மணி அடிப்பதற்கும்) செய்ய வருவோரை துரத்தியும் “ஆலய நாட்டாண்மை” போல் செயல் பெறுவதனாலும்; பொதுமக்கள் ”திருப்பணி பொறுப்பாளரிடம்” நம்பிக்கை இழந்து ஆலயத்திற்கு வழங்கும் நன்கொடைகளையும், நேர்த்திகளையும் வழங்காது தாமதப்படுத்தியும், வேறு ஆலயங்களுக்கு அவற்றை வழங்கியும், அல்லது தாமே முன்வந்து தமது நேர்த்திகளை முன்நின்று செய்விக்கின்றனர்.

தற்பொது இத் திருப்பணிகளை பொறுப்பேற்று நடாத்துபவர் ஆலய ஸ்தாபகர் பரம்பரையில் வந்த ஒருவராக இருந்த போதிலும், 2002 ம் ஆண்டு அவர் இவ் ஆலயத்தில் தமக்கு இருந்த எல்லா உரிமைகளையும் சகோதரனான சிவஸ்ரீ பேரின்பநாதன் குருக்களுக்கு 6648 இலக்க உறுதி மூலம் ஒப்படைதுள்ளமையால்; அவரும் இவ்வூர் பொதுமகன் ஒருவராகவே ஆலய திருப்பணிக்கு பொறுப்பாக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந் நிலைமையும் மாறி; ஆலய திருப்பணிகளை முன் நின்று செய்விப்பதற்காக இவ் ஆலயத்தில் முன்பு இயங்கிவந்தது போன்று பொதுமக்கள் மாத்திரம் பங்குபெறும் ”திருப்பணிச் சபை” அமைப்பது கட்டாயமாகின்றது. இவ் திருப்பணிச் சபையானது பொது மக்களின் நிதியை கையாளுவதால்; பொதுமக்களால் தெரிவு செய்யப்பெற்று தன்னிச்சையாக இயங்க கூடியதாக அமைய வேண்டும். இச் சபைக்கும் ஆதீன கர்த்தாக்களுக்கும் உள்ள தொடர்பு சட்ட வல்லுணர்களால் அமைக்கப் பெற்ற “யாப்பு” மூலம் நிர்ணயிக்கப் பெறல் வேண்டும்.

அத்துடன்; 2006ம் ஆண்டு கடைசியாக மகாகும்பாபிஷேகம் நடைபெற்றமையால்; ஆகம விதிப்படி 12 வருடங்களுக்குள் (2018) ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ள திருச்சொரூபங்கள் யாவும் பாலஸ்தானம் செய்யப் பெற்று; ஆலய மூலஸ்தானம் முதல் ஆலயம் முழுவதும் திருத்தி அமைக்கப் பெற்று, கோபுரமும் வர்ணம் பூசப்பெற்று மகாகும்பாபிஷேகம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை முன்நின்று செய்வதற்கும் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெறும் “திருப்பணிச் சபை” அமைப்பது காலத்தின் கட்டாயமாகின்றது.

அத்துடன் ஆலயத்தின் தேரும் மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடிய நிலையில் காணப்படுவதால்; சித்திரத் தேர் அமைக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே; அம்பிகைக்கு திருப்பணி நிதி வழங்குவோர் தனி ஒருவர் செய்யும் திருப்பணிக்கு தங்கள் நேர்த்திகளை வழங்கி அவரை போஷிக்காது; ஒரு உண்டியலில் போட்டு வைத்து, பொது மக்களால் தெரிவு செய்யப் பெறும் “திருப்பணிச் சபை” உருவாகும் வரை பொறுத்திருந்து அவர்களிடமே தங்கள் நேர்த்திகளை வழங்கி அம்பிகையின் திருப்பணிக்கு தங்கள் நன்கொடைகள், நேர்த்திகள் சென்றடைவதை உறுதி செய்து கொள்ளலாம்.      

அத்துடன் அவருக்கு திருப்பணி நிதி பெற்றுக் கொள்ளும்போது மாத்திரம் (ஏலவிற்பனை, திருப்பணி உண்டியல்) தானே திருப்பணிக்கு பொறுப்பானவர் என்பது ஞாபகத்திற்கு வருகின்றது. அதன் பின்னர் திருப்பணிக்கு கிடைத்த பணத்தின் தொகை எவ்வளவு என்பதை வெளிப்படுத்தவோ அல்லது தன்னிடமே திருப்பணிக்கு உரிய பணம் இருக்கின்றன, தானே திருப்பணி செய்விக்க வேண்டும் என்பதனை மறந்துவிடுகின்றார்.

அத்துடன்; ஆலயவாசலில் திருப்பணிச் சபையினரால் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பெற்ற “அன்னபூரணி” அன்னதான மண்டபத்தில் திருப்பணி சபையினரால் நியமிக்கப் பெற்ற அன்னதான தொண்டர் சபையினர்  சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பெற்று வந்துள்ளமை யாபெரும் அறிந்ததே. அது போன்ற ஒரு ”தொண்டர் சபை” உருவாக வேண்டும் என்பதே ஆலய நலன் விரும்பிகளின் ஆவலாக உள்ளது.

தற்பொழுது இவ் அன்னதான சேவை ஆதீனகர்தாக்கள்களினால்  முன்னுருமை கொடுக்கப் பெற்று நியமிக்க பெற்ற பிரமுகர்களிடம் ஒப்படைக்கப் பெற்று நடாத்தப் பெற்று வருவதனாலும், அவர்கள்  பொது மக்களின் நம்பிக்கையை இழந்தவர்களாக செயல் பெறுவதனாலும்; அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குவோர் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் அன்னதான சேவையும் சிறப்பிழந்து மந்தகதியில் இயங்கி வருகின்றது.

பொதுமக்களின் நன்கொடைகளுடன் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பெற்ற அன்னதான மண்டபம் தற்போது திருத்த வேலைகள் எதுவும் இன்றி  பாழடைந்த மண்டபமாக காட்சிதருவது அதனை அமைப்பதற்கு பெருந்தொகைப் பணத்தை நன்கொடைகளாக வழங்கிய அடியார்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக வெளியிடப் பெற்ற அன்னதான சேவைக்கான வரவு செலவு அறிக்கையின் பிரகாரம் கடந்த காலங்களில் சுமார் மூன்று இலச்சம் ரூபாவிற்கு மேலான தொகை மிகுதியாக காட்டப் பெற்று இருப்பதுடன்; அவற்றை அன்னதான மண்டபத்தினை திருத்தி அமைப்பதற்கோ வசதிகளை மேம்படுத்துவதற்கோ பாவிக்காது வைப்பில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பெற்றுள்ளது.

அத்துடன்; உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வருகைதரும் விரதகாரர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக பொதுமக்களின் பணத்தில் வாங்கப்பெற்ற கடாரம், சட்டிகள், தண்ணீர் எடுக்கும் பரல்கள் யாவும் திருப்பணிக்கு பொறுப்பானவரின் உறவினர்களின் அந்தியேட்டி, ஆட்டத் திவசம் போன்ற அசுபக் கிரிக்யைகளின் போது சமையலுக்காக அவர்களின் வீட்டிற்கு எடுத்துச் சென்று பாவிக்கப் பெறுவதாலும்; திருப்பணிக்கு பொறுப்பானவர்; தண்ணிர் எடுக்கும் பரல்களை தாம் புதிதாக வாங்கிய வயல்களுக்கு எடுத்துச் சென்று  தமது வயல் காணிகளின் வரம்புகளை சீமேந்தினால் கட்டுவதற்கு நீர் சேகரித்து வைக்க பாவித்ததினாலும்; அவை அசுத்தம் அடைந்து ”ஆசூசம்” அடைந்துள்ளதாக கருதி விரதகாரர்களில் பலரும் அன்னதான மடத்தில் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனார்.

இவற்றின் மூலம் கடந்த இருபது வருடங்களாக ஆலயத்தை பொறுப்பேற்று பரிபாலித்து வரும் கர்த்தாக்களின் கவனம் ஆலயத்தையோ அல்லது அதனோடு இணைந்த கட்டிடங்களையோ  திருத்துவதற்காக எதுவித முயற்சியும் செய்யாது அல்லது செய்ய இயலாது ”வருமானமே தமது குறி” என செயல்பெறுவது புலனாகின்றது. எனவே பொது மக்களின் பணத்தில் பொது மக்களால் ஆலயத்திற்கு வழங்கப்பெற்ற நிலத்தில் அமைந்துள்ள அன்னதான மண்டபத்தினை அயலூர் ஆலயங்களில் அமைத்துள்ளது போன்று காலத்திற்கு ஏற்ற வகையில் ”கலியாண மண்டபமாகவும், அன்னதான மண்டபமாகவும்” பாவிக்கக் கூடிய வகையில்திருத்தி அமைத்து சிறந்த முறையில் நடாத்துவதற்கும் பொது திருப்பணி சபையின் கீழ் இயங்கும் ”தொண்டர் சபை” மிக முக்கியமாகின்றது. 

இத் திருப்பணிச் சபையில்; ஆலய திருப்பணிகளில் முன் அனுபவம் பெற்றவர்களும், ஆலய உபயகாரர்களும், ஆலய நலன்விரும்பிகளும், கொடையாளிகளும், ஆலயத்தில் தொண்டாற்றிவரும் இளம் தொண்டர்களும், எம்மூர் புத்திஜீவிகளும், வெளிநாடுகளில் அம்பிகை அடியார்களிடம் பணம் சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர்களும் உள்ளடக்கப்படுவார்கள்.   

அத் திருப்பணிச் சபை மூலம் எல்லா திருப்பணிகளும் இனிதே நிறைவுபெற எல்லாம் வல்ல எம்பிராட்டியை பிரார்த்திப்போமாக.
3303.30.04.2017

Page 7 of 39