Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here:

ஆலயங்கள்

காலையடி ஞானவேலயுதர் ஆலய தெற்கு வாசலில் கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா -

E-mail Print PDF
காலையடி ஞானவேலாயுதர் ஆலய தெற்கு வெளி பிரகாரத்தில் மஹாமண்டபத்திற்கு நேராக இரண்டாவது இராச கோபுரம் அமைப்பதற்கான அத்திவாரம் இடுதல் “பூமிபூஜை இன்று 09.09.2016 காலை 7:30 மணியளவில் இடம்பெற்றது. அவ் நிகழ்வுகளைகீழே உள்ள படங்களில் பார்வையிடலாம்.

https://www.facebook.com/photo.php?fbid=1698138293844767&set=pcb.1698151650510098&type=3&theater

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் – இணைந்த திருப்பணிச் சபை தெரிவாகியும் செயலிழந்த நிலையில்

E-mail Print PDF

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய திருப்பணிகள் யாவும் 1993 ம் ஆண்டுவரை பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்ற திருப்பணிச் சபையினரால் செய்யப் பெற்று வந்தமை யாபெரும் அறிந்ததே. அத் திருப்பணிகள் யாவும் 1993 ஆண்டு முதல் பொது மக்ஆக்யளின் நன்கொடைகளுடன் இவ் ஆலய பூசை உரிமைகளை இழந்து பொதுமகனாக உள்ள ஒருவர் மூலம் நடாத்தப் பெற்று வருவதுடன்; எதிர்காலத்தில் பொறுப்பேற்று நடாத்துவதற்கு ஆலய தர்மகர்த்தாகளும் பங்கேற்கும் ”திருப்பணிச் சபை” வலிகாமம் மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முகதாவில் ஆலய மணிமண்டபத்தில் 11.8.2016 அன்று ஒன்று கூடிய பொது மக்களினாலும், தர்மகர்த்தாக்களினாலும் தெரிவு செய்யப் பெற்றது.

இத் திருப்பணிச் சபை தலைவராக திருவாளர். குருலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றதுடன், சிவஸ்ரீ. பே. இன்பராசா குருக்கள் அவர்கள் தர்மகர்த்தாகளினால், செயலாளராகவும் தெரிசெய்யப் பெற்றார்.

இச் திருப்பணிச் சபையின் பொருளாளராக திருவாளர் கணேசரத்தினம் சபாநாயகம் அவர்களும், உப செயலாளராக திருவாளர் நாகராசா சிவசங்கர் அவர்களும் மற்றும் எட்டு அங்கத்தவ உறுப்பினர்களும் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றனர்.

அத்துடன், உபதலைவராக சிவஸ்ரீ சதாசிவம் அற்புதராசா குருக்கள் அவர்களும், இரண்டு அங்கத்தவ உறுப்பினர்களும் தர்மகர்த்தாக்களினால் தெரிவு செய்யப் பெற்றனர்.

1. திரு. இராசையா சகாதேவன்
2. திரு. தியாகராசா பாலசுப்பிரமணியம்
3. திரு. ஜெகதீஸ்வரன் ஜெயதீபன்
4. திரு. பேரின்பநாதன் ஜெகநாதன்
5. திரு. கந்தசாமி கருணாகரன்
6. திரு. சுப்பிரமணியம் தங்கராசா
7. திரு. இராசதுரை வேந்தன்
8. திரு. பாலசுப்பிரமணியம் ரஞ்சித்குமார்
9. திரு. தெய்வேந்திரம் தேவகுலசிங்கம்
10. செல்வன் நேசராசா சிந்துஜன்

ஆகியோர் திருப்பணிச் சபை நிர்வாக அங்கத்தினர்களாக தெரிவு செய்யப் பெற்றனர். இச் சபையின் நிரந்தர போசகராக ”பணிப்புலம் கிராம உத்தியோகத்தர்” (தற்போது திரு. ராஜ்கண்ணா அவர்கள்) கடமையாற்றுவார்.

திருப்பணிச் சபையானது இந்து கலாச்சார திணைக்களத்தின் விதிகளுளின் பிரகாரம் கலாச்சார திணைக்களத்தில் பதிவு செய்வதில்லை என கலாச்சார பிரிவு உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.

இப் பொதுக் கூட்டத்திற்கு வலிகாமம் - மேற்கு பிரதேச செயலர் அலுவகத்தில் இருந்து பிரதேச செயலர் பிரதிநிதியும், இந்துகலாச்சார உத்தியோகத்தரும், பணிப்புலம் கிராம உத்தியோகத்தரும், இன்னும் பல அரச உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தனர்.

சமுக்கமளித்திருந்த வலி மேற்கு பிரதேச செயலர் அலுவலக அதிகாரிகாரிகள் முகதாவில் ஆலய தர்மகர்த்தாக்களினால் சமர்ப்பிக்கப் பெற்ற யாப்பு பரிசீலனை செய்யப் பெற்று எல்லோருக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப் பெற்று பொதுமக்களின் சம்மதமும் பெறப்பெற்றது.

ஆனால் இத்திருப்பணி சபைக்கான யாப்பு (திருத்தி அமைக்கப்பெற்றது) தர்மகர்த்தாக்களினால் திரும்ப திருத்தம் செய்யப்பெற்று இருந்தமையால் 28.08.2016 ம் திகதி கலாச்சார உத்தியோகத்தர்களை சந்தித்த திருப்பணி சபைத் செயலாளரும், தலைவரும், பொருளாளரும் ஆகியோர்; செயலாளரினால் திருத்தப்பெற்று கொண்டு வந்த யாப்பு விதிகளை கலாச்சார அலுவலக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

அவ் யாப்பு விதிகளில் சில ஏற்கமுடியாது இருப்பதாக கூறி அவற்றை திரும்ப திருத்தம் செய்து அதனை செயலாளரிடம் ஒப்படைத்து அதனை அச்சடித்து அன்றைய தினம் பி. ப. நான்கு மணிக்கு முதல் தம்மிடம் கொண்டுவந்து அதனை உறுதி செய்து ஒப்பம் வாங்குமாறு கூறி அனுப்பினர். அதனை செய்வதாக ஒப்புக் கொண்ட செயலாளர் அதனை வேண்டுமென்றே காலம் கடத்தி செய்யாது நழுவவிட்டுள்ளார்.

அதனால், திருப்பணி அங்கத்தினருடன் இணைந்து திருப்பணியை முன்னெடுக்க ஒத்துழைக்காத செயலாளருடன், இந்துகலாச்சார உத்தியோகத்தினரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாத செயலாளருடன் தாம் செயல்பட முடியாது என்றும்; அத்துடன் உறுதிப் படுத்தப் பெறாத யாப்புடன் திருப்பணிச் சபையில் தாம் பதவி வகிக்க விரும்பவில்லை என கூறி அதில் இருந்து விலகவும் தீர்மானித்துள்ளதாக தலைவர், பொருளாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெறும் பொதுச் திருப்பணிச் சபை உருவாகும் பட்சத்தில் பொதுமக்கள் தம்மை தெரிவு செய்தால் தாம் முழுமூச்சுடன் செயல் பெற்று ஆலய திருப்பணிகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் தெரியப் படுத்தியுள்ளனர்.

செயலாளர் முன்வைத்த யாப்பில் ஆலய தர்மகர்த்தாக்கள் அனைவரினதும் பெயர்கள் பதியப் பெற்று அவர்கள் யாபெரும் ஆலய ஆதீனகர்த்தாகள் என ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்ள மறுத்த கலாச்சார உத்தியோகத்தர்கள்; தர்மகர்த்தாக்கள் இருவர் முதன்மைப் பதவியில் இருப்பதனால் அவை அவசியமற்றவை என கலாச்சார உத்தியோகத்தர்கள் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த செயலாளர் கடைசியில் அதனை மாற்றி கொண்டு வருவதாக கூறியிருந்தார்.

அத்துடன் வங்கியில் இருந்து பணம் மீழப்பெறும்போது பொருளாளர், தலைவர், செயலாளர் ஆகிய மூவரும் ஒப்பமிட வேண்டும் எனவும் பதியப் பெற்று இருந்தது. அதற்கு கலாச்சார உத்தியோகத்தர்கள் நிர்வாக சபை அங்கீகரித்தால் மட்டுமே பணம் மீழப்பெற முடியும் என இருப்பதால்; பொருளாளருடன், தலைவர் அல்லது செயலாளர் ஆகிய இருவரில் ஒருவர் ஒப்பமிட்டால் போதும் என்றும் கூறி அதையும் திருத்தும்படி கூறியுள்ளனர். (செயலாளர் காப்புக் கட்டி மஹோற்சவ விழா செய்யும் போது அவர் ஆலயத்தை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் ”15 தினங்கள்” பணம் மீழப் பெற முடியாது போகும் என்பதனை      தர்மகர்த்தாக்கள்ட்த மறந்து போய்விட்டனர்)

ஆலய பங்குரிமைகாரர்கள் தங்கள் பங்கிற்கு தர்மகர்தாவாக ஒரு பங்காளிக்கு ஒருவரை மட்டுமே நியமிக்கவேண்டும் என இவ் ஆலய பரிபாலன நடைமுறைத் திட்டத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆனால் இங்கு ஒரு பங்காளிக்கு மூன்று பேர் தர்மகர்த்தாக்களாக உள்ளனர். அதில் ஒருவர் தனது பங்குரிமைகள் அனைத்தையும் தனது சகோதரனுக்கு 2002 ல் உறுதி மூலம் எ்ழுதிக் குடுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

(அடித்தும் அப்பம் தீத்த முடியாது என்பது இங்கு நிரூபணமிகின்றது) - விருப்பம் இல்லாத ஒருவருக்கு எதையும் வலோக்காரமாக ஊட்டிவிட முடியாது என்பதற்கு இந் நிகழ்வும் ஒரு உதாரணமாக அமைகின்றது.