Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

ஆலயங்கள்

நயினை நாகபூசணி அம்பாள் மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2016

E-mail Print PDF

கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
-


அபிராமி பட்டர்

நயினாதீவில்; ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க  ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா

காலையடி ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா - 2016 - ஆலய நிகழ்வுகள் இணைப்பு

E-mail Print PDF

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் "சக்தி வேல்" பெற்று, சூரர் குலத்தை கருவறுத்து, தேவர் குழாத்தைக் காத்தருளி்ய குமரன் ஞான வேலாயுதனைத் துதி செய்தால் மலம் அழிந்து, மெய்ஞான அருள் பெற்று முக்திப்பேற்றையும் அடையலாம்.

கனடா ஸ்ரீ அருணாசலேஸ்வரம் - பெரிய சிவன் திருக்கோயில் பிரமோற்சவ (கொடியேற்ற) திருவிழா - 20.05.2016 கொடி

E-mail Print PDF

 

மெய் அடியார்களே!

நிகழும் மங்களகரமான துர்முகி வருஷம் வைகாசித் திங்கள் 7ம்நாள் (20.05.2016) வெள்ளிக்கிழமை பூர்வப சதுர்தசி திதியும் வைகாசி விசாக நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய பகல் 10:00 மணிக்கு உண்ணாமுலை அம்பிகை சமேத அருணாசலேஸ்வர சுவாமிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் பிரமோற்சவ திருவிழா நடைபெற எம்பெருமான் திருவருள் கூடியுள்ளது.

அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலராக காலை, மாலை ஆலயத்திற்கு வருகை தந்து நடைபெறும் திருவிழாகளில் எம்பெருமானை வழிபட்டு மங்கள வாழ்வு பெறுவீர்களாக.

20.05.2016 - கொடியேற்ற திருவிழா

11.06.2016 - சப்பறத் திருவிழா

12.06.2016 - தேர்த் திருவிழா

13.06.2016 - தீர்த்தத் திருவிழா

14.06.2016 - பூங்காவன திருவிழா

15.06.2016 - வைரவ ம

ஆலய நிர்வாகம்

ஸ்காபறோ பெரிய சிவன் ஆலயம்

416-769-7747 / 416-907-7434


கனடா - ஸ்காபறோ சண்முகப்பெருமான் மஹோற்சவ பெருவிழா - 2016

E-mail Print PDF

கனடா-ஸ்காபறோ அருள்மிகு சண்முகநாத சுவாமிகள் தேவஸ்தானம்
மஹோற்சவ பெருவிழா – 2016

சுப்ரமணிய காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக ப்ரசோதயாத்