Tuesday, Nov 13th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

முன்பள்ளி மாணவர் விளையாட்டு விழா - 2010

E-mail Print PDF
காலையடி மறுமலர்ச்சி மன்ற வளாகத்தில் 25.07.2010 அன்று ஆரம்பமான முன்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான
விளையாட்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற சில படங்கள். (படங்கள் அனுப்பிவைத்தவர் ஜெ. நிவர்சன் - காலையடி)

kalai
Read more...

ஆறுமுகவித்தியாலய நூற்றாண்டு விழா

E-mail Print PDF

பணிப்புலம் மக்களின் வாழ்த்து மடல்

http://amman.fatcow.com/panippulam/images/019saraswathi.jpg

இவ் வருடம் தனது முதலாவது நூற்றாண்டு நிறைவை பெருவிழாவாக கொண்டாடும்

"ஆறுமுக வித்தியாலயம்" மேன்மேலும் வளர்ச்சி பெற்று, இவ் வையகம் நிலைக்கும் வரை

செயல் பெற்று; சைவமும், தமிழும் தழைத்தோங்கி நின்று

எமது மண்ணில் பல மேதைகளை உருவாக்க

எமது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

“வாழ்க, வளர்க பல நூற்றாண்டுகள் பேரோடும், புகழோடும்”.

இச் சந்தற்பத்தில் நாம்; எமது மக்களின் அன்றைய தேவையை உணர்ந்து

(சைவமும், தமிழும் மழுங்கடிக்கப்பட்டு; ஆங்கிலமும், கிறிஸ்தவமும் திணிக்கப்பட்ட காலத்தில்)

எம்மக்களுக்கென இந்த "ஆறுமுக வித்தியாசாலை" என்னும்அரும் பெரும் பொக்கிசத்தை

பெற்றுத் தந்து தமிழுக்கும், சைவத்திற்கும் உயிர் ஊட்டிய

"இந்து சமய அபிவிருத்திச் சங்கத்தினர்க்கும்"; அரச கல்வித் திணைக்களத்திற்கும்

எமது மக்களின் உயர்ச்சிக்காகவும், பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த;

அதிபர்கள், ஆசியர்கள், ஆசிரியைகள், தொண்டர்கள் அனைவருக்கும்

எமது மக்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்

தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

பணிப்புலம்.கொம்
பணிப்புலம் மக்களின் இணையத்தளம்
Read more...

அம்பாள் சனசமூக நிலையமும் நாமும்

E-mail Print PDF

அம்பாள் சனசமூக நிலையம்
கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மந்தகதியில் இயங்கி வந்த அம்பாள் சனசமூக நிலையம் தற்பொழுது துரிதகதியில் இயங்க ஆரம்பித்துள்ளது. அதனை ஊர் மக்களுக்கு சேவை செய்ய வைப்பதற்கான எல்லா முயற்சிகளும்  எம்மால் முன்னெடுக்கப்பெற்று வருகின்றன.

Read more...

மறுமலர்ச்சி மன்றம் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

காலையடி மறுமலர்ச்சி மன்றம்

marumalachchi

Read more...

அ. மி. (அமெரிக்கன் மிஷன்) தமிழ் கலவன் பாடசாலை - காலையடி : தோற்றமும் அதன் வளர்ச்சியும்

E-mail Print PDF

பண்ணாகம் வடக்கு (பணிப்புலம்) அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

ஆக்கம்: திரு. சி. கந்தையா அவர்கள் (கனடா)
இளைப்பாறிய அதிபர், அ.மி.தமிழ் கலவன் பாடசாலை (காலையடி)

ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் யாழ் குடாநாட்டின் வலிகாமம்-மேற்கு பிரிவில், சங்கானை கோவில்பற்று ஒரு பரந்த பிரதேசமாக அமைந்திருந்தது. அதன் மேற்குப் பகுதியில் இருந்த சுழிபுரம் இறையாட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பண்ணாகம் என்னும் கிராமத்துடன் அதன் வடக்கே இருந்த பணிப்புலம் என்ற சிற்றூரும் இணைக்கப்பட்டு இருந்தது. அதனால் பணிப்புலம் என்ற சிற்றூர் பண்ணாகம் - வடக்கு என்ற பெயரால் அப்போது அழைக்கப்பட்டது.

அமெரிக்கன் மிஷனரி சபையினர் தங்கள் மொழியாகிய ஆங்கிலத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் இலங்கைமுழுவதும் பரப்புவதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மும்முரமாக செயல்பட்டனர். அதனை நடைமுறைப் படுத்தும் நோக்கில் பல பாடசாலைகளையும், கல்லூரிகளையும் ஆரம்பித்தனர். அதன் அடிப்படையில் 1872 ம் ஆண்டு ஜனவரி மாதம் பண்ணாகம்-வடக்கிலும் (பணிப்புலத்திலும்) ஓர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு பண்ணாகம்-வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என பெயர் சூட்டினார்கள். ஆரம்ப காலத்தில் இப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்றன. நாளடைவில் எட்டம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்றன.


அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அனைவரும் சைவசமயத்தவர்கள். அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றும் நோக்கிலேயே இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக வேலையற்றிருந்த படித்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினால் ஆசிரியர் வேலை தருவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் பலர் சைவசமயத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினார்கள். அவர்களுக்கு மத போதனையுடன் ஆசிரிய பயிற்சியும் வழங்கப்பட்டு ஆசிரியர்களாக நியமித்தார்கள்.

இப் பாடசாலை அமெரிக்கன் மிஷனறி சபையினரால் நிர்வகிக்கப்பட்டு வந்ததுடன் ஆசிரியர்களின் சம்பள கொடுப்பனவுகள் யாவும் அவர்களால் வழங்கப்பட்டது. பண செல்வாக்கினாலும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகளினாலும் சைவ மதத்தவர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஆங்கில மொழி திணிப்பிலும் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.

இம் மத மாற்றத்தைக் கண்டு விழிப்புணர்வு கொண்ட சைவ அறிஞர்கள் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் திரு. இராசரத்தினம் (சட்டத்தரணி) அவர்களை பிரதம இயக்குனராக கொண்ட "இந்து சமய அபிவிருத்திச் சங்கம்" என்ற சபையை ஆரம்பித்து அதனை அரசாங்கத்தில் பதிவு செய்து இயங்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு கிறிஸ்தவ பாடசாலைக்கும் எதிராக "சைவ தமிழ் ஆங்கில பாடசாலைகளை" ஸ்தாபித்தனர். அதன் பயனாக எமது கிராமத்திலும் கிறிஸ்தவ பாடசாலையாக இயங்கி வந்த பண்ணாகம்-வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் மேற்கே சுழிபுரம் - ஆறுமுக வித்தியாசாலையும் கிழக்கே பண்டத்தரிப்பு - இந்துக்கல்லூரியும் தெற்கே - பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையும் உதயமானது. படித்து வேலையற்றிருந்தோர் குறைந்தது இருபத்தைந்து மாணவர்களை புதிய பாடசாலையில் சேர்க்குமிடத்து அவர்களின் கல்வித் தகைமைக்கு ஏற்ப ஆசிரியர் பதவிகளும் வழங்கப்பட்டன.

காலப்போக்கில் எல்லாப் பாடசாலைகளும் அரசாங்கத்தினால் பொறுப் பேற்க்கப்பட்ட பொழுது அமெரிக்கன் மிஷனறி சபையினரின் பொறுப்பில் இருந்த இப் பாடசாலையும் (1962 ல்) பொறுப் பேற்கப்பட்டு கல்வித் திணைகளத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இப் பாடசாலையின்ஆரம்ப காலத்தில் பல வெளியூர் பிரமுகர்கள் அதிபர்களாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காலப்போக்கில் உள்ளூர் பிரமுகர்களுக்கும் அதிபர்கள் ஆகும் வாய்ப்பு கிட்டியது. வெளியூர் அதிபர்களுள் தெல்லிப்பளையச் சேர்ந்த மதிப்பிற்குரிய திரு. அ. கார்த்திகேசு அவர்கள் எமது கிராம மக்களினதும் மாணவர்களினதும் சக ஆசிரியர்களினதும் பெரு மதிப்பைப் பெற்ற அதிபராக விளங்கினார்.

இப் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த அதிபர் திரு. அ. கார்த்திகேசு அவர்களைப் பற்றி கூறாது இருக்க முடியாது. அவர் தெல்லிப்பளையச் சேர்ந்தவராக இருந்த போதிலும் எமது ஊரையும் தமது ஊர்போல் மதித்து எங்கள் ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காக உணர்வுபூர்வமாக உழைத்த பெருமகான். அவருடைய காலத்தில்தான் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் தொகையில் அதிகரிப்பும், கல்வியில் பிரகாசமும் தோன்ற ஆரம்பித்தது. இவற்றிற்கு முக்கிய காரணம்; அவரின் தனிப்பட்ட முயற்சியே ஆகும்.

மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் கொடுக்க தவறிய சந்தற்பங்களில் அவர்களின் வீட்டிற்குச் சென்று காரணம் வினவி அழைத்து வருவார். அத்துடன் வகுப்பில் பிந்தங்கிய மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடாத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவர்களை கல்வியில் சிறந்தவ்ர்களாக்கி, பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமையைத் சேர்த்த அந்தப் பெரியவவருக்கு எமது ஊர் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

திருவாளர் அ. கார்த்திகேசு அவர்கள் ஓய்வு பெற அப்பாடசாலையில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று உதவி ஆசிரியராக கடமையாற்றி வந்த எனது அண்ணராகிய திரு.சி. செல்வத்துரை அவர்கள் தகமை அடிப்படையில் (இது வரை காலமும் கிறிஸ்தவராக உள்ள ஒருவருக்கே அப் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது) அப்பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பெற்றார். திரு. சி. செல்வத்துரை அவர்கள் ஓய்வுபெற; ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று அப்பாடசாலையில் உதவி ஆசிரியராக கடமையாற்றிய சி. கந்தையா ஆகிய எனக்கு அதிபராகும் வாய்ப்பு கிட்டியது.

நானும் சேவையில் ஓய்வு பெற; இப் பாடசாலையில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று உதவி ஆசிரியர்களாக கடமையாற்றிய திரு. து. மார்க்கண்டு அவர்களும், அவரின் சேவை ஓய்வை அடுத்து திரு.வ. சுப்பிரமணியம் அவர்களும் அதிபர்களாக பதவியைப் பொறுப் பேற்றனர்.

அதிபர் அ. கார்த்திகேசு அவர்கள் காலத்தில் வளர்ச்சி பெற்ற இப் பாடசாலை எமது காலத்தில் ஊர்ப் பெரியவர்களும், உதவி ஆசிரியர்களாக கடமை புரிந்த திரு. விசுவலிங்கம், திருமதி. சிவபாக்கியம் ஏகாம்பரம் ஆகியவர்களும் எம்மோடு இணைந்து செய்த பெருமுயற்ச்சிகளால் புதிய கட்டிடம் அமைக்கப்பெற்று கல்வியில் உயர்ச்சியும், வளர்ச்சியும் பெற்றது.

பல அறிஞர்களையும், பல்துறை கல்விமான்களையும் உருவாக்கி எமது கிராமத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இப்பாடசாலையில்; அதன் வளர்ச்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் உழைத்த அதிபர்களுள் நானும் ஒருவனாக இருந்து ஊருக்கும், ஊர்மக்களுக்கும் சேவை செய்ய கிடைத்த அரும் வாய்பினை பெரும் பேறாக எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி

சி. கந்தையா (ஓய்வு பெற்ற அதிபர்)

காலையடி - தெற்கு
பண்டத்தரிப்பு

03.01.2009

1876.04.02.14

Page 21 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்