Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

ஆங்கிலம், கணினி இலவச வகுப்புகள் ஆரம்பம் - மறுமலர்ச்சி மன்றம் காலையடி

E-mail Print PDF

ஊரில் வாழ்ந்து வரும் எம் உறவுகளின் அறிவாற்றலை மேம்படுத்தி அவர்களை நவீன (விஞ்ஞான தொழில் நுட்ப கணினி) உலகில் பிரகாசிக்க செய்யும் நோக்கோடு ”மறுமலர்ச்சி மன்றம்” முன்னெடுத்துள்ள கணினி, ஆங்கிலம் ஆகியவற்றிற்கான கற்கைநெறிகள் மிக விரைவில் மறுமலர்ச்சி மன்ற வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நவீன விஞ்ஞான உலகில் சஞ்சரிப்பதற்கும், உயர்கல்வி பெறுவதற்கும் இரு கண்களாக அமைந்துள்ள ஆங்கில அறிவும், கணினி அறிவும் கட்டாயமாகின்றது. இவற்றை எம்மூர் இளையோருக்கும், சிறார்க்கும் பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பெற உள்ள கற்கைநேறியை இலவசமாக பெற்றுக் கொள்ள மன்ற நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ளுங்கள்

மறுமலர்ச்சிமன்றம் - காலையடி

 

தகவல்: இரத்தினராசா அவர்கள்

 

 

 

 

 

 

 


எமது ஊர் நூலகங்களுக்குப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி தந்தையின் பிறந்த நாளைச் சிறப்பித்த பிள்ளைகள்.

E-mail Print PDF

திரு கனகசபை பாஸ்கரன் அவர்களின் 50 ஆவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முகமாக அவரின் பிள்ளைகள் எமது கிராமத்தில் அமைந்துள்ள பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நூலகம் மற்றும் மறுமலர்ச்சி மன்ற நூலகம் ஆகியவற்றிற்கு ரூபா 10 000 பெறுமதியான நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்குத் தயார் படுத்த உதவும் கடந்த கால வினாவிடை நூல்கள் இவ் அன்பளிப்புகளில் விஷேசமாக  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் அரும்பெரும் கைங்கரியத்தை செய்ததன் மூலம்; அப் புத்தகங்களை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு சந்தற்பத்திலும் அவர்களின் தந்தையாரான திரு. கனகசபை பாஸ்கரன் அவர்களுக்கு தமது நன்றிகளையும், வாழ்த்துகளையும் செலுத்துவதாகவே அமைந்துள்ளது. தந்தையின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிள்ளைகள் நடக்கும் இக் கால கட்டத்தில் தந்தைக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுக்கும் நற் செயல்களைச் செய்யும் பிள்ளைகளை நாமும் பின்பற்றுவோம். அவர்களின் செய்கையை போற்றுவோம்.

”தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”   குறள்


வழங்கப்பெற்ற நூல்களின் ஒரு தொகுதியினை பார்வையிட இங்கே அழுத்துக

தகவல்: சபா தனு அவர்கள்

50வது பிறந்தநாளை கொண்டாடும் கனகசபை பாஸ்கரன் அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்

”வாழ்க பல்லாண்டு சீரோடும் சிறப்போடும்”

பணிப்புலம்.கொம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதிய பரிணாமம்! புதிய பரிமாணம்! புதிய இணையத்துடன் புத்தாண்டில் புது மலர்ச்சி பெறும் மறுமலர்ச்சி மன்றம்

E-mail Print PDFஇனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டான புதிய ஜய வருடம் எமது கிராமத்திற்கும் மக்களுக்கும் மறுமலர்ச்சி மன்றத்திற்கும் மேலும் பலசிறப்புக்களையும் மேன்மைகளையும் ஏற்படுத்தும் என்ற மகிழ்வான செய்தியை இத்தருணத்தில் பகிர்ந்துகொள்வதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற உயரிய கொள்கை வழியில் மறுமலர்ச்சி மன்றம் உருவாக்கப்பட்டு 41 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எமது மறுமலர்ச்சி மன்றம் இந்த ஆண்டில் புலம்பெயர் எமது கிராமத்து உறவுகளின் உதவியுடன் மேலும் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்துவதாக  அமையப்போவது இந்த ஜய வருடத்தின் மகிமையாக உள்ளது.

இந்த இனிய காலைப்பொழுதில் நாம் எமது மன்றத்தின் பாரிய சமூக மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கு அதிக அளவில் நிதி அனுசரணை தந்த அமரர் தியாகராசா குடும்பத்தினருக்கும் அமரர் விசு க விமலன் குடும்பத்தினருக்கும் எமது நன்றியினை தெரிவிப்பதோடு எமது இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து நிதி நல்கும் அனைத்து புலம்பெயர் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதில் உளம் பூரிக்கின்றோம்.

விரைந்து வளர்ந்து வரும் எமது வழிபாட்டுத் தலத்தின் குடமுழுக்கு வைபவம் சிறப்புற நடைபெற இறைசக்தியை வேண்டிக்கொண்டு,இத்தருணத்தில் மன்ற உறுப்பினர்கள், கிராமத்து உறவுகள் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் அகம் மகிழ்கின்றோம்.
-மன்ற நிர்வாகம்-

காலையடி - மறுமலர்ச்சி மன்றம் உத்தியோக பூர்வமாக http://www.marumalarchy.org/ என்ற முகவரியில் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி மன்றத்தின் அறிவிப்புக்கள், செய்திகள், அறிக்கைகள், தகவல்களை வெளியிடுவதற்கான உத்தியோக பூர்வமான இணையத்தளம் இப் புதுவருட நன்னாளில் இருந்து பரீட்சார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

வெகு விரைவில் இதன் உருவாக்கச் செயற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறப்பானதொரு இணையத்தளமாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது கிராமத்தின் அபிவிருத்தியில் மைல் கல்லாக அமைகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் மாபெரும் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு மேலும் அணிசேர்க்கும் வகையில் இவ் இணையத்தளம் எமது கிராமத்தின் அனைத்து மக்களுக்குமிடையில் உறவுப் பாலமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்ற இணையத்தளத்திற்குச் செல்ல
http://www.marumalarchy.org/


-மன்ற நிர்வாகம்-

தகவல்: சபா தனு

சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வளர்ந்து வரும் வளங்கள் - காலையடி மறுமலர்ச்சி மன்றம் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

காலையடி - மறுமலர்ச்சி மன்றம் எம்மூர் மக்களை (சிறார்கள், இளையோர், முதியோர்) முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் நோக்கோடு பாரிய அபிவிருத்தித் திட்டத்தினை திட்டமிட்டு அதனை நிறைவேற்றுவதற்கான வளங்களை அமைத்து வருவது யாபெரும் அறிந்ததே.

ஆன்மீகமும், விஞ்ஞானமும் (கல்வியறிவும்) இரு கண்களாக விளங்குகின்ற இவ் உலகை வெற்றி கொள்ள ஆலயமும், கல்விச்சாலைகளும் அவசியம் என கருதி ஆலயமும், எல்லா தரத்தினருக்குமான அறிவுச் சாலைகளும் அமைத்து எம்மூர் மக்களை சிறந்த அறிவாளிகளாகவும், இறை பக்தி உள்ளவர்களாகவும் ஆக்குவதற்கு முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டத்தினை அன்போடு வரவேற்கின்றோம். மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தினருக்கு நன்றி கூறுகின்றோம்.

பணிப்புலம்.கொம்

மறுமலர்ச்சி மன்றம் வளப்படுத்தும் வளங்களின்  வளர்ச்சியை பார்வையிட இங்கே அழுத்துக

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக செயல்படாது ஒற்றுமையைப் பேணி ஊரை வளர்த்தெடுப்போம் - பணிப்புலம் - காலையடி இளைஞர் நலன்புரிச் சங்கம்

E-mail Print PDF

தகவல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 


இணையம் கண்டுபிடிக்கப்பட்டு இன்று 25 ஆண்டுகள் ஆகின்றன

E-mail Print PDF


இணைய சுதந்திரம்: உரிமைப் பிரகடனம் தேவை என்கிறார் நிறுவனர்  இணைய சுதந்திரத்துக்குக் குரல் கொடுக்கிறார் நிறுவனர் லீ.

இணையம் கண்டுபிடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையும் இன்று, இணையத்தைக் கண்டுபிடித்தவரான, டிம் பெர்னர்ஸ் லீ இணைய சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு உலகளாவிய ஒரு உரிமைகள் பிரகடனம் தேவை என்று கூறியிருக்கிறார்.

இணையப் பயன்பாட்டாளர்கள், அரசாங்களின் கண்காணிப்புகளிலும், பெரு வணிக நிறுவனங்களின் தாக்கத்திலும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

ஒரு சுதந்திரமான இணையம் இல்லாவிட்டால், திறந்த, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாங்கம் சாத்தியமாகாது என்று அவர் எச்சரித்தார்.

இணையம் வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால், இந்தக் கொள்கைகள் பாதுகாக்கப்படுவது அவசியம் என்று அவர் கூறினார்.

Page 5 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்