Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

காலையடி - மறுமலர்ச்சி மன்றம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான வளங்கள் சீர்அமைப்பு - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

காலையடி - மறுமலர்ச்சி மன்றம் எம்மூர் மக்களை (சிறார்கள், இளையோர், முதியோர்) முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் நோக்கோடு பாரிய அபிவிருத்தித் திட்டத்தினை திட்டமிட்டு அதனை நிறைவேற்றுவதற்கான வளங்களை அமைத்து வருவது யாபெரும் அறிந்ததே.

ஆன்மீகமும், விஞ்ஞானமும் (கல்வியறிவும்) இரு கண்களாக விளங்குகின்ற இவ் உலகை வெற்றி கொள்ள ஆலயமும், கல்விச்சாலைகளும் அவசியம் என கருதி ஆலயமும், எல்லா தரத்தினருக்குமான அறிவுச் சாலைகளும் அமைத்து எம்மூர் மக்களை சிறந்த அறிவாளிகளாகவும், இறை பக்தி உள்ளவர்களாகவும் ஆக்குவதற்கு முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டத்தினை அன்போடு வரவேற்கின்றோம். மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தினருக்கு நன்றி கூறுகின்றோம்.

பணிப்புலம்.கொம்

07.03.2014 வரை  நிறைவு பெற்ற வளங்களின் தோற்றத்தினைக் காண இங்கே அழுத்துக

கட்டிடத் தொகுதியின் தற்போதைய நிறைவைக் காண இங்கே அழுத்து

படங்கள்: அழ சந்திரகாசன் அவர்கள்


யா/பண்ணாகம் வடக்கு (பணிப்புலம்) அ. மி. த. க. பாடசாலை - அறிவாலைய ஆண்டொன்றின் நிறைவு நினைவுகள் - ஆவணப் பட வீடியோ இணைப்பு.

E-mail Print PDF

நோர்வே - பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் யாழ்/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையில் நூலகம் ஆரம்பிக்கப்பெற்று ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் மாணவர்களிடையே தோன்றியுள்ள மறுமலர்ச்சியை எடுத்துக் காட்டும் ஆவணப் படம்

தகவல்: சபா தனு அவர்கள்

பார்வையிட இங்கே அழுத்துக

அறிவாலயம் எனும் நூலகம் இல்லாத பாடசாலை சமையலறை இல்லாத வீட்டிற்கு ஒப்பானது. ஒவ்வொருவரும் தாம் விரும்பிய ருசியிலே நூல்களை தெரிவு செய்து தம்அறிவைப் போஷிக்கும் இடமாக அறிவகம் திகழ்கின்றது.

நூற்றாண்டுக்கு மேலாக நூலகம் இன்றி இயங்கிய இப் பாடசாலையின் குறையினை உணர்ந்து அறிவை போஷிக்கும் இவ் அறிவகத்தை அமைத்துக் கொடுத்த நோர்வே-பண் தமிழ் கலை பண்பாட்டு கழகத்தாரின் அதீத செயலை பாராட்டுகின்றோம்.

ஒரு நாட்டின் மதிப்பு, அங்கு வாழும் கற்றோரை வைத்தே மதிப்பிடப்பெறுகின்றது. அதுபோல்; ஒரு ஊரின் மதிப்பும் அங்கு வாழும் மக்களின் கல்வி அறிவை வைத்தே கணித்துக் கொள்கின்றார்கள்.

எமக்கு கல்வி, அறிவை பெற்றுத்தரும் பாடசாலைகள் வளம் மிக்கதாக அமையும்போது, அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் தரமும் உயர்கின்றது. பள்ளிப் பாடங்களை மட்டும் படிப்பதால் மாணவர்கள் பூரண அறிவு பெற்றுவிட முடியாது. அதனால் அவர்கள் ”கண்டதைக் கற்று அறிவாளிகளாக்கும் அறிவகம் என்னும் நூலகம்” அவசியமாகின்றது. 

ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டும், வீண்வம்பு வளர்த்துக் கொண்டும் இருக்கும் இளம் சந்ததியினரிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டி அறிவை வளர்த்து பூரண மனிதர்களாக்கும் தொண்டில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம்.

பணிப்புலம்.கொம்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். குறள்

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

இதனை வெளிப்படுத்தும் ரு கவிதை வாசிக்க இங்கே அழுத்துக


எதிர்கால சந்ததியினரின் கல்வி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க “கல்விக் குழு” நியமனம் - காலையடி மறுமலர்ச்சி மன்றம்

E-mail Print PDFஎமது கிராமத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டின் மைல் கல்லாக அமைகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்ற நிலையில்; அப் பௌதீக வளங்கள் யாவும் எமது கிராமத்தின் (பணிப்புலம், செருக்கப்புலம், கலையடி, காலையடி தெற்கு, கலட்டி, குஞ்சன் கலட்டி, சாந்தை, செட்டிகுறிச்சி ஆகிய இடங்கள் உள்ளடங்கலாக) எதிர்கால அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், முதல் கட்டமாக;

எதிர்கால சந்ததியினரின் கல்வி அபிவிருத்திக்கான திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்தவும், அதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதற்காகவும்; எமது கிராமத்தின் கல்விமான்களை உள்ளடக்கிய ”கல்விக் குழு” ஒன்று கடந்த 5 ஆம் திகதி மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற விசேட பொதுக்கூட்டத்தின்போது உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இக் “கல்விக் குழு” ஆலோசகராக திரு சு.சுந்தரசிவம்(பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், தலைவராக திரு N. சிவசுப்பிரமணியம் (அதிபர்) அவர்களும், குழு உறுப்பினர்களாக திரு சு. திருக்கேதீஸ்வரன் (அதிபர்) அவர்களும்,  திருமதி. யா. இந்துமதி M.Ed (ஆசிரியர்) அவர்களும், திரு கோ. சுதாகரன் B.Sc அவர்களும், திருமதி. நி. நிரூபா B.A அவர்களும் செயற்படவுள்ளனர்.

மறுமலர்ச்சி மன்றத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற பாலர் கல்வி, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட கல்வி, க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தயார் படுத்துவதற்கான விசேட தொடர் கருத்தரங்குகள் மற்றும் மாலை நேர வகுப்புகள் அனைத்தும் எதிர் காலத்தில் இக்கல்விக் குழுவினராலேயே முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமலர்ச்சி மன்றத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளும், ஆதரவும் வழங்க விரும்பும் புலம் வாழ், புலம்பெயர் வாழ் எம்மூர் மக்கள் கல்விக் குழுவினருடனோ அல்லது மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்துடனோ தொடர்பு கொள்ளவும்.

தகவல்: சபா தனு அவர்கள்

மறுமலர்ச்சி மன்றம் - காலையடி

காலையடி ஞான வேல் விளையாட்டுக் கழகமும் காலையடி இணையம் - உதவும்கரங்களும் இணைந்து நடாத்திய தைப் பொங்கல் கலை விழா –படங்கள் இணைப்பு

E-mail Print PDF

இப் பூவுலகில் நாம் உயிர்வாழ சாதகமான சூழ்நிலையை வழங்கும் இயற்கைக்கு உலகில் வாழும் எந்தச் சமூகத்தினரும் நன்றி செலுத்தாது இருக்க; தமிழர் சமூகம் மட்டுமே சங்க காலம் தொட்டு இயற்கைக்கு விருந்து படைத்து நன்றி கூறும் நிகழ்வாக “தமிழர் பண்டிகையான தைப்பொங்கல்” விழாவை கொண்டாடி வருகின்றது.

இந் நன்நாளில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் முன்னெடுக்கப் பெற்று, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு அழிந்து போகாது பேணிக் காப்பாற்றுவதற்காக வளர்ந்து வரும் இளம் சமூகத்தினர் மத்தியில் புத்துயிர் ஊட்டப் பெற்று பல கலை விழாக்கள், விளையாட்டும் போட்டிகள் நடாத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

கடந்த 14.01.2014 அன்று தைப் பொங்கல் தினம் மாலை காலையடி ஞான வேலாயுதர் ஆலய கலாச்சார மண்டபத்தில் தமிழர்களின் கலை உணவுகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வாக ”முத்தமிழ்” என போற்றப் பெறும் இயல், இசை, நாடகம்  நிகழ்வுகளை எமது சிறார்கள் மூலம் மிகவும் சிறப்பாக மேடையேற்றிய காலையடி ஞானவேல் விளையாட்டுக் கழகத்தினருக்கும், காலையடி இணையம்-உதவும் கரங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட காலையடி ஞான வேலாயுதர் ஆலைய பிரதமகுரு அவர்கள் மங்கள விளக்கேற்யியதுடன் அவரைத் தொடர்ந்து ஆலைய செயலாளர் திரு செ. திருநாவுக்கரசு அவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமான திரு .த.குணத்திலகம் அவர்களும், எம்மூர் பெரியார் திரு மு .சபாரத்தினம் அவர்களும், கழகத் தலைவர் திரு. ரஞ்சித் குமார் அவர்களும் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.  

அதனைத் தொடர்ந்து தேவார பாராயணம் ஓதப் பெற்று இறைவணக்கத்துடன் பிரதம குருக்கள் ஐயா அவர்களின் ஆசியுரை நிகழ்த்தப் பெற்று கலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இலைமறை காய்களாக இருக்கும் எம் ஊர் சிறார்களின் திறமைகளை வெளிப்படுத்த அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, ஊக்கிவித்து கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றி பரிசில்கள் வழங்கி அவர்களை ஊக்குவித்த கழகத்தினரினதும், இணையத்தினதும் சேவை போற்றுகின்றோம். அத்துடன் தைப் பொங்கல் தினத்தை சிறப்பிக்க கரபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை நிகழ்த்தி இவ் விழாவில் பரிசில்கள் வழங்கி ஊக்குவித்தமை போற்றுதற்குரியது.

இவ் விழா கழகத் தலைவர் திரு .ரஞ்சித் குமார் அவர்களின் நன்றி உரையுடன் சிறப்புற நிறைவுபெற்றது

நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

(எமக்கு கிடைத்த படங்கள் சிறிய அளவினதாக இருந்தமையால் படங்கள் சிறியனவாக தோற்றமளிக்கின்றன)

 

நன்றி

கட்டுமானப் பணிகள் யாவும் துரிதகதியில் நிறைவேற தங்களாலான நிதியுதவியை உவந்தளியுங்கள் - மறுமலர்ச்சி மன்றம் - காலையடி

E-mail Print PDF

பாசத்துக்குரிய புலம்பெயர்வாழ் உறவுகளே !!

கட்டுமானப் பணிகள் யாவும் துரிதகதியில் நிறைவேற எம் ஊர் மக்கள் அனைவரையும் தங்களால் ஆன நிதியுதவியை உவந்தளித்து ஊரின் வளர்ச்சிக்கு உதவ முன்வருமாறு பணிவாக, அன்பாக வேண்டுகிறோம்.

எம் ஊர் மக்கள் அனைவரும் ஊரின் வளர்ச்சியில் பார்வையாளராக இல்லாது பங்காளிகளாக மாறுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம்.

ஒவ்வொருவரும் இது எனது ஊரின் வளர்ச்சிக்கான பணி, எனது கடமை ,எனது உரிமையும் என்று எண்ணி ஊர்மகன் என்ற உணர்வோடு ஊரின் வளர்ச்சிக்கு உதவ முன்வாருங்கள்.

கட்டிட பணிகளின் தற்போதைய நிலை பார்வையிட இங்கே அழுத்துக

தகவல்: ரத்தினராஜா

மறுமலர்ச்சி மன்றம் - காலையடி

தை பொங்கல் தினத்தை இன்பம் பொங்கும் திருநாளாக கொண்டாட - கரபந்தாட்ட போட்டியும் கலை நிகழ்வும் - அழைப்பிதழ் - 14.01.2014 - (முதல் நாள் சுற்றுப் போட்டி படங்கள் இணைப்பு)

E-mail Print PDF

எதிர் வரும் தைப் பொங்கல் தினத்தை மகிழ்வோடு கொண்டாட இடம் பெறவுள்ள இவ் நிகழ்வுகளில் எம்மூர் மக்கள் அனைவரையும் பங்கு பற்றி சிறப்பித்து இன்புறும் வண்ணம் ”காலையடி ஞானவேல் விளையாட்டுக் கழகமும்”, ”காலையடி உதவும் கரங்களும்” அன்புடன் அழைக்கின்றன.

கரபந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதல் போட்டியை பார்வையிட இங்கே அழுத்துக

ஞானவேல் விளையாட்டுக் கழகம் - காலையடி உதவும் கரங்கள்

தகவல்: முரளி அவர்கள்

Page 6 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்