Tuesday, Nov 13th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

சிறந்த தலைமைத்துவ திறன் கொண்ட சனசமூக நிலையமாக வலி-மேற்கு பிரதேச சபையின் கௌரவ விருது பெறும் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்

E-mail Print PDF

2013 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட 74 சனசமூக நிலையங்களில் சிறந்த தலைமைத்துவம் முகாமைத்துவ திறன் கொண்ட சனசமூக நிலையமாக பணிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம் தெரிவு செய்யப்பெற்றுள்ளது

30.12.2013 அன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் திருமதி. ந. ஐங்கரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அம்பாள் சனசமூக நிலைய செயலாளர் திரு.ஜெ.ஜெயகாந்தன் அவர்கள் அதற்கான விருதினை வடமாகான உள்ளுராச்சி மன்ற தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.



தகவல்: சந்திரன்

புலம் பெயர்ந்து வாழும் எமது ஊர் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

E-mail Print PDF



பாசத்துக்குரிய புலம்பெயர்வாழ் உறவுகளே !!!!

எமது ஊரின் வளர்ச்சிக்கென மறுமலர்ச்சிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற பாரிய கட்டுமானப்பணிகளை இணையங்கள் மூலம் எல்லோரும் அறிந்துஇருப்பீர்கள். பணிகள் யாவும் துரிதகதியில் நிறைவேற ஊரவர் அனைவரையும் தங்களால் ஆன நிதியுதவியை ஊரின் வளர்ச்சிக்கு உவந்தளித்து உதவுமாறு பணிவாக எல்லோரையும் அன்பாக வேண்டுகிறோம்.
எல்லோரும் எங்கள் ஊரின் வளர்ச்சியில் பார்வையாளராக இல்லாது பங்காளிகளாக மாறுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம். ஊரவர் ஒவ்வொருவரும் இது எனது ஊரின் வளர்ச்ச்சிக்கான பணி, எனது கடமையும் ,எனது உரிமையும் என்று எண்ணி ஊரவன் என்ற உணர்வோடு ஊரின் வளர்ச்சிக்கு உதவ முன்வாருங்கள்.


நிதிசேகரிப்போர் விபரங்கள்

திரு த.தனகோபால் நோர்வே     004721398138
திரு க.வேல்முருகன் இத்தாலி    00390916117974
திரு சு.நகுலேஸ்வரன் கொலண்ட்  0031464398678
திரு பொ. பாலசுப்பிரமணியம் கனடா 0019054729615
திரு க.விக்கினேஸ்வரன் சுவிஸ்    0041319810649
திரு பா.நிர்மலதாஸ் பிரான்ஸ்      0033753282167
திரு சாந்தினி சிவச்செல்வம் பிரிட்டன் 00442087738933
திரு அ.நிர்மலதாஸ் சுவீடன்        004685998727
திரு சு. இரத்தினராஜா டென்மார்க்   004574428927
திரு நாகேஸ்வரி தவச்செல்வம்      00495212704935
திரு கு. சுதாகரன் ஜேர்மனி          00495213638679
திரு ந. திருக்கேதீஸ்வரன் ஜேர்மனி.  00492381163154
திரு கோணேஸ், ஜேர்மனி.           00495212706513
திரு பா.பாலகுமார் ஜேர்மனி.        00495205237180
திரு லி.சசிகரன் ஜேர்மனி           00495219863686

ஏற்கனவே பொதுவாக மன்ற நிர்மாணப்பணிகளுக்கு டென்மார்க்கிலுள்ள எம்மவர்கள் அளித்த நிதி விபரம்!!!!

திரு மா. சிவசுப்பிரமணியம் குடும்பம் 5000 dkr
திரு சு. இரத்தினராஜா குடும்பம்      5000 dkr
திரு ஆ. யோகராசா குடும்பம்         1000 dkr
திரு கு.பாஸ்கரன் குடும்பம்           1000 dkr
திரு . க. தனேஸ்வரன் குடும்பம்      1000 dkr
திரு ப.சதீஸ் குடும்பம்                 500dkr
திரு . தேவபாலன் குடும்பம்            500 dkr
திரு .ஆ.நாகராசா குடும்பம்             500 dkr
திரு வீ. நாகேந்திரம் குடும்பம்          500 dkr
திரு ம. சந்திரன் குடும்பம்              500 dkr
திரு இ. பத்மநாதன் குடும்பம்           500 dkr
திரு மு. பேரின்பம் குடும்பம்            500 dkr
திரு இ. திலீபன் குடும்பம்               750dkr
திரு ஆ.சிறீதரன் குடும்பம்               500 dkr
ஊர் உறவு ஒருவர்                       500 dkr

இதுவரையில் பங்களிக்காத புலம் பெயர் வாழ் எமது ஊர் உறவுகள் கட்டுமானப் பணிகளுக்கு எதிர்வரும் காலங்களில் பங்களிப்பார்கள் என நம்புகிறோம்."

தகவல்: சு. இரத்தினராசா அவர்கள்

காலையடி ஞானவேலாயுதசுவாமி ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை 10.05.2011 - 01.06.2013

E-mail Print PDF


காலையடி அருள்மிகு ஞானவேலாதுத சுவாமி தேவஸ்தான திருப்பணி வரவு செலவு அறிக்கை பரிபாலன சபையினரால் வெளியிடப்பெற்றுள்ளது

திருப்பணி வரவு செலவு அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்துக

 

 


மறுமலர்ச்சி மன்றத்தின் மாபெரும் அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் ஆரம்பம் - முதலாம் கட்ட நிறைவு படங்கள் இணைப்பு

E-mail Print PDF



எமது கிராமத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்களிப்பாற்றி வருகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் வளர்ச்சிப் பாதையில் பெரும் மைல்க்கல்லாக அமைகின்றதான, மாபெரும் அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளான நவீன வசதிகளுடன் கூடிய பாலர் பாடசாலை, உள்ளக அரங்கு (கேட்போர் கூடம் - Auditorium) என்பவற்றின் கட்டுமானப் பணிகள் இம்மாதத்துடன் நிறைவுபெற உள்ளன.

கடந்த 28.09.2013 சனிக்கிழமை அன்று கட்டட ஒப்பந்தகாரருக்கும் மன்ற நிர்வாகிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டதுடன், இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகளான திறந்த வெளி அரங்கு, சிறுவர் விளையாட்டுத் திடல், ஆலயம், தண்ணீர் தாங்கியும் களஞ்சியமும் ஆகியன தொடர்பாகவும் கட்டட ஒப்பந்தகாரருடன் கலந்துரையாடப்பட்டது.

இவற்றில் திறந்த வெளி அரங்கு, சிறுவர் விளையாட்டுத் திடல் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், திறந்த வெளி அரங்கு பூர்த்தியாகும் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய கட்டுமானங்களிற்க்குத் தேவையான நிதி தொடர்பான மதிப்பீடுகள் கட்ட ஒப்பந்தகாரரால் இச் சந்திப்பின்போது வழங்கப்பட்டன.

அவற்றின்படி ஆலயக் கட்டுமானத்திற்கான மொத்த செலவாக ரூபா 3 162 700/= உம், தண்ணீர்த் தாங்கி, கழஞ்சியத்திற்கான மொத்த செலவாக ரூ 1 278 050/= உம் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலயக் கட்டுமானப் பணிகளைத் தை மாதமளவில் நிறைவு செய்ய எண்ணியிருப்பதுடன், எதிர்வரும் 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் மறுமலர்ச்சி மன்றத்தின் 42ஆவது ஆண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

ச. தனுஜன்,
செயலாளர்,
மறுமலர்ச்சி மன்றம் - காலையடி.


மறுமலர்ச்சி மன்ற அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்ட பணிகள் நிறைவடையும் காட்சிகள் இங்கே அழுத்துக


அன்பான  ஊர் உறவுகளே !!!
எமது ஊரவரின் வளர்ச்சிக்காக  மறுமலர்ச்சி மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிய கட்டுமானப் பணிகளுக்கு  எல்லோரும் தங்களால் இயன்ற பங்களிப்பினை தயவு செய்து தாமாக‌ முன்வந்து உதவுமாறு  மிகவும் பணிவாகவும், அன்பாகவும் அனைவரையும் வேண்டுகிறோம். கட்டுமானப் பணிக்கு உங்களாலான பங்களிப்பு நீங்கள் செய்வதன்மூலம் உங்கள் ஊரின் வளர்ச்சியில் நீங்களும் ஒரு பங்காளியாக மிளிருங்கள்.
மேலும் ஊரவர் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி   , ஊரின்   வளர்ச்சியில் எல்லோரையும்  பங்காளிகளாக மாற்றிக்கொள்ளுங்கள்  . ஊரவர் எல்லோரும்  சேர்ந்து எமது ஊரின் வளர்ச்சிக்கு வித்திட  விரைந்து  வருமாறு  அனைவரையும் அன்பாக வேண்டுகிறோம்.l
எமது ஊரவர் எல்லோரின் வளர்ச்சிக்காக ஊரில் நடை பெற்றுக்கொண்டிருக்கிற கட்டுமானப்   பணிகள் சம்மந்தமான  படங்கள்  சில உங்கள்  பார்வைக்கு!!!!

இரத்தினராசா சுப்பிரமணியம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2013 - பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன

E-mail Print PDF

கடந்த ஓகஸ்ற் மாதம் 25ம் திகதி நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் தோன்றிய மூன்று லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் மாணவ மாணவியர்களின் பெறுபேறுகள் இன்று 01.10.2013 திகதி வெளியாகியுள்ளன.

உங்கள் பெறுபேறுகளை

http://www.doenets.lk/exam/exam_GV.jsp

என்ற இணைய முகவரியில் உங்கள் (index) சுட்டிலக்கத்தை பதிவு செய்து பார்வையிடலாம். அல்லத

SMS மூலம் உடன் அறிந்துகொள்ளலாம். SMS அனுப்பும் விதமும் இலக்கங்களும்

Get Results by sms.

Type EXAMS <SPACE> INDEX NO and send to

Dialog   7777

Mobitel  8884

Etisalat  3926

Airtel     7545

Hutch    8888

Page 7 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்