Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

காலையடி "ஞானவேல் விளையாட்டுக் கழகம்" நடாத்தும் - கைப்பந்தாட்ட போட்டிகள் - 22.09.2013

E-mail Print PDF

தகவல்: முரளி திருநாவுக்கரசு அவர்கள்

திறமைகள், தகுதிகள் இருந்தும் அதனை சாதித்து வெற்றிக் கனியை பெற்றுக்கொள்ள வாய்ப்புகளின்றி இருக்குக் எம்மூர் இளையோருக்கு ”ஞானவேல் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கலங்கரை விளக்கமாக அமைய எமது வாழ்த்துக்கள்

பணிப்புலம்.கொம்

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய திறப்பு விழா நிகழ்வுகள் - 30.07.2013

E-mail Print PDF

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய வளாகத்தின் தென்-கீழ் மூலையில் கம்பீரமாக தோற்றமளிக்கும் ”அம்பாள் சனசமூக நிலையம்” 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப் பெற்று அம்பாள் கிராமமுன்னேற்றச் சங்கம், இந்து இளைஞர் இயக்கம், மாதர் சங்கம் என பல கிளைகளுடன் எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு நல்வழிகாட்டியாக விழங்கிய இரு மாடிகளைக் கொண்ட கட்டிடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகளில் சேதமடைந்து இருந்தமையால் புலம் பெயர் நாடுகளில் வாழும் எம்மூர் உறவுகளின் பங்களிப்புகளுடன் திருத்தி அமைக்கப் பெற்று 30.07.2013 அன்று சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கு பற்றிய பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ. சரவணபவன் அவர்களால் திறந்து வைக்கப் பெற்றது.

இவ் விழாவின்போது சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய வலி-மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சி ஐங்கரன் அவர்களும், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கேமா சிவசோதி அவர்களும் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.

திறப்பு விழாவை ஆரம்பிப்பதற்கு மின்தடை தாமதப் படுத்தியமையால் முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலகர்கள் ஆலய ஜெனரேற்றர் மூலம் மின் வழங்கி விழாவை ஆரம்பிப்பதற்கு உதவி புரிந்தனர்.

இக் கட்டிடத்தை திருத்தி அமைப்பதற்கு வெளிநாடுகளில் எம்மூர் உறவுகளிடம் பணம் சேகரிப்பதற்கு முன் நின்று பிரசாரம் செய்தவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அம்பாள் சனசமூக நிலைய நிர்வாக சபை உறுப்பினர்கள் இவ்விழாவை புறக்கணித்து விழாவில் பங்கு பற்றாது ஒதுங்கி நின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்க திறப்பு விழா நிகழ்வுகள் பார்வையிட இங்கே அழுத்துக

 மறுமலர்ச்சி மன்ற கிராம அபிவிருத்திக் கட்டுமானப் பணிகளிற்கான நிதி சேகரிப்போர் நியமனம் - ஜேர்மனி, இத்தாலி

E-mail Print PDF

அன்பான எமது கிராமத்தின் புலம்பெயர் வாழ் உறவுகளே !

எமது கிராமத்தின் அபிவிருத்திக்கான பாரிய கட்டுமானப் பணிகள் மறுமலர்ச்சி மன்ற வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை அனைவரும் அறிந்ததே.

இக்கட்டுமானப் பணிகளின் முதலாவது கட்டம் (சர்வதேச தரம்வாய்ந்த பாலர் பாடசாலையும் சிறுவர் பராமரிப்பு நிலையமும்) நிறைவடையும் நிலையில் இருப்பதுடன், இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகள் வெகு விரைவில் ஆரம்பமாக உள்ளன.

இப்பாரிய வேலைத் திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு மறுமலர்ச்சி மன்றம் எமது ஊர் மக்களின் ஒத்துழைப்பையே முற்றுமுழுதாக எதிர்பார்த்து நிற்கின்றது. வெளிநாடுகளில் வாழும் எமது ஊர் மக்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்காக முதற் கட்டமாக ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் வாழும் பின்வரும் மன்றச் செயற்பாட்டாளர்களை நியமித்துள்ளோம் என்பதனை அறியத் தருவதுடன்; தங்கள் மேலான நிதி உதவிகளை மன்றச் செயற்பாட்டாளர்கள் மூலமாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜேர்மனி நாட்டில் நிதிசேகரிப்போர்:

கு.குணேஸ்வரன்
கு.சுதாகரன்
பா. பாலகுமார்
ந. திருக்கேதீஸ்வரன்
லி.சசிதரன்


இத்தாலியில் நிதிசேகரிப்பவர்:
க.வேல்முருகன்

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நன்றி

செயலாளர்: ச. தனுஜன்

மறுமலர்ச்சி மன்றம் - காலையடி


Page 8 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்