Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

புதிய “காலைக் கதிர்” இதழ் வெளியீட்டு விழா நிகழ்வுகள் - படங்கள், வீடியோ, ”காலைக் கதிர்” பிரதி இணைப்பு

E-mail Print PDF

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு" - திருவள்ளுவர்.

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் அதிகமாக கிடைப்பது போல தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்பதனால், காலையடி மறுமலர்ச்சி மன்றம் ”புதிய காலைக் கதிர்” என்னும் இதழை கடந்த 09.06.2013 அன்று வெளியீடு செய்து புலம் வாழ் எம்மூர் இளையோர் கல்வி அறிவில் சிறந்தவர்களாக விளங்க; பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக ஊற்றெடுக்க ஆழமாக தோண்டச் செய்யும் அரும் பெரும் கைங்கரியத்தினை செய்துள்ளமை பாரட்டுத்ற்குரியது. கல்வியின் பெருமையை கற்றோரே காமுறுவர் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு.

காலையில் வெளியாகும் சூரிய கதிர் அதிக சக்தி நிறைந்துள்ளதாக விஞ்ஞானம் கூறுகின்றது. சூரிய சக்தி உடலுக்கு சக்தியை ஊட்டி வளர்க்கின்றது. ஆனால் மறுமலர்ச்சி மன்றம் வெளியிடும் “புதிய காலைக் கதிர்” சிந்தையை தூண்டி அறிவை வளர்க்கின்றது. நாம் உண்ணும் உணவு நிறை உணவாக, போசாக்கு நிறைந்ததாக இருப்பதற்கு நாம் பழங்கள், பால் அருந்துவதுபோல்; எல்லாத் துறைகளிலும் நுண்அறிவு பெற்றவர்களா விளங்க கல்வி, கலை, இலக்கியம், பொது அறிவு சம்பந்தமான ஆக்கங்கள் வெளிவருவது இளையோரை மேலும் தோண்டச் செய்து  அறிவை பெருக்க உந்து சக்தியாக அமைகின்றது.

பணிப்புலம்.கொம்

காலையடி - மறுமலர்ச்சி மன்ற மாணவர் மன்ற மாணவர் மன்றம் வெளியிட்டுள்ள

“புதிய காலைக் கதிர்” நிகழ்வுகள் வீடியோவில்

பகுதி - 1

பகுதி - 2

காலையடி - மறுமலர்ச்சி மன்ற மாணவர் மன்றம் வெளியிட்டுள்ள “புதிய காலைக்கதிர்”  நிகழ்வுகள் படங்கள்

”புதிய காலைக் கதிர்” இதழ் வாசிக்க இங்கே

படங்கள், வீடியோ, காலைக் கதர் இதழ் அனுப்பி வைத்து சிறப்பிதவர்: சபா தனு அவர்கள்

 

154/12/06

டென்மார்க் தமிழ் மக்களை பீதியடையச் செய்துள்ள திருட்டு சம்பவங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் - 08.06.2013

E-mail Print PDF


கடந்த சில மாதங்களாக டென்மார்க்கில் திருடர்களின் கைவரிசை தமிழர்கள் மீது அதிகரித்துள்ளமை யாவரும் அறிந்ததே. இதுவரை காலமும் வங்கிகள், கடைகளில் திருடியவர்கள் தற்பொழுது எமது சமூகத்தினரின் தங்கநகைகளிலும், பணப்பைகளிலும் கண் வைத்துள்ளனர். இதற்கான சரியான தீர்மானங்களை எடுப்பதற்காக ஐரோப்பிய தமிழர் கலாச்சார ஒன்றியம் டென்மார்க் கேர்ணிங் பகுதியில் வாழும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை 08.06.2013 அன்று நடாத்த திட்டமிட்டுள்ளது

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

தகவல்: யோகராஜா ஆறுமுகம் - டென்மார்க்

மறுமலர்ச்சி மன்றம் முன்னெடுக்க உத்தேசித்துள்ள கல்வி அபிவிருத்திச் செயற் திட்டம்

E-mail Print PDF

எமது கிராம சிறார்களின் கல்வி அபிவிருத்தியில் அக்கறையுள்ள நலன் விரும்பிகளின் வேண்டுதற் கிணங்க மன்ற செயலாளரினால் கீழே பதியப் பெற்றுள்ள முன்மொழிவு தயாரிக்கப் பெற்று ஊர் மக்களினதும், புலம் பெயர் நாடுகளில் வாழும் எம்மூர் மக்களினதும் ஆலோசனைகளையும், ஆதரவையும் தெரிந்து கொள்வதற்காக இங்கே பிரசுரமாகின்றது.

தகவல்: சபா தனு அவர்கள்

நன்றி

காலையடி மறுமலர்ச்சி மன்ற புதிய நிர்வாக சபை அங்கத்தினர் தெரிவு

E-mail Print PDF

2013.05.12 அன்று பி.ப. 4.30 மணியளவில் மறுமலர்ச்சி மன்ற பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்வரும் நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

தலைவர்: திரு. சு. யாதவன் அவர்கள்
செயலாளர்: திரு. ச. தனுஜன் அவர்கள்
பொருளாளர்: திரு. அழ. பகீரதன் அவர்கள்

உப தலைவர்: செல்வன் சி. சக்திதாசன்
உப செயலாளரார்: செல்வன் சி. கலிஸ்ரன் ஆகியோரும்;

கலைப் பொறுப்பாளர்: செல்வன் இ. நியந்தன்
விளையாட்டுப் பொறுப்பாளர்: செல்வன் மு. றொஸாந்
சிரமதானப் பொறுப்பாளர்: செல்வன் செ. விமலேஸ்வரன்
கல்விப் பொறுப்பாளர்: திரு. சி. திருச்செந்தூரன்
சமயப் பொறுப்பாளர்: திரு. தி. திலீப் ஆகியோரும்;

போசகர்: திரு. க. சபாநாயகம் அவர்களும்

ஆலோசகர் சபை அங்கத்தவர்களாக
திரு. சோ. தேவராஜா அவர்களும்
திரு அழ. சந்திரஹாசன் அவர்களும்
திரு ந. இரவீந்திரன் அவர்களும்
திரு ப. சிறீஸ்கந்தராசா அவர்களும்
திரு ஆ. நற்குணேஸ்வரன் அவர்களும்
திரு ந. கிருஸ்ணதாசன் அவர்களும்
திரு சி. கனகலிங்கம் அவர்களும்
தெரிவு செய்யப்பட்டனர்.

தகவல்: சபா தனு

ஆறுமுகவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் புதியநிர்வாகம் தெரிவும், பரிசளிப்பு விழா அன்பளிப்பு செய்தோருக்கு நன்றி நவிலலும்

E-mail Print PDF


தலைவர் - செல்வி வயித்திலிங்கம் மனோராணி

உபதலைவர் - திரு ஜெகதீஸ்வரன் ஜெயகாந்தன்

செயலாளர் - திரு சுப்பிரமணியம் யாதவன்

உபசெயலாளர் - திருமதி மதனகுமார் தவலட்சுமி

பொருளார் - திருமதி சுந்தரசிவம் கலைவாணி

நிர்வாக சபை உறுப்பினர்கள்
சிவஸ்ரீ பேரின்பநாதகுருக்கள் இன்பராஜக்குருக்கள்

திரு விஜயரட்ணம் சுதர்சன்

திரு கணேசறட்ணம் ரவீந்திரன்

திரு சுப்பிரமணியம் திருக்கேதிஸ்வரன்

திரு நகராசா கிருஸ்னமூர்த்தி

செல்வி சுப்பிரமணியம் ஜிவனா

திருமதி றமணன் ஜெயராணி

திரு ஜெகநாதன் சஜித்

கணக்காய்வாளர்:   திரு ஞானசேகரம் யுகதாஸ்

போசகர் - திரு ஆறுமுகசாமி குமரகுருபரன் {அதிபர்}

 

நன்றி நவிலல்

பரிசளிப்பு விழாவுக்கு உதவிகள் புரிந்தோர்க்கு நன்றிகள்

விசு.விமலன் ஞாபகார்த்தமாக குடும்பம் {கனடா} ரூபா 10,000

சுப்பிரமணியம் மகேந்திரன் ஞாபகார்த்தமாக மகன் குலதீஸ்வரன் (கனடா) ரூபா 5000

பொன்னுத்துரை மகேந்திரன் ஞாபகார்த்தமாக மகள் வசந்தமலர் (கனடா) ரூபா 5000

சுப்பிரமணியம் மனோன்மணி ஞாபகார்த்தமாக மகள் சிவசக்தி (டென்மார்க்) ரூபா 5000

வயித்திலிங்கம் மனோராணி அன்பளிப்பு (ஓய்வு ஆசிரியர்) ரூபா 5000

கந்தையா மனோகரன் {கலட்டி} ஐந்து பெறுமதிமிக்க புத்தகங்கள்

 

தகவல்: செயலாளர்

பழையமாணவர் சங்கம்
சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

Page 9 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்