Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

பணிப்புலம் அம்பாள் சனசமுக நிலையமும் மறுமலர்ச்சி மன்றமும் இணைந்து நடாத்தும் முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு விழா - நிதியுதவி கோரல்

E-mail Print PDF

பணிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும், மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு விழாவிற்கான நிதியுதவி கோரல்.

கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுவந்த பனிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு விழா கடந்த இரண்டு வருடங்களாகப் பல்வேறு தடங்கல்கள் காரணமாக இடம்பெறவில்லை.

இதனால் அவ் ஆண்டுகளில் முன்பள்ளிகளில் கல்வி கற்ற எமது ஊர்ச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டி தொடர்பான அறிமுகமும், எமது ஊரின் ஏனைய சிறுவர்களுடன் சகயமாகப் பழகி உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பும் கிடைக்காமல் போயுள்ளது.

அத்துடன் எமது கிராமத்தின் வசதி வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்ற பெற்றார்களின் பிள்ளைகள் வெளிப் பாலர் பாடசாலைகளுக்குச் சென்று, அங்கு அவர்கள் பல்வேறு விளையாட்டு, கலை நிகழ்வுகளில் பங்குகொள்கின்றனர்.

ஆனால், எமது கிராமத்தின் 40க்கு மேற்பட்ட ஏழைச் சிறுவர்கள் இம் முன்பள்ளிகளில் தொடர்ந்தும் கற்று வருகின்றனர்.

எனவே எமது ஊரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற எமது குழந்தைகளை ஆற்றலும், ஆளுமையுமுள்ளவர்களாக வளர்த்தெடுக்கவேண்டியது ஊரவர் ஒவ்வொருவரினதும் கடமையும் கட்டாய பொறுப்புமாகும்.

எனவே இவ்வாண்டுக்கான சிறுவர் விளையாட்டு விழாவைச் சிறப்புற நடத்துவதற்கு ஊரவரதும், புலம்பெயர் உறவுகளினதும் பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பினையும் வேண்டிநிற்கின்றோம்.

இவ்விளையாட்டு விழாவுக்கான உத்தேச மதிப்பீடு:

ஏற்பாட்டுக்கான செலவுகள் = ரூபா 10 000/=
பரிசுப் பொருட்கள் = ரூபா 20 000/=


மேலதிக விபரங்களுக்கு - தனூட் (மறுமலர்ச்சி மன்றம்), ஜெயகாந்தன் (அம்பாள் சனசமூக நிலையம்)

- மறுமலர்ச்சி மன்றம், அம்பாள் சனசமூக நிலையம் -

தகவல்: சபா தனு அவர்கள்

Internet - இணையம் எவ்வாறு இயங்குகின்றது - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

தகவல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து உலகம் முழுவதும் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது போல் உணர்கின்றோம். உலகெங்கும் பரந்து வாழும் மக்கள் நொடிப் பொழுதில் உலகின் எப்பாகத்தையும் எட்டிப்பார்க்கவும், அங்கு வாழ்வோருடன் நேரே முகம் பார்த்து உரையாடவும், தேவையான தகவல்களைப் நகல் பத்திரங்களை, படங்களை, வீடியோக்களை பரிமாறவும் (பெற்றுக்கொள்ளவும், அனுப்பி வைக்கவும்) முடிகின்றது. இவையாவும் தகவல் தொழில்நுடபத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட மாற்றங்களே.

உலகெங்குமுள்ள பல லட்சம் கணினிகளை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக கேபிள்கள் மூலமோ அல்லது கேபிள் இன்றியோ தொடர்பு கொள்ளச் செய்வதன் மூலம் இது சாத்தியமாகின்றது. இவ்வாறு கணினிகளை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக ஒருங்கிணைக்கப் பெற்ற வலையமைப்பே ”இன்ரநெற்” அல்லது இணையமாகும்.

இவ் இணைப்பானது பல தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் பல லட்சம் கணினிகளை ஒன்றோடொன்று தொடர்புள்ளதாக இணைக்கும் இணைப்பு என்றும், உலக அளவில் பல கணினி வலையமைப்புகளை (ஒன்றாக இணைக்கும்) கூட்டு இணைப்பான பெரும் வலையமைப்பு என்றும் கூறலாம்.

Read more...

மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு அமரர். திருமதி சோமசுந்தரம் சற்குணம் அவர்கள் ஞாபகார்த்த அன்பளிப்பு.

E-mail Print PDF

பேரப்பிள்ளைகளின் அன்பளிப்ப

மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு திருமதி சோமசுந்தரம் சற்குணம் (குணதங்கம்) அவர்களின் ஞபகாரத்தமாக தலா ரூபா 15 000 பெறுமதியான பத்துத் தட்டுக்களுடையை ஆறு அடி உயரமான இரண்டு புத்தக றாக்கைகள் அன்னையின் பேரப் பிள்ளைகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

பிள்ளைகளின் அன்பளிப்பு

அண்மையில் (15.12.2012) காலமான திரு சோ.தேவராஜா அவர்களின் தாயார் திருமதி. சோமசுந்தரம் சற்குணம் (குணதங்கம்) அவர்களின் ஞாபகார்த்தமாக சுமார் 3000 க்கு மேற்பட்ட நூல்கள் மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு சோ. தேவராஜா அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றை காட்சிப் படுத்தி, பாதுகாப்பாக பராமரிப்பதற்கு இரண்டு புத்தக றாக்கைகளும் அவரால் மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு வழங்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: சபா தனு அவர்கள்

 

175

ஆறுமுக வித்தியாலயம் - வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி - 09.02.2013

E-mail Print PDF

தகவல்: தங்கராசா பிரகலாதன் அவர்கள்

நன்றிகள் கூறி நாடுகின்றோம் தங்கள் உறவுகளின் ஞாபகார்த பரிசில்களை - ஆறுமுகவித்தியாலயம் - சுழிபுரம் வடக்கு

E-mail Print PDF

சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயத்தில் கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவின் போது; அமரத்துவம் எய்திய தமது உறவுகளின் ஞாபகார்த்தமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி அமரத்துவம் அடைந்த ஆத்மாவை நினைவு கூர்ந்து ஆத்ம ஈடேற்றத்திற்கு ஏதுவாக தர்ம கைங்கரியம் செய்து சிறப்பித்தமை போற்றுதற் குரியது.

ஞாபகார்த்த பரிசில்கள் வழங்கப்பெற்றோர் விபரம்:
அமரர் விசு. க. விமலன் (சங்கர்) ரூபா 10000.00 கனடா
அமரர் சுப்ரமணியம் மகேந்திரம் ரூபா 5000.00 பணிப்புலம்
அமரர் செல்லையா குலசேகரம் ரூபா 5000.00 கலட்டி

அமரத்துவம் அடைந்த தங்கள் உறவுகளை சிறப்பித்த  குடும்பத்தினருக்கு பாடசாலை சமூகம் நன்றி கூறுவதுடன், அமரத்துவம் அடைந்த அன்பிற்குரியவர்களின் ஆத்மா சாந்தி பெறவும் பிரார்த்திக்கின்றது.

எதிர் வரும் (25.03.2013) மாச்மாதம் 25 ஆம் திகதி நடைபெற உள்ள இவ்வருட பரிசளிப்பு விழாவிற்கும்; அமரத்துவம் அடைந்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக அன்பளிப்பு செய்ய விரும்பும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் விபரங்களையும், ஞாபகார்த்த அன்பளிப்பையும் அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பாடசாலை தொலைபேசி இல.:  021-3217440
அதிபர்
தொலைபேசி இல.:  0712956323

சு. யாதவன் தொலைபேசி இல. 0776151783
செயலாளர், பழையமாணவர் சங்கம்
சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

தகவல்: செயலாளர், பழைய மாணவர் சங்கம்

Page 10 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்