Thursday, Jul 20th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் - குணசிங்கம் புஸ்பராசா அவர்கள் - லண்டன் - நன்றி கூறுகின்றோம்

E-mail Print PDF

சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் புஸ்பராசா (மாமா) இன்று 25.02.2016 லண்டனில் சிவபதம் எய்தினார்.
அன்னார்; ஐயந்தியின் அன்புக்கணவரும்;
பிரகாஸ் , குட்டி ஆகியோரின் அன்பு அப்பாவும்;
காலம் சென்ற குணசிங்கம் செல்வரத்தினம் தம்பதியரின் அன்பு புதல்வனும்;
வசந்தி (லண்டன்), றஞ்சிதமலர் (இலங்கை), கயேந்திரன்(இத்தாலி), ரவிக்குட்டி (நோர்வே), குணாளன் (காலம்சென்றவர்) ஆகியோரின் சகோதரரும்;
துவாவின் மாமாவும்;
பாமா, பாஸ்கரன் , பத்மதேவி, கோணேஸ், கணேஸ்வரி, Kajen Bala, Viknan Bala , சுதனி (லண்டன்) , அனிதா, இந்திரநாயகம், மதியழகன் ஆகியோரின் மைத்துனனும்;
பாலசுப்பிரமணியம் , பாலசிங்கம் , குஞ்சியம்மா ஆகியோரின் பெறாமகனும்;
சகானா, சஞ்சிபன், ரூபினி, நிவர்சன் , துசியந்தன் ஆகியேரின் மாமனும்;
ஜெகநாதன், ராமசந்தரன் ஆகியோரின் மைத்துன்னும்;
ராசா, கலைச்செல்வி ஆகயோரின் மைத்துன்னும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் லண்டனில் உள்ள அவரின் சகோதரியின் இல்லத்தில் இறுதி கிரிகைகள் நடைபொற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உள்ளார் உறவினர் அயலவர் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்: நிவர்சன் - மருமகன்
காலம் சென்ற குணசிங்கம் புஸ்பராசா (மாமா)வின் இறுதிக்கிரிகைகளில் நேரடியாக பங்குபற்றியவர்களிற்கும், இலங்கை, இத்தாலி மற்றும் நேர்வே ஆகிய நாடுகளில் உள்ள உறவினர்களின் வீடுகளிற்கு சென்று இரங்கல் நிகழ்வுகளில் பங்கு பற்றுயவர்களுக்கும், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினர் உறவினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் , நமது ஊர் இணையத்தளங்களினூடாக அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும்
நன்றி கூறிக்கொள்கின்றோம்
இப்படிக்கு
மருமகன் (நிவர்சன்)

முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் - அமரர் நவரத்தினம் குணதீஸ்வரன் - 19.01.2016 - கலட்டி

E-mail Print PDF

கடந்த 29.01.2015 அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் எதிர்வரும் 19.01.2016 செவாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி பிரார்த்தனை செய்யவும், தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாறு உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்


ஞாபகார்த்த அன்பளிப்பு ரூபா 50,000 - அமரர் தம்பித்துரை தவராசசிங்கம் அவர்கள்

E-mail Print PDF

கடந்த 30.11.2015 அன்று காலையடியில் சிவபதம் எய்திய “தவம்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்றவரும், முன்நாள் இபோச சாலைப் பரிசோதகருமான தம்பித்துரை தவராசசிங்கம் அவர்கள்;

அமரர்களான தம்பித்துரை - சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும்; அமரர்களான செல்லத்துரை (அதிபர்) - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்; கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்; தவறூபன், சிந்துஜா, தனுஜா ஆகியோரின் பாசம்மிகு தந்தையும்; தவமதி, ஜெயறுபன், தவறூபன், ஆகியோரின் அன்பு மாமனாரும்; சாதுர்யா, சாத்வீகா, சாரங்கி, ஷகீல், சுபஜீ ஆகியோரின் அன்புப் பேரனாருமாவார்.

அமரான எம்மூர் பெருமகன் தம்பித்துரை தவராசசிங்கம் அவர்களின் அந்தியேட்டி தினத்தன்று (31ம் நாள்) அன்னாரின் மனைவி , பிள்ளைகள் ஆகியோரினால்; எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், சிறுவர்களின் ஆளுமை விருத்திக்காகவும் யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலைக்கு ஐம்பதினாயிரம் ரூபாவை (50,000) ஞாபகார்த்த அன்பளிப்பாக வழங்கி தமது குடும்பத் தலைவனுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்திபெற நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக !!

மரணம் சிலபேரை மறையச் செய்யும், மரணத்தால் அழிக்கப்படாத சிலர் இம் மண்ணில் யுகங்கள் பல கடந்தும் காலத்துள் வாழ்கின்றனர்.

தக்கார் தகவிலார் என்பது

அவரவர் எச்சத்தாற் காணப் படும் - குறள்

அந்தவகையில் தமது தந்தையாரின் நினைவைச் சிறப்பிக்கும் விதமாக இவ் அளப்பெரும் நன்கொடையை மனமுவந்து வழங்கிய பிள்ளைகளுக்கும், அவரின் மனைவியாருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பிலும், பழைய மாணவர்கள் சார்பிலும், எமது கிராமத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

தகவல்: சபா தனு

மரண அறிவித்தல் - விசுவலிங்கம் துரைரத்தினம் - திருகோணமலை - 31.12.2015

E-mail Print PDF

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகாவும் கொண்ட திரு. விசுவலிங்கம் துரைரத்தினம் அவர்கள் இன்று 31.12.2015 இறைவனடி சேர்ந்தார்.  
மேலதிக விபரங்கள் பின்னர் அறியதரப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்
தகவல்: குடும்பத்தினர்

 


Page 8 of 45

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்