Monday, Sep 25th

Last update07:30:58 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் - அமரர் நவரத்தினம் குணதீஸ்வரன் - 19.01.2016 - கலட்டி

E-mail Print PDF

கடந்த 29.01.2015 அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் எதிர்வரும் 19.01.2016 செவாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி பிரார்த்தனை செய்யவும், தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாறு உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்


ஞாபகார்த்த அன்பளிப்பு ரூபா 50,000 - அமரர் தம்பித்துரை தவராசசிங்கம் அவர்கள்

E-mail Print PDF

கடந்த 30.11.2015 அன்று காலையடியில் சிவபதம் எய்திய “தவம்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்றவரும், முன்நாள் இபோச சாலைப் பரிசோதகருமான தம்பித்துரை தவராசசிங்கம் அவர்கள்;

அமரர்களான தம்பித்துரை - சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும்; அமரர்களான செல்லத்துரை (அதிபர்) - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்; கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்; தவறூபன், சிந்துஜா, தனுஜா ஆகியோரின் பாசம்மிகு தந்தையும்; தவமதி, ஜெயறுபன், தவறூபன், ஆகியோரின் அன்பு மாமனாரும்; சாதுர்யா, சாத்வீகா, சாரங்கி, ஷகீல், சுபஜீ ஆகியோரின் அன்புப் பேரனாருமாவார்.

அமரான எம்மூர் பெருமகன் தம்பித்துரை தவராசசிங்கம் அவர்களின் அந்தியேட்டி தினத்தன்று (31ம் நாள்) அன்னாரின் மனைவி , பிள்ளைகள் ஆகியோரினால்; எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், சிறுவர்களின் ஆளுமை விருத்திக்காகவும் யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலைக்கு ஐம்பதினாயிரம் ரூபாவை (50,000) ஞாபகார்த்த அன்பளிப்பாக வழங்கி தமது குடும்பத் தலைவனுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்திபெற நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக !!

மரணம் சிலபேரை மறையச் செய்யும், மரணத்தால் அழிக்கப்படாத சிலர் இம் மண்ணில் யுகங்கள் பல கடந்தும் காலத்துள் வாழ்கின்றனர்.

தக்கார் தகவிலார் என்பது

அவரவர் எச்சத்தாற் காணப் படும் - குறள்

அந்தவகையில் தமது தந்தையாரின் நினைவைச் சிறப்பிக்கும் விதமாக இவ் அளப்பெரும் நன்கொடையை மனமுவந்து வழங்கிய பிள்ளைகளுக்கும், அவரின் மனைவியாருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பிலும், பழைய மாணவர்கள் சார்பிலும், எமது கிராமத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

தகவல்: சபா தனு

மரண அறிவித்தல் - விசுவலிங்கம் துரைரத்தினம் - திருகோணமலை - 31.12.2015

E-mail Print PDF

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகாவும் கொண்ட திரு. விசுவலிங்கம் துரைரத்தினம் அவர்கள் இன்று 31.12.2015 இறைவனடி சேர்ந்தார்.  
மேலதிக விபரங்கள் பின்னர் அறியதரப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்
தகவல்: குடும்பத்தினர்

 


மரண அறிவித்தல் - கந்தையா பரமானந்தம் அவர்கள் - காலையடி - 13.12.2015

E-mail Print PDF

கலட்டி, பண்டத்தைரிப்பை பிறப்பிடமாகவும், இறுதிக் காலத்தில் காலையடியில் வசித்து வந்தவருமான கந்தையா பரமானந்தம் அவர்கள் 13.12.2015 இன்று காலையடியில் சிவபதம் எய்தினார்.

அன்னாரின் முழு விபரமும், இறுதிக் கிரியை பற்றிய விபரமும் பின்னர் அறியத் தரப் பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

பணிப்புலம்.கொம்

மரண அறிவித்தல் - திருமதி செந்தில்மணி கதிரமலை - திருகோணமலை - 03.12.2015

E-mail Print PDF
Conversation opened. 1 read message.
மரண அறிவித்தல்.docisplaying மரண அறிவித்தல்.docx.

சாந்தை, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருக்கோணாமலை Town (Snake Lane)ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தில்மணி கதிரவேல் அவர்கள் 03.12.15 அன்று காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற சின்னையா கற்பகம் தம்பதிகளின் மூத்த மகளும்;

காலஞ்சென்ற வையாபுரி தம்பதிகளின் அன்பு மருமகளும்;

காலஞ்சென்ற கதிரவேல் அவர்களின் அன்பு மனைவியும்;

காலஞ்சென்ற சந்திரகாந்தன், சந்திரகலா (திருக்கோணாமலை), காலஞ்சென்ற நவநீதன், நவயோகம் (லண்டன்),  ஐங்கரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்;

தயாளினியின் பாசமிகு மாமியாரும்;

காலஞ்சென்ற மகாலிங்கம், பரமேஸ்வரி (பூங்குஞ்சு), ஏரம்பமூர்த்தி, மற்றும் சுந்தரலிங்கம், குலமணி (தெஹிவளை) காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

காலஞ்சென்ற பாக்கியம் - மகாலிங்கம், தவமணி, அப்புலிங்கம் (சிங்கப்பூர் ), கிரியாசக்தி, நாகரத்தினம், காலஞ்சென்ற செந்தில்ராசா, குஞ்சம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்;

நிரஞ்சி, கிசாந்தன், நிசாந்தன், நளாயினி,  தியாளினி மற்றும் கிசோத் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்;

விதுஷனா, சஜுரன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/12/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

தகவல்: மருமகள் வினோதினி பத்மநாதன் டென்மார்க்

 

 

 

 

 

 

Page 9 of 45

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்