Friday, Nov 17th

Last update02:47:21 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: மங்கையர் மலர் சமையல்

வெண்டிக்காய் வெள்ளைக் கறி

E-mail Print PDF


தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டிக்காய் - 15

பச்சைமிளகாய் - 4

சின்ன வெங்காயம் - சிறிதளவு

தேங்காய்ப்பால் - 1 கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தேசிக்காய் சாறு - 1 மேசைக்கரண்டி

செய்முறை

1. வெண்டிக்காயை நன்றாகக் கழுவி அடி மற்றும் நுனி இரண்டையும் வெட்டி எடுக்கவும்.

2. பெரிய வெண்டிக்காய்களை 2 அல்லது 3 துண்டுகளாக வெட்டி கழுவி எடுக்கவும்.

3. தேங்காய்ப்பால், வெட்டிய பச்சை மிளகாள், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து அவிய விடவும்.

4. பதமான பதத்தில் இறக்கி தேசிக்காய் சேர்க்கவும். தாளிதமும் போடலாம்.

5. சூடான சுவையான வெண்டிக்காய் வெள்ளைக்கறி தயார்.

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கறி இதுவாகும்.

பருப்பு வடை

E-mail Print PDF

தேவையான பொருட்கள்

பட்டாணி பருப்பு - 1கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் - 1 - 2
கருவேப்பிலை - கொஞ்சம்
செத்தல் மிகாய்- 2
சீரகம் -1ஸ்பூன்
பூண்டு - 2 பல்லு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சிலர் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்ப்பார்கள்
செய்கை முறை
பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து சொரு சொருப்பாக அரைக்கவும். இதனுடன் செத்தல் மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போது அதிகம் நீர் விடாது குமையலாக வரக்கூடியதாக அரைத்தெடுக்கவும்.
பச்சைமிளகாய், வெண்காயத்தை சிறிதாக வெட்டி வைத்திருக்கவும்.
அரைத்தெடுத்த மாவுடன் வெட்டிவைத்த வெண்காயம், மிளகாய், மற்றும் மேலே சொன்ன பொருட்களில் எஞ்சியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.

அதனை சிறு சிறு உருண்டைகள் செய்து வடை வடிவில் (தட்டையாக) தட்டி வைக்கவும். (உருண்டையாக இருந்தால் நடுப்பகுதி அவியாது போகும்)

தாச்சியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு  வடைகளை பொரித்து எடுக்கவும்.  குறைந்த தணலில் பொரிக்கவும். அப்பொழுதுதான் உள்பகுதி அவியும்.

வடைகள் பொன்நிறம் ஆன பின்பு வடித்து எடுக்கவும்.

அசைவம் விரும்புபவர்கள் இதில் மாசிக்கருவாட்டுத் தூள், அல்லது இறால் ஒன்று அல்லது இரண்டு  பொரிப்பதற்கு முன் செய்து வைத்த வடையினுள் பதித்து பொரித்தெடுக்கவும்.

இப்பொழுது பருப்பு வடை, இறால் வடை றெடி.

பாதாம் கேக்

E-mail Print PDF

பாதாம் கேக்

தேவையான பொருட்கள்

தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்

மைதா மா - 250 கிராம்

சீனி
- 250 கிராம்

மாஜரீன் - 250 கிராம்

முட்டை - 4

வனிலா - 1 தே. கரண்டி

பேக்கிங்பவுடர்
- 15 கிராம்

செய்முறை

பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது) முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும். மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.

பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும்.

கடைசியாக வனிலாவையும் சேர்த்து கலக்கவும். பின்பு பேக்கிங் தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F ல்; 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கிட்ஸ் ப்ரெட் (பாண்) கட்லெட்

E-mail Print PDF

கிட்ஸ் ப்ரெட் (பாண்) கட்லெட்:

சிறிய பாண் - 8 துண்டுகள்

உருளைக்கிழங்கு - ஒன்று

கேரட் துருவல்- 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)

பீன்ஸ் துருவல்- 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)

வெங்காயம் துருவல்- 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)

பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்)

மல்லி இலை - ஒரு மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

மிளகாய் பவுடர் - கால் தேக்கரண்டி

மல்லி பவுடர் - கால் தேக்கரண்டி

சீரகப் பவுடர் - கால் தேக்கரண்டி

கரம் மசாலா - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மைதா - 3 மேசைக்கரண்டி

முட்டை - 2 (விரும்பினால்)

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதா மாவை ஒரு கப் தண்ணீரில் திக்கான பேஸ்டாக கலந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி விட்டு கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கி விடவும்.

காய்கள் வெந்ததும் அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, மல்லி இலை சேர்க்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேரும்படி நன்கு கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.

ஒரு பாண் துண்டின் நடுவில் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை வைத்து மற்றொரு பாண்ணினால் மூடவும்.

இரண்டு பாண்துண்டுகளையும் சேர்த்து மூடிய பின்னர் அடித்து வைத்திருக்கும் முட்டையை அதன் மேல் ஸ்பூனினால் எடுத்து ஊற்றவும்.

அதன் பின்னர் முட்டை கலவையின் மேல் கலந்து வைத்திருக்கும் மைதா கலவையை ஊற்றவும்.

இதைப் போல் பாண்ணின் இருபுறமும் தடவிக் கொள்ளவும். மற்ற ப்ரெட் துண்டுகளிலும் செய்து வைத்துக் கொள்ளவும். மைதா, முட்டை கலவையில் ப்ரெட் ஒட்டிக் கொள்ளும்.

தவாவில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பாண் துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான ப்ரெட் கட்லெட் ரெடி. இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும். இதனை காலை அல்லது மாலை உணவாக பரிமாறலாம். முட்டை விரும்பாதவர்கள் மைதா மட்டும் சேர்த்து செய்யலாம்.

 

இட்லி தாயாரித்தல் - யாழ்ப்பாணம் முறை

E-mail Print PDF

pan_summer2010/Idli-Large.jpg

இட்லி தயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

அவற்றை; களைந்து சுத்தப்படுத்தி வடித்தெடுத்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும், அரைக்கும் போது உப்பு, பெருங்காயத்தூள் கலக்கவும்.

அரைத்தெடுத்த மாக்கலவையை 7-8 மணி நேரம் புளித்துப்போக (தோசைக்கு வைப்பதுபோல் பொங்க) வைக்கவும்.

பொங்கிய மாக்கலவையுள் மிளகு தூள், சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.

மாக் கலவை தோசைக்கலவை போல் இளகியதாக இராது கொஞ்சம் இறுக்கமாக இருத்தல் வேண்டும். அதன்பின்;

எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் உள்ள குண்டுகளில் பாதி அளவுக்கு மாவை ஊற்றி இடியப்பம், பிட்டு அவிய வைப்பது போல் இட்லிச் சட்டியில் வைத்து மூடி; ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை அவிய விடவும்.

இட்லி அவிந்ததும் இட்லித் தட்டை வெளியே எடுத்து அதன் மேல் கொஞ்ச தண்ணீர் தெளித்தபின் இட்லியை ஒவ்வொன்றாக எடுக்கவும்.

இப்போது இட்லி ரெடி.

இட்லியை கட்டுச் சம்பலில் தொட்டும் சாப்பிடலாம், சாம்பார், பருப்புக்கறியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

அரிசிமாக் கூழ் -யாப்பாணம் முறை

E-mail Print PDF

அரிசிமாக் கூழ் - யாழ்ப்பாணம் முறை

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

பச்சரிசி மா – பச்சைசியை ஊற வைத்து கிறைண்டரில் அரைத்து அல்லது இடித்து மாவாக்கியது 250 கிராம்

சுத்தம் செய்த இறால் - 100 கிராம்

சுத்தம் செய்த நண்டுத் துண்டுகள் -10

மீன்தலை – (சீலா, கலவாய், கொடுவா அல்லது முள்ளு சப்பக்கூடிய மீன்) சுத்தம் செய்யப் பெற்று சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை

கீரை மீன் அல்லது சூடைமீன் - 10

புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் – 10 சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தவை

புளி - ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை - 100 கிராம் சுத்தம் செய்து இரண்டாக வெட்டியவை

வறுத்த கடலை - கொஞ்சம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

கறி முருக்கம் இலை - 250 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

பச்சை மிளகாய் – 3-5

மிளகு - சிறிதளவு

நற்சீரகம் - சிறிதளவு

செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை:

1. கீரை மீன் அல்லது சூடை மீனை உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பொரித்து வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் அல்லது கிறைண்டரில் நன்றாக அரைத்து உருண்டையாக்கி எடுங்கள்.

3. அந்த உருண்டையோடு புளியையும் சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் கழுவிய அரிசியுடன், பலாக்கொட்டை, கடலை, மரவள்ளிக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு அவிய விடவும். அத்துடன்;

5. மீன்தலைத் துண்டுகள், நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போட்டு அவிய விடவும்.

6. அரிசி பாதி அவிந்த நிலையில் பயிற்றங்காய், முருக்கம் இலை எம்பனவற்றையும் பானைக்குள்  போட்டு அவிய விடவும்.

7. கடைசியாக கரைத்த புளிக் கரைசலையும் உப்பையும் சேர்த்து பாணையில் இட்டு கூழ் தடிப்பானவுடன் இறக்கவும்.

8. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூளோடு பொரித்து வைத்த மீன் பொரியலையும் கடித்துச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

Page 3 of 5