Saturday, Mar 24th

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: மங்கையர் மலர் சமையல்

பூரி செய்தல்

E-mail Print PDF

பூரி செய்தல்:

தேவையான பொருட்கள்:

ஆட்டா மா  - 2 சுண்டு

குளிர்ந்த நீர்  - தேவையான அளவு

உப்பு  - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தயாரிக்கும்   முறை:
ஆட்டா மாவிற்கு தேவையான அளவு உப்பு கலந்து குளிர் நீர் விட்டு குழைத்து வைக்க வேண்டும்

குழைத்து வைத்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய வட்டங்களாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்

வாணலியில் (தாச்சியில்) எண்ணையைக் சூடாக்கி வைத்து; ஏற்கனவே தட்டி வைத்த பூரிகளை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

2 சுண்டு ஆட்டா மாவில் 12 முதல் 14 பூரிகள் வரை தயாரிக்கலாம்.

பூரியை உருளைக்கிழங்குப் பிரட்டல் கறி, கடலைக் கறி ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

குறிப்பு:

பூ‌‌ரி செ‌ய்யு‌ம் போது ‌சி‌றிது மைதா மாவு, 1 தே‌க்கர‌ண்டி ரவையை சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் பூ‌ரி அ‌திக நேர‌ம் உ‌ப்‌பி   இரு‌க்கு‌ம்.
சற்று தடிமனாக இட்டு இருந்தால் தான் பெரிதாகப் பொரிந்து சுவையாக இருக்கும்.
மிதமான சூட்டில் மட்டுமே எண்ணை காய வேண்டும்.
பூரி இடும்போது சப்பாத்திக்குச் செய்வது போல் மாவு தோய்த்து இடக்கூடாது. இப்படிச் செய்வதால் பொரிக்கும் எண்ணையில், இந்த மாவு பிரிந்துபோய் கருப்பு அடியில் தங்கிவிடும். அந்த எண்ணையிலேயே அடுத்தடுத்த பூரிகளைப் பொரிக்கும்போது வண்டல் அவற்றின்மேல் ஒட்டிக்கொண்டு, உடல் ஆரோக்யத்திற்குப் பெரும் கேடு. உருண்டைகளை எண்ணை தோய்த்து மட்டுமே இடவும். இதனால், பூரி பொரித்த எண்ணை கடைசிவரை கலங்காமல் இருப்பதை நாமே உணரலாம்


மீன் குழம்பு - வெளிநாட்டு யாழ்ப்பாண முறை

E-mail Print PDF

மீன் குழம்பு - யாழ்ப்பாணம் முறை

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள்.
இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது
தேவையான பொருட்கள்

மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெண்காயம்: 2 - 3
தக்காளி: 4
பூண்டு: 7 - 8 பற்கள்
பச்சைமிளகாய்: 4 -5
புளி: ஒரு எலுமிச்சம்பழம் அளவு
கடுகு: 1/4 தேக்கரண்டி
வெந்தயம்: 1/2 தேக்கரண்டி
சரக்கு மிளகாய் தூள்: 2 - 3 தேக்கரண்டி
எண்ணெய்: 100 மில்லி
உப்பு: தேவையான அளவு

செய்முறை

1. மீனை செதில் நீக்கி, சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டி, கழுவி, கொஞ்ச உப்பு போட்டு வைக்கவும்.

2. தக்காளியை சுத்தம் செய்து பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

3. பச்சைமிளகாய், வெங்காயதை சுத்தம் செய்து நீளமாக வெட்டி இரண்டாக வெட்டவும் (சின்ன வெண்காயமாயின் இரண்டாக வெட்டத் தேவையில்லை)

4. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

5. அடுத்து நறுக்கிய வெங்காயம், வெட்டி வைத்த பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.

6. பின்னர், வெண்காயம் பொன் நிறமாகியதும்; வெட்டிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்; தண்ணீர் கொஞ்சம் விட்டு அவிய விடவும். இப்போது தக்காளியை மசித்து பேஸ்ற்று போல் ஆக்கி விடவும்;

7. இதனுடன் புளியை கரைத்து விட்டு அதற்குள் மீன்களைப் போட்டு; உப்பு, சரக்கு மிளகாய்த்தூள் என்பன வற்றை சேர்த்து மூடி நன்கு கொதிக்கவிடவும்.

8. குழம்பு மிகவும் தண்ணியாகவோ, கெட்டியாகவோ இல்லாமல் நடுநிலையாக இருக்கும்போது மீனைப்போடவும்.

9. மீனைப்போட்டு மூடி அவிய விடவும் (இடைக்கிடை குழம்பை அகப்பையால் மீன் துண்டுகள் பிய்யாது கவனமாக கலக்கி விடவும்.

19. மீன் அவிந்ததும் நெருப்பைக் குறைத்து கணக்கான குழம்பு வரும் வரை அடுப்பில் விடவும்.

இப்போது மீன் குழம்பு றெடி.

குறிப்பு: தக்காழிக்குப் பதிலாக சிலர் தக்காளிப் பழ சோர்ஸ் பாவிக்கின்றனர்.

வெள்ளை ரவை உப்புமா

E-mail Print PDF

வெள்ளை ரவை உப்புமா

தேவையான பொருட்கள்

வெள்ளை ரவை - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 3
கேரட் - 1
இஞ்சி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 4
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுஎண்ணெய் – தேவையான அளவு
நெய் - 3 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
தாச்சியில் சிறிது நெய் விட்டு ரவையை குறைந்த சூட்டில் சாதுவாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை நீளப்பாடாக வெட்டிக் கொள்ளவும். கரட்டை தூள்களாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை நீளப்பாடாக இரண்டாக வெட்டி அதனை 2 – 3 துண்டுகளா வெட்டிக் கொள்ளவும்.  இஞ்சியையும் குத்தி நசித்து வைத்துக் கொள்ளவும்.

பெரிய தாச்சியில் எண்ணெயை விட்டு கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பையும், உளுத்தம்பருப்பையும் போட்டு சிவந்ததும்; கறிவேப்பிலை, பின்பு வெட்டிவைத்த வெங்காயத்தை போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.

பின்பு பச்சைமிளகாய், இஞ்சி, கேரட்டை போட்டு அவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிசேராமல் கிளறிக்கொண்டு இருக்கவும்.

ரவை வெந்ததும் எஞ்சி இருக்கும் நெய்யை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
இப்பொழுது உப்புமா றெடி.


கோழிக் கறிப் பிரட்டல் - யாழ்ப்பாணம் முறை

E-mail Print PDF

கோழிக் கறிப் பிரட்டல் – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள்.
இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது

தேவையான பொருட்கள்:
கோழி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை
வெண்காயம் – 2 பெரிய வெண்காயம் நீள்மாக வெட்டப் பெற்றவை
பச்சை மிளகாய் – 5 மிளகாய் நீட்டாக வெட்டப் பெற்று இரண்டு துண்டாக்கப்பெற்றவை
உள்ளி: 5 - 6 பற்கள் நீளமாக பிளந்து இரண்டாக வெட்டப் பெற்றவை
கடுகு, பெருஞ்சீரகம் – 1 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை – 2 -3 காம்பு
எண்ணெய் – தெவையான அளவு
சரக்கு மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப (2-3 தேக்கரண்டி)
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய் – பாதி போதுமானது
எண்ணெய்: தேவையான அளவு

செய்கை முறை:
கோழி இறைச்சியை, சிறிதளவு உப்பும், கறிமிளகாய் தூளும் சேர்த்து குழைத்து வைக்கவும்.
கறிச்சட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும் (கறிச் சட்டி ஒட்டாத நொன் ஸ்ரிக்காக இருப்பது நல்லது).

எண்ணெய் சூடு ஏறியதும் கடுகை போட்டு வெடித்ததும், பெருஞ்சீரகம், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்   பின்பு வெட்டிவைத்த வெண்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் போது,  குழைத்து வைத்த இறைச்சியை சட்டியிலிட்டு பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இடைக்கிடை எரிந்து போகாது இருக்க அகப்பையால் துளாவி விடவும்.

கோழி முக்கால் பதம் பொரிந்ததும் அதற்குள் சரக்கு மிளகாய் தூளையும், கணக்காக உப்பும் போட்டு கொஞ்ச தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய மூடிவிடவும்.

கோழி அவிந்ததும் நெருப்பைக் குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு (நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். இப்போது கோழிப்பிரட்டல் றெடி.

குறிப்பு: இவற்றுடன் சிலர் உறுளைக் கிழங்கும் சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியோடு போடுவார்கள். பாதிக் கிழங்கு போதுமானது. உறைப்பு தேவைக் கேற்ப மிளகாய் தூளை கூட்டியும் குறைத்தும் பாவிக்கலாம். மசாலைகளை வதக்காது பிறிம்பாக அரைத்தெடுத்து இறைச்சியுடன் போட்டும் சமைப்பார்கள். வினகர் சேர்த்தால் இறைச்சி மெதுமெதுப்பாக இருக்கும். ஆனால் சிலர் விரும்புவதில்லை. இஞ்சி ஒரு சிறுதுண்டை சிரியதாய் சீவி அல்லது குத்திப் போட்டும் சமைப்பார்கள் இஞ்சி இறைச்சியை மெதுமயானதாக்கும் என்பர்.ரைஸ் புடிங்

E-mail Print PDF

ரைஸ் புடிங்

 

தேவையானவை:

 

அரிசி

முக்கால் கப்

பால்

இரண்டு கப்

சர்க்கரை

இரண்டே கால் கப்

உப்பு

கால் டீஸ்பூன்

முட்டை

ஒன்று நன்றாக அடித்தது

உலர்ந்த திராட்சை

முக்கால் கப்

நெய்

ஒரு டேபிள்ஸ்பூன்

வனிலா எசன்ஸ்

அரை டீஸ்பூன்

 

 

 

 

 

 

 

 

செய்முறை:

கடாயில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கி விட்டு மூடி, மிதமான தீயில் இருபது நிமிடம் வேக வைக்கவும். சாதம் நன்றாகக் குழைய வேண்டும். இதனுடன் ஒன்றரை கப் பால், சர்க்கரை, உப்பு கலந்து மூடி மிதமான தீயில் வைத்து, நன்றாகக் கெட்டியாக கிரீம் மாதிரி ஆகும் வரை கலக்கவும். பிறகு மீதமுள்ள அரை கப் பால், முட்டை, திராட்சை இவற்றையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் விடாமல் கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் நெய், வனிலா இரண்டையும் சேர்க்கவும்.

அச்சாறு

E-mail Print PDF
அச்சாறு:

தேவையான பொருள்கள்
* பச்சைமிளகாய் - 250 கிராம்
* வெங்காயம் - 250 கிராம்
* பப்பாசிக்காய் - 125 கிராம்
* போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
* கேரட் - 125 கிராம்
* வினிகர் - 3 கப்
* செத்தல் மிளகாய் - 5
* கடுகு - ஒரு மேசைக்கரண்டி
* உள்ளி - 5 பல்
* இஞ்சி - 2 இன்ச் நீளத்துண்டு ஒன்று
* உப்புத்தூள் - தேவையான அளவிற்கு
* மிளகுத்தூள் - தேவையான அளவிற்கு
* பெருங்காயம் - ஒரு துண்டு

செய்முறை
* கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி வினிகர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
* அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைக்கவும்.
* வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3") துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒருபாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின் தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின் காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி வைக்கவும்.
* பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து அதில் அரை கப் வினிகரை ஊற்றி அதனுடன் விதை நீக்கிய பச்சை மிளகாயை போட்டு அவிய விடவும்.
* பச்சைமிளகாய் அவிந்து வினிகர் வற்றியதும் அதிலிருக்கும் பச்சைமிளகாயை வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* பின்பு அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி வெங்காயத்தை போட்டு அவித்து வினிகர்வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி கேரட்டை போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில் விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
* கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை போட்டு நன்றாக கலக்கவும்.
* பின்பு அவித்த கேரட்டை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
* பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
* அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற விடவும்.
* அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.
* அதன் பின்பு அச்சாறு தயராகிவிடும் அதை தேவையான நேரங்களில் எடுத்து பரிமாறலாம்.

Page 4 of 5