Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் பொது அறிவு

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!!!

E-mail Print PDF

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,போதிய போசாகின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர்.

இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

Read more...

அழகுக் குறிப்பு - மூக்கு மற்றும் காது அழகு படுத்துவது எப்படி? அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

கிளி மூக்கு, குடை மிளகாய் மூக்கு, சப்பை மூக்கு, கோணல், கூர்மையான மூக்கு இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம்.

ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலைப்படத் தேவையில்லை.

மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அருக்குளிப்புபை (அசூசையை) ஏற்படுத்தும்.அதனால் முகம்வைத்து பார்க்கமாட்டார்கள்.

கடைகளில் விற்கும் பிளாக் ஹெட்ஸ் றிமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இறுகி இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்கமாட்டாது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

Read more...

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில...

E-mail Print PDF

“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது.  ”பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை” என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம்.

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Read more...

பாம்புக்கடியும் அதற்கான முதலுதவியும் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்தால் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் பாம்புக்கடியினால் வருடந்தோறும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுமிடத்து தேவையற்ற மரணங்ககையும், உபாதைகளையும் தவிர்க்கமுடியும்.

இலங்கையிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி இங்கு காணப்படுகின்ற அனைத்துப்பாம்புகளும் கொடிய விஷம் உள்ள பாம்புகள் என எண்ணுவது தவறானது. அவ்வாறு கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். தேவையற்ற தவறான முதலுதவிகள் செய்யப்படுமிடத்து விஷம் உடலில் அகத்துறிஞ்சும் தன்மையானது அதிகரிக்கப்படுகிறது.

உதாரணமாக, கடிபட்ட  இடத்தை கத்தியாலோ அல்லது ஏதாவது கூரான ஆயுதத்தாலோ வெட்டும் போது விஷமானது உடலில் அகத்துறிஞ்சும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் தோலில் காயத்தை ஏற்படுத்தும் ஏதாவது திராவகத்தாலோ கழுவும் போது absorption அதிகரிக்கப்படலாம்.

அத்துடன் அல்ககோல்(மது) உட்கொண்டாலோ அகத்துறிஞ்சல் வீதமானது அதிகரிக்கப்படும். எனவே முறைதவறிய முதலுதவிகளும் தேவையற்ற பழக்கவழக்கங்களும் உயிரிழப்புக்களை அதிகரிக்க காரணமாக அமைகின்றன.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில்  250 வகை பாம்புகள்தான் விசத்தன்மையுள்ளவை. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகையான்வை விஷத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15,000-20,000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.

விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.

இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.

ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.
இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snake
Russell viper
Saw- scaled viper
Common krait

நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.

1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.

2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.

3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.

4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.

5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.

6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.

7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.

8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.

9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.

மருந்துகள்:

விச முறிவு மருந்தை அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.

நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :
1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.

2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லாமை, தகுந்த சிகிச்சை அளிக்காமை ஆகியவையே.

3. உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

பாம்பில் இருந்து நஞ்சு எப்படி பாய்கின்றது? அதில் என்ன உண்டு
பாம்பின் வாய்
நச்சுத் தன்மையான பாம்புகள் பெரிய நீண்ட இரு பற்களைக் தமது மேல் தாடையில் கொண்டுள்ளன. இப் பற்கள் நஞ்சை பாச்சுவதற்காக துவார்ங்களைக் கொண்டுள்ளன. இதன் மூலம் உடலிலன் ஆழமான பகுதிகளுக்கு நஞ்சு பாச்சப்படுகின்றது.

பாம்பு மனிதனைக் கடிக்கும்போது நஞ்சானது தோலிக்கு கீழான கொழுப்பு கலங்கள் கொண்ட பகுதிக்கும், தசைகளை கொண்ட பகுதிக்கும் பாச்சப்ப்டுகின்றது.

சில பாம்புகள் மனிதனிம் கண்களை நோக்கி விஷத்தை பாச்சவல்லன.

பாம்பின் விஷத்தில் என்ன உண்டு?

இதில் 20 க்கு மேற்பட்ட பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அதிகளவானவை புரத மூலக்கூறுகள்.

1. இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய புரதங்கள்

2. குருதிக் குளாய்களை பாதிப்படையச் செய்யும் பதார்த்தங்கள்

3. உடற்கலங்களை இறக்கச் செய்யும் பதார்த்தங்கள்

4. குருதிக் கலங்கள், தசைக் கலனங்கள் போன்றவறை அழிவடையச் செய்யும் பதார்த்தங்கள்

5. உடல் நரபு கணத்தாக்க கடத்தலை பாதிக்கும் பதார்த்தங்கள்

பாம்பு கடிக்கும் போது எவ்வளவு நஞ்சு பாசய்ச்சுகின்றது?

இது பல காரணிகளில் தங்கியுள்ளது

*  வேறுபட்ட இன பாம்புகள் வேறுபட்ட அளவில் விஷத்தை கக்குகின்றன

*  பாம்புக்கடி ஆழம்

*  கடிகளின் எண்ணிக்கை

*  பாம்பின் பருமன் (ஒரே இனத்தில் பெரிய பாம்புகள் கூடிய விஷத்தை பாய்ச்சுகின்றன)

பாம்புகள் கடிப்பது தமை பாதுகாத்துக் கொள்வதற்கே. அவைகளை சீண்டாமல் விட்டால் அவை ஒன்றும் செய்யாது.

பாம்பு கடிப்பதற்கான காரணங்கள் சில:

*  பாம்புகள் இரவு வேளைகளில் அல்லது புதர்களில் இருக்கும்போது வெறும் காலோ அல்லது பாதுகாப்பற்ற காலணிகளால் மிதிக்கப்படும் போது
*  பாம்புகளை கையாளும்போது
*  வீட்டிற்கு இரவில் இரைதேடிவரும் பாம்புகள் மீது படுக்கையில் இருக்கும்போது கை கால் படும் போது

யார் பொதுவாக பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர்?

*  வேட்டையாடுவோர்
*  விலங்குகளை பராமரிப்போர்
*  விவசாயிகள்
*  இறப்பர், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்
*  மீன்பிடிப்போர்
*  பாம்புகளை கையாளுவோர்

பாம்புக் கடியில் இருந்து எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்?

1. உள்ளூர் பாம்புகள் பற்றிய அறிவை வளர்த்தல் (அதாவது மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் என்னென்ன பாம்பு வகைகள் இருக்கின்றன?, அவை எந்தக்காலப்பகுதியில் என்ன நேரத்தில் அதிக நடமாட்டம் செய்கின்றன, எப்படிப்பட்ட இடத்தில் மறைந்து வாழ்கின்றன என்ற தகவல்களாகும்.)

* பாம்புகளின் வகைகள் (பாம்பைப்பற்றிய கல்வியறிவு மக்களுக்கு புகட்டப்பட வேண்டும்)

* பொதுவான வாழிடங்கள் (கல் குவியல்கள், விறகுகள், மரங்கள் குவித்து வைத்துள்ள இடங்கள்)

* இரைதேடும் காலம் பகல்/இரவு

* அதிகமாக வெளியே உலாவும் காலம்

2. அதிகமாக பம்புக்கடி ஏற்படும் சந்தற்பங்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல்

* மழைக் காலத்திற்குப் பின்னர்

* வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது

* அறுவடைக் காலம்

* இரவு வேளை (இரவில் நடந்து செல்லும் போது போதியளவு வெளிச்சத்துடன்(Torch light) செல்வது விரும்பத்தக்கது)

3. இரவில் புதர்களுக்கருகில் நடக்கும்போது பாம்புக்கடியில் இருந்து தப்புவதற்காக பாதணிகள் மற்றும் நீள காற்சட்டைகளை குறிப்பாக இரவில் பாம்பு நடமாட்டம் உள்ள இடத்தில் செல்வதாயின் அணிந்து செல்வது

4. நிலத்தில் படுத்து உறங்குவதை தவித்தல்

5. இறந்த பாம்புகளை கவனமாக கையாளுதல்

6. வீட்டையும் அதன் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் (
வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் குறுகிய கால இடைவெளிகளில் தூய்மையாக்குவதன் மூலமும் பாம்புகள் வருவதை தவிர்க்க முடியும்)

முதலுதவி:
முதலுதவியின் நோக்கங்கள்

1. நஞ்சு குருதிக்குள் உள்ளெடுக்கப்பட்டு உடலெங்கும் பரவுவதை தடுத்தல்

2. மருத்துவ உதவியை நாடும்வரை பாம்பு கடித்தவரை பாதுகாத்தல்

3. பாம்பு கடியில்  உடனடியாக உடலில் ஏற்படும் அறிகுறிகளை தடுத்தல்

4. வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல ஒழுங்குகள் செய்தல்

தவிக்க வேண்டிய தவறான செயல்பாடுகள்

1. பாம்புக் கடி ஏற்பட்ட இடத்தை வெட்டி குருதியை வெளியேற்றுதல்

2. காயத்திலிருந்து விஷத்தை வாயால் உறுஞ்சி எடுத்தல்

3. கடிபட்ட இடத்தை இறுக்கி துணியால் கட்டுதல்

4. மின் அதிர்ச்சி வழங்கல்

5. இரசாயனப் பதார்த்தங்களை காயத்தில் பூசுதல்/விடுதல் அல்லது குளிர் கட்டிகளை காயத்தில் வைத்தல்
(இவை சில சமயங்க்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இவை கூடுதலக தீமையே விளைவிக்கின்றன.)

ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலுதவி முறைகள்:

1.  கடிபட்டவரின் பயத்தைப் போக்குதல். பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கலாம்

*  பெரும்பாலான் பாம்புகள் விஷமற்றவை

*  பாம்புக் கடி எல்லாவற்றிலும் விஷம் பாச்சப்படுவதில்லை

*  பாய்ச்சப்படும் நஞ்சு சில வேளைகளில் போதுமானதாக இருப்பதில்லை

*  இதற்கு எதிர் மருந்து வைத்தியசாலையில் உண்டு

2. கடிபட்ட பகுதியை அசையாமல் பாதுகாத்தல். ( அசைவு நஞ்சின் அகத்துறுஞ்சலை அதிகரிக்கும்)

3. பண்டேஜ் மூலம் காயப்பட்ட இடத்தை இறுக்கிக் கட்டல்
அதிக இறுக்கததை தவிர்க்க வேண்டும். இதை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கும்வரை கழற்றக் கூடாது (சில பாம்பு கடிகளுக்கு இவ்வாறு செவதால் அது கடிக்கப்பட்ட பகுதியில் கலங்களின் அழிவை தூண்டும்)

4. கடிபட்ட அங்கத்தில் நகைகள் அல்லது நூல்கள் கட்டப்பெற்றிந்தால் அவற்றை கழற்றுதல்

5. கடி காயத்தை சீண்டாமல் இருத்தல் (சீண்டுவதால் தொற்றுக்கள் அதிகரிப்பதுடன் நஞ்சின் அகத்துறிஞ்ச்சல்லும் அதிகரிக்கும்)

6. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லல்
செல்லும்போது:

உடனடியாக வைத்தியசாலையை நாடுவது முக்கியமாகும்.

*  கடிபட்ட அங்கத்தை கூடியளவு அசைக்காது பார்த்துக் கொள்ளல்
*  வாகனங்களை உபயோகித்தல் அல்லது நோயாளியை தூக்கொச் செல்லல்

அத்துடன் கடித்த பாம்பினை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது விரும்பத்தக்கது.

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள்

E-mail Print PDF

குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர் கையில்

ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தம் குழந்தை தனது வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, உலகிலுள்ள மற்ற அனைவருடனும் அன்புடனும் நட்புடனும் பெரியவனாக நல்வாழ்வு வாழ வேண்டும் எனவே விரும்புகின்றார்கள். அதற்காக அவர்கள் இறைவனை வேண்டவும் தவறுவதில்லை.

இந்தப்பணி அன்னையின் கருத்தரிப்புக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது முதலில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பதற்கு அன்னை எவ்வாறு வாழ வேண்டும், எந்த வகையான உணவு உண்ண வேண்டும், எப்படிப்பட்ட உடற் பயிற்சிகளையும் பிற மருத்துவ உதவிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வது அவசியம்.

குழந்தை பிறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தையின் ஆரோக்கியத்தை அறிதல், அதற்கேற்றபடிக் குழந்தையைப் பராமரித்தல் ஆகியவற்றைப் பெற்றோர் அறிந்து பின்பற்ற வேண்டும்.

குழந்தை வளருகையில் அதற்கேற்ற உணவு, உடை, மற்றும் இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள செவ்வனே பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைக்கு நோய்கள் வராமல் தடுக்கத் தேவையான மருத்துவ உதவிகள் எவை? அவற்றை எப்பொழுது கிடுக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் அவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டும். குழந்தைக்கு வளர்ச்சிக்கேற்ற சத்தான சரிவிகித உணவு தருவது மிகவும் இன்றியமையாதது, அதிலும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.

ஒரு பெண் வாழ்நாளில் தன் பெண்மையின் பெருமையை முழுமையாக உணர்ந்து அகம் மகிழும் தருணம் தான் பெற்ற பிள்ளையை மார்போடு அணைத்து மகிழும் நேரமாகும். அத்தாய் தன் குழந்தையை நன்கு வளர்க்க அவள் முதலில் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டிய கடமை தந்தையுடையதாகும்.

தாயின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியம், அதிலும் குறிப்பாக, குழந்தை தாய்ப்பால் உண்டு வளரும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள பந்தத்தைப் போல் உலகில் பேரின்பம் தரும் பொருள் வேறெதுவும் கிடையாது.

அத்தகைய பந்தம் சிறப்பாக அமையத் தாய் தன் குழந்தையுடன் அதிகபட்ச நேரத்தைச் செலவிட வேண்டும். அந்தக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்க வைப்பது, பேசச் சொல்லிக்கொடுப்பது போன்றவற்றில் மிக்க அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய சமயங்களில் தந்தையும் தாயுடன் சேர்ந்துகொண்டு குழந்தையுடன் பொழுதை இனிமையாகக் கழிப்பதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை வளர வளர, பிறருடன் பயமின்றி நேயமாகப் பழக வாய்ப்பளிக்க வேண்டும். இந்த உலகத்தோடு ஒன்றி வாழப் பழக்க வேண்டும். குழந்தையின் மன வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மறைத்து விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளாத வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.

* குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

* கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். பதிலாக கொசு வலை பாவிக்கலாம். கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

* ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது ஆணுடம்பின் தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

* தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள். குழந்தை உள்ளே விழ சாத்தியம் இருக்கிறது.

* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் கறியை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, * கறி குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் அவிந்து விட்டது.

* கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

* பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் * தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

* வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

* மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

* மொபைல், எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

* இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் * கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

* சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க * ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.

* ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

* சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

* வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்

* சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

* ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.

* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

* எங்கேயாவது மோட்டார் சயிக்கிளில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது மோட்டார் சயிக்கிளில் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்.

* வீட்டில் மோட்டார் சயிக்கிளில் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை.மோட்டார் சயிக்கிளில் மூடி வைக்கலாம்.

* கார், வான் வைத்திருப்போர் வாகனத்தை பின்னுக்கு அல்லது முன்னுக்கு எடுக்கும் போது அவதானமக இருங்கள். குழந்தைகள் உங்க்களுக்கு பின்னால் வந்து நிற்கலாம். நீங்களே உங்கள் பிள்ளையை உங்கள்  வாகனத்தால் நசிக்கவும் ஏற்படும்.

* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

* குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.

* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.

* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

* துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.

* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

* குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.

* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.

* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.

* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

* நெருங்க்கிய உறவுகளில் திருமணம் செய்து கொள்வதால் பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.

* சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக் குறைவு, தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.

* குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்

* மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. ஊற்றி விடவும்.

* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.

நன்றி

1548.22.01.2915

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம்

E-mail Print PDF


முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?
“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?
“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?
“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?
“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?
“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?
“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?
“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”

Page 3 of 8

முத்துமாரி அம்மன் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்