Saturday, Jul 22nd

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் பொது அறிவு

தனியாக இருக்கும் போது மாரடைப்பு! - வந்தால் என்ன செய்யலாம்?... யுக்தி அறிமுகம்

E-mail Print PDF

வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்வோர் அவசர மருத்துவ சேவையை அழைப்பதன் மூலம் உடனடியாக வைத்திய உதவிகளைப் பெறுகின்றனர். இவ் வசதி எம் தாய் நாடுகளில் இல்லாதிருப்பதால் உடனடியாக நாம் ஏதாவது உபாயம் செய்து வைத்திய உதவி கிடைக்கும்வரை இருதயத்தை செயல்பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கின்றோம். அதற்கான ஒரு யுக்தியை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன் விபரம் கீழே விபரிக்கப் பெற்றுள்ளது.

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாகவே இருந்திருந்திருக்கின்றார்கள். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.  இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை  இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது.

இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம்.  பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....? வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம, ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்.?

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமுதல் வேண்டும்”, ஒவ்வொரு முறை இருமலுக்கும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில் அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.. தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!

நன்றி

1268.23.04.2015

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள்

E-mail Print PDF

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

Read more...

எச்.ஐ.வி பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்ட - எச்.ஐ.வியோடு வாழும் தமிழ் பெண்ணின் உணர்வுகளின் வெளிப்பாடு

E-mail Print PDF

உலகளாவிய சுகாதார அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் 25வது உலக எயிட்ஸ் தினத்தை இன்று அனுட்டிக்கின்றன.

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் கூட்டங்களும் உலகெங்கிலும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொடிய நோயான எயிட்ஸ் தொற்று கட்டுப்படுத்தப்படக் கூடிய நிலையின் தொடக்கத்தில் இருப்பதாக ஹெச்ஐவி/எயிட்ஸ் தொடர்பான ஐநா நிகழ்ச்சித் திட்டத்தின் தலைமை இயக்குநர் மிச்சல் சிடிபெ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எயிட்ஸ் மற்றும் ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைக்கும் போக்கு இன்னும் சமூகத்தில் நிலவுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 34 மில்லியன் பேர் (3 கோடியே 40 லட்சம்) ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரிந்தோ தெரியாமலோ எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுவிட்டால்; உலகிலேயே மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள் போலவே பாதிக்கப்பட்டோரை நோக்குவதே அனேகரது இயல்பாக இருக்கிறது. சமூகத்தின் நச்சுப்பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக எந்தவொரு எய்ட்ஸ் நோயாளியும் தன்முகத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை.

நோயாளியின் நலனுக்காக மருத்துவ வட்டாரங்களும் அவர்களை வெளிப்படுத்த முனைவதில்லை. ஆனாலும் துணிச்சலோடு அந்த இரும்புத் திரையை விலக்கிக்கொண்டு எய்ட்ஸ்க்கு எதிராக விழிப்புணர்வு செய்து வருகின்றார் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி தமிழ் (வயது 35) என்கின்ற எச்.ஐ.வியோடு வாழும்பெண்.

Read more...

ஆறு வகையான "ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்

E-mail Print PDF

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

Read more...

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity) எமது உடலில் எவ்வாறு செயல்பெறுகின்றது

E-mail Print PDF

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)
இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

Read more...

ஆண்களை கொல்லும் Hemophilia நோய் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

"X" குரோமோசோம்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஆண்கள் "ஹீமோபீலியா" நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 89 பேர் ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டு உள்ளது, மருத்துவத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது ஹீமோபீலியா பற்றிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக இந்நோய் தாக்குதலால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை கூறுகிறது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, X குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய்.

ஏனெனில், ஆண்களின் உடலில் "x" மற்றும் "Y" குரோமோசோம்களும், பெண்களுக்கு "X" மற்றும் "X" குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு 'X' குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபீலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும்.

காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும். இதுதான் ஹீமோபீலியாவின் அறிகுறி. உடலின் மற்ற பகுதிகளில் ரத்தக்கசிவு இருந் தாலும் பிழைக்க வைத்து விட முடியும். ஆனால் மூளை, வயிறு பகுதிகளில் உள்பக் கம் ரத்தக்கசிவு இருந்தால் மரணம் நிச்சயம்.

மரபணுவில் ஏற்படும் பாதிப்பு என்பதால், ஹீமோபிலியா நோய் உண்டாவதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு என்றாலும், குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட பெண்கள் காரணமாக உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் 89 பேர், ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது வாரந்தோறும் சராசரியாக 2 அல்லது 3 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவது அதிகரித்துள்ளது.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஃபேக்டர்,8 மற்றும் ஃபேக்டர்,9 ஊசி போட வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ.5000. ஊசி, மருந்துகளின் விலை அதிகம் என்பதால் 95 சதவீத தனியார் மருத்துவமனைகள் ஹீமோபீலியாவுக்கு சிகிச்சை அளிப்பதில்லை.

ஃபேக்டர்,8 மருந்து இல்லாவிட்டால், ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ''ஃபிரெஷ் ஃபுரோஸன் பிளாஸ்மா''வை (Fresh Frozen Plasma) பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தலாம்.

இதுவும் இல்லாவிட்டால், பிளாஸ்மாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ''கிரியோபிரசிபிடேட்''டை (Cryopreci pitate)ஊசி மூலம் செலுத்த வேண்டும். இந்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ரத்தக்கசிவு ஏற்படும்போது தேவையான ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் உயிர் வாழ முடியும். சிகிச்சை பெறாவிட்டால் உயிர் பிழைக்க முடியாது.

Page 2 of 8

முத்துமாரி அம்மன் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்