Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

தைப் பொங்கல் வாழ்த்துக்கள் - 14/15.01.2015

E-mail Print PDF

நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கையை பேணிக் காக்கும்  ”சூரிய பகவானுக்கு” விருந்து படைத்து நன்றி கூறும் இத் ”தைப்பொங்கல்” திருநாளில்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை,  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து; எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம்மூர் சிறார்களின் வளர்ச்சிக்காக தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் எம்மூர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவருக்கும்;

நன்றிகளும், வாழ்த்துக்களும் கூறி அவர்கள் சேவையை உள்அன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” குறள்


எல்லோரும் எல்லாமும் பெற்று நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு வேண்டியவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை கீழே பதிவிலிட்டு பரிமாறிக் கொள்ளலாம்

2015 - ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஜோதிட குறிப்புகளுடன் - பணிப்புலம்.கொம்

E-mail Print PDF

2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்கள் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும்.

சனிபகவான் 3-ம் இடத்தில் உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும்.

கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் குறையும். ஆன்மிகம் வளரும். மேஷத்தில் சந்திரனும், மகரத்தில் செவ்வாயும் அமைந்து செவ்வாய், சந்திரனை பார்வை செய்வதால் சில அரசியல் பிரமுகர்களுக்கு சோதனை கட்டமாகவும், இயற்கை சீற்றம் வரவும் வாய்ப்புண்டு.

பொதுவாக கேந்திரத்தில் புதன், சூரியன் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்” அடைந்ததால், கல்விதுறை பெரும் முன்னேற்றம் அடையும். உணவு பொருட்களின் விலை கூடுதலாகும். அன்னியர்களின் அத்துமீறல் அடங்கிவிடும். இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான, எழுச்சியான புத்தாண்டாக இருக்கும்.

Read more...

நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் - 2014

E-mail Print PDF

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய்

அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய்

பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த

பாலன் யேசு பிறந்த இவ் இனிய

நன்நாளை நத்தார் பண்டிகையாக கொண்டாடும்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்

எங்கள் மகிழ்ச்சி பொங்கிய  நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

Merry Christmas

பணிப்புலம்.கொம்

 


 

இன்பம் பொங்கும் தீபாவளி வாழ்த்துக்கள் - 29.10.2016

E-mail Print PDF

இன்பம் பொங்கும் இத் தீபாவளித் திருநாளில்

எமது பேரன்பிற்கும், நல் மதிப்பிற்கும், நல் உறவிற்கும் உரிய

வாசகர்கள், பங்காளிகள், நேயர்கள், உறவுகள், ஊர்மக்கள், புலம் பெயர்ந்து வாழும்

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்

"எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்"

தீபாவளி வாழ்த்து

தீப ஒளி வீசும் இந் நன்னாளில்
ஞான ஒளி தேடி வேண்டுவோம்

அஞ்ஞான இருள் நீங்கி என்றும்
விஞ்ஞானம் நிறைந்த இவ்வுலகில்

மெய்ஞானம் கொண்டு வாழ
சொற்சுவையுடன் இறைவனைப் பாடி

அறுசுவைப் பண்டங்களுடன் அவனை நாடி
அருஞ்சுவையாம் அவன் அருள் பெறுவோம்!

தன்னை எரித்துக்கொண்டு தீபம்
உன்னை ஒளியோடு வாழச்செய்யும்

தியாகத்தை உணர்த்தும் தீபாவளி
ஞாலம் போற்றும் திருநாளாம்!

மாலுக்கும் மண்ணின் தாய்க்கும் பிறந்து
பாலூட்டி வளர்த்தாலும் தன் மகன்

அசுரனானதால் அவன் தாய்முன்னேயே
வதைத்த கண்ணனைப் போற்றும் பெருநாள்!

உலகிலேயே சிறந்த சுவை இனிப்பு
இனிப்புடன் நாம் என்றும் உறவாட

வெடிகொண்டு இவ்வுண்மையைப் பறைசாற்றி
இன்பமாய் வாழ்வோம் பல்லாண்டு!

பணிப்புலம்.கொம்

"அஷ்டலக்ஷ்மிகளின் தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"

பணிப்புலம்.கொம்
"பணி செய்வதே பணி"

உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை கீழே பதிவிலிட்டு பகிர்ந்து கொள்ளலாம்

நன்றி

 

 

 

 


உலகத் தொழிலாளர்களின் தியாகத்தில் உருவானதே தொழிலாளர் தினம் எனும் "மே தினம்"

E-mail Print PDF

பார் முழுதும் வாழும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு  மருந்து போட்ட நன்னாள்,..  காலவரையற்ற உழைப்பு,  மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த உன்னத நாளே மே 1 தொழிலாளர் தினம்….

மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாக, விடியல் நாளாக, விடுமுறை நாளாக, ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது. அந்த விடியல்; உலகம் முழுக்க வியாபிக்க 33 ஆண்டுகள் பிடித்தது. 1889ஆம் ஆண்டு உலகம் முழுதும் ஒட்டுமொத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

Read more...

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஜய வருஷப் பிறப்பு கருமங்கள் - 14.04.2014

E-mail Print PDF

ஓம்


"ஜய" புத்தாண்டே வருக வருக, துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்க அருள் தருக

வாக்கிய பஞ்சாங்கப்படி ஜய வருஷப்பிறப்புக் கருமம் (இலங்கை நேரப்படி)
கலியுகாதி சுத்ததினம் 1868296, நாடி 00 வினாடி 12, தற்பரை 30க்குச் சரியான ஜய வருஷம் சித்திரை மாதம் 01திகதி (14.04.2013) திங்கட்கிழமை காலை நாடி 00 விநாடி 12 (06 மணி 11 நிமிடத்திற்கு ) பூர்வபக்க சதுர்த்தசித் திதியில், அத்தநட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் வியாகாத நாமயோகத்தில் வணிசக்கரணத்தில், மேடலக்கினத்தில், மேடநவாம்சத்தில், சந்திரன் காலவோ ரையில், சந்திர  சூக்குமவோரையில், சாத்விககுணவேளையில் நட்சத்திரபட்சி யாகிய காகம் நடைத் தொழிலும் சூக்கும பட்சி நடைத்தொழிலும் செய்யுங் காலத்தில் இப்புதிய ஜய வருஷம் பிறக்கிறது. முதல் நாள் இரவு நாடி 50 விநாடி 12 (மணி 2.11) முதல் அன்று முற்பகல் நாடி 10 விநாடி 12 (மணி10.11) வரை விஷ{ புண்ணியகாலமாகும்.

இப்புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் ஆலமிலை, காலில் விளாவிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து வெண்மை, சிவப்பு நிறமுள்ள பட்டாடையாயினும், வெண்மை, சிவப்புக்கரை அமைந்த புதியபட்டாடையாயினும் தரித்து பவளம்,முத்து இழைத்த ஆபரணமணிந்து வழிபாடு செய்க.

புதுவருடப்பிறப்பு :14-04-2014 திங்கட்கிழமை
நேரம் :காலை 06.11 மணி
புண்ணியகாலம் :அதிகாலை மணி 02.11 முதல் முற்பகல் 10.11 வரை  

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஜய வருஷப்பிறப்புக் கருமம் (இலங்கை நேரப்படி)
ஜய வருஷம் சித்திரை மாதம் 01-ம் திகதி (14-04-2014) திங்கட்கிழமை காலை உதயாதி நாழிகை 03.56 மணி காலை 07.36இல் "ஜய” என்னும் பெயருடைய புதுவருஷம் பிறக்கின்றது. அன்று நட்சத்திரம் அத்தம் 2-ம் பாதம், திதி பூர்வபக்க சதுர்த்தசி, சித்த யோகம். இது 60 வருட சுற்று வட்டத்தில் 28 ஆவது வருஷமாகும். அன்று திங்கட்கிழமை அதிகாலை நாழிகை 53.56 (மணி 03.36) முதல் பகல் நாழிகை 13;.56 (மணி 11.36) வரையும் மேட சங்கிரமண புண்ணியகாலம் ஆகும். வருஷம் பிறக்கும் போது உதயலக்கினம் "மேடம்” ஆக அமைகின்றது.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்து நீர் வைத்து தலையில் விளா இலையும், காலில் கடம்பமிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து, வெண்ணிற பட்டாயினும் அல்லது வெள்ளைப் புது வஸ்திரமாயினுந் தரித்து, முத்து சேர்த்து இழைக்கப்பட்ட ஆபரணங் களையணிந்து, நித்திய அனுட்டானம் முடித்து, கண்ணாடி, தீபம், பூரண கும்பம் முதலிய மங்கலப் பொருட்களைத் தரிசித்து, விநாயகர் முதலிய இஷ்டகுல தெய்வங்களைத் தரிசனம் செய்து, புதுவருட சூரியனுக்கு பொங்கல், பூசை செய்து, இயன்ற தானாதிகள் வழங்கி, குரு, பெற்றோர் முதலிய பெரியோர்களை வணங்கி, அவர்கள் ஆசிபெற்று, பிதிர் விரதானுசாரிகள் சிரார்த்தம், தர்ப்பணம் என்பன செய்து, நண்பர்கள், விருந்தினர்களை வரவேற்று, உபசரித்து, சுற்றத்தினருடன் இருந்து பால்பாயசம், தயிரன்னம், நெல்லிக்காய்த் துவையல் முதலியவற்றுடன் அறுசுவைப் பதார்த் தங்களையும் போஜனஞ் செய்து, தாம்பூலமருந்தி, சுகந்த சந்தன புஸ்பாதகளையணிந்து, புதுப்பஞ்சாங்க பலன்களைக் கேட்டு புதுவருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச் சிந்தித்து மங்களகரமாக வாழ்வார்களாக.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்: ரோகிணி, உத்தரம் 2ம், 3ம், 4ம் கால்கள்;, அத்தம், சித்திரை _ 1ம், 2ம் கால்கள், திருவோணம், அவிட்டம் 3ம், 4ம் கால்கள், சதயம், பூரட்டாதி 1ம், 2ம், 3ம் கால்கள்;.

புதுவருடப்பிறப்பு: 14-04-2014 திங்கட்கிழமை காலை 07.36 மணி
புண்ணியகாலம்: அதிகாலை மணி 03.36 முதல் பகல் மணி 11.36 வரை.

கைவிசேடம்:
14.04.2014 திங்கள் உதயம் 06.02 முதல் 07.30 வரை - பகல்   10.00 முதல் 12.05 வரை
16.04.2014 புதன்   உதயம் 06.01 முதல் 07.37 வரை

”ஜய வருஷம்” எனும் புதிய புத்தாண்டு எதிர்வரும் 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளிலும்; 14.04.2014 திங்கட்கிழமை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் பிறப்பதாக சோதிடம் கணித்துள்ளது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ்-இந்துக்களின் புது வருடப்பிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.

ஆலயத்தில் நாம் அங்கப்பிரதஷ்டை செய்யும்போது நாமும் சுழன்று கொண்டு ஆலயத்தையும் சுற்றி வலம்வருவதுபோல்; பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம்வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. இத்தினத்தையே சிங்கள பௌத்த மதத்தினரும் இந்து மதத்தினரைப்போல் தமது புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். (இயற்கையாகவே பூமியும் எல்லாக் கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்ற போதிலும்; பூமியை  சுற்றியுள்ள  Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் கற்பனையான இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கின்றது.)

இப் பூவுலகம் தோன்றியதில் இருந்து பூமியானது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. சூரியனும், பூமியும் கோள வடிவினதாகவும், ஈர்ப்பு விசையுடன் சுழன்று கொண்டு இருப்பதனால் அவை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் சுற்றத் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அப்படி வந்தும் (திரும்பவும்) தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதனால்  சுற்று ஆரம்பித்த அந்த நிகழ்வானது பிறப்பாகவும், அச்சுற்றை திரும்பத் திரும்ப ஆரம்பிக்கும் தினம் பிறந்த தினமாகவும் கொண்டாடுவதாக கூறலாம். அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (பூமியின் பிறந்த நாளே) சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

Read more...

Page 3 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்