Saturday, Jun 24th

Last update08:56:50 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

"மே தினம்" எனும் தொழிலாளர் தினம்

E-mail Print PDF

Image may contain: one or more people, crowd, tree and outdoor

மே தினம் என்பது; பார் எங்கும் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனுபவித்த வலிக்கு பல சிகிச்சைகள் மூலம் நலன் பல பெற்ற நன்நாள் என்றும், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாள் என்றும் கூறலாம். இத்திருநாள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி மாபெரும் பேரணிகளுடன் இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் கொண்டாடப் பெற்று வருகின்றன.

Read more...

"பக்தி இசை வேந்தன் " T. S. ஜெயராஜனின் புதிய படைப்புகள் - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

நோர்வே நாட்டில் வசித்துவரும் எம்மூர் கலைஞன் "பக்தி இசை வேந்தன்" T. S. ஜெயராஜன் அவர்கள் பொன்னாலை வரதராஜப் பெருமாள், செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்கள் மேல் பாடப்பெற்ற பக்திப் பாடல்கள்  வெளியாகியுள்ளன.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும், செல்வச்சந்நிதி ஆலயத்திலும் இவ் இசைத்தட்டுகள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. விற்பனையில் பெறப்படும் பணம் முழுவதும் அவ்வவ் ஆலயங்களின் திருப்பணிக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதனயும் அறியத்தருகின்றோம்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

சென்னையில் நடைபெற்ற பத்மசிறி சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவில் கௌரவிக்கப்பெற்ற "சாந்தயூர் பக்தி இசை வேந்தன்" வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

சர்வதேச மகளீர் தின கொண்டாட்டம் - காரணங்களும், சாதனைகளும் - 08.03.2017

E-mail Print PDF

Image may contain: text


ஒவ்வொரு வருடமும் மார்ச் 8–ம் நாள் உலகம் முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது. இத் தினம் ஆரம்பத்தில் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து கொண்டாடினாலும்; பிற்காலத்தில் அவ்வப்போது பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை, அவமானங்களை முன்வைத்து உலக நாடுகளில் பல்வேறுபட்ட தொனிப்பொருளில்  கொண்டாடி வருகின்றார்கள்.

1857 ஆம் ஆண்டு நியோர்க் ஆடைத் தொழிற்சாலையில் பெண்கள் 16 மணித்தியாலங்களும் ஆண்கள் 10 மணித்தியாலங்களும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற் கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 1911 ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில் மகளீர் தினம் கொண்டாடப்பெற்றது.

பழங்காலத்தில் கிரேக்க போரை முடிவுக்கு கொண்டுவர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுகந்திரம்,சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெண்கள் தினம் கொண்டாடுவது கடைபிடிக்கப்பட்டது.

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-ல் கொண்டாடப்பட்டது. அதன் பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுகிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது.  1910 ம் ஆண்டில் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடி பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1911 மார்ச்19 ல் முதல் சர்வதேச பெண்கள் தினம் இலட்சக்கணக்கான பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்கு சென்ற இடத்தில் கருகி இறந்தனர்.இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.

இந்த சர்வதேச மகளீர் தினத்தை உலக நாடுகளில் ஒரே தினத்தில் கொண்டாடவேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு தொடக்கம் ஒரே தினத்தில் இத்தினம் அணுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் திட்டங்கள், லட்சியங்கள்  உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது.

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில் உள்ளதோடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கம், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சியே அவைகள். நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்களென முண்டாசு கவிஞன் பாரதி முழங்கினான். அதனை இன்று உலக நாடுகளே ஏற்றுக் கொண்டு விட்டது.

இம்முறை கொண்டாடப்படும் சர்வதேச மகளீர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கல்வி பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழிநுட்பத்தில் சமத்துவ வாய்ப்பு, பெண்களுக்கு கண்ணியமான வேலைக்கான வழி எனும் தொணிப்பொருளில் கொண்டாடுகின்றது.

இத்தினத்தில் உலக நாடுகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்கப்பட்டு வருகின்றதை நாமனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் இத்தினத்தை பாரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் பெண்களின் உரிமைகள் பேரளவில் மட்டுமே பேணப்படுவதாக அறிய முடிகின்றது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடுகள் பல நாடுகளில் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி பல்வேறுபட்ட பெண்கள் உரிமை மீறல் செயற்பாடுகள் நாளாந்தம் அதிகரித்தவன்னமேயுள்ளதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம்.

பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவது இ அவர்கள் கடத்தப்படுவது, அச்சுறுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது என பலவகையான துன்புறுத்தல்களுக்க உள்ளாக்கப்படுவது குறைந்தபாடில்லை. இலங்கையைப் பொருத்தமட்டில் கடந்த சில காலங்களாக பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளமையை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கு வறுமை, யுத்தம், ஆணாதிக்கம், பெண்கள் தனிமைப்படுத்தப்படல், அழகு போன்ற சில காரணங்களும் வழிசமைக்கின்றன.

பெண்களின் பிரச்சினைகளுக்க முதலில் வறுமை ஒரு காரணமாகும். இக்காரணமாக இந்த வறுமை அவர்களின் துஸ்பிரயோகத்திற்கு வழிவகுத்து அதன் இறுதிவடிவம்   வாழ்வின்   மரணத்திற்கு  இட்டுச்செல்கின்றது.

வறுமைக்கு அடுத்ததாக யுத்தமும் ஒரு காரணமாகும் ஒவ்வொரு நாட்டிலும் யுத்தம் இடம்பெறுகின்றபோது யுத்தக் காரணம் எதவாக இருந்தாலும் அதில் பங்கு கொள்பவர்கள் யுத்தத்தைக் காரணமாக வைத்து பெண்களை துன்புறுத்தவும், அவர்களுக்கு அடிபணியவைப்பதும், பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தல் விதவைகளாக்குதல், அநாதைகளாக்குதல், மனச்சஞ்சலத்திற்குள்ளாக்குதல், ஈற்றில் அவர்களை கொலை செய்தல் என்பன சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றமை நாளாந்தம் தொலைக்காட்சி, வானொலி இபத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களினூடாக நாம் காண்கின்றோம்.

இதேபோல் சமுதாயத்தில் ஆண் ஆதிக்கம் அதிகரிப்பதால் பெண்கள் அவர்களுக்கு அடிபணியும் நிலைமை ஏற்படுகின்றது இதன்காரணமாக அவர்களை அவர்கள் தொழில்புரியும் இடங்கள், கல்வி கற்கும் நிலையங்கள் போன்ற இடங்களில் அவர்கள் இலகுவாக துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான இடங்களில் ஏற்படும் பாதிப்புகளில் அதிகமானவை வெளிவருவதில்லை காரணம் அச்ச நிலைமையும் காரணமாக அமைகின்றது.

அடுத்து பெண்கள் தனிமைப்படுத்தப்படல் அவர்களுக்கு உரிய பாதுகாவளர்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்பவர்கள் சில நேரங்களில் இனங்காணப்பட்டாலும் அவர்கள் உரிய முறையில் தண்டணைகளை அனுபவிப்பதில்லை. குறிப்பாக சிலவேளைகளில் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் கண்டும் காணாதுபோல் இருத்தல், ஆட்சி அதிகாரங்களில் உள்ள அரசியல் செல்வாக்குடையவர்கள் அதிலிருந்து பாதுகாக்கப்படல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள், பணம் படைத்தவர்களின் செல்வாக்கு  காரணமாக அதிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்தும் அந்தச் செயல்களில் ஈடுபடுவதற்கு வழிகோலுகின்றதுடன் பெண்களின் சிரழிவுக்க அவை மேலும் வழுவூட்டும் செயலாக அமைகின்றது.

கடந்த பல தஸாப்தங்களை நாம் எடுத்துக் கொண்டால் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வழி நடாத்தப்பட்டு வந்த சந்தர்ப்பங்களை நாம் வரலாறுகள் மூலம் கற்றுக்கொண்டுள்ளோம். இதற்கு ஒரு சில சமயங்களும் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது. அவர்களுக்கு உரிய பங்களிப்பை வழங்காது எல்லாவற்றிற்கும் கட்டுபாடுகளும், முட்டுக்கட்டைகளும் கொடுக்கப்பட்டதால் அவர்கள் தமது ஆற்றல்களை சமுதாயத்தின் முன் கொண்டுவர முடியாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் இன்றய சமுதாயத்தில் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் பங்களிப்ப இல்லாத துறை இல்லையெனலாம்.

அந்தளவுக்கு முன்னைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சமுக கட்டமைப்ப உருவாகியுள்ளது. கடந்த தஸாப்தங்களில் பெண்கள் தாழ்த்தப்பட்ட, பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, வேலை பார்க்கமுடியாத நிலை, கருத்துக் கூற முடியாத  நிலை உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே பல துன்பியல் நிலமைகளுக்குட்பட்டவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பெண்களைப் பொருத்தமட்டில் இன்றைய நூற்றாண்டுகள் ஏதோ ஒருவகையில் ஜனநாயக உரிமைகளைப்பெற்று ஆண்களுக்கு ஈடாக சமசந்தர்ப்பம் பெற்றவர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக தொழில் புரியக்கூடடிய உரிமைகள், பல அமைப்புகளுக்க தலைமை தாங்கும் சக்தி, பல நிறவயங்களை வழி நடத்தக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளமை, அரசியல்வாதிகளாக உள்ளமை, அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றவர்களாக காணப்படுகின்றமை, விஞ்ஞானிகளாக காணப்படல் போன்ற  பல துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது  மட்டுமல்லாது  பெண்கள் இன்று விண்வெளிக்குச் செல்லும் அளவிற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது மட்டுமல்லாது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனினும் இவ்வாறு இந்நூற்றாண்டில் சமுதாயத்தில் முன்நின்றாலும் பெண்கள் அன்று தொட்டு இன்றுவரை அவர்களுக்க எதிரான வன்முறைகளுக்கு இலக்கானவர்களாகவே காணப்பட்டுவருகின்றமை மனக்கசப்பிற்கு உட்பட்டதொரு விடயமாகும். குறிப்பாக பெண்வர்க்கம் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற அராஜகம், வக்கிரத்தன்மை, என்பன மறைமுகமாகவும், நேரடியாகவும் பெண்கள் மீது அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இன்றைய கால கட்டத்தில் அதிகளவான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்று வந்தாலும் அவற்றில் கணிசமானவை ஊடகங்கள் வாயிலாக வெளிவருவதில்லை அதற்கு சில காரணம்களுமுண்டு குறிப்பாக  அரசியல் செல்வாக்கும், ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் காரணமாக அமைகின்றன.

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும்  துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கு மேற்கத்தைய நாகரீகங்களும், கலாச்சார சீரழிவுகளும்  முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஏனெனில் அவர்களுது கலாச்சாரத்தில் ஆணும் பெண்ணும் பொது இடங்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை காணப்படுகின்றது. அதனை  அவதானிக்கும் ஒருவர் அந்தச் செயலில் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றது. இதனால் அது சமூகத்தில் பாரிய தாக்கத்தை உண்டு பண்னுகின்றது எனலாம்.

எமது நாட்டைப் பொருத்தமட்டில் மேற்கத்தை நாகரீக, கலாச்சார சீரழிவுகள் அதிகளவில் தாக்கத்தை உண்டுபண்யுள்ளதுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாமை போன்ற காரணங்கள் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறான காரணங்கள் நேரடி மற்றும் மறைமுகத் தாக்ககங்கள் எமது நாட்டிலும் பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு பாரிய தாக்கத்தை உண்டுபன்னியுள்ளது. உண்மையில் இதனைக்கட்டுப்படுத்தும் விடயத்தில்  உலக நாடுகளில் ஒரு பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன. மதத்தலைவர்கள் கூட துஸ்பிரயோக விடயங்களில் பாரிய முயற்சிகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டபோதிலும் அவை மூலம் ஆக்கபூர்வமான முன்னேற்றங்களைக் கண்டுகொள்ள முடியவில்லை எனலாம்.

எனவே பெண்கள் துஸ்பிரயோகம் என்று கூக்குரல் இடுவதும் நிகழ்வுகள் கொண்டாடுவதும், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மேற்கொள்வதனாலும் கட்டுப்படுத்த முடியாது.  மாறாக சிறுபராயத்திலிருந்து சமுதாயச் சீரழிவு தொடர்பான கல்வியை புகட்டுவதும் மத ரீதியாக பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பான விளிப்புணர்வுகளை மேற் கொள்வதுடன் குற்றச்செயல்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுடன் குற்றச் செயல்களில்ஈடுபடுபவர்கள் இனங்கானப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து தண்டனைகள் வழங்கப்படுவதனை ஒவ்வொரு அரசாங்கமும் உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் ஓரளவாவது அவற்றை கட்டுப்படுத்த முடியுமே தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை கண்டு கொள்ளமுடியாது.



2088.16.03.2017

காதலர் தினம் - Valentine's Day வாழ்த்துக்கள் - 14.02.2017

E-mail Print PDF

Image may contain: flower and text

காதலர் தினம் என்பது வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் ஒரு புனிதநாளாகவும், வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும்  ஒரு திருநாளாகவும்,  திருமணமானோர் தமக்கு நல்வாழ்வளித்த காதலுக்கு பரிசு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு மகோன்னதமான நாளாகவும் கொண்டாடப் பெறுகின்றது.

Read more...

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - 2012

E-mail Print PDF

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை,  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் அனைவற்றிற்கும்; நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் இலவசமாகவே நல்கும் இயற்கைக்கு விருந்து படைத்து நன்றிகூறும் இத் திருநாளில்; வாழ்த்துக்கள் கூறி அவர்கள் சேவையை உள் அன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.


நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு வேண்டியவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை கீழே பதிவிலிட்டு பரிமாறிக் கொள்ளலாம்

சமூக நலப்பணி - தமிழ் தம்பதியினருக்கு "இராணி" விருது - நியூசீலந்து

E-mail Print PDF




நியூ சீலந்து அரசால் வருடாந்தம் வழங்கப்படும் "மகாராணி விருது" ஒக்லந்தைச் சேர்ந்த தமிழ்த் தம்பதிக்கு இம்முறை வழங்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் அருளானந்தம், அவரது துணைவியார் ஆன் உமா ஆகியோரே இந்த விருதினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். தமிழ்ச் சமூகத்திற்கான கல்விச் சேவைக்காக ஜோர்ஜுக்கும் சமூக சேவைக் காக உமாவுக்கும் இந்தக் கௌரவம் கிடைக்கப் பெற்றுள்ளது.

1998 இல் நியூ சீலந்தில் குடியேறிய ஜோர்ஜ் அக்காலப்பகுதியில் இங்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் முறையாகத் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் வகையில் உகந்த நடவடிக்கைகளைமேற்கொண்டார்.

இவரது சீரிய பணிகள் இவரை நியூ சீலந்துத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக்கியதுடன் தமிழ்ச் சங்கத்தின் பணியினை மேலும் சிறப்பாக்கியது.,தமிழின் மீதும் தாயக மக்கள் மீதும் மிகுந்த நேசம் கொண்ட ஜோர்ஜ் இங்குள்ள தமிழ் மக்களுக்காகவும் தாயகத்திலிருந்து வரும் மக்களுக்காகவும் பல பொது அமைப்புகளில் இணைந்து அதில் பல முக்கிய பதவிகளை வகித்ததுடன் பல அரிய சேவைகளை மின்னாமல் முழங்காமல் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Ethnic Voice of New Zealand ,Tamil Community Education ,Consortium of Tamil Associations ,New Zealand Refugee Council,Auckland Regional Ethnic Council,Asian Social Services New Zealand, நியூ சீலந்துத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளில் முறையே நிறைவேற்றுப் பணிப்பாளர் குழு உறுப்பினர் ,பணிப்பாளர் சபை உறுப்பினர் ,இணைப்பாளர்,தலைவர் போன்ற பல பதவிகளை வகித்தார். இந்தப்பதவிகள் மூலம் நியூ சீலந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு குடியேற்றம் மற்றும் புது வாழ்க்கைமுறைமை தொடர்பான பல கருத்தரங்குகளை அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடத்தினார். இவற்றில் போரின் தாக்கத்தால் பாதிக்கப்படவர்களுக்கு இவர் ஏற்படுத்திக்கொடுத்த உள வளப் பயிற்சிச் செயலமர்வுகள் குறிப்பிடத்தக்கவை .

இவர் அமைத்த குடிவரவுக்குழு இங்கு வரும் தமிழ் மக்களுக்கும் அதே வேளை இங்கு குடியேறும் தமிழர்களின் பிரச்சனைகளை குடிவரவுத் திணைக்களம் அறிந்துகொள்ளவும் தக்க பயனுள்ளதாக அமைத்தது எனில் மிகையன்று. நியூ சீலந்துப் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட மூலம் சமர்பிக்கப் பட விருந்த வேளை ஜோர்ஜ் இங்குள்ள தமிழ்க் கல்விமான்களை யுள்ளடக்கிய ஒரு குழுவினை அமைத்து விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கு எதிரான சந்திப்புக்களை ஏற்பாடு செய்தார்.

அத்துடன் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இங்கு வரவழைத்து நியூ சீலந்தின் முக்கியபிரமுகர்களுடன் பேசவைத்தார். நியூ சீலந்து, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைத் தடை செய்யாமைக்கு இவை வழிவகுத்தன. நியூ சீலந்தின் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்திற்குத் தலைமை தாங்கி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்தாடல்களை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நடத்தி தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் தனிநாட்டுக் கோரிக்கை பற்றியும் விளக்க ஏற்பாடுகள்செய்தார்.

கலாசார ஒருங்கிணைப்பும் பரிமாற்றமும் தொடர்பான கருத்தாடல்களை இங்குள்ள சமூகங்களுக்கிடையில் நடத்துவதில் முன்னின்றார். 2003 இல் இவர் ஆரம்பித்த தமிழ்ச் சமூகத்திற்கான கல்வி அமைப்பு மூலம் அமைக்கப்பெற்ற பூங்கா பாடசாலை -மழலைகள் முதல் வயதானோர் வரையிலான பல கல்விச் செயற்பாடுகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் முக்கிய அம்சமாக சர்வதேச ரீதியிலான தமிழ் அறிவுப்போட்டிகளும் பரீட்சைகளும் நடைபெற்றுவருகின்றன. நியூ சீலந்தின் சிறப்புமிக்க தமிழ்ப் பாடசாலையாக இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராகப் பணியாற்றும் ஜோர்ஜ் அருளானந்தம் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மின்னியல் பொறியியற் பட்டதாரியுமாவார்.

இவரது துணைவியார் உமா 90 களின் இறுதிப்பகுதி முதல் இங்கு வரும் அகதிகளுக்கு அவர்களின் புது வாழ்விற்கான உதவிகளை வழங்குவதில் தொண்டராகச் செயற்பட்டு வந்தார். இவர் மவுண்ட்ரொஸ்கில் சமூக சபை உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றினார். நியூ சீலந்து ஆசிய சமூக சேவை நிறுவனம் தேசிய அகதிகள் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். Auckland Refugee Community Coalition அமைப்பின் உப தலைவராக பணியாற்றிய வேளைஅகதிகள் சமூகங்களுக்கான முன்பள்ளிப் பாடசாலை ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார்.

அகதிகள் மீள் குடியேற்றத்தை வலுப்படுத்தல் தொடர்பில் பல சமூகங்களையும் கொண்ட அகதிகள் பெண்கள் குழாம் ஒன்றை ஆரம்பித்தார். தமிழ் சமூகத்திற்கான கல்வி Tamil Community Education அமைப்பின் பூங்கா தமிழ்ப் பாடசாலையின் இணைப்பாளராகப் பணியாற்றிய இவர் நியூ சீலந்து ஆரம்பக்கல்விப் பாட விதானத்தைத் தழுவிய வகையில் தமிழ் மொழியைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் வகையில் முன்பள்ளியை இதில் ஆரம்பித்தார்.

இத் தமிழ்ப்பாடசாலை மூலம் இந்நாட்டின் கல்வி அமைச்சுடன் ஊடாட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார் ஆன் உமா ஜோர்ஜ் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாகப் பல வெளிநாட்டு மாநாடுகளிலும் கருத்தாடல்களிலும் கலந்துகொண்டுள்ளார்.சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த வேளை Association of Medical Doctors of Asia (AMDA) அமைப்பின் தொண்டராகத் தாயகம் சென்று பணியாற்றினார். இதுதொடர்பான ஆய்வுக்கட்டுரையை இவர் 2005 இல் ஜப்பானில் நடைபெற்ற அனர்த்த நிவாரணம் தொடர்பான மாநாட்டில் சமர்ப்பித்திருந்தார்.ஜெனீவாவிலுள்ள ஐ நாதலைமையகத்தின் அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் நடைபெற்றஅரசசார்பற்ற நிறுவனங்களுடனான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார்.

சூரிச்சில் நடைபெற்ற ஜெனிவா கோல் 'Geneva Call'2006 மாநாட்டிலும் பங்குபற்றினார். Asian Pacific Refugee Right Network (APRRN) அமைப்பின் உறுப்பினரான இவர் தாய்லாந்தில் நடைபெற்ற அகதிகள் உரிமை தொடர்பான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார். ஆசிரியையான ஆன் உமா ஜோர்ஜ் சமூக சேவையில் உள்ள ஆர்வம் காரணமாக சமூகப்பணியில் பட்டதாரியானார்.

Page 6 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்