Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள்

கட்டுரைகள்

சிலவேளைகளில் கணினிகள் திடீரென செயலிழந்து போவற்கான காரணிகள் சிலவற்றுள் சில...

E-mail Print PDFகணீனி இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில், தொடர்ந்து இயங்க முடியாமல், முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. இதற்கு வேறு பல உள்ளக உறுப்புகளின் செயலிழப்பும், தொடர்புகளும் காரணங்களும் இருக்கலாம். அவற்றில் சிலவற்றுல் சிலவற்றை இங்கு விளக்குகின்றோம்.

இஸ்லாம் – அல்-குர்ஆன் - அறிந்து கொள்வோம் : கேள்வி, பதில்கள்

E-mail Print PDF


Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)

Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்

சோழ அரசர்களும் சைவ சமயமும் - பகுதி - 2

E-mail Print PDF

தஞ்சாவூர் அரண்மனை
தஞ்சாவூர் அரண்மனை முதன் முதலில் மாமன்னன் இராசராசசோழனால் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களாலும் மாரட்டிய மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது அரண்மனை 534 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உள்ளது. அரண்மனையில் அரசவை, அந்தப்புரம், மணிமண்டபம், ஆயுதகோபுரம், தர்பார் மண்டபம், சரசுவதிமகால் நூல்நிலையம். சங்கீதமகால், கந்தக கோபுரம்,ஏழடுக்கு மாளிகை, குதிரை, யானை லாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகளும் கானப்படுகின்றன

சோழ அரசர்களும் சைவ சமயமும் - அறிந்து கொள்வோம் - பகுதி - 2 இணைப்பு

E-mail Print PDF

முற்காலச் சோழர்கள்
சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர்.

திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்

E-mail Print PDF

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தாம் தெளிவாக இருப்பதுபோல காட்டிக் கொள்வதற்காக ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மண வாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

இன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வாழ்கிறார்களேத் தவிர, உண்மையான - பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.

பிரம்மச்சாரிகளைவிட குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செய்து நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ‘ஈகோ’வால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்பதற்கும் யாரும் பிறவி எடுக்கவில்லை.

முடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.

01) திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்து விட்டு ”எனக்கு இவர் வேண்டாம்” என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

Page 5 of 24