Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள்

கட்டுரைகள்

பெர்முடா முக்கோணம் எனும் புவி ஈர்ப்பு விசை அதிகமானஆபத்தான பிரதேசம் - அறிந்துகொள்வோம்!

E-mail Print PDF


இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

வாகனம் வாங்கப் போகிறீர்களா? அப்படியாயின் ரெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

வாகனம் வாங்கும்போது  ரெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது மிக அவசியமானது. அப்போதுதான் அந்த காரின் நல்லது கெட்டது என அனைத்து  விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதனை பரீட்சிப்பதற்கு வாகன அனுபவம் மிக்கவரின் உதவி கடாயமாகின்றது. ஓட்டும் போது கேட்கும் சிறிய சத்தம் கூட பெரிய பிழையை சுட்டிக்காட்டி நிற்கும்.

வாகனம் ஓடிப் பார்ப்பது என்பது நாடி பிடித்து பாப்பது போன்றது. சரியாக பாத்து வாங்காது விட்டால் அந்த வாகனம் ஒரு பெரிய செலவை அல்லது ஆபத்தை கொண்டுவரலாம். கியர் மாறும்போது சரியாக மாறுகின்றதா? அல்லது வேகம் கூடிக் குறைக்கும்போது ஒரு இடையில் இழுவை தடைபடுகின்றதா?, என்சின் கெதியாக வெப்பம் ஏறுகின்றதா?, டயர்கள் நல்ல நிலையில் உள்ளனவா (ஒருபக்கம் மட்டும் கூடுதலாக தேய்வு இருந்தால் வீல் அலைமன் செய்யவேண்டி வரலாம்),  அல்லது ஸ்ரேறிங் ஒரு பக்கத்திற்கு கூட இழுக்கின்றதா? அடிபட்ட வாகனமா? என்பதெல்லாம் ஒரு அனுபவமிக்கவரால் மட்டுமே நாடி பிடித்துப் பார்க்க முடியும்.

ரெஸ்ட் டிரைவ் செய்கிறேன் என்ற  பெயரில் ஒரு சில கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விட்டு என்ன வசதிகள் என்பதைகூட பார்க்காமல் சிலர் இறங்கி விடுவர். இது முற்றிலும் தவறானது. எனவே, ரெஸ்ட் டிரைவ் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை காணலாம்.

எங்கு ரெஸ்ட் டிரைவ் செய்வது?:

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, நெடுஞ்சாலை என இரண்டிலும் ரெஸ்ட் டிரைவ் செய்வது அவசியம். அப்போதுதான் காரின் எஞ்சினை பற்றி (வேகம் கூசும்போதும், குறைவாக இருக்கும்போதும் ஏற்படும் வித்தியாசங்களை கொண்டு) நன்றாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், பிரேக் எவ்வாறு செயல்படுகிறது. பாதுகாப்பான பயணத்தை வழங்குமா? என்பதையும் அறிந்துகொள்ள ஏதுவாகும்.

மேலும், நீங்கள் எந்தவிதமான சாலையில் தினசரி பயன்படுத்துவீர்களோ அதேபோன்ற சாலையில் ரெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதும் அவசியம். அத்துடன் வாகனத்தின் பாதுகாப்பு சமிஞ்சை விளக்குகள் சரியாக செயல்படுகின்றதா? வாகந்த்தை உரிய உரிமையாளரிடம் இருந்துதான் வாங்குகிறீர்களா? என்பதனையும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்து கொள்ளல் வேண்டும். வாகங்களின் மைலேச் பின்பக்கமாக சுற்றப்பட்டு குறைந்த மைல்லேச் உள்ள வாகனம் என விற்பவர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறுவது சரியா என்பதனை வாகன பராமரிப்பு பத்திரங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பார்க்கிங் செய்யலாமா?:

நீங்கள் வாங்கப் போகும் கார் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் பார்க்கிங் செய்ய ஏற்றதாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்வது நல்லது. மேலும், தினசரி பார்க்கிங் செய்யும்போது பிரச்னை இல்லாமல் இருக்கும்.

வசதிகள்:
சிலர் காரை வாங்கிவிட்டு அதில் இருக்கும் வசதிகளை இயக்கத் தெரியாமலே கைவைக்க மாட்டார்கள். எனவே, காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது உடன் வரும்  ரெஸ்ட் டிரைவரிடம் காரைப் பற்றிய அனைத்து வசதிகள் குறித்தும், அதை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும் முழுமையாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

ஏசி, டிவிடி பிளேயர், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் வழிகாட்டி சாதனம் என அனைத்து வசதிகளை இயக்குவது பற்றி ஏ டூ இசட் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். கார் வாங்கிய பின் ஓட்டும்போது வசதிகளை எளிதாக கையாள உதவும்.

காரை ஓட்டினால் போதுமா?:

காரை  ரெஸ்ட் டிரைவ்  செய்யும்போது  டிரைவர் இருக்கையில் அமர்ந்து  சென்று பார்ப்பது மட்டும் கிடையாது. பிற இருக்கையிலும் சிறிது தூரம் அமர்ந்து சென்று இருக்கை அமைப்புகள் சரியாகவும், சொகுசாகவும் இருக்கிறதா என்று பார்க்கவும். மேலும், காருக்குள் அமர்ந்தவுடன் கூரை மீது தலை இடிக்காமல் போதிய இடைவெளி இருக்கிறதா என்று பார்க்கவும்.

இதேபோன்று, மற்ற இருக்கைகளிலும் கால் வைக்க இடம் போதுமானதாக இருக்கிறதா என்பது பார்ப்பது அவசியம். ஒரே பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படும் கார்களில் அதிக இடவசதி கொண்ட காரை கண்டறிந்து வாங்குவது நல்லது.

தேவையில்லாத சப்தம் கேட்கிறதா?:

காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது  தேவையில்லாத சப்தம் ஏதெனும் வருகிறதா என்பதை கூர்ந்து கவனிக்கவும். பெரும்பாலும் பெட்ரோல் கார்களின் கேபினுக்குள் அதிக சப்தம் இருக்காது. அதேவேளை, டீசல் கார்களில் சப்தம் வர வாய்ப்புள்ளது. மேலும், ஏசி கம்பரஷரிலிருந்து  சப்தம் வருகிறதா என்பதையும்  நன்றாக கவனிக்கவும். மியூசிக் சிஸ்டம் இருந்தால் ஸ்பீக்கரின் தரம் மற்றும் துல்லியமாக உள்ளதாக என்பதையும் பாருங்கள்.

அனுபவஸ்தர் அவசியம்:
ரெஸ்ட் டிரைவ் செய்யும்போது காரை பற்றி நல்ல அனுபவமுள்ள நண்பர் அல்லது மெக்கானிக்கை உடன் அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு காரை பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், நீங்கள் ரெஸ்ட் டிரைவ் செய்யும்போது கவனிக்காத விஷயத்தை அவர்  சொல்ல வாய்ப்புண்டு. மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். நிச்சயம்  உங்கள் முதலீட்டுக்கும், வசதிக்கும்  ஏற்ற காரை  தெளிவாக  தேர்வு  செய்யலாம்.

வாகனங்களுக்கு டயர் வாங்கும்போது அறிந்திருக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்

E-mail Print PDF

Close


பழுதடைந்த அல்லது தேய்வடைந்த டயர்கள் வாகனத்தை திசை திருப்பி பல இன்னல்களை உண்டாக்குவதை நாம் பார்த்திருக்கின்றோம். பிரயாணத்தின்போது வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது.

LCD, LED, Plasma (TV) தொலைக்காட்சிகள் பற்றி அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.

புதிய Laptop வாங்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

E-mail Print PDF

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....

Page 7 of 24